Archive for the ‘அடிப்பது’ category

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

மே 17, 2023

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

லக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது! 125 பெண்கள் படித்து வந்தனராம்!

திசெம்பர் 30, 2017

லக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது! 125 பெண்கள் படித்து வந்தனராம்!

Lucknow Madrassa- police raid-Kaji arrested-The serial sexual offender Tayyab Zia, Kaji

ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த் மதரஸாவில் நடந்தது என்ன?: லக்னௌவில், சஹதத்கஞ் [Shahadatganj area] பகுதியில், ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த் [Jamia Khadijatul Leelanwat] என்ற மதரஸா பள்ளிக்கூடம் மற்றும் காப்பகத்தின் இயக்குனராக காஜி மொஹம்மது தாய்யப் ஜியா [Mohammad Tayyab Ziya] என்பவர் இருந்து வருகிறார்[1]. சில ஊடகங்கள் மேனேஜர், இயக்குனர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. இதில் 125 இளம்பெண்கள் படித்து வருகிறார்கள்[2]. சமீபகாலத்தில், மதரஸாக்களில் நடக்கும் முறைகேடுகள் அதிகமாக வெளி வந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பாலியல் புகார்கள் அதிகமாகஆறியப்படுகின்றன. கேரளா மதரஸா விவகாரம், பாலியல் உட்பட மற்ற விவகாரங்களுடன் வெளிவந்தன. பொதுவாக, முகமதியர் தங்களுடைய விவகாரங்களை வெளியே வரவிடாமல் அமுக்கி விடுவர். ஜமாத் என்ற முறையில், எல்லா பிரச்சினைகளையும் பேசி, தீர்த்து வைத்து விடுவர். அவற்றையும் மீறிய விவகாரங்கள் வெளியே வரும், போலீஸுக்குச் சென்று புகார் கொடுத்தால் தெஇயவரும். இப்பொழுது, உபியில், இவ்விகராம் வெளிவந்துள்ளது.

Lucknow Madrassa- police raid-Kaji arrested-girls rescued

பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் பாலியல் வன்மங்கள் நடந்தது எப்படி?: மதரஸாக்களில் பெண்கள் படிப்பதாக சொல்வார்கள். அதே போல, “ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த்” நடத்தும் மதரஸாவில், பெண்கள் குரான் படிக்கின்றனர் என்றெல்லாம் சொல்ல்ப்பட்டது. ஆனால், மொஹம்மது தாய்யப் ஜியா இப்பெண்களை பாலியல் ரீதியில் திட்டுவது, அடிப்பது மற்றும் புணர்ச்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான்[3]. அவர்களை வற்புருத்தி ஆபாசப் பாட்டுகளைப் பாடிக் கொண்டு, நடனம் ஆடவைத்தும் சந்தோஷித்திருக்கிறான்[4]. பாலியல் ரீதியில் தொடுவது, கட்டிப்பிடிப்பது என்று கற்பழிப்பிலும் ஈடுபட்டுள்ளான். வெளியே சொன்னால், தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டியும் வைத்துள்ளான். இவ்வாறு பாலியல் வன்மங்கள் தொடர்ந்துள்ளன. இவஇயெல்லாமும் வழக்கமாக, பாலியல் குற்றவளிகள் பயன்படுத்தி வரும் திட்டங்கள் தாம், இருப்பினும், நூற்றுக்கும் மேலாக, இளம்பெண்கள் இருக்கும், இந்த மதரஸாவை தணிக்கை செய்பவர்கள் யாருமில்லையா, பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி ஒன்று தெரியாதது போரிருந்தார்கள் / இருக்கிறார்கள் என்ற விசயங்கள் புதிராக இருக்கின்றன.

Lucknow Madrassa girls- letter-1

பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுத்தனரா, வீட்டின் சொந்தக்காரர் புகார் கொடுத்தாரா இல்லை பெண்கள் கடிதங்கள் எரிந்து கவனத்தைக் கவர்ந்தனரா?: பல ஆண்டுகளாக அவர்கள் இவ்வாறு துன்புருத்தப் பட்டு வந்தமையால், சமீபத்தில், சில பெண்கள் தைரியத்துடன், துண்டு காகிதங்களில் தங்கள் நிலைமையை எழுதி, ஜன்னல்கள் வழியாக போட்டுள்ளனர். அக்கம்-பக்கம் வீடுகள் நிலவரங்களையும் குறிப்பிட்டுந்தனர்[5]. அவ்வழியாக நடந்து சென்றவர்களில், சிலர் அவற்றைப் பார்த்து, உண்மையை அறிந்து போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்[6]. அந்த வீட்டின் சொந்தக்காரரே புகார் கொடுத்தார் என்று இன்னொரு ஊடகம் கூறிகிறது. அவன் [காஜி] அவ்வாறு செய்கிறான், பெண்களை எல்லாம் மிரட்டியிருக்கிறான் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது, என்றார்[7]. விசயத்தை அறிந்து அவரே பிறகு புகார் கொடுத்துள்ளார். அப்பெண்களில் சிலரும், காப்பாத்துங்கள் என்று கத்தியாக கூறுகிறார்கள். அருகில் உளளவர்கள் அது ஒரு பள்ளி என்கிறார்கள். கோமதி நகரைச் சேர்ந்த 15 வயது பெண் புகார் கொடுத்ததாகவும் கூறப்பட்டது[8]. இவ்வாறு பலவிதமான வர்ணனைகள், அண்டை வீட்டார் மற்றும் யாரோ / ஏதோ ஒரு கூட்டம் இதன் பின்னணியில் உள்ளது, உண்மையினை மறைக்கப் பார்க்கின்றது என்று தெரிகின்றது.

Lucknow Madrassa girls- letter-2

போலீஸார் விசயத்தை லாவகமாக அணுகியது: வழக்கம் போல, முஸ்லிம்கள் பிரச்சினை என்பதனால், போலீஸார் தீவிரமாக விசயம் அறிந்து, ஆதஆங்களைத் திரட்டி, தகுந்த பலத்துடன், பெண் போலீஸாரையும் கூட்டிக் கொண்டு, தீபக் குமார் [SSP Deepak Kumar] தலைமையில் அதிரடியாக அந்த மதரஸாக்குள் வெள்ளிக்கிழமை [29-12-2017] அன்று நுழைந்தனர்[9]. உள்ளே 51 இளம்பெண்கள் அடைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு, அவர்களை வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர்[10]. அவர்கள் நாரி நிகேதன் [Nari Niketan] என்ற பெண்கள் பாதுகப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில குழந்தைநல வாரியத்திற்கும் தகவல் அளிக்கப் பட்டது. மொஹம்மது தாய்யப் ஜியா கைது செய்யப் பட்டு னாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப் பட்டான். அவனது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். கூடுதல் நகர மேஜிஸ்ட்ரேட், கூடுதல் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், பெண்-துணை இன்ஸ்பெக்டர் முதலியோர் அப்பென்களிடம் முறைப்படி வாக்குமூலங்களை எழுதிவாங்கிக் கொண்டனர்[11].  விசாரணையில் மேலே குறிப்பிடப்பட்ட பாலியல் வன்மங்கள் வெளியே வந்தன[12]. இத்தகைய விவரங்களிலிருந்தே, பொலீஸார் மற்ற அரசு அதிகாரிகள் எவ்வளவு எச்சரிக்கையாக, இவ்விவகாரத்தை அணுகி, முடித்துள்ளனர் என்று தெரிகிறது.

Lucknow Madrassa girls- letter-3

மதாஸாவில் எத்தனை பெண்கள் இருந்தனர்?: மதரஸாவில் இருந்தது 125 / 126 பெண்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. போலீஸார் கூற்ரின் படி 51 பெண்கள் மீட்கப் பட்டுள்ளாதாகத் தெரிகிறது. அப்படியென்றால், மீதி 74 அல்லது 75 இளம் பெண்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரெயிட் வரும் என்று முன்னமே, வேறு இடங்ககளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனரா, வேறேங்காவது சென்று விட்டனரா என்று தெரியவில்லை. மொஹம்மது தாய்யப் ஜியாவின் கூட்டாளிகள் மாயமாகி விட்டதால், ஒருவேளை, பெண்களை அவர்கள் கூட்டிச்சென்று மறைத்து விட்டனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.  அண்டை வீட்டாரிடம் விசாரித்ததில், அது பள்ளி என்றும், பெண்கள் வருவார்கள், போவார்கள் என்ற ரீதியில் பதிலளித்தார்கள். எப்படியோ, 51 இளம்பெண்கள் மீட்கப் பட்டு விட்டனர். இனி மேலே என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-12-2017

Lucknow Madrassa- police raid-Kaji arrested

[1] India Today, Lucknow madarsa horror: Chits thrown by captive girls brought police to their rescue, IndiaToday.in | Written by Amit Vasudev, Lucknow, December 30, 2017 | UPDATED 12:44 IST

[2] http://indiatoday.intoday.in/story/lucknow-madarsa-chits-captive-girls-police-rescue/1/1120538.html

[3] ZeeNews, Shocking – 51 girls held hostage and sexually abused in madrasa, rescued by police, By Zee Media Bureau | Updated: Dec 30, 2017, 11:45 AM IST .

[4] http://zeenews.india.com/lucknow/shocking-51-girls-held-hostage-and-sexually-abused-in-madrasa-rescued-by-police-2070776.html

[5] IndiaTV, 51 girls rescued from Uttar Pradesh’s Shahadatganj madrasa, manager arrested on sexual assault charges, Edited by: India TV News Desk, Lucknow [ Updated: December 30, 2017 13:26 IST ]

[6] http://www.indiatvnews.com/news/india-51-girls-rescued-uttar-pradesh-lucknow-madrasa-manager-arrested-sexual-assault-charges-vulgar-song-beating-419541

[7] A neighbour had come across one of the several notes that the girls had thrown out of a window of the educational institute, who informed the owner, who in turn approached the police. Police said, the owner was not aware of these malpractices as he would resided somewhere else and was alarmed at being told that inmates at his madrassa were crying for help. The owner also told SSP Deepak Kumar that some of the girls had been held captive and were being threatened.

News18, Manager of Lucknow Madrassa Arrested Over Charges of Sexual Abuse, Attempt to Rape, Qazi Faraz Ahmad | News18, @qazifarazahmad, Updated:December 30, 2017, 3:06 PM IST

[8] Speaking to the media, SSP Deepak Kumar said, “A 15-year-old girl student of Gomti Nagar in her written complaint has levelled charges of harassment. She has also alleged that seven other girl students were also molested by Tayyab.”

 http://www.news18.com/news/india/manager-of-lucknow-madrassa-arrested-over-charges-of-sexual-abuse-attempt-to-rape-1618633.html

[9] Newstrack, Lucknow: 51 girls rescued from Madrassa; manager arrested, By Sakshi Chaturvedi, December 30, 2017 | 10:11 am

[10] https://newstrack.com/uttar-pradesh/lucknow/lucknow-51-girls-rescued-madarsa-manager-arrested/

 

[11] Financial Express, 51 girls held hostage in Uttar Pradesh’s Shahadatganj, Lucknow Police arrest madrasa manager, By: ANI | Lucknow | Published: December 30, 2017 11:20 AM

[12] http://www.financialexpress.com/india-news/51-girls-held-hostage-in-uttar-pradeshs-shahadatganj-lucknow-police-arrest-madrasa-manager/995368/

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid