அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.full

நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

ஒரு பக்கம் கைது,  மறுபக்கம்  3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.  இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].

Mohammed Haneefa arrested - Advani murder plot

குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.

November 2011 - BJP demonstrated against terrorism

தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன்  சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து  நாட்களில் நடக்கின்றன.

நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.

குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:

  • குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
  • தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
  • சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
  • நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
  • தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
  • “காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
  • இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
  • பொய்யான வழக்குகள் போட்டு திசைத் திருப்புவது[12].
  • இக்குற்றவாளிகளின் குடும்பங்களை கவனித்துக் கொள்வது, ஆதரிப்பது, உதவுவது.

ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

© 11-07-2013


[9] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் –

ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[10] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece

Explore posts in the same categories: அத்தாட்சி, அத்வானி, அறுப்பு, ஆதாரம், கழுத்தறுப்பு, குற்ற மனப்பாங்கு, குற்றப் பழக்கம், குற்றம், கொலை, சட்டம், சாட்சி, ஜிஹாத், தற்கொலை, நீதி, நீதி மன்றம், பாலம், பிளேட், பைப், பைப் குண்டு, முகமது

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

6 பின்னூட்டங்கள் மேல் “அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….”

  1. vedaprakash Says:

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி பயங்கரவாதியின் துப்பாக்கி பறிமுதல்
    பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013,23:13 IST
    http://www.dinamalar.com/news_detail.asp?id=781179

    கோவை: பெங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி, “கிச்சான்’ புகாரியின், அதிநவீன கைத்துப்பாக்கி, கோவை நகரில் கைப்பற்றப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர தினவிழாவில் அசம்பாவிதம் நிகழ்த்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.

    சேலத்தைச் சேர்ந்த, தமிழக பா.ஜ., செயலர், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, கர்நாடக மாநிலம், பெங்களூரு பா.ஜ., அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூரு சிறையிலிருக்கும், கிச்சான்புகாரி, சுலைமான் ஆகியோரின், “நெட்வொர்க்’ குறித்து விசாரித்தனர். இவர்கள் கைதாகும் முன், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபடும் திட்டத்துடன், மேலப்பாளையத்தைச் சேர்ந்த, முகமது தாசின் என்பவரிடம், 17.5 கிலோ வெடிபொருட்களை கொடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது:

    முகமதுதாசினை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரு சிறையிலிருக்கும் கிச்சான்புகாரி, தன் கைத்துப்பாக்கியை கோவையைச் சேர்ந்த, முகமது பஷீர், 24, என்பவரிடம், ரகசியமாக கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. முகமதுபசீரை பிடித்து விசாரித்த போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முகமது அன்சர், 38, என்பவரை பிடித்து விசாரித்தனர். துப்பாக்கி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, இவர் நடித்தார். இவரது வீட்டில் சி.பி. சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தியும் பயனில்லை. குடும்பத்தாரிடம் விசாரித்த போது, போலீசாரின் கெடுபிடிக்கு பயந்து, கிச்சான்புகாரியின் துப்பாக்கியை, வீட்டருகிலுள்ள சாக் கடையில் வீசியது தெரியவந்தது. கடந்த இரு நாட்களாக, “பொக்லைன்’ இயந்திரம் மற்றும் 10க்கும்மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை கொண்டு, சாக்கடையை தோண்டிய போலீசார், ஒருவழியாக நேற்று காலை, “7.65 எம்எம்’ ரக அமெரிக்க தயாரிப்பு (யு.எஸ்.ஏ., ஆட்டோ) துப்பாக்கி மற்றும் 53 குண்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, முகமது அன்சர் கைது செய்யப்பட்டார்.

    விசாரணை:

    இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி, கிச்சான் புகாரிக்கு எப்படி கிடைத்தது, என்பது குறித்து, இனிமேல் தான் விசாரிக்க வேண் டும். இத்துப்பாக்கி தானியங்கி ரகத்தைச் சார்ந்தது. பா.ஜ., மற்றும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன், இதை பதுக்கி வைத்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். பயங்கரவாத தொடர்பில் இருக்கும் நபர்களிடம், இதுபோன்ற அதிநவீன துப்பாக்கி இருப்பது, வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம். சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் நேரத்தில், அசம்பாவிதம் நிகழ்த்த, இவர்கள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். கிச்சான் புகாரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

  2. vedaprakash Says:

    கோவையில் கைதான கிச்சான் புகாரி கூட்டாளி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்
    By dn, திருநெல்வேலி
    First Published : 16 August 2013 03:34 AM IST
    http://dinamani.com/tamilnadu/2013/08/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/article1736915.ece

    கோவையில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரியின் கூட்டாளி முகமது அன்சாரி திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலத்தில் நடந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை, வேலூரில் நடந்த இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் கொலை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் இந்த கொலைகள் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடி பொருள்கள், 142 எலெக்டரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக முகமது தாசிம், சாகுல் ஹமீது என்ற கட்ட சாகுல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிலால் உசேன் என்பரையும் போலீஸார் கைது செய்தனர்.

    பெங்களூர் பா.ஜ.க. அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கிச்சான் புகாரிக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாம். இதையடுத்து முகமது தாசிமை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கிச்சான் புகாரிக்குச் சொந்தமான வெளிநாட்டு கைத்துப்பாக்கியை, கோவையைச் சேர்ந்த தனது கூட்டாளியான முகமது அன்சாரி (35) என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு டி.எஸ்.பி. ரவீந்திரன், ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன், சிவகுமார், சீனிவாசன், சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கோவை சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது அன்சாரியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கியை உக்கடம் அருள்நகரில் உள்ள சாக்கடையில் வீசியதாகத் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் சாக்கடையை அடைத்துவிட்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 53 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி கூட்டாளி முகமது அன்சாரியை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வியாழக்கிழமை காலை திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் ராமலிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ராமலிங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முகமது அன்சாரி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  3. vedaprakash Says:

    கோவையில் கைதான கிச்சான் புகாரியின் கூட்டாளி பாளை சிறையில் அடைப்பு
    கருத்துகள்
    01:24:27Friday2013-08-16
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=59145

    நெல்லை : தமிழகத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற கட்ட சாகுல், முகமது தாசின், அன்வர் பிஸ்மி, சம்சுதீன், குட்டி என்ற நூருல் ஹமீது, பிலால் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 18 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கட்டசாகுல், முகமது தாசினை இரண்டாவது முறையாக 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவான போலீஸ் பக்ரூதீன், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக், பிலால்மாலிக், பறவை பாதுஷா ஆகியோரை தேடி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான் புகாரியின் கூட்டாளியான அருள்நகர் தெற்கு உக்கடத்தை சேர்ந்த அம்சா மகன் அன்சாரியை (29) கோவையில் போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கொண்டு வரப்பட்டார். ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ராமலிங்கம் உத்தரவிட்டார். இதையடுத்து அன்சாரி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: