போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

அமீர்விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது: அமீர் தொடர்ந்து சொன்னது, “விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னொரு புறம், இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[1]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[2].

அமீரின் சொத்து விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன: இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[3]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[4].

அப்துல் பாஷித் புஹாரியின் பங்கு: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்[5]. மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்[6]. அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, ‘ஜூகோ ஓவர்சீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது’ என்றனர்.

உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி தொடர்பு: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்[7]. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்[8]. சி.எம்.புகாரி மகன் இர்பான் புகாரி ஜாபர் சாதிக் தொடங்கிய சோயா டெலிவரிஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் இர்பான் புகாரி இடையே தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, புகாரி குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் புகாரி என்பவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வியாபார தொடர்பும், குற்றங்கள் நடந்துள்ள நிலையும்: வியாபார தொடர்பு தான், இதனால், தனக்கும் அந்த சாதிக்கின் போதை மருந்து வியாபாரம், கடத்தல் முதலியவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிப்பது போன்றுள்ளது. இருப்பினும், அத்தகைய விவரங்கள் தெரியாமலா / தெரிந்தோ கூட்டு வைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். ஏனெனில், இவையெல்லாம் சாதாரணமாக ஒரு நபர் செய்யக் கூடிய வேலை அல்ல. தொழிற்சாலை போல வைத்து, பலரை வேலைக்கு அமர்த்தி, மிகவும் அதி-எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் செய்து வந்த தொழிலாகும். எல்லாவற்றையும் கடவுள் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. குற்றம் என்று தெரிந்து, அத்தகையக் குற்றங்களை செய்து வரும் நபர்களுடன் தொடர்ந்து, பல ஆண்டுகளாக வியாபார தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ளதும் சாதாரணமான விசயமாகி விடாது. மேலும், போதை மருந்து கடத்தல் பற்றிய எச்சரிக்கையே அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து வந்து, கையும்-களவுமாக கைதும் செய்யப் பட்டிருக்கிறார்கள். 

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[2] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[3] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[4] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[5] தினமலர், ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு, UPDATED : ஏப் 12, 2024 05:45 AMADDED : ஏப் 12, 2024 05:45 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-ncp-probes-jaffer-sadiq-associates-assets-bank-accounts–/3598702

[7] இடிவிபாரத், சென்னையில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! – Ed Raid At Buhari Hotel Owner House, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 9, 2024, 3:47 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/ed-raid-at-buhari-hotel-owner-house-in-chennai-tns24040903438

Explore posts in the same categories: அமீர், அமைதி, அரசியல்வாதிகள், அழிவு, ஆதரவு, ஆதாரம், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இறைவன், குற்றச்சாட்டு, குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள், குற்றப் பழக்கம், குற்றம், சுல்தான் அமீர், ஜாபர், புகாரி, புஹாரி, போட்டி, போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக