Archive for the ‘அமைதி’ category

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

ஏப்ரல் 14, 2024

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

அமீர்விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது: அமீர் தொடர்ந்து சொன்னது, “விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னொரு புறம், இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[1]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[2].

அமீரின் சொத்து விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன: இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[3]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[4].

அப்துல் பாஷித் புஹாரியின் பங்கு: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்[5]. மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்[6]. அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, ‘ஜூகோ ஓவர்சீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது’ என்றனர்.

உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி தொடர்பு: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்[7]. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்[8]. சி.எம்.புகாரி மகன் இர்பான் புகாரி ஜாபர் சாதிக் தொடங்கிய சோயா டெலிவரிஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் இர்பான் புகாரி இடையே தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, புகாரி குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் புகாரி என்பவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வியாபார தொடர்பும், குற்றங்கள் நடந்துள்ள நிலையும்: வியாபார தொடர்பு தான், இதனால், தனக்கும் அந்த சாதிக்கின் போதை மருந்து வியாபாரம், கடத்தல் முதலியவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிப்பது போன்றுள்ளது. இருப்பினும், அத்தகைய விவரங்கள் தெரியாமலா / தெரிந்தோ கூட்டு வைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். ஏனெனில், இவையெல்லாம் சாதாரணமாக ஒரு நபர் செய்யக் கூடிய வேலை அல்ல. தொழிற்சாலை போல வைத்து, பலரை வேலைக்கு அமர்த்தி, மிகவும் அதி-எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் செய்து வந்த தொழிலாகும். எல்லாவற்றையும் கடவுள் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. குற்றம் என்று தெரிந்து, அத்தகையக் குற்றங்களை செய்து வரும் நபர்களுடன் தொடர்ந்து, பல ஆண்டுகளாக வியாபார தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ளதும் சாதாரணமான விசயமாகி விடாது. மேலும், போதை மருந்து கடத்தல் பற்றிய எச்சரிக்கையே அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து வந்து, கையும்-களவுமாக கைதும் செய்யப் பட்டிருக்கிறார்கள். 

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[2] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[3] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[4] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[5] தினமலர், ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு, UPDATED : ஏப் 12, 2024 05:45 AMADDED : ஏப் 12, 2024 05:45 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-ncp-probes-jaffer-sadiq-associates-assets-bank-accounts–/3598702

[7] இடிவிபாரத், சென்னையில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! – Ed Raid At Buhari Hotel Owner House, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 9, 2024, 3:47 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/ed-raid-at-buhari-hotel-owner-house-in-chennai-tns24040903438

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

ஏப்ரல் 4, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

பி.டி. பாணி செய்தியா, செக்யூலரிஸமா?: ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[1], இப்படித்தான் ஒரு வரியில் செய்திகள் வந்துள்ளன[2].. மற்ற விசயங்களுக்கு ஏதோ பெரிய சி.ஐ.டி மாதிரி விவரங்களை அள்ளி வீசும் ஊடகங்கள் இதற்கு, இத்தகைய முறையைப் பின்பற்றுவது பல கேள்விகளை எழுப்புகிறது. சில ஊடகங்கள் முன்னும்-பின்னும் பழைய விவரங்களை சேர்த்துள்ளன[3]. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்[4].  இனி, விவரங்களை அலசுவோம்.

யார் இந்த அமீர்அமீர் சுல்தான்?: தமிழ் ஆர்வலராக இருந்த அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் அட்டூழியங்களைக் கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா, தமிழ் ஆர்வலர் மற்றும் பிற முக்கிய தமிழ் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திரைப்படப் பேரணியில் பங்கேற்றார். 24 அக்டோபர் 2008 அன்று, அமீர் கைது செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு இலங்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது, அமீர் மற்றும் சக இயக்குனர் சீமான் ஆகியோர் இந்திய அரசை விமர்சித்தும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், தீவில் உள்ள தமிழ் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை தெரிவித்தும் உரைகளை நிகழ்த்தினர்.பின்னர் அவர்களது உதவி இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் நடிகர் ஆர்.சரத்குமார் ஆகியோரின் உதவியுடன் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இப்பொழுது, ஜாபர் சாதிக்குடன் வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

2021லிருந்து மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் கடத்தல் வியாபாரம்: மூன்று ஆண்டுகளாக, அதாவது 2021லிருந்து நடந்து வருகிறது  எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. அம்மருந்துகளை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியுமா, வாங்கியவர் மூலங்களை அறிவது கடினமா போன்ற விவரங்களும் தெரியவில்லை. மூன்று வருடங்களில் ஒருசிலரால் செய்யும் காரியமும் இது இல்லை. தொழிற்சாலை, ஆட்கள், வாகனங்கள் என்று பல விவகாரங்கள் உள்ளன. ஏற்ற்மதி என்றால், சுங்க ஆவணங்களே சம்பந்தப் பட்டவர்களின் விவரங்களைக் காட்டிக் கொடுக்கும். இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம், ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது[5]. ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன[6]. பிறகு தான் ஊடகங்களுக்கு தைரியம் வந்தது போலிருக்கிறது. இதில், வேடிக்கையென்னவென்றால், இதே ஊடகத்தினர், ஏன், அதே நிருபர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளைப் பற்றியும் புகைப்படங்களுடன் செய்திகலாக வெளியிட்டுள்ளன. இப்பொழுது, ஒரு வேளை மறைக்க ஆரம்பிக்கின்றன, முயல்கின்றன போலும்.

ஜாதிக்கின் சகோதரர்கள் பிடிபடாமல் இருப்பது எப்படி?: போதை மருந்து பிரிவு நடவடிக்கைகளும் மெதுவாக செல்வது போலிருக்கிறது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[7]. ஆனால், விளைவு என்ன என்று தெரியவில்லை. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள்[8]. இன்னும் அவர்கள் சிக்காமல் இருப்பதும் வினோதமான விசயம் தான். அதன் பின்புலம் என்ன என்று புரியவில்லை. இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது[9]. சென்னையிலும் தொடர்ந்து விசாரணை முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை நேற்றைய தினம் தமிழக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது[10]. அங்கும் சென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள். சதா என்ற சதானந்தத்தின் கோடவுனில் அத்தகைய உற்பத்தி நடந்தது என்றும் தெரிகிறது.

அமீருக்கு சம்மன்: மேலும் மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை மார்ச் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்[11]. இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[12]. இத்தனை நாட்கள் ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக, நேரம் கொடுத்தால், குற்றவாளிகள் ஆதாரங்களை எல்லாம் அழித்து விடுவார்கள் என்பார்கள். அதிலும் இவ்வாறு வாரங்கள் என்று நேரம் கொடுக்கும் பொழுது என்ன செய்வார்கள் என்பது அதிகாரிகளுக்குத் தான் தெரியும். ஏப்ரல் 2ஆம் தேதி தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது[13]. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது[14].

அமீர் மற்றும் மேலும் இருவருக்கும் சம்மன்: இந்த வழக்கில் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி Abdul Fazid Buhari ], சையது இப்ராஹிம் [Syed Ibrahim] ஆகிய 3 பேர் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[15]. ஆஜராவாரா இல்லையா என்று தெரியவில்லை[16]. இந்து மூன்று பேர் யார், என்ன விவரங்கள் என்றும் தெரியவில்லை. முன்னர், இவர் தனக்கும் இவ்விவகாரத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருப்பதும் நோக்கத் தக்கது. தமிழகத்தில் இவ்வாறு போதை மருந்து விவகாரத்தில் இத்தனை பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது[17]. மேலும் கோலிவுட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[18]. தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் நடக்கும் போது, கவனிக்கப் படாமல் இருக்கலாம்[19]. இருப்பினும், இது தமிழக தேர்தலின் மீது பாதிப்பை ஏற்படுத்துவா என்று பார்க்க வேண்டும்[20]. வழக்கம் போல, இச்செய்தியை பிடிஐ பாணியில் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[21]. அதிலும், ஒரு வரி செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளன[22]. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் சினிமா தொடர்புகள், மற்றும் முஸ்லிம்கள் சந்திருப்பது, தீவிரவாதிகள் தொடர்பு, தொடரும் சோதனை எல்லாம் தமிழக செக்யூலரிஸ ஊடகங்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளன போலும்.

© வேதபிரகாஷ்

03—04-2024


[1] மாலைமலர், ஜாபர் சாதிக் வழக்குநேரில் ஆஜராக இயக்குனர் அமீருக்கு சம்மன், 31 மார்ச் 2024 12:18 PM.

[2]https://www.maalaimalar.com/tags/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

[3] தமிழ்.வெப்துனியா, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், ஞாயிறு 31 மார்ச் 2024 12:17 IST.

[4] https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jaffer-sadik-drug-case-a-summon-to-ameer-124033100021_1.html

[5] நியூஸ்.7.தமிழ், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!, by Web Editor March 31, 2024.

[6] https://news7tamil.live/director-ameer-summons-in-jaber-sadiq-case.html

[7] சமயம், ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய இயக்குநர் அமீர்.. விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சம்மன்.. பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 31 Mar 2024, 12:26 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/ncp-summons-director-ameer-in-jaffer-sadiq-drugs-smuggling-case/articleshow/108913905.cms

[9] ஏபிபி, Breaking News LIVE : இயக்குநர் அமீருக்கு டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன்..!, By : ABP NADU  | Updated at : 31 Mar 2024 01:53 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/india/breaking-news-live-updates-latest-news-tamilnadu-india-worldwide-31st-march-lok-shaba-election-2024-election-commission-175729

[11] தினத்தந்தி, ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீருக்கு சம்மன், தினத்தந்தி மார்ச் 31, 12:20 pm

[12] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/rs2-thousand-crore-drug-smuggling-case-summons-director-ameer-1099631

[13] தினமணி, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், Published on: 31 மார்ச் 2024, 12:31 pm; Updated on: 31 மார்ச் 2024, 12:31 pm.

[14] https://www.dinamani.com/tamilnadu/2024/Mar/31/director-ameer-summons-in-jaffer-sadiq-case

[15] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 3 பேருக்கு சம்மன்.. போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, By Vishnupriya R Updated: Sunday, March 31, 2024, 13:03 [IST].

[16] https://tamil.oneindia.com/news/chennai/delhi-ncb-officials-issue-summon-to-director-ameer-595001.html

[17] காமதேனு, ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்குஇயக்குநர் அமீருக்கு சம்மன்; பரபரப்பில் கோலிவுட், Updated on: 31 Mar 2024, 1:00 pm.

[18] https://kamadenu.hindutamil.in/crime-corner/zafar-sadiq-drug-case-director-ameer-summoned-to-appear-before-ncb-office-on-april-2

[19] குமுதம், ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த குழு.. தேர்தல் நேரத்தில் செக்..,Mar 31, 2024 – 13:36

[20] https://kumudam.com/Special-Committee-to-Investigation-in-Jafer-Sadiq-Case

[21] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் ஆஜராக சம்மன், Vasuki Jayasree, 31 Mar 2024 12:46 IST

[22] https://tamil.indianexpress.com/tamilnadu/director-ameer-gets-notice-for-jaffer-sadiq-drug-case-4437388

உள்-ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

பிப்ரவரி 16, 2024

உள்ஒதுக்கீடு என்று ஆரம்பித்து எஸ்சி, பிசி என்று கேட்டு ஆரம்பித்து, இப்பொழுது, ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றிதழ் கேட்கும் முஸ்லிம்கள்!

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்[1]. என்னடா இது, ஜாதி இல்லை என்கின்ற அவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்கிறார்களே, முரணாக இருக்கிறதே என்று முதலமைச்சருக்குத் தெரியாதாது விசித்திரமாக இருக்கிறது. பேரவையில் முதலமைச்சர் 15.2.2024 அன்று தனது பதிலுரையில் கூறியதாவது[2]: “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை[3]. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார்[4]. சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன் களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,”[5] இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்[6].  இதனை அப்படியே எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன[7]. சில ஊட்கங்கள் மட்டும் தலைப்பிட்டு, இவ்விவகாரத்தைத் தனியாக வெளியிட்டுள்ளன[8]. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார், என்று சுருக்கமாக செய்தி முடிந்து விடுகிறது. இதைப் பற்றி ஏன் மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தன, எந்த கேளியையும் எழுப்பவில்லை என்று தெரியவில்லை. செக்யூலரிஸத் தனமாக இருந்து விட்டனர் போலும்

ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி ஜான்றித்ழ் கேட்கும் முஸ்லிம்கள்: எல்லோரும் சகோதரர்கள், சம உரிமைகளுடன் இருக்கிறார்கள், எந்தவிதமான வேற்றுமைகளும் கிடையாது என்றெல்லாம் தான் இன்றைய அளவுக்கும் கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாமிய நாடுகளே தினமும் ஒன்றை ஒன்று தாக்கி கொண்டு இருக்கின்றன. அதைப்பற்றி இப்பொழுது நமக்கு விவாதிக்க தேவை இல்லை. இருப்பினும் தமிழகத்தில் ஜாதி இல்லை, ஜாதியத்தை ஒழிப்பேன், ஜாதியை ஒழிப்பேன் என்றெல்லாம் பேசுகின்றவர்கள் தான், ஜாதியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடைய ஜாதி இல்லை, எந்த வேறுபாடும் இல்லை, எதுவும் இல்லை என்று பறைச் சாற்றி வருகின்ற முகமதியர், இப்பொழுது இஸ்லாமியர் என்று கூறப்பட வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இடவொதிக்கீடு கேட்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. முதலில் உள்-ஒதுக்கீடு 3.5% என்று சட்டத்திற்கு புறம்பாக கருணாநிதி கொடுத்தார், வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் அடிக்கடி எஸ்சி சலுகை கேட்டு வருகிறார்கள். அதாவது இந்துக்கள் எஸ்சி வகுப்பினராக இருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறினார் அதே நிலையை தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். எல்லாம் மறைந்து விடும் என்று பறைசாற்றிய பிறகு இஸ்லாமியராக இருந்து கொண்டு இல்லை எனக்கு எஸ்சி சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்பதும் மிக மிக தமாஷாக இருக்கிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இதனை சோதித்டுக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், இந்து பிசிக்கள்-எஸ்சிக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

முதலில் பிசி, பிறகு எஸ்சிஇது எப்படி சாத்தியமாகும்?: தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது[9]. ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்பு பிசிமுஸ்லிமாக இருந்து இப்பொழுது எஸ்சி முஸ்லிம் ஆக முடியுமா?: முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது[10]. சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது. ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

© வேதபிரகாஷ்

16-02-2024


[1] விடுதலை, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு, Last updated: 2024/02/16 at 4:20 PM, Published February 16, 2024.

[2] https://viduthalai.in/40155/backward-certificate-for-muslim-converts/

[3] தமிழ்.இந்து, முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்படுமா? – சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என முதல்வர் தகவல், Published : 16 Feb 2024 05:40 AM, Last Updated : 16 Feb 2024 05:40 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1200227-backward-certificate-for-those-who-converted-to-islam.html

[5] தமிழ்.நியூஸ்.18, ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்; மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடுமுதல்வரின் முக்கிய அறிவிப்புகள், FIRST PUBLISHED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST, LAST UPDATED : FEBRUARY 15, 2024, 1:46 PM IST

[6] https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalins-announcement-that-2-lak-50-thousands-houses-will-be-renovated-1346082.html

[7] தினகரன், மெட்ரோ ரயில் பணிக்காக நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடிக்கு முதல்வர் அழைப்பு, February 16, 2024, 1:10 am

[8]https://www.dinakaran.com/metro_railwork_uniongovernment_jointvoice_edappadi_chiefminister_call/

[9] தினமணி, முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும், Published on: 19 ஜனவரி 2013, 4:34 am; Updated on: 19 ஜனவரி 2013, 4:34 am.

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2013/Jan/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-619662.html

இந்துமதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப் படுமா – இது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

திசெம்பர் 16, 2023

இந்து மதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமாஇது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

இந்து மதத் தலைவர்களை கொல்லப் படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா: இந்து மதத் தலைவர்களை கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது[1]. பிறகு அத்தகைய குரூர எண்ணத்தை என்னவென்று குறிப்பிடுவது என்று நீதிமன்றம் தான் விளக்க வேண்டும். குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  “culpability of mind” இருந்ததா-இல்லையா என்று ஆராய வேண்டும் என்று நீதிமன்றங்களில் பலமுறை வரையருக்கப் பட்ட சட்டமுறையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர்[2]. மேலும், பெயிலுக்கு கொடுத்த மனுவை ஏற்று, ISIS அனுதாபி என்று கூறப்படும் ஒருவரின் ஜாமீன் மனு, மேலும் சமீபத்தில் பல நிபந்தனைகளுடன் அவரை விடுதலை செய்தது[3]. இது பிடிஐ செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வெளிவந்துள்ளது. ஆனால், தமிழகத்து செய்தியானாலும், தமிழ் ஊடகத்தில் இன்னும் வெளி வரவில்லை.

ஐசிஸ் உறுப்பினர் என்று எடுத்துக் காட்டப் படவில்லை: மேல்முறையீடு செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தஹீன், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக விரும்பினார் என்பது அரசுத் தரப்பு வழக்கு[4] என்று தெரிகிறது. மற்றொரு குற்றவாளியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்[5] என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே அரபு மொழியில் வரும் செய்திகள், அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்ல விரும்புவதாகவும் காட்டுவதாக அது வாதிட்டது[6]. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act,] 18 மற்றும் 38(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று அரசு தரப்பு சமர்பித்தது. இருப்பினும், குறுஞ்செய்திகளில் மேல்முறையீடு செய்தவர் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது[7]. அதாவது, ஐசிஸ் உறுப்பினர் என்றால் தான் குற்றவாளி ஆவான் போலிருக்கிறது.

நெருக்கமாக இருப்பதால் மட்டும் தீவிரவாதியாகி விட முடியாது: “A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் எந்த ஆதாரமும் இல்லை. A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று வைத்துக் கொண்டாலும், குறுஞ்செய்திகள் மேல்முறையீடு செய்பவர்/A1 A2 க்கு அருகில் இருக்க விரும்புவதாக மட்டுமே குறிப்பிடுகிறது[8]. ஒரு தனிநபரின் அருகாமை என்பது, பயங்கரவாத சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புகொள்வது அல்லது அதனுடன் தொடர்புடையதாகக் கூறுவது வேறுபட்டது,” என்று பெஞ்ச் கூறியது[9]. தகவல்தொடர்புகளைத் தவிர, இரண்டு கத்திகள் மற்றும் மேல்முறையீட்டாளர் கத்தியை வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருக்கும் படம் ஆகியவற்றைப் பிரதிவாதி பொலிசார் நம்பியுள்ளனர்[10]. ஆனால், அவர் அத்தகைய கொலையாளியா என்றெல்லாம் நிரூபிக்கவில்லை என்றும் வாதல் தொடரும் போலிருக்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி: யுஏபிஏ பிரிவு 18ன் கீழ் உள்ள குற்றத்தைப் பொறுத்தவரை, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஏ1 மற்றும் ஏ2 சதி செய்ததாக இறுதி அறிக்கையில் அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது[11]. “சில மதத் தலைவர்களைத் தாக்க சதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. UAPA வின் 15வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அது எப்படி ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்பதை பிரதிவாதி குறிப்பிடவில்லை[12]. UAPA இன் 15வது பிரிவின் கீழ் ஒரு சட்டத்தை கொண்டு வர, அந்தச் செயல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்[13]. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள மக்களிடமோ அல்லது எந்தப் பிரிவினரிடமோ பயங்கரவாதத்தைத் தாக்குவது, என்ற ரீதியில் தீவிரவாதம் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது[14].

 “இந்து மதத் தலைவர்கள் கொல்லப்படுவது மட்டுமே ஒரு பயங்கரவாதச் செயலாக அமையுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது[15]. எவ்வாறாயினும், வழக்கின் பரந்த நிகழ்தகவுகளைக் கருத்தில் கொண்டு, வழக்குத் தொடுத்துள்ள பொருட்களிலிருந்து, தீவிரமான குற்றங்கள் உட்பட பிற சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சதி இருந்தபோதிலும், பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதித்திட்டம் இருந்தது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் மேலும் கூறியது[16]. எவ்வாறாயினும், “யுஏபிஏவின் பிரிவுகள் 18 மற்றும் 38(2) இன் கீழ் முதன்மையான வழக்கு தொடர்பான தீவ்ரமான அம்சங்கள் வழக்கின் பரந்த சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும், ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதன் மூலமும் மட்டுமே செய்யப்படுகின்றன.” அரசு தரப்பில் என்ன வாதாடினார்கள் என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அரசு தரப்பு வக்கீலுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை முறையாக அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்றால், இவ்வாறே ஓட்டைகளை உபயோகித்து விடுதலை பெற்று சென்று விடலாம். பிறகு, கைது செய்யப் பட்டது ஆதாரங்களை சேகரித்தது என்பதெல்லாம் வேஸ்ட் தான்.

நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை: ஈரோடு உள்ளூர் நீதிமன்றத்தால் இதேபோன்ற மனு நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு விடுதலை அளித்தது, பத்திரத்தை நிறைவேற்றும்படியும், தலா ரூ. 50,000 போன்ற தொகைக்கு இரண்டு ஜாமீன்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது, அதில் ஒன்று இரத்த உறவினரால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஈரோட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இனி ஈரோடில் அவன் சுதந்திரமாகத்தன் திரிந்து கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து விடும். இப்பொழுதே தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.

© வேதபிரகாஷ்

16-12-2023


[1] The South First, Considering killing of Hindu religious leaders as terrorist act is ‘debatable’: Madras HC while granting bail to alleged ISIS sympathizer, BY PTI,  Published:15/12/2023 11:54 am.

[2] https://thesouthfirst.com/tamilnadu/considering-killing-of-hindu-religious-leaders-as-terrorist-act-is-debatable-madras-hc-while-granting-bail-to-alleged-isis-sympathiser/

[3] Times of India, Targeted killing of Hindu neta not terrorist act: Madras HC, Suresh Kumar / TNN / Dec 14, 2023, 02:16 IST.

[4] https://timesofindia.indiatimes.com/india/targeted-killing-of-hindu-neta-not-terrorist-act-madras-hc/articleshow/105971027.cms?from=mdr

[5] Times Now, Is targeted killing of Hindu neta an act of terror? Madras HC says it id debatable, TN National Desk, Updated: Dec 14, 2023, 10:20 AM IST.

[6] https://www.timesnownews.com/india/is-targeted-killing-of-hindu-neta-an-act-of-terror-madras-hc-says-its-debatable-article-105975897

[7] The Week, Madras HC grants bail to alleged ISIS sympathizer, PTI Updated: December 14, 2023 20:03 IST.

[8] https://www.theweek.in/wire-updates/national/2023/12/14/lgm4-tn-hc-isis.html

[9] Bar and Bench, Is conspiring to kill Hindu religious leader a terrorist act under UAPA? Madras High Court asks, Ayesha Arvind, Published on:  13 Dec 2023, 7:28 pm.

[10] https://www.barandbench.com/news/is-conspiring-kill-hindu-religious-leader-terrorist-act-uapa-madras-high-court

[11] Law trend, Madras HC grants bail to alleged ISIS sympathiser, By PTI News December 14, 2023 8:40 PM.

[12] https://lawtrend.in/madras-hc-grants-bail-to-alleged-isis-sympathiser/

[13] Indian Express, Plot to kill religious leaders: Accused gets bail, HC asks if act is terror under UAPA, Written by Arun Janardhanan, Chennai | Updated: December 15, 2023 03:33 IST

[14] https://indianexpress.com/article/cities/chennai/plot-to-kill-religious-leaders-accused-gets-bail-hc-asks-if-act-is-terror-under-uapa-9068828/

[15] Rediff.com, Is killing Hindu leaders a terrorist act asks HC, grants bail to pro-ISIS man, Source: PTI   –  Edited By: Senjo M RDecember 14, 2023 21:40 IST

[16] https://www.rediff.com/news/report/is-killing-hindu-leaders-a-terrorist-act-asks-hc-grants-bail-to-pro-isis-man/20231214.htm

இந்திய வம்சாவளி யூத குடும்ப பெற்றோரை குழந்தைகளுக்கு முன்பாக கொலை செய்யப் பட்ட குரூர செயல்!

ஒக்ரோபர் 12, 2023

இந்திய வம்சாவளி யூத குடும்ப பெற்றோரை குழந்தைகளுக்கு முன்பாக கொலை செய்யப் பட்ட குரூர செயல்!

21ம் நூற்றாண்டிலும் சண்டையிடும் கோஷ்டிகள்: பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன. சமய ரீதியில் இப்பிரச்சினையை தீர்ப்பது என்பது இது வரை இயலாத காரியம் போலவே, சம்பந்தப் பட்ட குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இருப்பினும், இந்த நவீன காலத்தில், எல்லோரும் படித்து விஞ்ஞானம்-தொழிற்நுட்பம் என்று முன்னேறும் காலங்களில் அமைதியுடன் எல்லா மக்களும் சேர்ந்து வாழலாம் என்றும் அக்குழுக்கள் சமரசத்திற்கு வரலாம். அரேபிய-இஸ்ரேல் போர் என்று அடிக்கடி இப்படி போரிடுவது, மதரீதியில் தான் அணுகப் படுகிறது. ஆனால், மனித ரீதியில் அணுகவேண்டிய கட்டாயமும் உள்ளது. காஸா எல்லைப் பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் [முஸ்லீம்கள்] எப்பொழுதுமே இஸ்ரேல் ராணுவத்தினரைத் தூண்டி வருவது தெரிந்த விசமாக உள்ளது. சில நேரங்களில் அடங்கில் விடுகிறது.

07-10-2023 – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது மக்கள் மீது தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 07-10-2023 சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது[1]. எல்லை பகுதியிலும் புகுந்து அங்கு மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது[2]. இத்தகைய போர், கண்மூடித்தனமான கொலைகள் தேவையா என்று யோசிக்க வேண்டும். இதில் அனைத்து தரப்பினரும் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்[3]. இதனால், மறுபடியும் இன்றைய தலைமுறை இதனை மனத்தில் கரம் வைத்துக் கொண்டு தத்தம் எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற ரீதியில் வளர்க்கப் பட்டால், அவர்களும் அவ்வாறே தயாராவார்கள். இந்த உச்சகட்டமாக போரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 -யைக் கடந்தது[4]. பிறகு காயமடைந்தவர்களின் கதி என்ன? அவர்களுக்கு அருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் படுமா? போதிய மருத்துவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகளும் எழும்.

பலமாடி அடுக்குக் கட்டிடங்கள் தாக்கப் படுதல்: அந்நிலையில் தான், இந்த இரு குழுவினரும் சண்டையிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல அடுக்கு மாடி கட்டிடங்கள் அப்படியே விழுந்து நொருங்குவதைப் பாருக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவ்வீடுகளில் இருக்கும் மக்களின் கதி என்ன? இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த 21ம் நூற்றாண்டிலும், விளைவுகளை அறிந்தும், இவ்வாறான போர்களை நடத்தி வருவதும், நடந்து வருவதும் திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. ஏனெனில், கோடானு கோடி கணக்கில் வீடுகள் முதலியவை நாசமாவதுடன், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் படுவது தான், துக்ககரமான விசயமாகிறது. நிச்சயமாக அவர்களுக்கும் இந்த வன்முறை மற்றும் போர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பொது மக்களை பிணை கைதிகளாகப் பிடித்துச் செல்லுதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்[5]. 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின[6]. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்[7]. ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர்[8]. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்[9]. வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர்[10]. இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்[11]. இது ஐசிஸ், தாலிபான், ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. அத்தகைய ஈவு-இரக்கமற்ற குரூரக் கொலைகளை வீடியோ எடுத்து, ஒலி-ஒளி பரப்பி மக்களை அச்சுருத்தி மிரட்டியும் வருகின்றனர். குறிப்பாக மற்ற மதத்தின்ரைக் குறிப்பிட்டு, உங்களுக்கும் இதே கதிதான் என்றும் மிரட்டி வருகின்றனர்.

இந்திய வம்சாவளி யூத பெண் மற்றும் அவரது கணவர் குழந்தைகளுக்கு முன் கொல்லப் படுதல்: அவ்வாறு பொது மக்களை, பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் பொழுது தான், இந்த கொடூரம் நடந்தேறியுள்ளது. அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது[12]. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்[13]. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம்[14]. அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மக்களை மக்கள் கொல்லும் நிலை தேவையா?: இத்தகைய கொலைகள், கழுத்தறுத்துக் கொல்லும் குரூரங்கள்……அவற்றை வீடியோ எடுத்து, எச்சரிக்கையுடன், இணைதளத்தில் போடுவது-பரப்புவது, பீதியைக் கிளப்புவது குறிப்பிட்ட இயக்கங்கள், அமைப்புகள் செய்து வருகின்றன. அமைதி என்று பேசும் நிலையில், உலக மக்கள் படித்து, சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலையில், இந்த 21ம் நூற்றாண்டில், இவ்வாறு போரிட்டுக் கொள்வது, பெரிய குடியிருப்புக் கட்டிடங்களைத் தாக்குவது, குண்டு போட்டு தகர்ப்பது, அப்பாவி-பொது மக்களை இரக்கமில்லாமல் கொல்வது முதலிய மிகவும் சோகமாக, வருத்தமாக, கவலையாக, பீதியாக, பயமாகவும் இருக்கிறது. அவர்கள் உலகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் அல்லது சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள், இறக்கவும் செய்கிறார்கள். பிறகு, மக்களை மக்கள் கொல்லும் நிலை தேவையா?

© வேதபிரகாஷ்

12-10-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Israel Conflict : குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரி மற்றும் அவரது கணவர்டிவி நடிகை வருத்தம்!, Priyadarshini R • HT Tamil, Oct 11, 2023 08:26 AM IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/sister-killed-in-front-of-children-and-her-husband-tv-actress-regret-131696992445340.html

[3] லங்காஶ்ரீ, இஸ்ரேலில் குழந்தைகள் கண்முன்னே சகோதரி, மைத்துனர் மரணம்: நடிகை கண்ணீர் மல்க வீடியோ, Israel-Hamas War- By Sathya, Published at : 11 Oct 2023 11:45 AM; https://news.lankasri.com/article/sister-die-in-front-of-children-in-israe-actress-1697024124

[4] https://news.lankasri.com/article/sister-die-in-front-of-children-in-israe-actress-1697024124

[5] மாலைமலர், இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே சகோதரி, மைத்துனர் கொடூரக்கொலை: டி.வி. நடிகை கண்ணீர், By மாலை மலர், 11 அக்டோபர் 2023 12:35 PM (Updated: 11 அக்டோபர் 2023 12:56 PM)

[6] https://www.maalaimalar.com/news/national/tv-actor-madhura-naik-sister-brother-in-law-killed-in-war-torn-israel-672818

[7] ஐபிசி.தமிழ்நாடு, இஸ்ரேலில் குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரிநாகினி நடிகை வேதனை!!, கார்த்திக், | Published at : 11 Oct 2023 11:45 AM (IST);

[8]  https://ibctamilnadu.com/article/hindi-actress-family-died-in-israel-war-1697006873

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Israel-Hamas War: இஸ்ரேல்ஹமாஸ் போரில் நாகினி சீரியல் நடிகையின் சகோதரி, கணவர் கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!, By: பேச்சி ஆவுடையப்பன் | Published at : 11 Oct 2023 07:45 AM (IST); Updated at : 11 Oct 2023 07:45 AM (IST);

[10] https://tamil.abplive.com/news/world/actress-madhura-naik-s-sister-brother-in-law-killed-in-war-torn-israel-144506

[11] தமிழ்.ஒன்.இந்தியா, Israel-Hamas War: குழந்தைகளின் கண்முன்னே.. நாகினி சீரியல் நடிகையின் சகோதரி மற்றும் கணவர் கொலை, By V Vasanthi Updated: Wednesday, October 11, 2023, 12:04 [IST].

[12] https://tamil.oneindia.com/television/israel-hamas-war-naagini-serial-actresss-sister-and-husband-killed-in-israel-hamas-war-547109

[13] புதியதலைமுறை, நாகினி நடிகையின் சகோதரி கொடூர கொலைஇஸ்ரேல்ஹமாஸ் போரின் கொடூரம் தொடர்பாக பரபரப்பு வீடியோ!, Published on: 11 Oct 2023, 5:54 pm.

[14] https://www.puthiyathalaimurai.com/world/naagini-serial-actress-lost-her-sister-and-brother-in-law-at-israel-hamas-war

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டுவெடிப்பு – முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

செப்ரெம்பர் 30, 2023

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டு வெடிப்புமுஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

வெள்ளிக் கிழமை 29-09-2023 அன்று குண்டுவெடித்த இடம் – மதினா மசூதி, அல்ஃபலா சாலை, மாகாணம் மஸ்துங் மாவட்டம், பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தான்: பாகிஸ்தானில் 29-09-2023 அன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[1]. மீலாது நபி என்று முகமது நபி பிறந்த நாளை வெள்ளிக் கிழமை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர்[2]. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது[3]. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர்[4]. இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்[5]. இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்[6]. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தன.ர்[7]. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்[8]. இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்[9]. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்[10].

சுன்னி / சன்னி அல்லாத முஸ்லிம்கள் தாக்கப் படுதல்: ஆசார இஸ்லாத்தில் முகமது நபி பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா என்ற வாத-விவாதங்கள் உள்ளன. ஏனெனில், அத்தகைய கொண்டாடங்கள் சின்னங்கள், அடையாளங்கள் வைக்க ஊக்குவிக்கும். அதுவே நாளடைவில் பெருகும் என்ற கோட்பாடும் உள்ளது. மெக்காவில், அவரது கல்லறையே அழிக்கப் பட்டது போன்ற செய்திகளும் உள்ளன. ஏனெனில், அது பிரத்யேகமாக அடையாளம் காணப்பட்டால், அதுவே சின்னமாகி, லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் வர ஆரம்பித்து விடுவர். பிறகு, அது வழிபடும் க்ஷேத்திரமாக மாறிவிடும். எனவே அத்தகைய முயற்சிகளும் தடுக்கப் பட்டன. முழு இஸ்லாம் மயமாக்கும் செயல்பாடுகளில், பாகிஸ்தானில் உள்ள மற்ற இஸ்லாமியக் குழுக்கள் – ஷியா, போரா, அஹ்மதிய போன்ற பிரிவுகள் அடிக்கடித் தாக்கப் பட்டு வருகின்றன, அவர்களது மசூதிகளும் தாக்கப் பட்டு, இடிக்கப் பட்டு வருகின்றன..இது அத்தகைய தாக்குதலா என்று தெரியவில்லை. இருப்பினும், குரூர-தீவிரவாத செயலுக்கு எந்த ஆதரவு-சமாதானமும் கொடுக்க முடியாது.

தொடரும் தற்கொலை குண்டுவெடிப்புகள்: இந்நிலையில், ஷாஹீத் நவாப் கவுஸ் பக்‌ஷ் ரயிசானி நினைவு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சயீது மிர்வானி, இதுவரை 52 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். கடந்த 15 நாட்களில் இது மாஸ்துங் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் ஆகும்[11]. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்[12]. இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்து இடைக்கால முதல்வர் அலி மர்தான் டோம்கி கூறும்போது, எதிரிகள் பலூசிஸ்தானின் மத சகிப்புத்தன்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்[13]. இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்கள் மாகாணத்தில் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்[14].

முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது: பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது[15]. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார்[16]. மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது. ஆக, முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது. தற்கொலை குண்டு வெடித்தவன் சொர்க்கத்திற்கு போகிறான் என்றால், குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் கதி என்ன? இத்தகைய இறையியல் சித்தாந்தம், மனித நேயம் கொண்டதா இல்லையா என்று அவர்கள் தான் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கொலைப் படை தாக்குதல் இரண்டுமற்றொரு தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. மசூதியில் 30 முதல் 40 பேர் வரை தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேரிட்ட இந் தஇரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின் கார் அருகே மனித வெடிகுண்டாக வந்தவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்: வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் அகமது பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும்போது, “பலுசிஸ்தானில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை எதிரிகள் விரும்பவில்லை. அதை அழிக்க நினைக்கின்றனர். மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத சக்திகள் எந்த சலுகைக்கும் தகுதியானவர்கள் அல்ல. தீவிரவாத செயல்களை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார். இதெல்லாம் புரியாத புதிர்களாகத் தான் இருக்கின்றன. எல்லா வசதிகள், வளங்கள் வைத்துக் கொண்டு அமைதியாக வாழ்வதை விடுத்து, ஏன் இப்படி ஒருவரையொருவர் கொன்று வாழ வேண்டும் எனத் தெரியவில்லை?

நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டுவெப்புக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்யும்படி, பலுசிஸ்தான் மகாண முதல்வர் அலி மர்தான் டோம்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்[17]. தெஹ்ரிக்-இ தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளின் தாக்குதலுக்கு இந்த மாகாணம் இலக்காகி வருகிறது[18].

© வேதபிரகாஷ்

29-09-2023


[1] தமிழ்,இந்து, பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்,, செய்திப்பிரிவு, Published : 30 Sep 2023 04:23 AM, Last Updated : 30 Sep 2023 04:23 AM.

[2] https://www.hindutamil.in/news/world/1131015-pakistan-mosque-blasts-57-dead-60-people-were-injured.html

[3] புதியதலைமுறை, பாகிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் – 57 பேர் பலி, Prakash J, Published on :  29 Sep 2023, 10:41 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/world/today-blast-in-pakistan-at-least-57-killed

[5] நக்கீரன், பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 34 பேர் பலி; 130 பேர் காயம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 29/09/2023 (17:00) | Edited on 29/09/2023 (17:17).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/world/pakistan-incident-near-mosque

[7] தினமலர், பாக்.,கில் அடுத்தடுத்து மசூதிகளில் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி, மாற்றம் செய்த நாள்: செப் 29,2023 17:47.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3444187

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, By: சுகுமாறன் | Updated at : 29 Sep 2023 03:22 PM (IST), Published at : 29 Sep 2023 03:05 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/world/pakistan-52-killed-over-100-injured-in-suicide-blast-near-mosque-in-balochistan-province-142711

[11] தமிழ்.இந்து, பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம், செய்திப்பிரிவு, Published : 29 Sep 2023 03:35 PM; Last Updated : 29 Sep 2023 03:35 PM.

[12] https://www.hindutamil.in/news/world/1130588-at-least-50-killed-over-130-injured-after-blast-in-pakistan-s-balochistan.html

[13] தினத்தந்தி, பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!, செப்டம்பர் 30, 1:29 am; Updated: செப்டம்பர் 30, 2:21 am;

[14] https://www.dailythanthi.com/News/World/55-killed-in-pakistan-mosque-blast-3-days-of-mourning-1063162

[15] விகடன், பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு; தற்கொலைத் தாக்குதலில் 52 பேர் பலி!, சி. அர்ச்சுணன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[16] https://www.vikatan.com/crime/suicide-blast-near-mosque-in-pakistan-52-people-died

[17] பிபிசி.தமிழ், பாகிஸ்தான்: மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் பலிஎன்ன நடந்தது?, Published at : 29 Sep 2023; https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

[18] https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா முளைத்தது – 1805 முதல் 2023 வரை – இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது!

ஜூன் 29, 2023

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா முளைத்தது – 1805 முதல் 2023 வரை – இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது!

திடீர் தர்கா முளைத்து இந்துக்களை மிரட்டுவது, உரிமைகளைப் பறிப்பது: திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் முருகன் கோவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்குப் போகும் வழியில் ஓரு தர்காவும் அமைந்துள்ளது.[1] இது பிறகு கட்டப் பட்டது. இதைப் பற்றி விவரமாக, ஏற்கெனவே எழுதியுள்ளேன்[2]. முதலில் அங்கு தர்கா – சமாதி எப்படி வந்தது என்பதே விசித்திரமான விசயம்.   தர்காவில் தொழுகை என்பது அதைவிட அதிர்ச்சியான விசயமாக இருக்கிறது[3]. ஏனெனில் முஸ்லிம்கள் தான், தர்கா-சமாதி போன்ற இடங்கள் மசூதி கிடையாது அங்கெல்லாம் தொழுகை நடத்தக் கூடாது, அல்லாவை அணங்கும், தொழுகை புரியும் இடம் மாஸ்க் / மசூதி தான், தர்கா கிடையாது என்று உறுதியாகக் கூறி வருகின்றனர். பிறகு இது புரியவில்லையே. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது[4]. இப்பொழுதும், பழைய விவரங்களை மறந்து வழக்குகள் தொடர்வது, தீர்ப்பு அளிப்பது போன்றவை உள்ளனவோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. எது எப்படியாகிலும், திடீர் தர்கா முளைத்து இந்துக்களை மிரட்டுவது, உரிமைகளைப் பறிப்பது என்பது பற்றி எப்படி யோசிக்காமல் இருக்க முடியும்?

2023ல் இந்து முன்னணி வழக்கு தொடுப்பது: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது[5]: “திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று[6]. திருப்பரங்குன்றம் மலை இக்கோவிலுக்கு சொந்தமானது[7]. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது[8]. மலைக்கு செல்லும் பாதையில் நெல்லித்தோப்பு பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இதனால் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பக்தர்கள் பழனியாண்டவர் வீதி வழியாக மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வர். மலையின் மத்திய பகுதியான நெல்லித்தோப்பில் ஓய்வெடுப்பர். பின் அக்கோவிலுக்கு செல்வர். மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. வழக்கமாக பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். தர்கா நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்கள் ஏப்., 22ல் ரம்ஜான் பண்டிகையன்று நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தினர். தர்கா அல்லது அருகிலுள்ள காலி இடத்தில் தொழுகை நடத்தாமல் பக்தர்கள் சென்று வரும் பாதையை மறைத்து நடத்தினர். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலையை சிக்கந்தர் மலை என்றும், சிக்கந்தர் மலை மீது இனி தொடர்ந்து தொழுகை நடத்துவோம் எனவும் அறிவிப்பு செய்தனர்[9]. இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர்[10]. எனவே, திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது[11].

அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது – நீதிமன்றம்: இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியாகவுரி அமர்வில் இன்று [27-06-2023] விசாரணைக்கு வந்தநிலையில்[12], “திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் தர்கா உள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது[13]. நாளை [28-06-2023] பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது[14]. இந்நேரத்தில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது”, என்று தெரிவித்துள்ளனர்[15]. அப்படியென்றால், கோவிலுக்குச் செல்பவர்கள் கோவிலுக்குச் செல்லலாம், தொழுகை செய்வோர், அரைஅணி நேரத்திற்கு தொழுகை செய்யலாம் என கொள்ள முடியமா? இந்த மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்[16]. அதாவது ஒரு மாதம் [ஜூலை இறுதிக்கு] தள்ளி வைக்கப் பட்டது. நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிபதிகள் இந்துக்களின் உரிமைகளையும் கருத்திற்க் கொள்வார்கள் என்று நம்புவோமாக…

இதே போல இந்து சயய ஊர்வலங்களையும் தடையின்றி நடத்தலாம், யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது: அப்படியென்றால் விநாயக சதுர்த்தி ஊர்வலம், மற்ற பால்குடம், முலைப்பாரி போன்ற ஊர்வலங்களும் அவ்வாறே சடங்குகளாக, இந்துக்கள் பல்லாண்டுகளாகக் கடைபிடித்து வருகின்றனர். பிறகு, அவற்றை முஸ்லிம்கள் எதிர்ப்பதும், நீதிமன்றங்கள் தடை விதிப்பதும் ஏன் நடந்து கொண்டிருக்கின்றன? இந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் என்றாகிறதா? அல்லது நீதிபதிகளே அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து முன்னுதாரணத்தை உண்டாக்குகின்றனரா? நாளைக்கு, இன்னொரு நீதிபதி, இதை உதாரணம் காட்டி, தீர்ப்பு கொடுத்துத் தப்பித்துக் கொள்வார். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

1805 முதல் 2023 வரைஇந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது.  சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது.  இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

29-06-2023


[1] வேதபிரகாஷ், மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4), 07-12-2017.

[2]  https://islamindia.wordpress.com/2017/12/07/tirupparangundram-kartigai-deepam-stopped-because-of-muslim-opposition-with-their-dargah-nearby/

[3]தினத்தந்தி, திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை: அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி Jun 29, 2:53 am

[4] https://www.dailythanthi.com/News/State/prayers-on-tiruparangunram-hill-madurai-high-court-orders-authorities-to-respond-996780

[5] தினமணி, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தா் தா்ஹாவில் தொழுகைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு, By DIN | Published On : 29th June 2023 01:29 AM  |   Last Updated : 29th June 2023 01:29 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/jun/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4029327.html

[7] தமிழ்.இந்து,  திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு, கி.மகாராஜன், Published : 28 Jun 2023 03:03 PM; Last Updated : 28 Jun 2023 03:03 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1029424-refusal-to-ban-prayer-on-thiruparankundram-hill-madurai-high-court.html

[9] தினமலர்,திருப்பரங்குன்றம் கோவில் மலையில் தொழுகைக்கு தடை கோரி வழக்கு, பதிவு செய்த நாள்: ஜூன் 29,2023 00:59

[10] https://m.dinamalar.com/detail-amp.php?id=3360979

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Thiruparankundram: ‘திருப்பரங்குன்றம் தர்காவில் தொழுகை நடத்த தடை இல்லை‘ – ஐகோர்ட் அதிரடி உத்தரவு, Karthikeyan S, Jun 28, 2023 01:57 PM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-high-court-refuses-to-ban-prayer-at-tiruparangunram-dargah-131687940647888.html

[13] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு தடை விதிக்க மறுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி, Written by WebDesk, Madurai, June 28, 2023 17:00 IST.

https://tamil.indianexpress.com/tamilnadu/refusal-to-ban-dharka-prayer-on-thiruparankundram-hill-madurai-high-court-709030/

ஐ.பி.சி.தமிழ்நாடு, திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த தடையில்லைநீதிமன்றம் அதிரடி, Madurai,  By Thahir, 28-06-2023, 4.00 மாலை.

https://ibctamilnadu.com/article/it-is-not-forbidden-to-offer-prayers-on-mountain-1687937915

தமிழ்.ஒன்.இந்தியா, அரை மணி நேரம் தொழுகையால் எந்த பாதிப்பும் வராது.. திருப்பரங்குன்றம் மலை தொழுகைக்கு ஹைகோர்ட் ஒப்புதல், By Mani Singh S Updated: Wednesday, June 28, 2023, 17:44 [IST]

https://tamil.oneindia.com/news/madurai/there-is-no-ban-on-offering-prayers-on-tiruparangunram-hill-madurai-high-court-branch-518774.html

[14] https://tamil.indianexpress.com/tamilnadu/refusal-to-ban-dharka-prayer-on-thiruparankundram-hill-madurai-high-court-709030/

[15] ஐ.பி.சி.தமிழ்நாடு, திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த தடையில்லைநீதிமன்றம் அதிரடி, Madurai,  By Thahir, 28-06-2023, 4.00 மாலை.

[16] https://ibctamilnadu.com/article/it-is-not-forbidden-to-offer-prayers-on-mountain-1687937915

தமிழ்.ஒன்.இந்தியா, அரை மணி நேரம் தொழுகையால் எந்த பாதிப்பும் வராது.. திருப்பரங்குன்றம் மலை தொழுகைக்கு ஹைகோர்ட் ஒப்புதல், By Mani Singh S Updated: Wednesday, June 28, 2023, 17:44 [IST]

https://tamil.oneindia.com/news/madurai/there-is-no-ban-on-offering-prayers-on-tiruparangunram-hill-madurai-high-court-branch-518774.html

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

24-05-2023 இரவு மருத்துவமனையில் நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப் பணியின்போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதாஉண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானாஎனக்குச் சந்தேகமாக இருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..

ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது” என்றும், தினமணி, “ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.

25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம் முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].

25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, அரசு பெண் மருத்துவர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு, செய்திப்பிரிவு, Last Updated : 27 May, 2023 06:05 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/997226-government-female-doctor-hijab-issue.html

[3] விகடன், `ஏன் ஹிஜாப் போட்டுருக்கீங்க?’ – அரசு பெண் மருத்துவரிடம் பாஜக பிரமுகர் வாக்குவாதம்; போலீஸ் விசாரணை, Prasanna Venkatesh B  Published: 26 May 2023 1 PM; Updated: 26 May 2023 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/why-did-the-doctor-wear-hijab-bjp-leaders-controversy

[5] நக்கீரன், பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது, Published on 26/05/2023 (18:56) | Edited on 26/05/2023 (19:04)

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/argument-female-doctor-asking-her-take-her-hijab-bjp-leader-arrested

தினமணி, ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!

By DIN  |   Published On : 26th May 2023 09:25 AM  |   Last Updated : 26th May 2023 10:31 AM

https://www.dinamani.com/tamilnadu/2023/may/26/bjp-executive-arguing-with-female-doctor-wearing-hijab-4011902.html

[6] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[7] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[8] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[9] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[10] தந்தி டிவி, மருத்துவரின் ஹிஜாப் குறித்து கேள்வி கேட்ட பாஜக நிர்வாகிபரிதாபமாக பிரிந்த உயிர்... By தந்தி டிவி 26 மே 2023 8:55 PM

[11] https://www.thanthitv.com/latest-news/bjp-executive-questioned-about-doctors-hijab-tragic-loss-of-life-188742

[12] சமயம்.காம், நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am

[13]  https://tamil.samayam.com/latest-news/nagapattinam/nagapattinam-thirupundi-government-primary-health-center-doctor-wearing-hijab-issue/articleshow/100544706.cms

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611