Archive for the ‘அடையாளம்’ category

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

ஏப்ரல் 4, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

பி.டி. பாணி செய்தியா, செக்யூலரிஸமா?: ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[1], இப்படித்தான் ஒரு வரியில் செய்திகள் வந்துள்ளன[2].. மற்ற விசயங்களுக்கு ஏதோ பெரிய சி.ஐ.டி மாதிரி விவரங்களை அள்ளி வீசும் ஊடகங்கள் இதற்கு, இத்தகைய முறையைப் பின்பற்றுவது பல கேள்விகளை எழுப்புகிறது. சில ஊடகங்கள் முன்னும்-பின்னும் பழைய விவரங்களை சேர்த்துள்ளன[3]. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்[4].  இனி, விவரங்களை அலசுவோம்.

யார் இந்த அமீர்அமீர் சுல்தான்?: தமிழ் ஆர்வலராக இருந்த அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் அட்டூழியங்களைக் கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா, தமிழ் ஆர்வலர் மற்றும் பிற முக்கிய தமிழ் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திரைப்படப் பேரணியில் பங்கேற்றார். 24 அக்டோபர் 2008 அன்று, அமீர் கைது செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு இலங்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது, அமீர் மற்றும் சக இயக்குனர் சீமான் ஆகியோர் இந்திய அரசை விமர்சித்தும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், தீவில் உள்ள தமிழ் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை தெரிவித்தும் உரைகளை நிகழ்த்தினர்.பின்னர் அவர்களது உதவி இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் நடிகர் ஆர்.சரத்குமார் ஆகியோரின் உதவியுடன் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இப்பொழுது, ஜாபர் சாதிக்குடன் வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

2021லிருந்து மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் கடத்தல் வியாபாரம்: மூன்று ஆண்டுகளாக, அதாவது 2021லிருந்து நடந்து வருகிறது  எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. அம்மருந்துகளை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியுமா, வாங்கியவர் மூலங்களை அறிவது கடினமா போன்ற விவரங்களும் தெரியவில்லை. மூன்று வருடங்களில் ஒருசிலரால் செய்யும் காரியமும் இது இல்லை. தொழிற்சாலை, ஆட்கள், வாகனங்கள் என்று பல விவகாரங்கள் உள்ளன. ஏற்ற்மதி என்றால், சுங்க ஆவணங்களே சம்பந்தப் பட்டவர்களின் விவரங்களைக் காட்டிக் கொடுக்கும். இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம், ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது[5]. ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன[6]. பிறகு தான் ஊடகங்களுக்கு தைரியம் வந்தது போலிருக்கிறது. இதில், வேடிக்கையென்னவென்றால், இதே ஊடகத்தினர், ஏன், அதே நிருபர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளைப் பற்றியும் புகைப்படங்களுடன் செய்திகலாக வெளியிட்டுள்ளன. இப்பொழுது, ஒரு வேளை மறைக்க ஆரம்பிக்கின்றன, முயல்கின்றன போலும்.

ஜாதிக்கின் சகோதரர்கள் பிடிபடாமல் இருப்பது எப்படி?: போதை மருந்து பிரிவு நடவடிக்கைகளும் மெதுவாக செல்வது போலிருக்கிறது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[7]. ஆனால், விளைவு என்ன என்று தெரியவில்லை. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள்[8]. இன்னும் அவர்கள் சிக்காமல் இருப்பதும் வினோதமான விசயம் தான். அதன் பின்புலம் என்ன என்று புரியவில்லை. இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது[9]. சென்னையிலும் தொடர்ந்து விசாரணை முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை நேற்றைய தினம் தமிழக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது[10]. அங்கும் சென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள். சதா என்ற சதானந்தத்தின் கோடவுனில் அத்தகைய உற்பத்தி நடந்தது என்றும் தெரிகிறது.

அமீருக்கு சம்மன்: மேலும் மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை மார்ச் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்[11]. இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[12]. இத்தனை நாட்கள் ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக, நேரம் கொடுத்தால், குற்றவாளிகள் ஆதாரங்களை எல்லாம் அழித்து விடுவார்கள் என்பார்கள். அதிலும் இவ்வாறு வாரங்கள் என்று நேரம் கொடுக்கும் பொழுது என்ன செய்வார்கள் என்பது அதிகாரிகளுக்குத் தான் தெரியும். ஏப்ரல் 2ஆம் தேதி தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது[13]. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது[14].

அமீர் மற்றும் மேலும் இருவருக்கும் சம்மன்: இந்த வழக்கில் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி Abdul Fazid Buhari ], சையது இப்ராஹிம் [Syed Ibrahim] ஆகிய 3 பேர் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[15]. ஆஜராவாரா இல்லையா என்று தெரியவில்லை[16]. இந்து மூன்று பேர் யார், என்ன விவரங்கள் என்றும் தெரியவில்லை. முன்னர், இவர் தனக்கும் இவ்விவகாரத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருப்பதும் நோக்கத் தக்கது. தமிழகத்தில் இவ்வாறு போதை மருந்து விவகாரத்தில் இத்தனை பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது[17]. மேலும் கோலிவுட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[18]. தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் நடக்கும் போது, கவனிக்கப் படாமல் இருக்கலாம்[19]. இருப்பினும், இது தமிழக தேர்தலின் மீது பாதிப்பை ஏற்படுத்துவா என்று பார்க்க வேண்டும்[20]. வழக்கம் போல, இச்செய்தியை பிடிஐ பாணியில் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[21]. அதிலும், ஒரு வரி செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளன[22]. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் சினிமா தொடர்புகள், மற்றும் முஸ்லிம்கள் சந்திருப்பது, தீவிரவாதிகள் தொடர்பு, தொடரும் சோதனை எல்லாம் தமிழக செக்யூலரிஸ ஊடகங்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளன போலும்.

© வேதபிரகாஷ்

03—04-2024


[1] மாலைமலர், ஜாபர் சாதிக் வழக்குநேரில் ஆஜராக இயக்குனர் அமீருக்கு சம்மன், 31 மார்ச் 2024 12:18 PM.

[2]https://www.maalaimalar.com/tags/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

[3] தமிழ்.வெப்துனியா, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், ஞாயிறு 31 மார்ச் 2024 12:17 IST.

[4] https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jaffer-sadik-drug-case-a-summon-to-ameer-124033100021_1.html

[5] நியூஸ்.7.தமிழ், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!, by Web Editor March 31, 2024.

[6] https://news7tamil.live/director-ameer-summons-in-jaber-sadiq-case.html

[7] சமயம், ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய இயக்குநர் அமீர்.. விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சம்மன்.. பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 31 Mar 2024, 12:26 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/ncp-summons-director-ameer-in-jaffer-sadiq-drugs-smuggling-case/articleshow/108913905.cms

[9] ஏபிபி, Breaking News LIVE : இயக்குநர் அமீருக்கு டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன்..!, By : ABP NADU  | Updated at : 31 Mar 2024 01:53 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/india/breaking-news-live-updates-latest-news-tamilnadu-india-worldwide-31st-march-lok-shaba-election-2024-election-commission-175729

[11] தினத்தந்தி, ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீருக்கு சம்மன், தினத்தந்தி மார்ச் 31, 12:20 pm

[12] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/rs2-thousand-crore-drug-smuggling-case-summons-director-ameer-1099631

[13] தினமணி, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், Published on: 31 மார்ச் 2024, 12:31 pm; Updated on: 31 மார்ச் 2024, 12:31 pm.

[14] https://www.dinamani.com/tamilnadu/2024/Mar/31/director-ameer-summons-in-jaffer-sadiq-case

[15] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 3 பேருக்கு சம்மன்.. போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, By Vishnupriya R Updated: Sunday, March 31, 2024, 13:03 [IST].

[16] https://tamil.oneindia.com/news/chennai/delhi-ncb-officials-issue-summon-to-director-ameer-595001.html

[17] காமதேனு, ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்குஇயக்குநர் அமீருக்கு சம்மன்; பரபரப்பில் கோலிவுட், Updated on: 31 Mar 2024, 1:00 pm.

[18] https://kamadenu.hindutamil.in/crime-corner/zafar-sadiq-drug-case-director-ameer-summoned-to-appear-before-ncb-office-on-april-2

[19] குமுதம், ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த குழு.. தேர்தல் நேரத்தில் செக்..,Mar 31, 2024 – 13:36

[20] https://kumudam.com/Special-Committee-to-Investigation-in-Jafer-Sadiq-Case

[21] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் ஆஜராக சம்மன், Vasuki Jayasree, 31 Mar 2024 12:46 IST

[22] https://tamil.indianexpress.com/tamilnadu/director-ameer-gets-notice-for-jaffer-sadiq-drug-case-4437388

உள்-ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

பிப்ரவரி 16, 2024

உள்ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்[1]. என்னடா இது, ஜாதி இல்லை என்கின்ற அவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்கிறார்களே, முரணாக இருக்கிறதே என்று முதலமைச்சருக்குத் தெரியாதாது விசித்திரமாக இருக்கிறது. பேரவையில் முதலமைச்சர் 15.2.2024 அன்று தனது பதிலுரையில் கூறியதாவது[2]: “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை[3]. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார்[4]. சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன் களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,”[5] இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்[6].  இதனை அப்படியே எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன[7]. சில ஊட்கங்கள் மட்டும் தலைப்பிட்டு, இவ்விவகாரத்தைத் தனியாக வெளியிட்டுள்ளன[8]. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார், என்று சுருக்கமாக செய்தி முடிந்து விடுகிறது. இதைப் பற்றி ஏன் மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தன, எந்த கேளியையும் எழுப்பவில்லை என்று தெரியவில்லை. செக்யூலரிஸத் தனமாக இருந்து விட்டனர் போலும்

ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றித்ழ் கேட்கும் முஸ்லிம்கள்: எல்லோரும் சகோதரர்கள், சம உரிமைகளுடன் இருக்கிறார்கள், எந்தவிதமான வேற்றுமைகளும் கிடையாது என்றெல்லாம் தான் இன்றைய அளவுக்கும் கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாமிய நாடுகளே தினமும் ஒன்றை ஒன்று தாக்கி கொண்டு இருக்கின்றன. அதைப்பற்றி இப்பொழுது நமக்கு விவாதிக்க தேவை இல்லை. இருப்பினும் தமிழகத்தில் ஜாதி இல்லை, ஜாதியத்தை ஒழிப்பேன், ஜாதியை ஒழிப்பேன் என்றெல்லாம் பேசுகின்றவர்கள் தான், ஜாதியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடைய ஜாதி இல்லை, எந்த வேறுபாடும் இல்லை, எதுவும் இல்லை என்று பறைச் சாற்றி வருகின்ற முகமதியர், இப்பொழுது இஸ்லாமியர் என்று கூறப்பட வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இடவொதிக்கீடு கேட்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. முதலில் உள்-ஒதுக்கீடு 3.5% என்று சட்டத்திற்கு புறம்பாக கருணாநிதி கொடுத்தார், வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் அடிக்கடி எஸ்சி சலுகை கேட்டு வருகிறார்கள். அதாவது இந்துக்கள் எஸ்சி வகுப்பினராக இருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறினார் அதே நிலையை தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். எல்லாம் மறைந்து விடும் என்று பறைசாற்றிய பிறகு இஸ்லாமியராக இருந்து கொண்டு இல்லை எனக்கு எஸ்சி சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்பதும் மிக மிக தமாஷாக இருக்கிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இதனை சோதித்டுக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், இந்து பிசிக்கள்-எஸ்சிக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

முதலில் பிசி, பிறகு எஸ்சிஇது எப்படி சாத்தியமாகும்?: தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது[9]. ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்பு பிசிமுஸ்லிமாக இருந்து இப்பொழுது எஸ்சி முஸ்லிம் ஆக முடியுமா?: முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது[10]. சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது. ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

© வேதபிரகாஷ்

16-02-2024


[1] விடுதலை, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு, Last updated: 2024/02/16 at 4:20 PM, Published February 16, 2024.

[2] https://viduthalai.in/40155/backward-certificate-for-muslim-converts/

[3] தமிழ்.இந்து, முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்படுமா? – சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என முதல்வர் தகவல், Published : 16 Feb 2024 05:40 AM, Last Updated : 16 Feb 2024 05:40 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1200227-backward-certificate-for-those-who-converted-to-islam.html

[5] தமிழ்.நியூஸ்.18, ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்; மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடுமுதல்வரின் முக்கிய அறிவிப்புகள், FIRST PUBLISHED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST, LAST UPDATED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST

[6] https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalins-announcement-that-2-lak-50-thousands-houses-will-be-renovated-1346082.html

[7] தினகரன், மெட்ரோ ரயில் பணிக்காக நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடிக்கு முதல்வர் அழைப்பு, February 16, 2024, 1:10 am

[8]https://www.dinakaran.com/metro_railwork_uniongovernment_jointvoice_edappadi_chiefminister_call/

[9] தினமணி, முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும், Published on: 19 ஜனவரி 2013, 4:34 am; Updated on: 19 ஜனவரி 2013, 4:34 am.

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2013/Jan/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-619662.html

தமிழக கவர்னர் 467ம் நாகூர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டது, வழிபாடு செய்தது!

திசெம்பர் 24, 2023

தமிழக கவர்னர் 467ம் நாகூர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டது, வழிபாடு செய்தது!

சுன்னிப் பிரிவினர் எதிர்த்தது: நாகை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின் 467ம் ஆண்டு கந்துாரி விழா வரும் டிசம்பர் 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகியது[1]. பொதுவாக அமாவாசைக்கு அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  இந்த விழா, முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் [சுன்னி], இவ்விழாவை தடை செய்ய வேண்டும் என ஆண்டுதோறும் போராடி வருகின்றனர்[2]. 1930களிலேயே இந்த எதிர்ப்பு இருந்தது, ஆனால், பிறகு அடங்கி விட்டது. இந்நிலையில், கந்துாரி விழாவின் போது, முஸ்லிம்களின் கோட்பாடுகளை விளக்கி பிரசாரம் செய்ய, போலீசாரிடம் சில முஸ்லிம் அமைப்பினர் அனுமதி கேட்டனர்[3]. போலீசார் அனுமதி மறுத்ததால், முஸ்லிம் அமைப்பினர் போலீசாரை கண்டித்தும், கந்துாரி விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை தடை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்[4]. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து, மனு அளித்து சென்றனர். சில வருடங்களுக்கு முன்னர், “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி, “ஷிர்க்-எதிர்ப்பு” போராட்டங்கள் எல்லாம் கூட நடத்தினார்கள். இப்பொழுது நிறுத்தியிருக்கிறார்கள் போலும்.

14-12-2023 முதல் 25-12-2023 வரை நடக்கும் சந்தனக்கூடு விழா: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 23-12-2023 அன்று நடைபெற்றது. 21ம் தேதி வாணவேடிக்கையும், 22ம் தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 23ம்தேதி அன்று மாலை நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டது[5]. நாகப்பட்டினம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனகூடு சென்று அடுத்த நாள் 24ம்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது[6]. விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தர்கா அரங்காவலர் குழு அழைப்பு விடுத்தது[7], அதே நேரம் ஆளுநர் ரவி சந்தனக்கூடு நிகழ்விற்கு வந்தால், சட்ட ஒழுங்கு என்கிற பெயரில் வியாபாரம் பாதிக்கும் என வர்த்தக சங்கத்தினர் மாவட்ட எஸ்,பியிடம் புகார் அளித்தனர்[8].

ஆளுநர் வருகைக்கு எதிர் கட்சியினர் எதிர்ப்புகைது: முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட எல்லையில் கீழ்வேளூர் புறவழிச்சாலையில் காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து[9] போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆளுநர் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்[10]. அவர்களை ஆளுநர் வருகைக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்[11]. இதேபோல் திருவாரூரிலிருந்து நாகை செல்லும் பைபாஸ் சாலையில் வாழவாய்க்கால் அருகே 10 பேரும், ரயில்வே மேம்பாலம் அருகே 5 பேரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடியை கட்ட முயன்றனர்[12]. இவர்கள் அனைவரும் மா. கம்யூ., இ.கம்யூ. கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் தஞ்சையிலிருந்து ஆளுநர் திருவாரூர் வரும் வழியில் நீடாமங்கலத்தில் கருப்பு கொடி காட்ட முயன்ற இ.கம்யூ கட்சியை சேர்ந்த 25 பேரையும், கொரடாச்சேரி வெட்டாறுபாலம் அருகே மா. கம்யூ., இ.கம்யூ., கட்சியை சேர்ந்த 25 பேர் என மொத்தம் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

24-12-2023 அன்று கவர்னர் வந்து வழிபட்டது: அரசியல் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாகூர் தர்காவில் ஆளுநர் தரிசனம் மேற்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது[13]. இந்த நிலையில், நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலை 10.35 மணிக்கு வருகை புரிந்தார்[14]. கவர்னர் வருகையால் அலங்கார வாசல் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றிலுள்ள ஒருசில கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[15]. அதனை தொடர்ந்து தர்கா வந்தடைந்த கவர்னருக்கு பாரம்பரிய முறைப்படி வழக்கமாக தர்கா மணி மேடையில் அமர்ந்திருந்தபடி நகரா மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது[16]. ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப், ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை எஸ்பி ஹர்ஷிங் ஆகியோர் வரவேற்றனர்[17]. பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்[18].

கவர்னர் வழிபட்டு பதிவு செய்தது: நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, பேரழிவை ஏற்படுத்திய புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். நாகை நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 467ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (டிச.,23) நடைபெற்றது. இன்று தர்ஹா வந்தடைந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் தர்ஹா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில்[19], “467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்ஹா பிரதிபலிக்கிறது,” என கவர்னர் ஆர்.என்.ரவி எழுதினார்[20]. இது தொடர்பான ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பதிவில், :ஆளுநர் அவர்கள், நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் பங்கேற்று[21], தமிழ்நாட்டின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[22].

சந்தனக் கூடு நாகூர் தெருக்களில் ஊர்வலம்: பொதுவாக அமாவாசைக்கு அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  நாகூர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி அரைக்கப்பட்ட சந்தனங்கள் குடங்களில் நிரப்பட்டு நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்தன குடங்களை பெற்று நாகப்பட்டினம் யாஹூசைன் பள்ளிவாசல் வந்தடைந்தது. இதன்பின் சந்தன கூடு ஊர்வலம் யாஹூசைன் பள்ளிவாசலில் இருந்து இரவு 7 மணியளவில் புறப்பட்டு அபிராமி அம்மன் திருவாசல் வந்தது. உடன் சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார ரதங்கள் சந்தன கூடு சென்ற ரதத்தின் முன்னும், பின்னும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து சென்றன. இந்த சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினம் புதுப்பள்ளி தெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்றது. 

பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதிய பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன கூடு ஊர்வலத்தை நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு நின்று கண்டு ரசித்தனர். இதை தொடர்ந்து 24-12-2023 அன்று (24ம் தேதி) அதிகாலை ஆண்டவரின் சமாதி அறைக்கு எடுத்து சொல்லப்பட்டது. தொடர்ந்து, தர்காவின் பரம்பரை கலிபா ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 25-12-2023ம் தேதி கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், வரும் 27ம் தேதி புனித கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

16ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்தற்கான ஆதாரங்கள் இல்லை: 16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹுல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை. தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் ஷாஹுல் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே, பிற்காலத்தில் ஐதர் அலி-திப்பு சுல்தான் படையெடுப்புகளில், இங்கிருந்த கோவில்கள் ஆக்கிரமிக்கப் பட்டபோது, ஒரு கோவில் மற்றும் குளம் ஆக்கிரமிக்கப் பட்டு, அது தர்காவாக மற்றப் பட்டிருக்கலாம்.

பதினைந்து நாட்களுக்கு நடக்கும் விழா இஸ்லாமிய முறைப்படி இல்லை: ஹஜரத்  சையது  ஷாஹுல்  ஹமீது  காதிர்  வாலி  [Hazrath Syed Shahul Hameed Quadir Wali] என்பருடைய  சமாதி  நாகூரில்  உள்ளது. இவர் முகமது  நபியின்  வழி   23வது  சந்ததியர்  என்று  கூறப்படுகிறது. அந்த வாலி இறந்த தினத்தை  முஸ்லிம்கள்  இங்கு 14-நாள்   விழாவாகக்  கொண்டாடுகின்றனர். நாகை மீராபள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றவைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடையும். இவ்விதமாக 14 நாட்கள் அமர்க்களமாக விழா கொண்டாடப்படும்.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று விழா  கொண்டாடுவது சகஜமாகி விட்டது. ஆஜ்மீர் போன்ற தர்காக்களிலும் இவையெல்லாம் நடக்கின்றன. உண்மையில், ஒரிசா போன்ற மாநிலங்களில் மார்கழி மாதத்தில் கொண்டாடப் படும், “போடு பந்தனா” போன்ற விழா, இங்கிருந்த மாலுமிகள் மதம் மாறியபொழுது, அவர்கள் கொண்டாடிய விழாவை, அப்படியே கோவிலுடன் மற்றிவிட்டது புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

23-12-2023.


[1] தினமலர், நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், பதிவு செய்த நாள்: டிச 11,2023 23:43

[2] https://m.dinamalar.com/detail.php?id=3501426

[3] மாலைமலர், நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம், By மாலை மலர், 24 டிசம்பர் 2023 10:39 AM.

[4] https://www.maalaimalar.com/devotional/worship/nagore-dargah-ganduri-festival-sandalwood-procession-is-a-riot-694936

[5] தினகரன், நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பங்கேற்பு, 02:11 am Dec 23, 2023 |

[6] https://m.dinakaran.com/article/News_Detail/1278262

[7] நக்கீரன், ஒருபக்கம் கருப்புக்கொடி; மறுபக்கம் வரவேற்புநாகூர் தர்காவில் ஆளுநர், செல்வகுமார், Published on 23/12/2023 | Edited on 23/12/2023

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/black-flag-struggle-governor-rn-ravi-who-came-nagai

[9] நியூஸ்7தமிழ், நாகூர் தர்ஹாவில் இன்று சந்தனக் கூடு விழாசிறப்பு துவாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!, by Web EditorDecember 23, 2023;

[10] https://news7tamil.live/nagore-ganduri-festival-governors-visit.html

[11] தினகரன், 467வது ஆண்டு கந்தூரி விழா நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு,12:20 am Dec 24, 2023.

[12] https://m.dinakaran.com/article/News_Detail/1278904

[13] ஜெயா.நியூஸ்.லைவ், நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரி விழா : சந்தனக்கூடு ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்ற ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு, Dec 23 2023 4:04PM

[14] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_238431.html

[15] விகடன், பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் இந்த தர்கா பிரதிபலிக்கிறது”- நாகூரில் ஆளுநர் ரவி, இரா விஜயராகவன், Published: 23-12-2023 at 5 PM; Updated: @3-12-2023 at 5 PM.

[16] https://www.vikatan.com/government-and-politics/tn-governor-ravi-visit-nagoor-darga-protest-near-district-border

[17] இடிவிபாரத், நாகூர் கந்தூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது!, டிசம்பர் 24, 2023.

[18] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/tamil-nadu-governor-rn-ravi-at-the-nagore-kanduri-function/tamil-nadu20231223183222850850770

[19] தினமலர், பாரதத்தின் பண்பாட்டை நாகூர் தர்கா பிரதிபலிக்கிறது: கவர்னர் ரவி, மாற்றம் செய்த நாள்: டிச 23,2023 19:05.

[20] https://m.dinamalar.com/detail.php?id=3510622

[21] தினத்தந்தி, பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் நாகூர் தர்கா பிரதிபலிக்கிறதுகவர்னர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 24, 5:15 am (Updated: டிசம்பர் 24, 5:15 am).

[22] https://www.dailythanthi.com/News/State/governor-participated-in-the-annual-kandoori-festival-of-nagore-dargah-on-the-auspicious-day-1087184

இந்திய வம்சாவளி யூத குடும்ப பெற்றோரை குழந்தைகளுக்கு முன்பாக கொலை செய்யப் பட்ட குரூர செயல்!

ஒக்ரோபர் 12, 2023

இந்திய வம்சாவளி யூத குடும்ப பெற்றோரை குழந்தைகளுக்கு முன்பாக கொலை செய்யப் பட்ட குரூர செயல்!

21ம் நூற்றாண்டிலும் சண்டையிடும் கோஷ்டிகள்: பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன. சமய ரீதியில் இப்பிரச்சினையை தீர்ப்பது என்பது இது வரை இயலாத காரியம் போலவே, சம்பந்தப் பட்ட குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இருப்பினும், இந்த நவீன காலத்தில், எல்லோரும் படித்து விஞ்ஞானம்-தொழிற்நுட்பம் என்று முன்னேறும் காலங்களில் அமைதியுடன் எல்லா மக்களும் சேர்ந்து வாழலாம் என்றும் அக்குழுக்கள் சமரசத்திற்கு வரலாம். அரேபிய-இஸ்ரேல் போர் என்று அடிக்கடி இப்படி போரிடுவது, மதரீதியில் தான் அணுகப் படுகிறது. ஆனால், மனித ரீதியில் அணுகவேண்டிய கட்டாயமும் உள்ளது. காஸா எல்லைப் பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் [முஸ்லீம்கள்] எப்பொழுதுமே இஸ்ரேல் ராணுவத்தினரைத் தூண்டி வருவது தெரிந்த விசமாக உள்ளது. சில நேரங்களில் அடங்கில் விடுகிறது.

07-10-2023 – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது மக்கள் மீது தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 07-10-2023 சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது[1]. எல்லை பகுதியிலும் புகுந்து அங்கு மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது[2]. இத்தகைய போர், கண்மூடித்தனமான கொலைகள் தேவையா என்று யோசிக்க வேண்டும். இதில் அனைத்து தரப்பினரும் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்[3]. இதனால், மறுபடியும் இன்றைய தலைமுறை இதனை மனத்தில் கரம் வைத்துக் கொண்டு தத்தம் எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற ரீதியில் வளர்க்கப் பட்டால், அவர்களும் அவ்வாறே தயாராவார்கள். இந்த உச்சகட்டமாக போரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 -யைக் கடந்தது[4]. பிறகு காயமடைந்தவர்களின் கதி என்ன? அவர்களுக்கு அருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் படுமா? போதிய மருத்துவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகளும் எழும்.

பலமாடி அடுக்குக் கட்டிடங்கள் தாக்கப் படுதல்: அந்நிலையில் தான், இந்த இரு குழுவினரும் சண்டையிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல அடுக்கு மாடி கட்டிடங்கள் அப்படியே விழுந்து நொருங்குவதைப் பாருக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவ்வீடுகளில் இருக்கும் மக்களின் கதி என்ன? இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த 21ம் நூற்றாண்டிலும், விளைவுகளை அறிந்தும், இவ்வாறான போர்களை நடத்தி வருவதும், நடந்து வருவதும் திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. ஏனெனில், கோடானு கோடி கணக்கில் வீடுகள் முதலியவை நாசமாவதுடன், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் படுவது தான், துக்ககரமான விசயமாகிறது. நிச்சயமாக அவர்களுக்கும் இந்த வன்முறை மற்றும் போர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பொது மக்களை பிணை கைதிகளாகப் பிடித்துச் செல்லுதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்[5]. 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின[6]. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்[7]. ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர்[8]. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்[9]. வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர்[10]. இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்[11]. இது ஐசிஸ், தாலிபான், ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. அத்தகைய ஈவு-இரக்கமற்ற குரூரக் கொலைகளை வீடியோ எடுத்து, ஒலி-ஒளி பரப்பி மக்களை அச்சுருத்தி மிரட்டியும் வருகின்றனர். குறிப்பாக மற்ற மதத்தின்ரைக் குறிப்பிட்டு, உங்களுக்கும் இதே கதிதான் என்றும் மிரட்டி வருகின்றனர்.

இந்திய வம்சாவளி யூத பெண் மற்றும் அவரது கணவர் குழந்தைகளுக்கு முன் கொல்லப் படுதல்: அவ்வாறு பொது மக்களை, பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் பொழுது தான், இந்த கொடூரம் நடந்தேறியுள்ளது. அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது[12]. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்[13]. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம்[14]. அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மக்களை மக்கள் கொல்லும் நிலை தேவையா?: இத்தகைய கொலைகள், கழுத்தறுத்துக் கொல்லும் குரூரங்கள்……அவற்றை வீடியோ எடுத்து, எச்சரிக்கையுடன், இணைதளத்தில் போடுவது-பரப்புவது, பீதியைக் கிளப்புவது குறிப்பிட்ட இயக்கங்கள், அமைப்புகள் செய்து வருகின்றன. அமைதி என்று பேசும் நிலையில், உலக மக்கள் படித்து, சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலையில், இந்த 21ம் நூற்றாண்டில், இவ்வாறு போரிட்டுக் கொள்வது, பெரிய குடியிருப்புக் கட்டிடங்களைத் தாக்குவது, குண்டு போட்டு தகர்ப்பது, அப்பாவி-பொது மக்களை இரக்கமில்லாமல் கொல்வது முதலிய மிகவும் சோகமாக, வருத்தமாக, கவலையாக, பீதியாக, பயமாகவும் இருக்கிறது. அவர்கள் உலகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் அல்லது சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள், இறக்கவும் செய்கிறார்கள். பிறகு, மக்களை மக்கள் கொல்லும் நிலை தேவையா?

© வேதபிரகாஷ்

12-10-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Israel Conflict : குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரி மற்றும் அவரது கணவர்டிவி நடிகை வருத்தம்!, Priyadarshini R • HT Tamil, Oct 11, 2023 08:26 AM IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/sister-killed-in-front-of-children-and-her-husband-tv-actress-regret-131696992445340.html

[3] லங்காஶ்ரீ, இஸ்ரேலில் குழந்தைகள் கண்முன்னே சகோதரி, மைத்துனர் மரணம்: நடிகை கண்ணீர் மல்க வீடியோ, Israel-Hamas War- By Sathya, Published at : 11 Oct 2023 11:45 AM; https://news.lankasri.com/article/sister-die-in-front-of-children-in-israe-actress-1697024124

[4] https://news.lankasri.com/article/sister-die-in-front-of-children-in-israe-actress-1697024124

[5] மாலைமலர், இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே சகோதரி, மைத்துனர் கொடூரக்கொலை: டி.வி. நடிகை கண்ணீர், By மாலை மலர், 11 அக்டோபர் 2023 12:35 PM (Updated: 11 அக்டோபர் 2023 12:56 PM)

[6] https://www.maalaimalar.com/news/national/tv-actor-madhura-naik-sister-brother-in-law-killed-in-war-torn-israel-672818

[7] ஐபிசி.தமிழ்நாடு, இஸ்ரேலில் குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரிநாகினி நடிகை வேதனை!!, கார்த்திக், | Published at : 11 Oct 2023 11:45 AM (IST);

[8]  https://ibctamilnadu.com/article/hindi-actress-family-died-in-israel-war-1697006873

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Israel-Hamas War: இஸ்ரேல்ஹமாஸ் போரில் நாகினி சீரியல் நடிகையின் சகோதரி, கணவர் கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!, By: பேச்சி ஆவுடையப்பன் | Published at : 11 Oct 2023 07:45 AM (IST); Updated at : 11 Oct 2023 07:45 AM (IST);

[10] https://tamil.abplive.com/news/world/actress-madhura-naik-s-sister-brother-in-law-killed-in-war-torn-israel-144506

[11] தமிழ்.ஒன்.இந்தியா, Israel-Hamas War: குழந்தைகளின் கண்முன்னே.. நாகினி சீரியல் நடிகையின் சகோதரி மற்றும் கணவர் கொலை, By V Vasanthi Updated: Wednesday, October 11, 2023, 12:04 [IST].

[12] https://tamil.oneindia.com/television/israel-hamas-war-naagini-serial-actresss-sister-and-husband-killed-in-israel-hamas-war-547109

[13] புதியதலைமுறை, நாகினி நடிகையின் சகோதரி கொடூர கொலைஇஸ்ரேல்ஹமாஸ் போரின் கொடூரம் தொடர்பாக பரபரப்பு வீடியோ!, Published on: 11 Oct 2023, 5:54 pm.

[14] https://www.puthiyathalaimurai.com/world/naagini-serial-actress-lost-her-sister-and-brother-in-law-at-israel-hamas-war

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டுவெடிப்பு – முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

செப்ரெம்பர் 30, 2023

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டு வெடிப்புமுஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

வெள்ளிக் கிழமை 29-09-2023 அன்று குண்டுவெடித்த இடம் – மதினா மசூதி, அல்ஃபலா சாலை, மாகாணம் மஸ்துங் மாவட்டம், பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தான்: பாகிஸ்தானில் 29-09-2023 அன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[1]. மீலாது நபி என்று முகமது நபி பிறந்த நாளை வெள்ளிக் கிழமை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர்[2]. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது[3]. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர்[4]. இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்[5]. இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்[6]. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தன.ர்[7]. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்[8]. இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்[9]. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்[10].

சுன்னி / சன்னி அல்லாத முஸ்லிம்கள் தாக்கப் படுதல்: ஆசார இஸ்லாத்தில் முகமது நபி பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா என்ற வாத-விவாதங்கள் உள்ளன. ஏனெனில், அத்தகைய கொண்டாடங்கள் சின்னங்கள், அடையாளங்கள் வைக்க ஊக்குவிக்கும். அதுவே நாளடைவில் பெருகும் என்ற கோட்பாடும் உள்ளது. மெக்காவில், அவரது கல்லறையே அழிக்கப் பட்டது போன்ற செய்திகளும் உள்ளன. ஏனெனில், அது பிரத்யேகமாக அடையாளம் காணப்பட்டால், அதுவே சின்னமாகி, லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் வர ஆரம்பித்து விடுவர். பிறகு, அது வழிபடும் க்ஷேத்திரமாக மாறிவிடும். எனவே அத்தகைய முயற்சிகளும் தடுக்கப் பட்டன. முழு இஸ்லாம் மயமாக்கும் செயல்பாடுகளில், பாகிஸ்தானில் உள்ள மற்ற இஸ்லாமியக் குழுக்கள் – ஷியா, போரா, அஹ்மதிய போன்ற பிரிவுகள் அடிக்கடித் தாக்கப் பட்டு வருகின்றன, அவர்களது மசூதிகளும் தாக்கப் பட்டு, இடிக்கப் பட்டு வருகின்றன..இது அத்தகைய தாக்குதலா என்று தெரியவில்லை. இருப்பினும், குரூர-தீவிரவாத செயலுக்கு எந்த ஆதரவு-சமாதானமும் கொடுக்க முடியாது.

தொடரும் தற்கொலை குண்டுவெடிப்புகள்: இந்நிலையில், ஷாஹீத் நவாப் கவுஸ் பக்‌ஷ் ரயிசானி நினைவு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சயீது மிர்வானி, இதுவரை 52 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். கடந்த 15 நாட்களில் இது மாஸ்துங் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் ஆகும்[11]. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்[12]. இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்து இடைக்கால முதல்வர் அலி மர்தான் டோம்கி கூறும்போது, எதிரிகள் பலூசிஸ்தானின் மத சகிப்புத்தன்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்[13]. இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்கள் மாகாணத்தில் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்[14].

முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது: பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது[15]. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார்[16]. மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது. ஆக, முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது. தற்கொலை குண்டு வெடித்தவன் சொர்க்கத்திற்கு போகிறான் என்றால், குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் கதி என்ன? இத்தகைய இறையியல் சித்தாந்தம், மனித நேயம் கொண்டதா இல்லையா என்று அவர்கள் தான் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கொலைப் படை தாக்குதல் இரண்டுமற்றொரு தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. மசூதியில் 30 முதல் 40 பேர் வரை தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேரிட்ட இந் தஇரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின் கார் அருகே மனித வெடிகுண்டாக வந்தவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்: வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் அகமது பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும்போது, “பலுசிஸ்தானில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை எதிரிகள் விரும்பவில்லை. அதை அழிக்க நினைக்கின்றனர். மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத சக்திகள் எந்த சலுகைக்கும் தகுதியானவர்கள் அல்ல. தீவிரவாத செயல்களை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார். இதெல்லாம் புரியாத புதிர்களாகத் தான் இருக்கின்றன. எல்லா வசதிகள், வளங்கள் வைத்துக் கொண்டு அமைதியாக வாழ்வதை விடுத்து, ஏன் இப்படி ஒருவரையொருவர் கொன்று வாழ வேண்டும் எனத் தெரியவில்லை?

நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டுவெப்புக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்யும்படி, பலுசிஸ்தான் மகாண முதல்வர் அலி மர்தான் டோம்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்[17]. தெஹ்ரிக்-இ தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளின் தாக்குதலுக்கு இந்த மாகாணம் இலக்காகி வருகிறது[18].

© வேதபிரகாஷ்

29-09-2023


[1] தமிழ்,இந்து, பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்,, செய்திப்பிரிவு, Published : 30 Sep 2023 04:23 AM, Last Updated : 30 Sep 2023 04:23 AM.

[2] https://www.hindutamil.in/news/world/1131015-pakistan-mosque-blasts-57-dead-60-people-were-injured.html

[3] புதியதலைமுறை, பாகிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் – 57 பேர் பலி, Prakash J, Published on :  29 Sep 2023, 10:41 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/world/today-blast-in-pakistan-at-least-57-killed

[5] நக்கீரன், பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 34 பேர் பலி; 130 பேர் காயம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 29/09/2023 (17:00) | Edited on 29/09/2023 (17:17).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/world/pakistan-incident-near-mosque

[7] தினமலர், பாக்.,கில் அடுத்தடுத்து மசூதிகளில் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி, மாற்றம் செய்த நாள்: செப் 29,2023 17:47.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3444187

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, By: சுகுமாறன் | Updated at : 29 Sep 2023 03:22 PM (IST), Published at : 29 Sep 2023 03:05 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/world/pakistan-52-killed-over-100-injured-in-suicide-blast-near-mosque-in-balochistan-province-142711

[11] தமிழ்.இந்து, பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம், செய்திப்பிரிவு, Published : 29 Sep 2023 03:35 PM; Last Updated : 29 Sep 2023 03:35 PM.

[12] https://www.hindutamil.in/news/world/1130588-at-least-50-killed-over-130-injured-after-blast-in-pakistan-s-balochistan.html

[13] தினத்தந்தி, பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!, செப்டம்பர் 30, 1:29 am; Updated: செப்டம்பர் 30, 2:21 am;

[14] https://www.dailythanthi.com/News/World/55-killed-in-pakistan-mosque-blast-3-days-of-mourning-1063162

[15] விகடன், பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு; தற்கொலைத் தாக்குதலில் 52 பேர் பலி!, சி. அர்ச்சுணன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[16] https://www.vikatan.com/crime/suicide-blast-near-mosque-in-pakistan-52-people-died

[17] பிபிசி.தமிழ், பாகிஸ்தான்: மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் பலிஎன்ன நடந்தது?, Published at : 29 Sep 2023; https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

[18] https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது–நினைவிடம், மணிமண்டம் கட்டுவது எல்லாம் செக்யூலரிஸம் ஆகாது–மஹாராஷ்ட்ரா கொடுக்கும் பாடம்!

ஜூன் 12, 2023

திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது நினைவிடம், மணிமண்டம் கட்டுவது எல்லாம் செக்யூலரிஸம் ஆகாது –மஹாராஷ்ட்ரா கொடுக்கும் பாடம்!

திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது: திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு தென்னிந்திய அரசியல் கட்சிகள் நிறையவே விளையாடி வருகின்றன. இதில் முஸ்லும்களை தாஜா செய்ய வேண்டும் ஓட்டு வாங்க வேண்டும் என்றதைத் தவிர, வேறு உருப்படியான விசயம் எதுவும் இல்லை. போதாகுறைக்கு, திப்பு ஒரு மதவெறி பிடித்தவனாக இருந்து லட்சக்கணக்கில் ஹிந்துக்கள் மற்றும் கிருத்துவர்களையும் கொன்று குவித்திருக்கிறான். இருப்பினும் அவனுக்கு மணிமண்டபம் கட்டுவது, சமாதி கட்டுவது, நினைவிடம் கட்டுவது, ரெயிலுக்கு பெயர் வைப்பது என்று மாநிலங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செய்து வருகின்றன. போதாகுறைக்கு, கர்நாடகாவில் “திப்பு ஜெயந்தி” என்று தமாஷாவும் அரங்கேறி வருகிறது. உண்மையில், ஆசார முஸ்லிம்கள் அத்தகைய விழாக்களை அனுமதிப்பதில்லை, ஹராம் என்கிறது. இருப்பினும், காங்கிரஸ் செய்யும் பொழுது அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறது. காங்கிரஸ் கர்நாடகாவில் வெற்றி பெற்றப் பிறகு, சிவகுமார் என்ற அமைச்சர் திப்பு சுல்தான் போன்று தலைப்பாக எல்லாம் கட்டிக் கொண்டு வந்ததை ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மஹாராஷ்ட்ராவில், சமீபத்தில் திப்பு, ஔரங்கசீப் போன்றவர்களின் படங்களை வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடைப் பெற்றதால், அதனை இந்துக்கள் எதிர்த்தனர். பிறகு போலீஸாரும் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைத்தனர்.   

 ஔரங்கசீப்திப்புபடங்களால் முதல் வாரத்தில் கோலாப்பூரில் கலவரம்: மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் ஔரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரின் படங்களை, சிலர் தங்கள் வாட்ஸ்அப்பில் புகழ்ந்து ஸ்டேட்டஸ் வைத்தினர்[1]. இந்த ஸ்டேட்டஸ் நகர் முழுவதும் தீயாகப் பரவியது[2]. இதைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டம் இரு பிரிவினரிடையே மோதலாக மாறியது. மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 06-06-2023 அன்றும் இந்து அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து காலையில் சிவாஜி சோக்கில் கூடி, போராட்டம் நடத்தினர். அதோடு முஸ்லிம் பழ வியாபாரி ஒருவரை இந்து அமைப்பினர் தாக்கினர். இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திவிட்டுக் கலைந்து செல்ல முயன்றபோது, யாரோ கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். அதனால், மீண்டும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் கடைகள், வாகனங்கள், மசூதிகள் ஆகியவற்றின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீஸார் வன்முறையாளர்கள்மீது தடியடி நடத்தினர். இதனால் முக்கியமான இடங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஹாராஷ்ட்ரா துணை முதல்வர் விளக்கம்: இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ஔரங்கசீப், திப்பு சுல்தான் போன்ற வரலாற்றுப் பிரமுகர்களை திடீரென பிரபலப்படுத்த நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் பிரச்னையைக் கிளப்ப முயல்கின்றன. எவ்வாறு திடீரென சோஷியல் மீடியாவில் ஔரங்கசீப் பற்றி வெளியிட்டனர் என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் கடமை. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மூன்று சிறுவர்கள் வெளியிட்டதாகத் தெரியவந்திருக்கிறது. அதனால், அவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், கலவரம் தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். `பொதுமக்கள் வதந்தியை நம்ப வேண்டாம்’ என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்புக்குக் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அனுமதி இல்லாமல் கட்டப் பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் அகற்றம்: கர்நாடகாவிலுள்ள மைசூரை 18ம் நுாற்றாண்டில் ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் மற்றும் முகலாய பேரரசர் அவுரங்கசீப் போன்றவர்களின் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதன் காரணமாக, மஹாராஷ்டிராவில் சமீபகாலமாக போராட்டங்கள் மற்றும் வன்முறை வெடித்து வருகிறது[3].  இது தொடர்பாக ஜூன் 7ஆம் தேதி இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது[4]. இதனால், மாநில அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, அனுமதி இல்லாமல் கட்டப் பட்ட திப்பு நினைவிடத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நினைவிடம் துலே நகரின் முக்கிய சாலை சந்திப்பில் வட்ஜாய் சாலையில், அகில இந்திய மஜ்லீஸ் இ ‑- இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏ ஃபரூக் ஷா அன்வரால் [All India Ittehadul Majlis-e-Muslimeen MLA Faruk Shah Anwar] கட்டப்பட்டதாகும்[5]. மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக முகாலாய மன்னா் ஒளரங்கசீப், மைசூரு மன்னா் திப்பு சுல்தான் ஆகியோரை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளால் ஹிந்து-முஸ்லிம் மத மோதல் மோதல் ஏற்பட்டு வருகிறது[6]. சில இடங்களில் போராட்டங்களும் வன்முறையும் நிகழ்ந்தன. இந்த சூழ்நிலையில் துலே நகரில் உள்ள திப்பு சுல்தான் நினைவிடம் அகற்றப்பட்டுள்ளது.

 09-06-2023 அன்று அப்புறப்படுத்தப் பட்டது: உள்ளாட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதனை தாங்களே அகற்றிவிடுவதாக எம்எல்ஏ தரப்பில் கூறப்பட்டது. ஆனால், செய்யவில்லை, தாமதம் செய்து இழுத்தடிக்க நினைத்தனர் போலும். இந்நிலையில், அந்த நினைவிடம் தொடா்பாக துலே மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது[7]. இதில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த நினைவிடத்தை உடனடியாக இடித்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது[8]. இதைத் தொடா்ந்து நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன[9]. உள்ளாட்சி நிர்வாகத்தின் சில மணி நேரத்திலேயே அந்த நினைவிடத்தை இடித்து அகற்றினா்[10].

© வேதபிரகாஷ்

12-06-2023


[1] விகடன், ஔரங்கசீப், திப்பு சுல்தானைப் புகழ்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: கோலாப்பூர் கலவரத்தில் போலீஸ் தடியடி!, மு.ஐயம்பெருமாள், Published: 07 Jun 2023 8 PMUpdated:07 Jun 2023 8 PM

[2] https://www.vikatan.com/crime/a-post-praising-aurangzeb-on-social-media-led-to-violence-in-maharashtras-kolhapur-30-people-were-arrested

[3] தினமலர், சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு, Added : ஜூன் 12, 2023  04:05. https://www.dinamalar.com/news_detail.asp?id=3345410

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3345410

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Tipu Sultan Memorial Bulldozed: சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்புமகாராஷ்ட்ராவில் பரபரப்பு, 10 Muthu Vinayagam Kosalairaman, June 2023, 22:12 IST.

[6] https://tamil.hindustantimes.com/videos/tipu-sultan-memorial-bulldozed-in-maharashtra-action-amid-row-over-mysore-ruler-aurangzeb-131686414656533.html

[7] செய்திப்புனல், சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு, காவியா, 12-06-2023 06:52:58 காலை.

[8] https://www.seithipunal.com/india/tippu-sulthan-memorial-place-demolition-in-maharastra

[9] தினமணி, மகாராஷ்டிரம்: சட்டவிரோதமாக கட்டப்பட்டதிப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு, By DIN  |   Published On : 12th June 2023 02:00 AM  |   Last Updated : 12th June 2023 02:00 AM.

[10]https://www.dinamani.com/india/2023/jun/12/maharashtra-demolition-of-illegally-constructed-tippu-sultan-memorial-4020069.html

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

24-05-2023 இரவு மருத்துவமனையில் நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப் பணியின்போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதாஉண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானாஎனக்குச் சந்தேகமாக இருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..

ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது” என்றும், தினமணி, “ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.

25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம் முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].

25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, அரசு பெண் மருத்துவர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு, செய்திப்பிரிவு, Last Updated : 27 May, 2023 06:05 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/997226-government-female-doctor-hijab-issue.html

[3] விகடன், `ஏன் ஹிஜாப் போட்டுருக்கீங்க?’ – அரசு பெண் மருத்துவரிடம் பாஜக பிரமுகர் வாக்குவாதம்; போலீஸ் விசாரணை, Prasanna Venkatesh B  Published: 26 May 2023 1 PM; Updated: 26 May 2023 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/why-did-the-doctor-wear-hijab-bjp-leaders-controversy

[5] நக்கீரன், பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது, Published on 26/05/2023 (18:56) | Edited on 26/05/2023 (19:04)

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/argument-female-doctor-asking-her-take-her-hijab-bjp-leader-arrested

தினமணி, ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!

By DIN  |   Published On : 26th May 2023 09:25 AM  |   Last Updated : 26th May 2023 10:31 AM

https://www.dinamani.com/tamilnadu/2023/may/26/bjp-executive-arguing-with-female-doctor-wearing-hijab-4011902.html

[6] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[7] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[8] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[9] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[10] தந்தி டிவி, மருத்துவரின் ஹிஜாப் குறித்து கேள்வி கேட்ட பாஜக நிர்வாகிபரிதாபமாக பிரிந்த உயிர்... By தந்தி டிவி 26 மே 2023 8:55 PM

[11] https://www.thanthitv.com/latest-news/bjp-executive-questioned-about-doctors-hijab-tragic-loss-of-life-188742

[12] சமயம்.காம், நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am

[13]  https://tamil.samayam.com/latest-news/nagapattinam/nagapattinam-thirupundi-government-primary-health-center-doctor-wearing-hijab-issue/articleshow/100544706.cms

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

மே 17, 2023

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611