ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார்குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

அல் ஹிந்த் அறக்கட்டளை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தீர்த்தஹள்ளி பாதை முதலியன:  அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2020-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர். இவர்கள், ‘தீர்த்தஹள்ளி பாதை’ [Thirthahalli module] எனக் குறிப்பிடப்படும் ஒரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு முகமைகள் நம்புகின்றன[1]. பெங்களூரில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் அல் ஹிந்த் அறக்கட்டளையை நடத்தி வந்த மெகபூப் பாஷாவும், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீனும் இணைந்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி தென்னிந்தியாவில் மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது[2].

இது உள்ளூர் தீவிரவாதமாஅனைத்துலக ரீதியில் பாதிப்பை உண்டாக்கும் சதி வேலையா?: முந்தைய வெடிகுண்டுகள் தொடர்புகள் போலவே, இதிலும், தமிழக தொடர்பு இருப்பதை கவனிக்கலாம். ஐஎஸ் பாணி கிளர்ச்சியை தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களோடு, அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  1. 2020 அக்டோபரில் மங்களூருவில் நடந்த பயங்கரவாத ஆதரவு கூட்டம்,
  2. செப்டம்பர் 2022-இல் ஷிவ்மொகாவில் துங்கா நதிக்கரையில் நிகழ்ந்த ஐஇடி குண்டுவெடிப்பு மற்றும்
  3. குக்கர் குண்டுவெடிப்பு –

ஆகிய மூன்று பயங்கரவாத வழக்குகளிலும் தாஹா மற்றும் ஹுசைன் குற்றம்சாட்டப்பட்டனர். இதையெல்லாம் கூட, முன்னர் “உள்ளூர் தீவிரவாதம்” என்று குறிப்பிடப் பட்டு திசைத் திருப்பப் பட்டது. ஆனால், பெங்களூரு, மும்பக்கு அடுத்தப் படியாக, வியாபார-வணிக முக்கியத்துவம் அடைந்து வந்துள்ள நிலையில், இத்தகைய தீவிரவாத செயல்கள், இந்திய பொருளாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

12-04-2024 அன்று ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கூட்டாளி கைது: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் 12-04-2024 அன்று வெள்ளிக்கிழமை, கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[3]. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர்[5]. குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (Adbul Matheen Ahmed Taahaa வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (Mussavir Hussain Shazib வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்[6]. இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[7].  இன்னொருவன் நெல்லூர், சென்னை, வந்து ஒரிசா வழியாக, கொல்கொத்தாவிற்குச் சென்றதாகத் தெரிகிறது[8]. விக்னேஸ் மற்றும் சுமித் பெயர்களில் இப்ரவரியில் 2024 சென்னையில் தங்கியதாகத் தெரிகிறது. ஆக, இவ்விடங்களில் இவர்களுக்கு உதவியாக தொடர்புகள் இருந்தனவா என்றும் நோக்கத் தக்கது.

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பு என்ன?: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு இது தொடர்பாக ஏற்கனவே நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்[9]. இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர்[10]. இதனிடையே வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார். ஆனால், தமிழக ஆளும் அரசியல்வாதிகள் கோவை கார் குண்டுவெடிப்பு பற்றி அமுக்கியே வாசித்தனர், அதனை விபத்து என்று குறிப்பிட்டு வந்தனர். இப்பொழுதெல்லாம், இதை பற்றி கண்டுகொள்வதில்லை.

சந்தேகிக்கப் பட்ட நபர் பற்றிய புகைப்படம் வெளியீடு முதலியன: குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது. தகவல் அளிப்பவர்களின் அடையாளங்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியது. பெங்களூரின் புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபலமான உணவகமான தி ராமேஸ்வரம் கஃபேயில் ஒரு பையை வைத்திருக்கும் போது சிசிடிவி கேமரா காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட குற்றவாளியின் படத்தையும் நிறுவனம் வெளியிட்டது. என்ஐஏ வெளியிட்ட புகைப்படத்தில், குண்டுவைத்தவர் தொப்பி, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு காலணிகளை அணிந்திருப்பதைக் காணலாம். அந்த பதிவில், “அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் வெகுமதி வழங்கப்படும்” என்றும் என்ஐஏ வலியுறுத்தியது. உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) இந்த வழக்கின் விசாரணையை பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பிடம் ஒப்படைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு என்ஐஏ வெகுமதியை அறிவித்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவடாங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஃப் என்பவர், கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்டார்[11]. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12].  என்.ஐ.ஏ அதிக முயற்சியோடு செயல்பட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] A group once associated with graffiti near a police station in Mangaluru has become the most wanted terror module in Karnataka. Known in police circles as the “Thirthahalli module”, this group is believed to be responsible for a series of improved explosive device (IED) explosions in both Mangaluru and Bengaluru, with aspirations of establishing an Islamic State Caliphate within Karnataka’s forests, according to a charge sheet filed by NIA.

Hindustan Times, NIA links ‘Thirthahalli module’ to IED blasts in parts of Karnataka, By Arun Dev, Bengaluru, Mar 30, 2024 07:40 AM IST.

[2] Their emergence on the radar of investigative agencies dates back to January 2020 when state police uncovered the Al Hind terror module, inspired by the Islamic State (IS), operating in Bengaluru’s Suddaguntepalya. Spearheaded by Mehboob Pasha, affiliated with the Al Hind Trust, Shihabudeen and Khaja Moideen from Cuddalore, Tamil Nadu the module aimed at establishing an IS province through insurgent activities spanning Karnataka and Tamil Nadu. “They formed the Al-Hind module and selected Bengaluru as their base and conducted several criminal conspiracy meetings in Karnataka and Tamil Nadu since April 2019,” NIA said in its charge sheet filed in the Al-Hind module case in September 2021.

https://www.hindustantimes.com/india-news/nia-links-thirthahalli-module-to-ied-blasts-in-parts-of-karnataka-101711738475993.html

[3] விகடன், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கைதுகொல்கத்தாவில் மடக்கிய NIA!, சி. அர்ச்சுணன், Published:12 Apr 2024 3 PM; Updated:12 Apr 2024 3 PM.

[4] https://www.vikatan.com/crime/nia-arrests-two-main-accused-of-bengaluru-rameshwaram-cafe-blast

[5] புதியதலைமுறை, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புமூளையாக செயல்பட்ட இருவர் அதிரடியாக கைது!,ஜெனிட்டா ரோஸ்லின், Published on: 12 Apr 2024, 12:48 pm

[6] https://www.puthiyathalaimurai.com/india/nia-arrests-2-main-suspects-in-bengaluru-rameshwaram-cafe-blast-case

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமேஸ்வரம் கபேவசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..சுற்றி வளைத்து கைது செய்த என்ஐஏ.! சென்னையில் தஞ்சமா?, By Rajkumar R, Updated: Friday, April 12, 2024, 12:43 [IST].

[8] https://tamil.oneindia.com/news/india/two-accused-involved-in-bengaluru-rameswaram-cafe-blast-incident-arrested-in-kolkata-by-nia-597799.html

[9] தினகரன், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மேற்குவங்கத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது, Published: April 12, 2024, 11:50 amLast Updated on April 12, 2024, 11:51 am.

[10] https://www.dinakaran.com/bengaluru_blast_two_arrested/

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Bengaluru Cafe blast: பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. 2 பேரை அதிரடியாக கைது செய்தது என்ஐஏ!, Karthikeyan S HT Tamil, Apr 12, 2024 11:27 AM IST,

[12] https://tamil.hindustantimes.com/nation-and-world/two-arrested-from-west-bengal-in-connection-with-bengalurus-rameswaram-cafe-blast-131712900386950.html

Explore posts in the same categories: ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், குக்கர், குக்கர் வெடிகுண்டு, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கோவை கார்குண்டு, சித்தராமய்யா, சித்தராமையா, சித்தராமைய்யா, சிமோகா, சிவமொக்கா, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தீர்த்தஹள்ளி, தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தேச விரோதம், தேசவிரோத செயல்கள், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நடவடிக்கை, நாட்டுக் குண்டு, நிதிநிறுவனம், நிதியுதவி, நைட்ரேட், பயிற்சி, பைப் குண்டு, பைப் வெடிகுண்டு, பொட்டாசியம் நைட்ரேட், மங்களூரு, மங்களூரு குக்கர் குண்டு, மங்களூர், மத-அடிப்படைவாதம், மதவாதம், மதவிரோதி, மதவெறி, மர்மமான வியாபாரம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, மூளைச்சலவை, ராமேஸ்வரம் கஃபே, வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, வாடகைக்கு வீடு, வாஹாபி, வாஹாபி இயக்கம், விசாரணை, வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வேலை, வேவு

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக