மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)

Malikafur army attack and killing people-imaginary

தில்லியிலிருந்து துலுக்கர் படை எவ்வாறு ஆரும் அறியாத படி மதுரைக்கு வந்து சேர்ந்தது?: தில்லியிலிருந்து, மதுரைக்கு வர ஆறுமாதங்கள் ஆகும் என்று எழுதி வைத்துள்ளனர். ஆறுமாத பிரயாணத்திற்கு, தங்க இடம், உடை, உணவு எல்லாமே தேவையாக இருந்திருக்கும். அதாவது, இடையில், மற்றவர் துணை, உதவி இல்லாமல் சென்றிருக்க முடியாது. அப்படியென்றால், துலுக்கர் எப்படி குதிரைகளில் அவ்வாறு கூட்டமாக வந்திருப்பர், வரும் போது, அவர்களை யாரும் பார்க்காமல் / கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர் என்று யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. துலுக்கர் அவ்வாறு கூட்டமாக செல்கின்றனர் என்றால், நிச்சயம் பார்த்தவர்கள் விசயம் அறிந்து சொல்லியிருப்பர். ஆகவே, அவர்கள், ஆயுதங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ தீர்த்த யாத்திரை செல்வது போல சென்றிருக்க வேண்டும். இல்லை, மற்றவர் போல ஆடை அணிந்து, வியாபார நிமித்தம், பொருட்களை வாங்குவது-விற்பது போன்ற ரீதியில் சென்றிருக்க வேண்டும். ஆக வேடமிட்டு தான் துலுக்கர் சென்றுள்ளனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகள் போல, பீதியைக் கிளமப்பிக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

Madurai sultanate-Amir khusru

முகமதியதுலுக்க படையெடுப்பு, பாண்டியர் பற்றிய சரித்திராசிரியர்களின் விளக்கங்கள்: வஸாப் [Wassaf], அமீர் குர்ஷூ [Amir Khusru] மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி [Zia-ud-din Barni] முதலியோரின் வர்ணனைகளை வைத்துக் கொண்டு, தெளிவாக விசயங்களை தீர்மானிக்க முடியவில்லை என்று நீலகண்ட சாஸ்திரி கருத்து தெரிவித்தார்[1]. அமீர் குர்ஷூ மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி சுந்தர-வீர பாண்டியர் சண்டைபற்றி குறிப்பிடவில்லை என்கிறார். இருப்பினும், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு வீழ்ந்தனர் என்று ஒப்புக் கொள்கிறார். எல்லியட் மற்றும் டாவ்ஸன், வஸாப் வர்ணனை, அமீர் குர்ஷூ மூலம் உறுதி படுத்தினர்[2]. பொதுவாக, ராஜாக்கள், ராஜ்ஜியங்கள், நகரங்கள் முதலியவற்றின் பெயர்களை, இந்திய மொழிப் பெயர்களுடன் ஒப்பிட்டு, அவற்றை கல்வெட்டு விவரங்களுடன் சரிபார்த்து, அடையாளம் காண்பதில் தான், அத்தகைய கஷ்டம் ஏற்படுகின்றன. ஆனால், துலுக்கர் கோவில்களை இடித்தது, கொள்ளையடித்தது, சூரையாடியது, தர்கா-மசூதிகளாக மாற்றியது முதலியவை கண்கூடாகவே தெரிகின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

Madurai sultanate

1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள்  மதுரைப்  பகுதியில் சுல்தான்களின் ஆட்சி: 1293 முதல்1422 வரை பாண்டியர்களே ஆளவில்லை என்பது போல இடைவெளி காட்டுவதும் வினோதமாக உள்ளது. 1329-1330ல் “சுல்தானிய ஆட்சி” தொடங்குவதாக, நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகின்றார்[3]. 1323-ல் பராக்கிரம தேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினான். முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என்றழைக்கப் பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவன் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டான். பின்பு இவன் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தான். இவனின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் என்று கூறிக்கொள்கின்றனர். சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா 1335ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினான்.  1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர் என்கின்றனர்.  ஆனால், இவற்றை சரி பார்க்க, தமிழக ஆவணங்கள் என்ன என்று தெரியவில்லை. கம்பண்ணாவின் கல்வெட்டுகளில், அவனது தளபதி கோபண்ணா 1377-78ல் துருஷ்கர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளதால், அத்துடன், துலுக்கரது ஆட்சி முடிவுற்றது என்றாகிறது[4].

Dargah interior- tomb-withh bell-door

தர்காமசூதி வைத்து, இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பை உண்டாக்கி பெரிதாக்குவது துலுக்கரின் திட்டம்: துலுக்கர் தமது சரித்திரத்தை இவ்வாறு தொடர்கின்றனர், “மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையத்தில் பள்ளிவாசல்தர்கா உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா, 14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவன் 14ம் நூற்றாண்டில்  மதுரைப்பகுதியை ஆண்ட (1338 CEல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி என்று சொல்லப்படுகிறதுஇவனே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டான் என்றும் சொல்கின்றனர். இவனது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குசும் இதில் அடக்கமாயுள்ளான்,” என்கின்றனர். இப்படி சமாதிகளை உருவாக்கினர் என்று சொல்வதைத் தவிர, இவர்களால் மதுரைக்கு, மதுரை மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள், இவர்களது ஆட்சியால் என்ன பலன் என்பதனை யாரும் சொல்வதாக இல்லை. இந்துக்களைக் கொன்று, கோவில்களை கொள்ளையெடித்து, இடித்தொழித்தவற்றை இவர்கள் சொல்லலாம், ஆனால், அதனால், மதுரைக்கோ, தமிழகத்திற்கோ, பாரதத்திற்கு எந்த பெருமையும் இல்லை.

Sikandar Dragah - Tirupparangundram.interior with pillars, lamps

துலுக்கரின் படையெடுப்பினால் உண்டான தீய விளைவுகள்: மாலிகாபூர் தங்கம், வெள்ளி, வைரம் முதலியவற்றை யனைகளின் மீது வைத்து கொண்டு சென்றான் போன்ற செய்திகளைத் தான் நாம் படிக்கிறோம். ஆனால், அவ்வாறு யானைகள் மீது மெதுவாக தில்லி வரை சென்றதைப் பார்த்த, அக்காலத்தைய சைவர்களுக்கு, எந்த ரோஷமும் வரவில்லையா? பாண்டிய மன்னர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தங்கள் பிள்ளை-பெண்டுகள் விட்டு ஓடியபோது கூட, இந்துக்களுக்கு எந்த கோபமும் வரவில்லையா? இங்கிருந்து தில்லிக்கு செல்ல சுமார் ஆறுமாத காலம் ஆகும் என்று அவர்களே எழுதி வைத்துள்ளனர். அப்படியென்றால், ஆறுமாத காலத்தில் சென்றபோது, பாரதத்தில், எங்குமே எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்று விட்டனவா? இதைப் பற்றி எந்த ஆசிரியனும் யோசிப்பதில்லை போலும். துலுக்கர், அக்காலத்திலும், தீவிரவாதிகளாக இருந்திருக்கின்றனர். எதிர்ப்பவர்களை கண்ட-துண்டமாக கத்திகளால் வெட்டிக் கொன்றிருக்கின்றனர். அவற்றை நாற்சந்திகளில் எல்லோரும் பார்க்கும் படி, போட்டு, பீதியை, திகிலை, பேரச்சத்தை உண்டாக்கி வைத்தனர். எதிர்த்தால் “காபிர்களின்” கதி இதுதான் என்று மிரட்டிவைத்துள்ளனர். துலுக்கரை படைவீரன், துபாஷி, தரகன், போன்ற வேலைகளில் வைத்துக் கொண்டதால், விவரங்களை அவர்கள் மற்ற துலுக்கர்களுக்கு தாராளமாக தெரிவித்துள்ளனர். அதனால் தான், மாலிக்காபூர் போன்றவர்கள், தில்லியிலிருந்து, சரியான பாதையில் ராமேஸ்வரம் வரை வந்து, கொள்ளையெடித்து, திரும்பச் சென்றிருக்கிறான். இது தவிர காடு, மலைப்பகுதிகள் வழியாக ரகசியமாகச் செல்லவும் பாதைகள் இருந்திருக்கின்றன. அவற்றுன் மூலம் சென்றதால், மறைக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் இடித்தது, கொள்ளையெடித்தது, தர்கா-மசூதிகளாக மாற்றப் பட்டது உண்மையாகிறது.

Veera Vallala, Tiruvannamalai

வீரவல்லாளன் கொலையுண்டது, உடல் தொங்கவிடப்பட்டது[5]: 1340 CE-இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான். அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான். அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி [1342-1344 CE] மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலை 1342 CE-இல் மதுரையில் பார்த்ததாக இபன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான்.

© வேதபிரகாஷ்

06-12-2017

Madurai sultanate-wraper

[1] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.204

[2] Elliot and Dowson, History of India as told by Indian Historians, Vol.III, p.88.

[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.259.

[4]  K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37

[5] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm

Explore posts in the same categories: அமிர் குஷ்ரு, அமிர் குஸ்ரு, அமீர் குஷ்ரு, அல்லா, அல்லாஹ், அழிப்பு, அழிவு, அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், அவூலியா, இபின் பதூதா, குன்றம், சுந்தர பாண்டியன், பாண்டியன், மாலிகாபூர், மாலிக், வீர பாண்டியன்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)”

  1. vedaprakash Says:

    Tight vigil during Thiruparankundram deepam

    Padmini Sivarajah | TNN | Updated: Nov 28, 2012, 06:57 IST

    https://timesofindia.indiatimes.com/city/madurai/Tight-vigil-during-Thiruparankundram-deepam/articleshow/17396698.cms

    MADURAI: The ‘karthigai deepam’ was lit on top of the Thiruparankundram hill amid tight security on Tuesday following the recent recovery of explosives from the area. Security was tightened on top of the hill after a bucket full of explosives, including ammonium nitrate, batteries and detonators was discovered near the shrine, on November 1.
    Thiruparankundram is the first abode of Lord Murugan and the festival is one of the most important at the shrine. It began with the flag hoisting on November 19. The pattabishekam was performed to the deity on Monday evening; who along with his consort Deivanai was brought in the small diamond car to the 16-pillared hall on Tuesday morning. The deepam was lit in the sanctum sanctorum in the evening after which the ‘mahadeepam’ was lit on top of the hill.
    A copper vessel, measuring three-and-a-half feet high and two-and-a-half feet in diameter is carried to the place near the Uchipillaiyar temple on the hill about 150 feet above the shrine and filled with about 300 kg of ghee and a wick made of 150 metres of cloth it is lit using six kg of camphor.
    However, the Hindu Munnani has been demanding that the lamp is lit on the ancient lamp post near the Kasiviswanathar temple. On Tuesday, 250 Hindu Munnani members including its state president Arasu Raja and state executive member H Adhisheshan were arrested for attempting to proceed to the Kasiviswanathar temple to light the lamp.
    This ancient lamp post carved of stone is seen on a much higher spot on the hill than the place where the lamp is now lit on behalf of the Hindu Religious and Charitable Endowments department. The original spot is now a disputed site as it is situated between the Kasiviswanathar temple and a mosque a few hundred feet away. Speaking to TOI, VHP district president ‘Chinmaya’ Somasundaram said they have evidence to show that the entire hill of Thiruparankundram, belonged to the Subramaniaswamy temple. “This has been mentioned in a book titled ‘Madura Country a Manuel’ by J H Nelson, who was the then collector of Madurai in 1868,” he said.
    “Even during my childhood days, the lamp was lit on this stone pillar near the Kasiviswanathar temple, which has a 10 feet deep hole to hold the ghee for lightening the lamp. Nobody knows why it was changed from there to the spot near the Uchipillayar temple. Maybe it was stopped during the World War II,” he said. Somasundaram said that they wanted to revive the ancient traditions and planned to hold talks with the RDO and district authorities and get the nod to light the lamp in the designated site next year.
    Over 500 police personnel including 50 sub-inspectors, 20 inspectors, DSPs Ravichandran and Purushotham led by superintendent of police V Balakrishnan were pressed into service in view of the occasion.

  2. vedaprakash Says:

    HC says no to lighting Mahadeepam close to Dargah

    Mohamed Imranullah S. MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST; UPDATED: APRIL 07, 2016 02:52 IST

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

    HC says no to lighting Mahadeepam close to Dargah

    This November 19, 2013 photo shows preparations being made for lighting the Mahadeepam in Tiruparankundram, near Madurai. Photo: G. Moorthy

    The Akhil Bharat Hindu Maha Sabha had sought permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, close to Sulthan Sikkandhar Avulia Dargha, atop Tirupparankundram hills on Friday.

    The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday.

    Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said.

    According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition.

    On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department. He said that the High Court too had recognised the right way back in 1996 itself.

    Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also.

    However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.

  3. vedaprakash Says:

    3.3 மதுரையில் சுல்தானியர் ஆட்சி (கி.பி. 1333-1378)

    டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள் தங்களது மேலாண்மையைத் தமிழகத்தின் மீதும் செலுத்தினர். மாலிக்காபூர் படையெடுப்பை அடுத்து குஸ்ருகான், உலூக்கான் போன்றோர் படையெடுத்துத் தமிழகத்தினைச் சிதைத்து வைத்திருந்தனர். இதன் விளைவாக மதுரையில் சுல்தானியர் ஆட்சி நிலைபெற்றது. மதுரையானது டெல்லியின் அரச பிரதிநிதியான ஒருவரால் நிருவாகம் செய்யப்பட்டது.

    3.3.1 ஜலாலுதீன் அசன்ஷா (கி.பி.1333-1340)

    கியாசுதீன் துக்ளக் இறந்தவுடன் உலூக்கான் டெல்லியில் அரியணை ஏறினான். இவனே முகமதுபின் துக்ளக் ஆவான். இவனது ஆட்சியில் தமிழ்நாடு துக்ளக் பேரரசின் இருபத்து மூன்றாவது மாநிலமாக ஏற்படுத்தப்பட்டது. அதனை நிருவாகம் செய்ய ஜலாலுதீன் அசன்ஷா என்பவன் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். துக்ளக் ஆட்சியில் மத்திய அரசாங்கம் சீர்கெட்டு வலிமையை இழந்தது. தமிழ்நாடு போன்ற வெகுதொலைவில் அமைந்த மாநிலங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாயிற்று. மதுரையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த ஜலாலுதீன் அசன்ஷா டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி, கி.பி. 1333இல் தன்னாட்சியைத் தொடங்கினான். அவன் ஆட்சி தொடங்கியது முதல் மதுரையில் சுல்தானியர் ஆட்சி தொடங்கியது எனலாம்.

    இசுலாமியர் பாண்டிய நாடு வரை வந்து ஆதிக்கத்தை நிலை நாட்டியதைக் கண்ட தென் இந்திய இந்து அரசர்கள் வீர உணர்வு கொண்டு எழுந்து இசுலாமியர் மீது படையெடுப்பு நடத்தினர். துவார சமுத்திரத்தில் ஆட்சியில் இருந்த போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தென் இந்தியாவை இசுலாமியர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் போரிட்டான். அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவ்வரசனால் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மட்டும் கைப்பற்ற முடிந்தது. பின் அப்பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பைச் சம்புவராயர்களிடம் ஒப்படைத்தான். இதனையடுத்து இசுலாமியர் படையெடுப்பைச் சந்திக்கும் பொருட்டு மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலையில் ஒரு படையை நிறுத்தினான்.

    மதுரையில் அந்நியர்கள் ஆட்சிக்கு எதிராகச் சூழ்ச்சிகளும் போராட்டங்களும் தொடங்கின. கி.பி.1340இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான்.

    3.3.2 அலாவுதீன் உதாஜி (கி.பி. 1341)

    ஜலாலுதீன் அசன்ஷாவை அடுத்து அலாவுதீன் உதாஜி என்பவன் மதுரையில் ஆட்சிப் பொறுப்பேற்றான். இவன் இந்துக்களின் உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சமய உணர்வையும், வீர உணர்வையும் அடக்க எண்ணினான். இசுலாமியரின் ஆட்சியை ஒழித்து, இந்து ஆட்சியை நிலைநாட்ட முயன்று கொண்டிருந்த போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளனை அடக்கவும் திட்டம் தீட்டினான். தன் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு வீரவல்லாளனை எதிர்த்து, நேருக்கு நேர் நின்று அவனோடு போர் செய்தான். போர் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத நேரத்தில் பகைவரின் அம்பு ஒன்று தாக்கி அலாவுதீன் உதாஜி போர்க்களத்திலேயே உயிர் துறந்தான். இவனது ஆட்சி ஓராண்டிலேயே முடிந்துவிட்டது. இதன் மூலம் மதுரையில் இசுலாமியரின் ஆதிக்க வெறி தோல்வி கண்டது.

    3.3.3 குத்புதீன்

    அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான்.

    3.3.4 கியாஸ் உதீன் தம்கானி (கி.பி. 1342-1344)

    அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலைக் கி.பி. 1342இல் மதுரையில் பார்த்ததாக இபன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான். இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான்.

    தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான்.

    3.3.5 பிற சுல்தானிய மன்னர்கள் (கி.பி.1345 – 1378)

    கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது


பின்னூட்டமொன்றை இடுக