Posted tagged ‘முஸ்லீம் பெண்கள்’

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

மே 11, 2013

இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

 

மொஹம்மது கமருஸ்ஸாமன் (Muhammad Kamaruzzaman[1]) என்ற ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர், ஒன்பது குற்றங்களுக்காக, மரண தண்டனைக்குட் பட்டிருக்கிறார்[2]. நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியபோது, பாதுகாப்புப் படை மற்றும் கலவரம் ஒடுக்கும் படையினர் தயாராக இருந்தார்கள்[3]. பங்களாதேச விடுதலைப் போர் 1971ல் நடந்தது. அப்பொழுது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்து கொண்டு, ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு அப்பாவி மக்கள் ஐந்து லட்சம் பேர்களைக் கொன்றுக் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அக்கூட்டத்தினர் பல பெண்களை கற்பழித்துக் கொன்றுள்ளனர். இந்த போர் குற்றங்களுக்காக இவருக்கு மண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது[4]. உலக நாடுகள் இதை ஆதரிக்கின்றன[5]. இவ்வாறு தண்டனை அளிக்கப்படும் போதெல்லாம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெருக்களில் வந்து கலவரங்களை ஏற்படுத்தி[6], இந்துக்களை தாக்கும் போக்கில் இருந்து வருகிறார்கள்.  இதனால், மக்கள், குறிப்பாக இந்துக்கள் இதன் பின்விளைவுகள் பற்றி அஞ்சுகிறார்கள்[7].

 

சென்ற மார்ச் மாதம், டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[8] விதிக்கப்பட்டது[9]. அதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

 

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[10] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • முஸ்லீம்களின் வெறியாட்டம்  பங்களாதேசத்தில்இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[11].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[12].

 

© வேதபிரகாஷ்

11-05-2013

 

 


[1] Kamaruzzaman, 61, was convicted in a packed courtroom on five counts of mass killings, rape, torture and kidnapping, Attorney General Mahbubey Alam said.

http://www.independent.co.uk/news/world/asia/backlash-feared-as-bangladesh-sentences-islamic-politician-muhammad-kamaruzzaman-to-death-8608826.html

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?

மே 12, 2010

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?

முஸ்லீம் பெண்கள் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் பர்கா / ஹிஜாப் வகையறா அணியாமல் ஆண்களுடன் சேர்ந்து பேசுவது, வேலை செய்வது சரீயத் சட்டத்திற்கு விரோதமானது, பெண் அவ்வஆறு வேலைசெய்து சம்பாதித்து அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஷிர்க் / ஹரம் என்றெல்லாம் தாருல் உலூம் தியோபந்த் (Darul Uloom Deoband) என்ற முஸ்லீம் அமைப்பு ஃபத்வா கொடுத்துள்ளதாம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் ஒருபுறம் கேட்டுவரும் நிலையில், இவ்வாறு ஃபத்வா / தடை போடுவது பிற்போக்கானது, என்று முஸ்லீம் பெண்களே கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே, இத்தகையக் கட்டுப்பாடு இல்லை என்கின்றனர்.

“ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டின் விமானப் பணிப்பெண்ணை ஹிஜாப் / பர்தாவோடு இருப்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். எனக்குத் தெரிந்தவரையில் சவுதி ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ்கள் கூட அத்தகைய உடை இல்லாமல்தான் பணியாற்றுகிறார்கள்”, என்கிறார், லக்னௌவில் கணினிதுறையில் வேலைப் பார்க்கும் ஷபீனா பர்வீன்.

இப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேலையில், திடீரென்று, தியோபந்த், “நாங்கள் ஃபத்வா எதுவும் புதியதாகக் கொடுக்கவில்லை. விளக்கம்தான் கொடுத்திருக்கிறோம்”, என்கிறார்களாம்!

No ‘fatwa’ against working women, says Deoband
12 May 2010, 1855 hrs IST,IANShttp://economictimes.indiatimes.com/news/politics/nation/No-fatwa-against-working-women-says-Deoband/articleshow/5922300.cms

NEW DELHI: Darul Uloom Deoband, India’s foremost Islamic seminary, Wednesday denied asking Muslim women not to work along with men and said it only suggested that working women should dress “properly”.  “We had only given an opinion based on Sharia that women need to be properly covered in government and private offices,” said Maulana Adnan Munshi, spokesman for the seminary in Saharanpur in Uttar Pradesh.

He denied a media report that the seminary was opposed to men and women working together.  “No new fatwa was issued,” Maulana Munshi told IANS on telephone, adding that even the opinion on dress code was given when a Muslim woman desired to know if women could go to work without a ‘purdah’ or veil. “That too is one-and-a-half months old,” he said.  But the media report claiming that the Deoband seminary had issued a “fatwa” against working women has led to sharp reactions from leaders and scholars from the Muslim community.

அதாவது ஃபத்வா ஏற்கெனெவே உள்ளது போலும்!

அப்படியென்றல், அந்த ஃபத்வாவை மீறித்தான் –

  1. இத்தனை முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்களா,
  2. பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறர்களா?
  3. கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்கின்றனரா?
  4. “கோ-எஜுகேஷன்” படிப்பகங்கள், பயிற்ச்சிக் கூடங்கள்………………….முதலியவற்றிற்குச் செல்கிறார்களா?
  5. மருத்துவர்களிடம் என்ன செய்வார்கள், உடம்பைக் கட்டாமலே மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்களா?
  6. காரில் சென்று வேலைசெய்கிறார்களா,
  7. விமானங்களில் ஆண்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பறக்கிறர்களா
  8. வேலை விசயமாக அவ்வாறு ஆண்களுடன் சென்று வருகிறாற்களா?
  9. சினிமாக்களில் நடித்து வருகிறார்களா?
  10. பாடுகிறார்கள்……………………………….
  11. ஆடுகிறர்கள்,…………………………
  12. விளையாடுகிறார்கள்………..

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விளக்கமுன் தொலைபேசியில் அளித்துள்ளார்களாம்!

  • நாயை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா, வேண்டாமா
  • “டை” அடிக்கலாமா, கூடாதா
  • “லிப்-ஸ்டிக்” உபயோகிக்கலாமா, கூடாதா
  • பூ வைத்துக் கொள்ளாலாமா, கூடாதா
  • புடவைக் கட்டலாமா, கூடாதா
  • பட்டுப்புடவைக் கட்டலாமா, கூடாதா
  • தாலி கட்டலாமா., கூடாதா
  • இந்துக்களின் திருமணங்களுக்கு செல்லலாமா, கூடாதா
  • அவர்கள் ஏதாவது தின்கக் கொடுத்தால், எடுத்துக் கொள்ளலாமா, கூடாதா
  • பிறகு அதனை சாப்பிடலாமா, கூடாதா
  • வெத்தலை, பாக்கு கொடுத்தால்……………..
  • குங்குமம் கொடுத்தால்………………
  • அமங்களமா,  மங்களமா……….
  • தீட்டா……………இல்லையா………….
  • ……………………
  • …………
  • ……..
  • ….
  • ..

இப்படி பிரச்சினைகள் ஆயிரக்கணக்கணக்காக நீட்டிக் கொண்டே போகிறார்கள் முஸ்லீம் நண்பர்கள். பல வெளிப்படையாக வொவாதிக்கின்றனர், பல ஜமாத் கூட்டங்களில், நான்கு சுவர்களில் மறைக்கப் பட்டு விடுகின்றன.

இந்துக்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும், அவை எப்படி இந்துக்களைப் பாதிக்கிறது? ஆமாம், இவர்கள் இருப்பது, இந்துக்களின் நடுவில். இவையெல்லாமே, இந்துக்களின் பாதிப்பினால்தான் என்று இஸ்லாமிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள், பெரும்பாலான முஸ்லீம்களே இந்துக்கள்தாம் என்று மறந்து விடுகின்றனர். ஆகவே, தங்கள் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு, தாக்கும் போது இந்துக்களை, இந்து சின்னங்களைத்தான் முஸ்லீம்கள் தாக்குகின்றனர்.