Posted tagged ‘இஸ்லாம் ஜிஹாதி’

இந்துமதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப் படுமா – இது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

திசெம்பர் 16, 2023

இந்து மதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமாஇது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!

இந்து மதத் தலைவர்களை கொல்லப் படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா: இந்து மதத் தலைவர்களை கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது[1]. பிறகு அத்தகைய குரூர எண்ணத்தை என்னவென்று குறிப்பிடுவது என்று நீதிமன்றம் தான் விளக்க வேண்டும். குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  “culpability of mind” இருந்ததா-இல்லையா என்று ஆராய வேண்டும் என்று நீதிமன்றங்களில் பலமுறை வரையருக்கப் பட்ட சட்டமுறையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர்[2]. மேலும், பெயிலுக்கு கொடுத்த மனுவை ஏற்று, ISIS அனுதாபி என்று கூறப்படும் ஒருவரின் ஜாமீன் மனு, மேலும் சமீபத்தில் பல நிபந்தனைகளுடன் அவரை விடுதலை செய்தது[3]. இது பிடிஐ செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வெளிவந்துள்ளது. ஆனால், தமிழகத்து செய்தியானாலும், தமிழ் ஊடகத்தில் இன்னும் வெளி வரவில்லை.

ஐசிஸ் உறுப்பினர் என்று எடுத்துக் காட்டப் படவில்லை: மேல்முறையீடு செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தஹீன், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக விரும்பினார் என்பது அரசுத் தரப்பு வழக்கு[4] என்று தெரிகிறது. மற்றொரு குற்றவாளியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்[5] என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே அரபு மொழியில் வரும் செய்திகள், அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்ல விரும்புவதாகவும் காட்டுவதாக அது வாதிட்டது[6]. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act,] 18 மற்றும் 38(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று அரசு தரப்பு சமர்பித்தது. இருப்பினும், குறுஞ்செய்திகளில் மேல்முறையீடு செய்தவர் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது[7]. அதாவது, ஐசிஸ் உறுப்பினர் என்றால் தான் குற்றவாளி ஆவான் போலிருக்கிறது.

நெருக்கமாக இருப்பதால் மட்டும் தீவிரவாதியாகி விட முடியாது: “A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் எந்த ஆதாரமும் இல்லை. A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று வைத்துக் கொண்டாலும், குறுஞ்செய்திகள் மேல்முறையீடு செய்பவர்/A1 A2 க்கு அருகில் இருக்க விரும்புவதாக மட்டுமே குறிப்பிடுகிறது[8]. ஒரு தனிநபரின் அருகாமை என்பது, பயங்கரவாத சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புகொள்வது அல்லது அதனுடன் தொடர்புடையதாகக் கூறுவது வேறுபட்டது,” என்று பெஞ்ச் கூறியது[9]. தகவல்தொடர்புகளைத் தவிர, இரண்டு கத்திகள் மற்றும் மேல்முறையீட்டாளர் கத்தியை வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருக்கும் படம் ஆகியவற்றைப் பிரதிவாதி பொலிசார் நம்பியுள்ளனர்[10]. ஆனால், அவர் அத்தகைய கொலையாளியா என்றெல்லாம் நிரூபிக்கவில்லை என்றும் வாதல் தொடரும் போலிருக்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி: யுஏபிஏ பிரிவு 18ன் கீழ் உள்ள குற்றத்தைப் பொறுத்தவரை, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஏ1 மற்றும் ஏ2 சதி செய்ததாக இறுதி அறிக்கையில் அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது[11]. “சில மதத் தலைவர்களைத் தாக்க சதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. UAPA வின் 15வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அது எப்படி ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்பதை பிரதிவாதி குறிப்பிடவில்லை[12]. UAPA இன் 15வது பிரிவின் கீழ் ஒரு சட்டத்தை கொண்டு வர, அந்தச் செயல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்[13]. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள மக்களிடமோ அல்லது எந்தப் பிரிவினரிடமோ பயங்கரவாதத்தைத் தாக்குவது, என்ற ரீதியில் தீவிரவாதம் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது[14].

 “இந்து மதத் தலைவர்கள் கொல்லப்படுவது மட்டுமே ஒரு பயங்கரவாதச் செயலாக அமையுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது[15]. எவ்வாறாயினும், வழக்கின் பரந்த நிகழ்தகவுகளைக் கருத்தில் கொண்டு, வழக்குத் தொடுத்துள்ள பொருட்களிலிருந்து, தீவிரமான குற்றங்கள் உட்பட பிற சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சதி இருந்தபோதிலும், பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதித்திட்டம் இருந்தது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் மேலும் கூறியது[16]. எவ்வாறாயினும், “யுஏபிஏவின் பிரிவுகள் 18 மற்றும் 38(2) இன் கீழ் முதன்மையான வழக்கு தொடர்பான தீவ்ரமான அம்சங்கள் வழக்கின் பரந்த சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும், ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதன் மூலமும் மட்டுமே செய்யப்படுகின்றன.” அரசு தரப்பில் என்ன வாதாடினார்கள் என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அரசு தரப்பு வக்கீலுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை முறையாக அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்றால், இவ்வாறே ஓட்டைகளை உபயோகித்து விடுதலை பெற்று சென்று விடலாம். பிறகு, கைது செய்யப் பட்டது ஆதாரங்களை சேகரித்தது என்பதெல்லாம் வேஸ்ட் தான்.

நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை: ஈரோடு உள்ளூர் நீதிமன்றத்தால் இதேபோன்ற மனு நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு விடுதலை அளித்தது, பத்திரத்தை நிறைவேற்றும்படியும், தலா ரூ. 50,000 போன்ற தொகைக்கு இரண்டு ஜாமீன்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது, அதில் ஒன்று இரத்த உறவினரால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஈரோட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இனி ஈரோடில் அவன் சுதந்திரமாகத்தன் திரிந்து கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து விடும். இப்பொழுதே தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.

© வேதபிரகாஷ்

16-12-2023


[1] The South First, Considering killing of Hindu religious leaders as terrorist act is ‘debatable’: Madras HC while granting bail to alleged ISIS sympathizer, BY PTI,  Published:15/12/2023 11:54 am.

[2] https://thesouthfirst.com/tamilnadu/considering-killing-of-hindu-religious-leaders-as-terrorist-act-is-debatable-madras-hc-while-granting-bail-to-alleged-isis-sympathiser/

[3] Times of India, Targeted killing of Hindu neta not terrorist act: Madras HC, Suresh Kumar / TNN / Dec 14, 2023, 02:16 IST.

[4] https://timesofindia.indiatimes.com/india/targeted-killing-of-hindu-neta-not-terrorist-act-madras-hc/articleshow/105971027.cms?from=mdr

[5] Times Now, Is targeted killing of Hindu neta an act of terror? Madras HC says it id debatable, TN National Desk, Updated: Dec 14, 2023, 10:20 AM IST.

[6] https://www.timesnownews.com/india/is-targeted-killing-of-hindu-neta-an-act-of-terror-madras-hc-says-its-debatable-article-105975897

[7] The Week, Madras HC grants bail to alleged ISIS sympathizer, PTI Updated: December 14, 2023 20:03 IST.

[8] https://www.theweek.in/wire-updates/national/2023/12/14/lgm4-tn-hc-isis.html

[9] Bar and Bench, Is conspiring to kill Hindu religious leader a terrorist act under UAPA? Madras High Court asks, Ayesha Arvind, Published on:  13 Dec 2023, 7:28 pm.

[10] https://www.barandbench.com/news/is-conspiring-kill-hindu-religious-leader-terrorist-act-uapa-madras-high-court

[11] Law trend, Madras HC grants bail to alleged ISIS sympathiser, By PTI News December 14, 2023 8:40 PM.

[12] https://lawtrend.in/madras-hc-grants-bail-to-alleged-isis-sympathiser/

[13] Indian Express, Plot to kill religious leaders: Accused gets bail, HC asks if act is terror under UAPA, Written by Arun Janardhanan, Chennai | Updated: December 15, 2023 03:33 IST

[14] https://indianexpress.com/article/cities/chennai/plot-to-kill-religious-leaders-accused-gets-bail-hc-asks-if-act-is-terror-under-uapa-9068828/

[15] Rediff.com, Is killing Hindu leaders a terrorist act asks HC, grants bail to pro-ISIS man, Source: PTI   –  Edited By: Senjo M RDecember 14, 2023 21:40 IST

[16] https://www.rediff.com/news/report/is-killing-hindu-leaders-a-terrorist-act-asks-hc-grants-bail-to-pro-isis-man/20231214.htm

இந்திய வம்சாவளி யூத குடும்ப பெற்றோரை குழந்தைகளுக்கு முன்பாக கொலை செய்யப் பட்ட குரூர செயல்!

ஒக்ரோபர் 12, 2023

இந்திய வம்சாவளி யூத குடும்ப பெற்றோரை குழந்தைகளுக்கு முன்பாக கொலை செய்யப் பட்ட குரூர செயல்!

21ம் நூற்றாண்டிலும் சண்டையிடும் கோஷ்டிகள்: பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன. சமய ரீதியில் இப்பிரச்சினையை தீர்ப்பது என்பது இது வரை இயலாத காரியம் போலவே, சம்பந்தப் பட்ட குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இருப்பினும், இந்த நவீன காலத்தில், எல்லோரும் படித்து விஞ்ஞானம்-தொழிற்நுட்பம் என்று முன்னேறும் காலங்களில் அமைதியுடன் எல்லா மக்களும் சேர்ந்து வாழலாம் என்றும் அக்குழுக்கள் சமரசத்திற்கு வரலாம். அரேபிய-இஸ்ரேல் போர் என்று அடிக்கடி இப்படி போரிடுவது, மதரீதியில் தான் அணுகப் படுகிறது. ஆனால், மனித ரீதியில் அணுகவேண்டிய கட்டாயமும் உள்ளது. காஸா எல்லைப் பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் [முஸ்லீம்கள்] எப்பொழுதுமே இஸ்ரேல் ராணுவத்தினரைத் தூண்டி வருவது தெரிந்த விசமாக உள்ளது. சில நேரங்களில் அடங்கில் விடுகிறது.

07-10-2023 – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது மக்கள் மீது தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 07-10-2023 சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது[1]. எல்லை பகுதியிலும் புகுந்து அங்கு மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது[2]. இத்தகைய போர், கண்மூடித்தனமான கொலைகள் தேவையா என்று யோசிக்க வேண்டும். இதில் அனைத்து தரப்பினரும் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்[3]. இதனால், மறுபடியும் இன்றைய தலைமுறை இதனை மனத்தில் கரம் வைத்துக் கொண்டு தத்தம் எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற ரீதியில் வளர்க்கப் பட்டால், அவர்களும் அவ்வாறே தயாராவார்கள். இந்த உச்சகட்டமாக போரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 -யைக் கடந்தது[4]. பிறகு காயமடைந்தவர்களின் கதி என்ன? அவர்களுக்கு அருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் படுமா? போதிய மருத்துவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகளும் எழும்.

பலமாடி அடுக்குக் கட்டிடங்கள் தாக்கப் படுதல்: அந்நிலையில் தான், இந்த இரு குழுவினரும் சண்டையிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல அடுக்கு மாடி கட்டிடங்கள் அப்படியே விழுந்து நொருங்குவதைப் பாருக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவ்வீடுகளில் இருக்கும் மக்களின் கதி என்ன? இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த 21ம் நூற்றாண்டிலும், விளைவுகளை அறிந்தும், இவ்வாறான போர்களை நடத்தி வருவதும், நடந்து வருவதும் திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. ஏனெனில், கோடானு கோடி கணக்கில் வீடுகள் முதலியவை நாசமாவதுடன், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் படுவது தான், துக்ககரமான விசயமாகிறது. நிச்சயமாக அவர்களுக்கும் இந்த வன்முறை மற்றும் போர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பொது மக்களை பிணை கைதிகளாகப் பிடித்துச் செல்லுதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்[5]. 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின[6]. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்[7]. ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர்[8]. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்[9]. வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர்[10]. இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்[11]. இது ஐசிஸ், தாலிபான், ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. அத்தகைய ஈவு-இரக்கமற்ற குரூரக் கொலைகளை வீடியோ எடுத்து, ஒலி-ஒளி பரப்பி மக்களை அச்சுருத்தி மிரட்டியும் வருகின்றனர். குறிப்பாக மற்ற மதத்தின்ரைக் குறிப்பிட்டு, உங்களுக்கும் இதே கதிதான் என்றும் மிரட்டி வருகின்றனர்.

இந்திய வம்சாவளி யூத பெண் மற்றும் அவரது கணவர் குழந்தைகளுக்கு முன் கொல்லப் படுதல்: அவ்வாறு பொது மக்களை, பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் பொழுது தான், இந்த கொடூரம் நடந்தேறியுள்ளது. அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது[12]. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்[13]. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம்[14]. அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மக்களை மக்கள் கொல்லும் நிலை தேவையா?: இத்தகைய கொலைகள், கழுத்தறுத்துக் கொல்லும் குரூரங்கள்……அவற்றை வீடியோ எடுத்து, எச்சரிக்கையுடன், இணைதளத்தில் போடுவது-பரப்புவது, பீதியைக் கிளப்புவது குறிப்பிட்ட இயக்கங்கள், அமைப்புகள் செய்து வருகின்றன. அமைதி என்று பேசும் நிலையில், உலக மக்கள் படித்து, சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலையில், இந்த 21ம் நூற்றாண்டில், இவ்வாறு போரிட்டுக் கொள்வது, பெரிய குடியிருப்புக் கட்டிடங்களைத் தாக்குவது, குண்டு போட்டு தகர்ப்பது, அப்பாவி-பொது மக்களை இரக்கமில்லாமல் கொல்வது முதலிய மிகவும் சோகமாக, வருத்தமாக, கவலையாக, பீதியாக, பயமாகவும் இருக்கிறது. அவர்கள் உலகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் அல்லது சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள், இறக்கவும் செய்கிறார்கள். பிறகு, மக்களை மக்கள் கொல்லும் நிலை தேவையா?

© வேதபிரகாஷ்

12-10-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Israel Conflict : குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரி மற்றும் அவரது கணவர்டிவி நடிகை வருத்தம்!, Priyadarshini R • HT Tamil, Oct 11, 2023 08:26 AM IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/sister-killed-in-front-of-children-and-her-husband-tv-actress-regret-131696992445340.html

[3] லங்காஶ்ரீ, இஸ்ரேலில் குழந்தைகள் கண்முன்னே சகோதரி, மைத்துனர் மரணம்: நடிகை கண்ணீர் மல்க வீடியோ, Israel-Hamas War- By Sathya, Published at : 11 Oct 2023 11:45 AM; https://news.lankasri.com/article/sister-die-in-front-of-children-in-israe-actress-1697024124

[4] https://news.lankasri.com/article/sister-die-in-front-of-children-in-israe-actress-1697024124

[5] மாலைமலர், இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே சகோதரி, மைத்துனர் கொடூரக்கொலை: டி.வி. நடிகை கண்ணீர், By மாலை மலர், 11 அக்டோபர் 2023 12:35 PM (Updated: 11 அக்டோபர் 2023 12:56 PM)

[6] https://www.maalaimalar.com/news/national/tv-actor-madhura-naik-sister-brother-in-law-killed-in-war-torn-israel-672818

[7] ஐபிசி.தமிழ்நாடு, இஸ்ரேலில் குழந்தைகள் கண் எதிரே கொல்லப்பட்ட சகோதரிநாகினி நடிகை வேதனை!!, கார்த்திக், | Published at : 11 Oct 2023 11:45 AM (IST);

[8]  https://ibctamilnadu.com/article/hindi-actress-family-died-in-israel-war-1697006873

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Israel-Hamas War: இஸ்ரேல்ஹமாஸ் போரில் நாகினி சீரியல் நடிகையின் சகோதரி, கணவர் கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!, By: பேச்சி ஆவுடையப்பன் | Published at : 11 Oct 2023 07:45 AM (IST); Updated at : 11 Oct 2023 07:45 AM (IST);

[10] https://tamil.abplive.com/news/world/actress-madhura-naik-s-sister-brother-in-law-killed-in-war-torn-israel-144506

[11] தமிழ்.ஒன்.இந்தியா, Israel-Hamas War: குழந்தைகளின் கண்முன்னே.. நாகினி சீரியல் நடிகையின் சகோதரி மற்றும் கணவர் கொலை, By V Vasanthi Updated: Wednesday, October 11, 2023, 12:04 [IST].

[12] https://tamil.oneindia.com/television/israel-hamas-war-naagini-serial-actresss-sister-and-husband-killed-in-israel-hamas-war-547109

[13] புதியதலைமுறை, நாகினி நடிகையின் சகோதரி கொடூர கொலைஇஸ்ரேல்ஹமாஸ் போரின் கொடூரம் தொடர்பாக பரபரப்பு வீடியோ!, Published on: 11 Oct 2023, 5:54 pm.

[14] https://www.puthiyathalaimurai.com/world/naagini-serial-actress-lost-her-sister-and-brother-in-law-at-israel-hamas-war

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டுவெடிப்பு – முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

செப்ரெம்பர் 30, 2023

மீலாது நபி கொண்டாட்ட ஊர்வலம், தற்கொலை குண்டு வெடிப்புமுஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வது எப்படி?

வெள்ளிக் கிழமை 29-09-2023 அன்று குண்டுவெடித்த இடம் – மதினா மசூதி, அல்ஃபலா சாலை, மாகாணம் மஸ்துங் மாவட்டம், பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தான்: பாகிஸ்தானில் 29-09-2023 அன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[1]. மீலாது நபி என்று முகமது நபி பிறந்த நாளை வெள்ளிக் கிழமை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர்[2]. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது[3]. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர்[4]. இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்[5]. இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்[6]. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தன.ர்[7]. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்[8]. இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்[9]. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்[10].

சுன்னி / சன்னி அல்லாத முஸ்லிம்கள் தாக்கப் படுதல்: ஆசார இஸ்லாத்தில் முகமது நபி பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா என்ற வாத-விவாதங்கள் உள்ளன. ஏனெனில், அத்தகைய கொண்டாடங்கள் சின்னங்கள், அடையாளங்கள் வைக்க ஊக்குவிக்கும். அதுவே நாளடைவில் பெருகும் என்ற கோட்பாடும் உள்ளது. மெக்காவில், அவரது கல்லறையே அழிக்கப் பட்டது போன்ற செய்திகளும் உள்ளன. ஏனெனில், அது பிரத்யேகமாக அடையாளம் காணப்பட்டால், அதுவே சின்னமாகி, லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் வர ஆரம்பித்து விடுவர். பிறகு, அது வழிபடும் க்ஷேத்திரமாக மாறிவிடும். எனவே அத்தகைய முயற்சிகளும் தடுக்கப் பட்டன. முழு இஸ்லாம் மயமாக்கும் செயல்பாடுகளில், பாகிஸ்தானில் உள்ள மற்ற இஸ்லாமியக் குழுக்கள் – ஷியா, போரா, அஹ்மதிய போன்ற பிரிவுகள் அடிக்கடித் தாக்கப் பட்டு வருகின்றன, அவர்களது மசூதிகளும் தாக்கப் பட்டு, இடிக்கப் பட்டு வருகின்றன..இது அத்தகைய தாக்குதலா என்று தெரியவில்லை. இருப்பினும், குரூர-தீவிரவாத செயலுக்கு எந்த ஆதரவு-சமாதானமும் கொடுக்க முடியாது.

தொடரும் தற்கொலை குண்டுவெடிப்புகள்: இந்நிலையில், ஷாஹீத் நவாப் கவுஸ் பக்‌ஷ் ரயிசானி நினைவு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சயீது மிர்வானி, இதுவரை 52 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். கடந்த 15 நாட்களில் இது மாஸ்துங் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் ஆகும்[11]. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்[12]. இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்து இடைக்கால முதல்வர் அலி மர்தான் டோம்கி கூறும்போது, எதிரிகள் பலூசிஸ்தானின் மத சகிப்புத்தன்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்[13]. இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்கள் மாகாணத்தில் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்[14].

முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது: பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது[15]. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார்[16]. மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது. ஆக, முஸ்லிம்களே, முஸ்லிம்களை எப்படி குண்டு வைத்து / வெடித்துக் கொல்வர் என்பது திகைப்பாக இருக்கிறது. தற்கொலை குண்டு வெடித்தவன் சொர்க்கத்திற்கு போகிறான் என்றால், குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் கதி என்ன? இத்தகைய இறையியல் சித்தாந்தம், மனித நேயம் கொண்டதா இல்லையா என்று அவர்கள் தான் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கொலைப் படை தாக்குதல் இரண்டுமற்றொரு தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. மசூதியில் 30 முதல் 40 பேர் வரை தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேரிட்ட இந் தஇரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின் கார் அருகே மனித வெடிகுண்டாக வந்தவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்: வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் அகமது பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும்போது, “பலுசிஸ்தானில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை எதிரிகள் விரும்பவில்லை. அதை அழிக்க நினைக்கின்றனர். மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத சக்திகள் எந்த சலுகைக்கும் தகுதியானவர்கள் அல்ல. தீவிரவாத செயல்களை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார். இதெல்லாம் புரியாத புதிர்களாகத் தான் இருக்கின்றன. எல்லா வசதிகள், வளங்கள் வைத்துக் கொண்டு அமைதியாக வாழ்வதை விடுத்து, ஏன் இப்படி ஒருவரையொருவர் கொன்று வாழ வேண்டும் எனத் தெரியவில்லை?

நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டுவெப்புக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்யும்படி, பலுசிஸ்தான் மகாண முதல்வர் அலி மர்தான் டோம்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்[17]. தெஹ்ரிக்-இ தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளின் தாக்குதலுக்கு இந்த மாகாணம் இலக்காகி வருகிறது[18].

© வேதபிரகாஷ்

29-09-2023


[1] தமிழ்,இந்து, பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்,, செய்திப்பிரிவு, Published : 30 Sep 2023 04:23 AM, Last Updated : 30 Sep 2023 04:23 AM.

[2] https://www.hindutamil.in/news/world/1131015-pakistan-mosque-blasts-57-dead-60-people-were-injured.html

[3] புதியதலைமுறை, பாகிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் – 57 பேர் பலி, Prakash J, Published on :  29 Sep 2023, 10:41 pm.

[4] https://www.puthiyathalaimurai.com/world/today-blast-in-pakistan-at-least-57-killed

[5] நக்கீரன், பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 34 பேர் பலி; 130 பேர் காயம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 29/09/2023 (17:00) | Edited on 29/09/2023 (17:17).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/world/pakistan-incident-near-mosque

[7] தினமலர், பாக்.,கில் அடுத்தடுத்து மசூதிகளில் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி, மாற்றம் செய்த நாள்: செப் 29,2023 17:47.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3444187

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு – 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு, By: சுகுமாறன் | Updated at : 29 Sep 2023 03:22 PM (IST), Published at : 29 Sep 2023 03:05 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/world/pakistan-52-killed-over-100-injured-in-suicide-blast-near-mosque-in-balochistan-province-142711

[11] தமிழ்.இந்து, பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம், செய்திப்பிரிவு, Published : 29 Sep 2023 03:35 PM; Last Updated : 29 Sep 2023 03:35 PM.

[12] https://www.hindutamil.in/news/world/1130588-at-least-50-killed-over-130-injured-after-blast-in-pakistan-s-balochistan.html

[13] தினத்தந்தி, பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!, செப்டம்பர் 30, 1:29 am; Updated: செப்டம்பர் 30, 2:21 am;

[14] https://www.dailythanthi.com/News/World/55-killed-in-pakistan-mosque-blast-3-days-of-mourning-1063162

[15] விகடன், பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு; தற்கொலைத் தாக்குதலில் 52 பேர் பலி!, சி. அர்ச்சுணன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[16] https://www.vikatan.com/crime/suicide-blast-near-mosque-in-pakistan-52-people-died

[17] பிபிசி.தமிழ், பாகிஸ்தான்: மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல், 52 பேர் பலிஎன்ன நடந்தது?, Published at : 29 Sep 2023; https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

[18] https://www.bbc.com/tamil/articles/cgl012jm464o

05-02-2019 கொலை 23-07-2023 என்.ஐ.ஏ சோதனை – குரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (2) 

ஜூலை 26, 2023

05-02-2019 கொலை 23-07-2023 என்..ஏசோதனைகுரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (2) 

தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளிகளுக்கு, பி.எப்.., மற்றும் எஸ்.டி.பி.., கட்சி நிர்வாகிகள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி செய்து வருவது: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், 40; பாபநாசம் வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், 31; திருவிடைமருதுார் திருமங்கலகுடியைச் சேர்ந்த சாஹூல் ஹமீத், 30; நபீல் ஹாசன், 31; திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 37 ஆகியோரை தேடி வந்தனர்[1]. தலைமறைவான இவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர்[2]. அத்துடன், சென்னை பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், 18 பேர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்[3]. அதேநேரத்தில், தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளிகளுக்கு, பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி செய்து வருவது பற்றி, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது[4].

பல இடங்களில் சோதனை நடந்தது: இதுதொடர்பாக, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, கோயமுத்துார், மயிலாடுதுறை என, ஒன்பது மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்[5]. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தலைமறைவு கொலை குற்றவாளிகளின் வீடுகள் என, 21 இடங்களில், 23-07-2023 அன்று அதிகாலை, 4:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை சோதனை நடந்தது[6]. அப்போது, மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள்; ரகசிய பேச்சுக்கு பயன்படுத்தப்பட்ட, 25க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், மெமரி கார்டுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல இடங்களில் சோதனை முடிந்தாலும், விசாரணை இரவிலும் தொடர்ந்தது.

சோதனை நடந்தது எங்கெங்கே ?: தமிழகத்தில் கீழ் கண்ட இடங்களில்சோதனை நடந்தது:

* தஞ்சாவூர் நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள, எஸ்.டி.பி.ஐ., ஊடகப் பிரிவு மாவட்ட செயலர் பக்ருதீன் வீட்டில், நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் காலை, 10:15 மணி வரை சோதனை நடந்தது. மொபைல் போன், பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது[7].

* தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள ஹாஜா அலாவூதீன் வீடு; கும்பகோணம் அருகே திருவாய்ப்பாடியில் உள்ள முகமது செரீப்; திருமங்கலகுடியில் உள்ள குலாம் உசேன்; ராஜகிரியில் உள்ள முகமது பாரூக் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது[8].

* திருச்சி பீம்நகர், பண்டரிநாதபுரம் ஹாஜி முகமது உசேன் வீட்டில், ஐந்து மாதங்களுக்கு முன், அப்சல் கான் என்பவர் வாடகைக்கு குடி வந்தார். இரண்டு சாட்சிகளுடன், என்.ஐ.ஏ., இன்ஸ்பெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில், மூன்று பேர் குழுவினர், நேற்று அப்சல் கானிடம் விசாரணை நடத்தினர்[9].

* புதுக்கோட்டை உசிலங்குளத்தில் உள்ள ரசித்முகமது, 47 என்பவரது வீட்டில், நேற்று காலை ,6:00 மணியளவில் மூன்று பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அவர், பி.எப்.ஐ., அமைப்பின் திருச்சி மண்டல முன்னாள் பொறுப்பாளர், விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது[10].

* திருப்பூர் சாமுண்டிபுரம், குலாம் காதர் கார்டனை சேர்ந்தவர் முபாரக் பாட்ஷா, 42; எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி மற்றும் பி.எப்.ஐ.,யின் முன்னாள் மாநில பேச்சாளர். அவரது வீட்டில், எட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நான்கு மணி நேர விசாரணைக்கு பின், மொபைல் போன், லேப்டாப் போன்றவை கைப்பற்றப்பட்டன

* கோவை கோட்டைமேடில் உள்ள, பி.எப்.ஐ., அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ், 42, வீட்டில் காலை, 6:00 முதல் 8:45 மணி வரை, 3 பேர் குழுவினர் சோதனை நடத்தினர். மொபைல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும், 90,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் உள்ள அப்துல்லா வீட்டிலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் அப்துல்லா இறந்து விட்டார். அவரது மனைவி பாத்திமா, 75; மகன் அஜித்,35; ஆகியோரிடம், வழக்கில் தொடர்புடைய பாபு என்கிற, நைனா முகம்மது குறித்து விசாரணை செய்தனர்.

எஸ்.டி.பி.., மாநில தலைவர் முபாரக் வீட்டில் சோதனை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வந்த பாபு என்கிற நைனா முகம்மது, தற்போது கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் வசிப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, அவரைத் தேடி அங்கு புறப்பட்டுச் சென்றனர். திருநெல்வேலி மேலப்பாளையம் ஹக் காலனியில், எஸ்.டி.பி.ஐ., மாநில தலைவர் முபாரக் வசிக்கிறார். இவரது வீட்டில் 24-0-2023 அன்று அதிகாலை, 5:00 மணியில் இருந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்[11]. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ‘இந்த சோதனை மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறுபான்மையினரை ஒடுக்கும் செயல். இதை சட்டப்படி சந்திப்போம்’ என, முபாரக் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்[12]. என்ஐஏ அதிகாரிகளின் சோதனையைக் கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் 3-07-2023 ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்[13]. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்கின் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். என்ஐஏ அதிகாரிகளின் இந்த சோதனையைக் கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது[14].

ஜிகாதிகொலை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமலிங்கம், ‘ஜிகாதி’ முறையில் கொல்லப் பட்டு உள்ளார். இவரை கொல்ல தேனியில், அறிவகம் என்ற இடத்தில் இருந்து கொலையாளிகளை அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே நடந்த, ஹிந்து முன்னணி பிரமுகர் வேலுார் வெள்ளையப்பன், பா.ஜ., நிர்வாகி ‘ஆடிட்டர்’ ரமேஷின் கொலைகளை போலவே, ராமலிங்கத்தையும், புனித போர் என கழுத்து, தாடை, கை விரல்கள், முட்டிகளில் வெட்டி கொலை செய்து இருப்பது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.  ஆக கொலை செய்வதில் கூட இத்தகைய குரூரம், உச்சக்கட்ட வன்மம், வெறி எல்லாம் இருக்குமா என்று எண்ணவே இயலாத நிலை ஏற்படுகிறது. பிறகு, மனோதத்துவ ரீதியில் பார்க்கும் பொழுது, ஒரு மனிதன், இன்னொரு மனிதனை அவ்வாறு எப்படி கொல்ல மனம் வரும்? அப்படி துண்டு துண்டாக வேட்ட இரக்கமில்லா எண்ணம் மற்றும் செயல்பாடு வரும்? ஆகவே, அத்தகைய கொலைவெறி மனோபாவம், பனப்பாங்கு மற்றும் செயல்படுத்தும் குரூரம் முதலியவை எப்படித்தான் உண்டாகும் என்று ஆராய்ச்சி செயவேண்டும் போலிருக்கிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது,” என்பது என்ன?: பாரதம் அமைதியான பூமி, “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது,” என்று பாரதியார், அஹிம்சைக்கு இலக்கணம் வகுத்த புனித மண். மஹாத்மா காந்தி அவ்வாறே சுதந்திரம் பெற்றார். அத்தகைய நாடு, ஒரு வேளை பிரிந்து, பாகிஸ்தான் உருவானதால், காரணமான முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனரா என்று திகைப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமே இந்துக்கள் தானே, பிறகு மதம் மாற்றம் ஏன், தடுக்க பேசியவர்களை கொல்வானேன், பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவானேன், மேன்மேலும் தொடர்ந்து குரூரமான வேலைகளில் ஈடுபடுவானேன். மனிதர்களை மனிதர்களாகக் கூட மதிக்கத் தெரியாத அத்தகைய மனம் எப்படி மனிதனுக்கு உருவாகும். கடவுள் தான் பதில் சொல்வார் போலும்.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] தினத்தந்தி, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 21 இடங்களில் என்... திடீர் சோதனை, ஜூலை 24, 6:01 am

[2] https://www.dailythanthi.com/News/State/nia-in-21-places-in-districts-including-coimbatore-thanjavur-nellai-surprise-check-1014848

[3] தமிழ்.ஏபிபி.லைவ், NIA Raid: என்.. அதிகாரிகள் அதிரடி சோதனை.. துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு.. நடந்தது என்ன?, By: ஆர்த்தி | Published at : 24 Jul 2023 07:56 AM (IST); Updated at : 24 Jul 2023 07:56 AM (IST)

[4] https://tamil.abplive.com/news/india/tamil-nadu-nia-officials-conducted-a-raid-yesterday-a-cash-reward-of-rs-5-lakh-will-be-given-for-further-clues-130747

[5] தமிழ்.இந்து, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ சோதனை, செய்திப்பிரிவு, Published : 24 Jul 2023 04:46 AM; Last Updated : 24 Jul 2023 04:46 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1064219-nia-raids-21-places-in-tn-in-connection-with-murder-of-pmk-ramalingam-1.html

[7] காமதேனு, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை: கோவை, திருச்சியில் பரபரப்பு, Updated on:  23 Jul 2023, 12:40 pm

[8] https://kamadenu.hindutamil.in/national/nia-raids-homes-of-popular-friend-of-india-executives-in-coimbatore-and-trichy

[9] தமிழ்.நியூஸ்.18, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்குதமிழகம் முழுவதும் என்ஐஏ அதிரடி சோதனை | NIA, 21:40 PM JULY 23, 2023

[10] https://tamil.news18.com/videos/tamil-nadu/ramalingam-murder-case-nia-raids-across-tamil-nadu-nia-1077215.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்ஐஏ சோதனை நடக்கிறது.. நெல்லை முபாரக் தடதட!, By Vignesh Selvaraj Published: Sunday, July 23, 2023, 11:54 [IST]

[12] https://tamil.oneindia.com/news/thirunelveli/nia-raid-with-political-vandalism-to-suppress-minority-movements-sdpi-leader-nellai-mubarak-523335.html?story=1

[13] தினமணி, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 24th July 2023 12:53 AM  |   Last Updated : 24th July 2023 12:53 AM

[14] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/jul/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4042783.html

05-02-2019 கொலை 23-07-2023 என்.ஐ.ஏ சோதனை – குரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (1) 

ஜூலை 26, 2023

05-02-2019 கொலை 23-07-2023 என்..ஏசோதனைகுரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (1) 

05-02-2019 கொலை 23-07-2023 சோதனை: எஸ்.எப்.ஐ [SFI] ஹைடைக்குப் பிறகு, பி.எப்.ஐ [PFI], எஸ்.டி.பி.ஐ [SDPI] போன்ற அமைப்புகள் உருவாகின. கேரளா, கர்நாடகா என்று பரவி, தமிழகத்திலும் நுழைந்தன. கோயம்புத்தூர் ருகில் இருப்பதனால், வியாபார ரீதியில் அத்தகைய அமைப்புகள் வேலை செய்து வந்தன. கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, அவற்றின் தீவிரவாத-பயங்கரவாத முகங்களும் வெளிப்பட்டன. இவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் தற்கொலை காஸ் சிலிண்டர் குண்டு வெடித்தது. அதிருஷ்டவசமாக, குண்டுவைக்க வந்தவன் மட்டும் இறந்தான். மற்ற தீயது நடக்காமல் நின்றது அல்லது முடிந்தது. இருப்பினும், அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு வகையில் தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக, சோதனை, கைது என்று தமிழகத்தில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், 23-07-2023 அன்று பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை விவகாரத்தில்சோதனை நடந்தது.

23-07-2023 அன்று என்... சோதனை தொடர்ந்தது: தமிழகத்தில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்[1]. ஹிந்துக்களை மதமாற்றம் செய்ததை கண்டித்ததால், ‘ஜிகாதி’ முறையில், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்ட வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது[2]. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது தொடர்பாக, தஞ்சை, நெல்லை உட்பட, ஒன்பது மாவட்டங்களில், 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 23-07-2023 அன்று அதிரடி சோதனை நடத்தி, ‘டிஜிட்டல்’ ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்[3]. அதாவது, என்.ஐ.ஏ தொடர்ந்து வேலை செய்து வருவதாலும், இந்திஆ முழுவதும் பலவிதமான தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கங்கள் மற்றும் தொடர்புடைய ஆட்களை கண்காணித்து வருவதாலும், கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனைகளை தொடரவேண்டியுள்ளது/

மதமாற்றத்தைத் தட்டிக் கேட்ட ராமலிங்கம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருபுவனம் மேலதுாண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர்[4]. திருபுவனத்தில், ‘தமிழன் கேட்டரிங் சர்வீஸ்’ என்ற பெயரில், திருமண நிகழ்வுகளுக்கு சாமியானா, பந்தல் போடுதல், மற்றும் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார்[5]; அத்துடன், சமையல் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்[6]. தொழில் நிமித்தமாக, திருபுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இவர் சென்ற போது, ஏழ்மை நிலையில் இருக்கும் ஹிந்துக்களை, ஒரு கும்பல் தொடர்ச்சியாக சந்தித்து பேசி, பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற அவர், மத மாற்றம் செய்து வந்ததை கண்டித்தார். இதுதொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளத்திலும் வெளியானது. பாமக கட்சியை சேர்ந்தவர் என்றாலும், அத்தகைய சமூக தாக்குதல் தீவிரமானது, சமுகத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்று புரிந்து எதிர்த்திருக்கிறார். பொதுவாக இந்துத்துவவாதிகள் தாம் எதிர்ப்பர் என்று சொல்வதுண்டு, அத்தகையோரை அவ்வாறே அடையாளம் காணுவது உண்டு. ஆனால், அத்தகைய உணர்வு உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

05-02-2019 அன்று முஸ்லிம்கள் திட்டமிட்டு ராமலிங்கத்தைக் கொன்றது: ராமலிங்கம் கைநீட்டி பேசுவது அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அப்போது, ‘கைகளை வெட்டி விடுவோம்; தீர்த்து கட்டப்படுவாய்’ என்று, அந்தக் கும்பல் மிரட்டியது. இந்நிலையில், 2019 பிப்., 5ம் தேதி இரவு [05-02-2019] கடையை மூடிவிட்டு ராமலிங்கம் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவரை நடு வழியில் மறித்து, முதலில் கையை வெட்டி துண்டாக்கினர். பின், சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து, திருவிடைமருதுார் போலீசார் விசாரித்து வந்தனர். கட்சித் தலைவர் ராமதாஸ் இக்கொலை பற்றி துரிதமாக விசாரிக்க வேண்டுமென்றார்[7]. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலி என்பவரை விசாரணைக்காக முன்னர் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்[8]. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ராமலிங்கம் கொலையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன[9]. அத்துடன், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அதனால், மைதீன் அஹமது ஷாலியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்து  விசாரித்து வருகிறார்கள். தொடர்புடைய குற்றவாளி, நெல்லை மாவட்டம் தென்காசியில் கைதுசெய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[10].

கொலை செய்யும் அளவுக்கு மனோபாவம் இருப்பது ஏன், எப்படி?: கைகளை ஆட்டினால் என்ன, ஆட்டா விட்டால் என்ன, மதம் மாற்றம் தவறு என்றால், தைப் பற்ரித் தானே விவாதிக்க வேண்டும்? எப்படி கொலையில் செனூ முடிய முடியும்? அங்குதான், மனித நேயம், மனித மனம், மனோதத்துவ ரீதியில் ஏதோ குத்துகிறது. பின் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது[11]. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிச்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்[12]. தொடர் விசாரணையில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பை சேர்ந்தவர்கள், ராமலிங்கத்தை படுகொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, 18 பேர் மீது வழக்குப் பதிந்தனர்[13]; 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14].

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] தினமலர், தஞ்சை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் 21 இடங்களில்என்..., சோதனை!, – நமது நிருபர் குழு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 25,2023 03:27.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3384223

[3] தினமலர், தமிழகத்தில் 24 இடங்களில் என்..., ரெய்டு!, மாற்றம் செய்த நாள்: ஜூலை 23,2023 16:32.; https://m.dinamalar.com/detail.php?id=3383781

[4] https://m.dinamalar.com/detail.php?id=3383781

[5]தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலைதஞ்சையில் போலீசார் குவிப்பு, Written by WebDesk, Updated: February 7, 2019 11:42 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-man-murdered-in-kumbakonam-300-police-officials-deployed-fearing-communal-tension/

[7] நக்கீரன் பா... நிர்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை! ராமதாஸ், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 07/02/2019 (09:45) | Edited on 07/02/2019 (09:54).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pmk-man-murdered-ramadoss-condemned

[9]  விகடன், திருபுவனம் பா.. பிரமுகர் கொலைநெல்லையில் முக்கியக் குற்றவாளி கைது, பி.ஆண்டனிராஜ், Published:27 Jun 2019 7 PMUpdated:27 Jun 2019 7 PM

[10] https://www.vikatan.com/crime/160555-nia-arrested-a-key-accused-in-ramalingam-muder-case

[11] மாலை மலர்,பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு.. தமிழகம் முழுவதும் 24 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை, By மாலை மலர், 23 ஜூலை 2023 7:11 AM; (Updated: 23 ஜூலை 2023 11:33 AM)

[12] https://www.maalaimalar.com/news/state/thirupuvanam-ramalingam-murder-case-nia-raids-at-multiple-locations-in-9-districts-639856

[13] தினமணி, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு:  திருச்சியில் என்ஐஏ சோதனை, By DIN  |   Published On : 23rd July 2023 04:16 PM  |   Last Updated : 23rd July 2023 04:16 PM.

[14] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/23/pmk-ramalingam-murder-case-nia-raid-in-trichy-4042551.html

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

மே 17, 2023

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

தி கேரளா ஸ்டோரி – லவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (1)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (1)

கேரளாவில் லவ் ஜிஹாத் தெரிந்த விசயம் தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.

டிரைலருக்குப் பிறகு அமைதியானவர்கள், மறுபதியும் எதிர்ப்பில் ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].

மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் எச்சரிக்கை, திரையரங்களுக்கு பாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி,  தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது.   திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும்  சமூக வலைதளங்களில் சட்டம்  ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].

திரைப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படி இருக்குதி கேரளா ஸ்டோரிதிரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!,  HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/the-kerala-story-movie-twitter-review-starring-adah-sharma-yogita-bihani-sonia-balani-siddhi-idnani-131683265840879.html

[3] ஈடிவிபாரத்.காம், கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியானதி கேரளா ஸ்டோரி”!,  Published: 5 May, 2023, 7:21 pm.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/the-kerala-story-released-with-special-shows-amid-various-protests-in-kerala/tamil-nadu20230505192312275275056

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகைபோலீஸார்எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/sdpi-members-arrested-who-tried-to-blockade-the-theater-where-the-kerala-story-was-screened-ru6xp5

[7] விகடன், தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? – முழுப் பின்னணி என்ன?!,  ஆ.பழனியப்பன், Published:02 May 2023 1 PMUpdated:02 May 2023 1 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-the-kerala-story-movie-opposed

[9] குமுதம், தமிழ்நாடு: ‘தி கேரளா ஸ்டோரிபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புடி.ஜி.பி உத்தரவு, Thiraviaraj Murugan, Kumudam Team, |   Published On : 05th May 2023.

[10] https://www.kumudam.com/news/cinema/security-for-theaters-where-the-kerala-story-is-released-dgp-orders

[11] நியூஸ்.7.தமிழ், தி கேரளா ஸ்டோரி படம்திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவு,by Web EditorMay 4, 2023.

[12] https://news7tamil.live/the-kerala-story-movie-tamil-nadu-dgp-orders-security-for-theatres.html

[13] தமிழ்.ஏபிபி.லைவ்,   The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ! ,  By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST)  , Published at : 05 May 2023 01:08 PM (IST)

[14] https://tamil.abplive.com/entertainment/movie-review/the-kerala-story-twitter-review-adah-sharma-siddhi-idnani-yogitha-bihani-sudipto-sen-115403

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

ஏப்ரல் 30, 2023

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

நவம்பர் 2022ல் டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. முன்னர், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றது[1]. அதன் தொடர்ச்சியாக அதே பணியில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர்[2]. அந்த 32,000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழும் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார் சுதிப்தோ சென். இப்படத்தின் டீசர் தற்போது 03-11-2022 அன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது திகைப்பாக உள்ளது. “லவ் ஜிஹாத்” போர்வையில், கேரளாவிலிருந்து இளம்பெண்கள் பலர் ஐசிஸ் தீவிரவாத கும்பலுக்கு சேர்க்கப் பட்டது, கேரளாவில் உறுதியானது. அரசு ஆவணங்களும் அதை ஆமோதித்தன. அந்நிலையில், எதிர்ப்பு கேள்விக் குறியாகிறது.

நவம்பர் 2022ல் முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து புகார் கொடுத்தது: ஒரு நர்ஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் இருந்து கடத்தி சென்று ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண்ணின் உருக்கமான பதிவுடன் இந்த டீசர் துவங்குகிறது. பார்வையாளர்களை உருகவைத்துள்ள இந்த டீசர் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது. மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்[4].

விபுல் அம்ருத்லால் ஷா 2018 முதல் 2022 வரை முறையான ஆரய்ச்சிக்குப் பிறகே படத்தை தயாரித்துள்ளார்: இது போன்ற ஒரு கதையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க பலரும் அச்சப்படும் நிலையில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் இதில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா. இப்படத்திற்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே அதை திரையில் படமாக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டுள்ளார் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென். அரேபிய நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சில அதிர்ச்சியான தகவல்களை சேகரித்துள்ளார் இயக்குனர். 2009ம் ஆண்டு முதல் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த 32000 சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத பகுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சதி செயலின் பின்னணியில் இருக்கும் உண்மை கதையையும். பெண்களின் வலிமையை பற்றியும் எடுத்துரைக்கும் வகையிலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தினை படமாக்கியுள்ளனர். டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு 2023 தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

05-05-2023 அன்று வெளியாகவுள்ள படத்திர்கு எதிர்ப்பு: கேரள மாநிலத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதாக, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிராக கேரளாவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் அந்த திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ’தி கேரளா ஸ்டோரி’ என்ற பன்மொழித் திரைப்படம் மே 5 அன்று இந்தியா நெடுக, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம்மின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் போராடி வருகின்றன. ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே அதற்கு எதிராக கேரளாவில் கண்டனம் வலுத்து வருகிறது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ’ஐஎஸ்ஐஎஸ்’ஸில் செயல்பட்டு வருவதாக அந்த முன்னோட்டம் விவரித்து இருந்தது. மேலும் கேரளாவின் 32 ஆயிரம் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாகவும் அதில் புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத் என்ற சர்ச்சைக்குரிய தலைப்பிலும் விவாதங்களை முன்னோட்டம் கிளப்பியுள்ளது.

எப்ரல் 2023ல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: இந்த நிலையில் சங் பரிவார் அமைப்புகளின் குரலை எதிரொலிக்கும் வகையிலான ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்[5]. ’கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கி இருப்பதாகவும், உள்நோக்கத்தோடு கேரள மாநிலம குறித்தும் கேரள மக்கள் குறித்தும் தவறான கருத்துக்களை வழங்கும் திரைப்படத்தை தடை செய்யவும்’ அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்[6]. இதனிடையே பாஜக ஆதரவு அமைப்புகள், ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வரவேற்றுள்ளன[7]. ஆனால், காங்கிரஸ் எதிர்க்கிறது[8]. இப்படம் பொய்யான பிரச்சாரம் செய்கிறது, அதனால் தடை செய்ய வேண்டும் என்று சதீசன் கூறியுள்ளார்[9]. கேரள பிஷப் போன்றோரே அச்சமயத்தில், இளம்பெண்கள் “லவ் ஜிஹாதில்” சிக்க வைக்கப் பட்டு. ஐசிஸ் போருக்கு கூட்டிச் செல்லப் பட்டனர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். மாநில அரசும் அவ்விவரங்களை மறுக்கவில்லை[10].

29-04-2023 – முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு; இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்[11]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன[12]. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பரப்புரை செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது[13]. வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது[14]. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த “லவ் ஜிஹாத்” குற்றச்சாட்டுகளை வடிவமைத்தது திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ‘The Kerala Story’ teaser :மனதை பதைபதைக்கவைக்கும்தி கேரளா ஸ்டோரிடீசர் வெளியீடு, By: லாவண்யா யுவராஜ் | Updated at : 03 Nov 2022 10:36 PM (IST), Published at : 03 Nov 2022 10:36 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-teaser-is-out-now-82794

[3] மாலை மலர், சர்ச்சைகளை கிளப்பியதி கேரளா ஸ்டோரிடீசர்.. வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.., By மாலை மலர், 9 நவம்பர் 2022 6:08 PM

[4] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-movie-teaser-controversy-534578

[5] காமதேனு, ‘சங் பரிவார் குரலை எதிரொலிக்கும் திரைப்படம்’; ‘தி கேரளா ஸ்டோரிக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு!,காமதேனு, Updated on : 28 Apr, 2023, 6:50 pm. https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[6] https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[7] Malayala Manorama, False propaganda: VD Satheesan calls for ban on screening ‘The Kerala Story’, Onmanorama Staff, Published: April 28, 2023 03:56 PM IST

[8] https://www.onmanorama.com/news/kerala/2023/04/28/vd-satheesan-against-screening-the-kerala-story-sudipto-sen.html

[9] PTI News, Congress urges state govt not to give permission to screen ‘The Kerala Story’ which makes ‘false claims‘, Updated: Apr 28 2023 3:03PM

[10] https://www.ptinews.com/news/national/congress-urges-state-govt-not-to-give-permission-to-screen-the-kerala-story-which-makes-false-claims/559755.html

[11] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லருக்கு  கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் கண்டனம்!, தினத்தந்தி 30 April 2023 3:16; PM (Updated: 30 April 2023 3:17 PM)

[12] https://www.dailythanthi.com/News/India/kerala-chief-minister-pinarayi-vijayan-condemned-the-trailer-of-the-kerala-story-954112

[13] ஏபிபிலைவ், The Kerala Story: ’பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்’ – தி கேரளா ஸ்டோரி  படத்துக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம், By: பேச்சி ஆவுடையப்பன் | Updated at : 30 Apr 2023 02:48 PM (IST), Published at : 30 Apr 2023 02:48 PM (IST).

[14] https://tamil.abplive.com/entertainment/cm-pinarayi-vijayan-slams-film-the-kerala-story-for-spreading-hate-114580

2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

ஏப்ரல் 22, 2023

19-04-2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

கோவை காஸ் சிலின்டர் வெடிப்பு, திட்டமிட்ட குண்டு வெடிப்புதான்: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது[1]. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார்[2]. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது[3]. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள “அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்” என்ற பழமையான கோவிலில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது[4]. ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (V-IED) கோவிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பில் முபீன் கொல்லப்பட்டார். முதலில், அது வெறும் குக்கர் தான், ஏதேச்சையாக, தற்செயலாக, விபத்து போல வெடித்தது என்று கூட சில ஊடகங்கள் திரித்து செய்திகள் வெளியிட்டன. திமுக மற்றும் திராவிடத்துவ ஆதரவாளர்கள் அதை திவிரவாத தாக்குதல் என்பதனையே மறுத்துப் பேசினர், வாதிடவும் செய்தனர். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியைக் கூட தரக்குறைவாகப் பேசினர்.

11-பேர் கூட்டு சதிகாரர்கள் திட்டமிட்டு செய்தது: போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது[5]. இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், 20-04-2023 அன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்[6]. மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், 21-04-2023 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். 

கார் முதல் கெமிகல்ஸ் வரை எல்லாமே திட்டமிட்டு பெறப்பட்டது, குண்டு தயாரிக்கப் பட்டது: இந்நிலையில் உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட டி.என்.01. எப்.6163 என்ற நம்பருடன் கூடிய மாருதி 800 காரை தல்ஹா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்[7]. பைரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், கேஸ் சிலிண்டரைக் கொண்டு காரை வெடிகுண்டாக மாற்ற உதவியுள்ளனர்[8]. அசாருதீன், அப்சர் மற்றும் அவரது உறவினர் முபீன் ஆகியோர் வெடிப்பொருட்களை ஆன்லைனில் வாங்க, வேதிப் பொருட்களின் கலவையை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்துள்ளனர்[9]. இவ்வாறு கூறப்பட்டுள்ளது[10]. அதாவது, இதற்கான ஆதாரங்களுடன் இந்த குற்றப் பட்த்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இன்னும் 5 பேர் மீது குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது என்று என்.ஐ.ஏ. த ரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிஹாதில் ஈர்க்கப் பட்டு தயாரானது: இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அதன் சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு ‘பயாத்’ அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்தார். NIA 27.10.2023 அன்று RC-01/2022/NIA/CHE என வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும் கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தபொழுது, அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்பு தெரிய வந்தது. கூட்டாளிகள் சேர்ந்து வேலை செய்ய, அத்தகைய ஜிஹாத் சித்தாந்தமும் வேலை செய்தது என்பது தெரிகிறது. மனைவி-மகனுக்கு ஏற்பாடு செய்து விட்டு, இந்த “புனித” வேலைக்கு இறங்கியதும் கவனிக்கத் தக்கது. இதெல்லாம் அந்த ஜிஹாதி மாடலில் தான் வருகிறது. இதில், தமிழகத்தவரும் சிக்கிக் கொண்டுள்ளது விபரீதமாக உள்ளது. தொடர்ந்து, முஸ்லிம்களே அதில் ஈடுபடுவதும் ஆபத்தாக உள்ளது. அதிலும், தற்கொலை வெடிகுண்டு ரீதியில் செயல்பட தயாராவது, மிகவும் ஆபத்தானது, பயங்காமானது, தீவிவாதமானது.

அகில-உலக தொடர்புகளும் உள்ளன: முகமது அசாருதீனிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு பென் டிரைவில் ஜமேஷா முபீனின் வீடியோ பதிவுகள் இருந்தன, அங்கு அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தினார். ‘காஃபிர்களுக்கு’ (நம்பிக்கையற்றவர்கள்) எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். 2019 இல் ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 260 பேரைக் கொன்ற இலங்கையின் தீவிர இஸ்லாமிய மதகுருவான ஸஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் (பிரசங்கங்கள்) முபீன் ஈர்க்கப்பட்டார்[11]. முபீன் இந்தியாவில் உள்ள ‘காஃபிர்களுக்கு’ எதிராக இதேபோன்ற தாக்குதலைத் திட்டமிட விரும்பினார்[12]. முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மீட்கப்பட்டன, அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத, தற்போதுள்ள ஜனநாயக அமைப்பை விமர்சிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், இரயில் நிலையம் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில உள்ளூர் கோயில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ குறித்தும் இந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறிபிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றியது: இஸ்லாமிய மாநிலம் கொராசன் மாகாணத்தின் இணைய இதழான ‘வாய்ஸ் ஆஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது, ‘பசு மற்றும் எலிகள் வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றது. . இந்த தாக்குதல் அவர்களின் மதத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், அல்லாஹ்வின் தீனையும் அவனது சட்டத்தையும் தனது நிலத்தில் நிலைநிறுத்தவும், ‘குஃப்ர்’ மற்றும் அதை பின்பற்றுபவர்களை பயமுறுத்தவும் இது ஒரு ஆரம்பம் என்று அச்சுறுத்தும் பழிவாங்கல் என்று கட்டுரை கூறுகிறது. ஆக, இது இந்துக்களை குறிவைத்து நடந்தப் பட்ட தாக்குதல் தான்,  ஆனால், ஏதோ விதமாக, முன்னரே வெடித்து விட்டதால், ஜமேஷா முபீனே பலியானான்.

பலவித சட்டப் பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல்: முபீனுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் உதவினர்[13]. TN-01-F-6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி 800 நீல நிற காரை தல்ஹா பெற்றுக் கொண்டார், இது வாகனத்தின் IED வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது[14]. ஃபிரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியது[15]. முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சர் இருவரும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட VBIEDஐ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை கொள்முதல் செய்து, எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். முபீன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நிலையில், முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மீது 34, 120பி, 121 ஏ, 122, மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 5 மற்றும் 6 மற்றும் UA (P) சட்டத்தின் பிரிவுகள் 16, 18, 20, 38 மற்றும் 39. கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

22-04-2023


[1] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 04:35

[2] https://m.dinamalar.com/detail.php?id=3299833

[3] அப்-டேட்-நியூஸ், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல்.. அடுத்தகட்டத்திற்கு நகரும் விசாரணை..!!!, Author: Babu Lakshmanan, 21 April 2023, 11:44 am

[4] https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-bomb-blast-case-nia-submit-fir-210423/

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

[7] தினமலர், கோவையில் வெடித்தது அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு: என்..., குற்றப்பத்திரிகையில் தகவல், Added : ஏப் 22, 2023  06:50; https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[9] மாலைமுரசு, கோவை கார் குண்டு வெடிப்புமுதல் குற்ற பத்திரிகை தாக்கல்…!, webteam-webteam, Apr 21, 2023 – 07:32

[10] https://www.malaimurasu.com/posts/crime/Arudra-Gold-Scam-Recovery-of-Bank-Accounts-Worth-100-Crores

[11] தந்தி டிவி, இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா? வெளியான அதிர்ச்சி தகவல் , By தந்தி டிவி 21 ஏப்ரல் 2023 9:50 AM.

[12] https://www.thanthitv.com/latest-news/sri-lanka-easter-bombing-and-coimbatore-car-cylinder-explosion-related-181410

[13] தமிழ்.ஏபிபி.லைவ், Crime: கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் மீது என்... குற்றப்பத்திரிகை தாக்கல்வெளியான அதிர்ச்சி தகவல்கள், By: பிரசாந்த் | Updated at : 21 Apr 2023 12:02 PM (IST); Published at : 21 Apr 2023 12:02 PM (IST)

[14] https://tamil.abplive.com/news/coimbatore/nia-filed-charge-sheet-against-6-people-in-coimbatore-car-blast-case-tnn-112879

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST

https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg