உள்-ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

உள்ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்[1]. என்னடா இது, ஜாதி இல்லை என்கின்ற அவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்கிறார்களே, முரணாக இருக்கிறதே என்று முதலமைச்சருக்குத் தெரியாதாது விசித்திரமாக இருக்கிறது. பேரவையில் முதலமைச்சர் 15.2.2024 அன்று தனது பதிலுரையில் கூறியதாவது[2]: “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை[3]. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார்[4]. சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன் களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,”[5] இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்[6].  இதனை அப்படியே எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன[7]. சில ஊட்கங்கள் மட்டும் தலைப்பிட்டு, இவ்விவகாரத்தைத் தனியாக வெளியிட்டுள்ளன[8]. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார், என்று சுருக்கமாக செய்தி முடிந்து விடுகிறது. இதைப் பற்றி ஏன் மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தன, எந்த கேளியையும் எழுப்பவில்லை என்று தெரியவில்லை. செக்யூலரிஸத் தனமாக இருந்து விட்டனர் போலும்

ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றித்ழ் கேட்கும் முஸ்லிம்கள்: எல்லோரும் சகோதரர்கள், சம உரிமைகளுடன் இருக்கிறார்கள், எந்தவிதமான வேற்றுமைகளும் கிடையாது என்றெல்லாம் தான் இன்றைய அளவுக்கும் கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாமிய நாடுகளே தினமும் ஒன்றை ஒன்று தாக்கி கொண்டு இருக்கின்றன. அதைப்பற்றி இப்பொழுது நமக்கு விவாதிக்க தேவை இல்லை. இருப்பினும் தமிழகத்தில் ஜாதி இல்லை, ஜாதியத்தை ஒழிப்பேன், ஜாதியை ஒழிப்பேன் என்றெல்லாம் பேசுகின்றவர்கள் தான், ஜாதியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடைய ஜாதி இல்லை, எந்த வேறுபாடும் இல்லை, எதுவும் இல்லை என்று பறைச் சாற்றி வருகின்ற முகமதியர், இப்பொழுது இஸ்லாமியர் என்று கூறப்பட வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இடவொதிக்கீடு கேட்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. முதலில் உள்-ஒதுக்கீடு 3.5% என்று சட்டத்திற்கு புறம்பாக கருணாநிதி கொடுத்தார், வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் அடிக்கடி எஸ்சி சலுகை கேட்டு வருகிறார்கள். அதாவது இந்துக்கள் எஸ்சி வகுப்பினராக இருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறினார் அதே நிலையை தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். எல்லாம் மறைந்து விடும் என்று பறைசாற்றிய பிறகு இஸ்லாமியராக இருந்து கொண்டு இல்லை எனக்கு எஸ்சி சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்பதும் மிக மிக தமாஷாக இருக்கிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இதனை சோதித்டுக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், இந்து பிசிக்கள்-எஸ்சிக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

முதலில் பிசி, பிறகு எஸ்சிஇது எப்படி சாத்தியமாகும்?: தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது[9]. ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்பு பிசிமுஸ்லிமாக இருந்து இப்பொழுது எஸ்சி முஸ்லிம் ஆக முடியுமா?: முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது[10]. சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது. ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

© வேதபிரகாஷ்

16-02-2024


[1] விடுதலை, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு, Last updated: 2024/02/16 at 4:20 PM, Published February 16, 2024.

[2] https://viduthalai.in/40155/backward-certificate-for-muslim-converts/

[3] தமிழ்.இந்து, முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்படுமா? – சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என முதல்வர் தகவல், Published : 16 Feb 2024 05:40 AM, Last Updated : 16 Feb 2024 05:40 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1200227-backward-certificate-for-those-who-converted-to-islam.html

[5] தமிழ்.நியூஸ்.18, ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்; மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடுமுதல்வரின் முக்கிய அறிவிப்புகள், FIRST PUBLISHED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST, LAST UPDATED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST

[6] https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalins-announcement-that-2-lak-50-thousands-houses-will-be-renovated-1346082.html

[7] தினகரன், மெட்ரோ ரயில் பணிக்காக நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடிக்கு முதல்வர் அழைப்பு, February 16, 2024, 1:10 am

[8]https://www.dinakaran.com/metro_railwork_uniongovernment_jointvoice_edappadi_chiefminister_call/

[9] தினமணி, முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும், Published on: 19 ஜனவரி 2013, 4:34 am; Updated on: 19 ஜனவரி 2013, 4:34 am.

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2013/Jan/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-619662.html

Explore posts in the same categories: அடிப்படைவாதம், அடிமைத்தனம், அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அஹ்மதியா, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமை, இந்துக்களின் உரிமைகள், இரட்டை வேடம், உள் ஒதுக்கீடு, உள்-இட-ஒதுக்கீடு, எஸ்.சி, எஸ்.டி.பி.ஐ, எஸ்.ஸி, எஸ்சி, எஸ்டிபிஐ, ஏமாற்று வேலை, சட்டம் மீறல், சட்டவிரோதம், சமத்துவம், சமரசப்பேச்சு, சமரசம், தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், தமுமுக, தலித், தலித் போர்வை, தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், துலுக்கன், துலுக்கர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாரபட்சம், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களில் சிறுபான்மையினர், ஷரியத், ஷரீயத், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “உள்-ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!”

  1. vedaprakash Says:

    தமிழ்.இந்து, முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்படுமா? – சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என முதல்வர் தகவல், Published : 16 Feb 2024 05:40 AM, Last Updated : 16 Feb 2024 05:40 AM. [1] https://www.hindutamil.in/news/tamilnadu/1200227-backward-certificate-for-those-who-converted-to-islam.html

    ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    பேரவையில் முதலமைச்சர் 15.2.2024 அன்று தனது பதிலுரையில் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்’ என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன் களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.  

    முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்

  2. vedaprakash Says:

    விடுதலை, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு, Last updated: 2024/02/16 at 4:20 PM, Published February 16, 2024.

    https://viduthalai.in/40155/backward-certificate-for-muslim-converts/

    ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    பேரவையில் முதலமைச்சர் 15.2.2024 அன்று தனது பதிலுரையில் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்’ என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன் களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.  

    முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்.


பின்னூட்டமொன்றை இடுக