Posted tagged ‘சிரியா’

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல்குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

பிப்ரவரி 12, 2023

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

துருக்கிசிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டாலும் சிரியாவுக்குச் செல்ல ஆசைப்படும் பெங்களூரு சாப்ட்வேர் ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது.  இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சாப்ட்வேர் இன்ஜினியர்சொந்தமாக, .டி., நிறுவனம்பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள்  ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.

பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

என்..., அதிகாரிகள் கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].

அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது

முகமது ஆரிப் கைது பற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: “உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெங்களூரில் தங்கி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். நம் நாட்டில் மத உணர்வுகளை துாண்டி விட்டு, அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்த நபரும் ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.

© வேதபிரகாஷ்

12-02-2023.


[1] தினமலர், பெங்களூருவில் அல் குவைதா பயங்கரவாதி கைது!, Updated : பிப் 12, 2023  03:58 |  Added : பிப் 12, 2023  03:56.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3240036

[3] தினத்தந்தி, பெங்களூருவில் பயங்கரவாதி கைது, பிப்ரவரி 12, 2:50 am.

[4] https://www.dailythanthi.com/News/India/nia-arrests-suspected-al-qaeda-terrorist-in-bengaluru-897842

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர் கைதுஅல்கொய்தாவுடன் தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.

[6] https://tamil.asianetnews.com/india/suspected-terrorist-alleged-to-be-linked-with-al-qaeda-has-been-arrested-in-bengaluru-rpwhvd

[7] தினமணி, பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!, By DIN  |   Published On : 11th February 2023 04:20 PM  |   Last Updated : 11th February 2023 06:10 PM

[8] https://www.dinamani.com/india/2023/feb/11/nia-conducts-searches-in-mumbai-bengaluru-against-suspects-linked-to-isis-al-qaeda-3999212.html

[9] தினசரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது, Sakthi K. Paramasivam, February 11, 2023: 2.41 PM.

[10] https://dhinasari.com/india-news/277683-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, பெங்களூர் ஐடி ஊழியர் பேருக்குதான்.. பின்னணியில் தீவிரவாதி! பொறி வைத்து பிடித்த என்ஐஏ, By Vigneshkumar Updated: Saturday, February 11, 2023, 16:21 [IST]

[12] https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-techie-turned-terrorist-arrested-by-nia-officals-498246.html

[13] குளோபல்.தமிழ்.நியூஸ், அல்கய்தாவுடன் தொடர்பு? கர்நாடகாவில் IT ஊழியர் கைது!, February 11, 2023.

[14] https://globaltamilnews.net/2023/187397/

[15] நியூஸ்.4.தமிழ், தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!, By Amutha, Published 20.00 hours February 11, 2023

[16] https://www.news4tamil.com/al-qaeda-terrorist-who-was-ready-to-network-in-the-isi-was-arrested-in-bangalore-nia-took-action/

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் “நான்தான் கடவுள்”…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்தது – இதெல்லாம் என்ன?

ஜூலை 1, 2020

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்ததுஇதெல்லாம் என்ன?

Allowing Friend to rape his wife, 29-06-2020-NewsTM

கொரோனா காலத்தில் பெண்கள் படும் பாடு: கொரோனா காலத்தில், ஆண்களை விட அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது, தொடர்ந்து பாதிக்கப் படுவது பெண்கள் தாம்.ஆண்கள் வேலைக்குப் போகாமல், வீட்டிலேயே அடைபட்ட நிலையில், சாப்பிட்டு-சாப்பிட்டு, டிவி-பேப்பெர் பார்த்து, மொபைல் இருந்தால் வம்பு பேசிக் கொண்டு, தூங்கி விழிப்பது தான் அவர்கள் வேலை என்றாகி விட்ட நிலையில், பெண்களுக்கு பாரம் இன்னும் அதிகமாகி விட்டது. காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் மேகாலயா வரை, எல்லா இடங்களிலும் பெண்கள் கஷ்டப் பட்டு உழைத்து வருகிறாற்கள். மற்ற மாநிலங்களிலிருந்து, அத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அதிகமாக, பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அவற்றைச் சார்ந்த கொலைகள் என்றுதான், அதிகமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை, ஒரு சாதாரணமான நோக்கர் கூட கண்டு கொள்ளலாம். ஆகவே, இப்பிரச்சினை ஆய்வுக்குரியது. அதிலும், மதசார்ந்த விசயங்கள் எனும்போது, ஊடகங்கள், சொதப்பி, குழப்பி, பிறகு அப்படியே அமுக்கி விடுகிறது. இப்பொழுதைய திருச்சி-பாலியல் விவகாரமும் அப்படியே 2005லிருந்து 2020 வரை தொடர்ந்துள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD

2005ல் தினேஷ் பர்வீனை காதலித்து மணந்தது: திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்[1]. இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்[2]. இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Allowing Friend to rape his wife, 29-06-2020

நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்ததுதினமலர் கொடுக்கும் செய்தி: திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்[3]. இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார்[4]. இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ‘சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்’ எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். பிறகு இது “லவ் ஜிஹாத்” போலிருக்கிறதே? பெண்களைத் தான் குறிவைத்தார்கள் என்றால், ஆண்களையும் குறிவைப்பது போலத் தெரிகிறது. அதாவது, இப்படி திருமணம் செய்து வைத்து, போதை ஏற்றி, மூளை சலவை செய்து, பிறகு சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் போலும்!

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint

2008ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தது, நகைகளைத் திருப்பில் கொடுத்தது: மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்[5]. ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது[6]. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எவரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார்[7]. ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்[8]. மேலும் தனிமையில் இருந்தபோது மற்றும் நிர்வாணமாகவும் பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார்[9]. இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது[10]. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint-2

படங்களைக் காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்தது: இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்[11]. இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது[12]. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they located

இஸ்லாமில் ஒருவன், தன்னை இறைதுாதர், கடவுள் என்று சொல்லிக் கொண்டது: செய்திகள் இப்படி இருக்கின்றன:

  1. அஸ்லாமுக்கு (தினேஷுக்கு) மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.
  2. பர்வீனிடம் சென்று, “நான் தான் கடவுள்” என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 30-06-2020-News DM

இங்கு தான் ஏதோ பிரச்சினை, விவகாரம் மற்றும் மர்மம் உள்ளது. தினேஷை மதம் மாற்றி கல்யாணம் செய்து வைத்தான் எனும் போது, பாரூக் மசூதி, ஜமாத் முதலியவற்றுடன் நெருக்கமாக இருக்கிறான் என்று தெரிகிறது. அதனால், தான் 2008ல் புகார் கொடுத்தபோது, போலீஸார் கண்டுகொள்ளாமல், சமரசம் செய்து அனுப்பி விட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும், அதே பாணியில் நகைபரிப்பு என்று ஈடுபடுவது, நம்புகின்றதாக இல்லை. மேலும், பர்வீன் தனது மூத்த மகளையும் பாரூக் கற்பழிக்க முயல்கிறான் என்பது, விவகாரம் வேறு மாதிரி போகிறது. இஸ்லாத்தில், அவர்களுக்கு சாதகமாக, நிறைய விலக்குகள் இருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தில், எல்லோரும் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. திராவிடத்துவத்தால், ஏற்கெனவே சமூகம் சீரழிந்துள்ளது. அது சினிமாவுடன் சேர்ந்து அதிகமாகியுள்ளது, இஸ்லாமும் சேரும் போது, பயமாக, பயங்கரமாக இருக்கிறது. மாற-மாற்ற-மாற்றப்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

30-06-2020

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they lived

[1] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், ‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால்பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!, By Selvakumar | Jun 30, 2020 11:19 AM

[2] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-woman-sexually-abused-by-husbands-friend-9-years-arrested.html

[3] தினமலர், இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது, Added : ஜூன் 29, 2020 22:49.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2567171

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நான்தான் கடவுள்“.. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! By Hemavandhana | Published: Tuesday, June 30, 2020, 9:59 [IST].

[6] https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-raped-and-two-arrested-near-trichy-389856.html

[7] தினத்தந்தி, கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர்மதுவுக்கு அடிமையானதால் விபரீதம், பதிவு : ஜூன் 29, 2020, 09:11 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/29211115/1471683/Trichy-Husband-Wife-Issue.vpf

[9] நியூஸ்.டி.எம்.தமிழ், நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்…, By Newstm Desk | Tue, 30 Jun 2020.

[10] https://newstm.in/tamilnadu/a-clergyman-who-sexually-abused-a-friends-wife-for-several/c77058-w2931-cid747710-s11189.htm

[11] விகடன், `புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM.

[12] https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-man-in-sexual-harassment-case

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

மே 31, 2019

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்புஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம்ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

Terror threat remains in Lamka 01-05-2019

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.

29-04-2019 Lankan blast link with Kerala.3

30-04-2019 Kerala Lanka terror link

ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

Terror suspects sarched in TN following Lankan blast 02-05-2019

Lankan bombers in Bangalore, alert, 05-05-2019

பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
IS inked searched in and seizedTN by NIA 21-05-2019

Lankan bombers tained in Kashmir, 05-05-2019

ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

29-04-2019 LLankan blast link wit Kerala

Sri Lankan terrorists instigated by the TN counterparts- Buddhist priest accused

இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

IS inked arrested fromTN by NIA 22-05-2019

NIA arrests Faizal from Kerala 09-05-2019

31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

31-05-2019

IS claim that they opened a branch in India 15-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்புசென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf

[3]  தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM

[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf

மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

செப்ரெம்பர் 23, 2017

மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

தென்னகத்தில் .எஸ் ஆதரவு அதிகம் ஏன்?: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் தனது தீவிரவாதத்தினால் அச்சுறுத்தி வருகிறது[1]. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்த்து, படர்ந்து, விடரிந்து தாக்குதல் நடத்தி வருகிறது[2].  ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, அதன்படியே, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த தீவிரவாதையக்கத்தில் சேர்ந்து, போராடி, இறந்து கொண்டிருக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதுவாடிக்கையான விசயம் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக விசாரணையில் விவரங்கள் வெளிவந்தன. கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தன்னகத்தில், ஐ.எஸ் ஆதரவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Shahul Hameed, Chennai arrested by NIA -and Khaja Moideen

சாகுல் ஹமீது, ஓட்டேரியில் கைது (18-09-2017): இந்நிலையில், 18-09-2017 அன்று ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது [Shakul Hameed (A-3), son of Mohammed Zackariya,resident of House No. 59, S. S. Puram, A-Block, 10th Street, Ottery, Chennai- 600 012] என்பவவர் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹாஜா பக்ருதீனுடன் [Haja Fakkurudeen (A)] தொடர்பு கொண்டவன். சக- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஜ மொஹித்தீன் [co-accused Khaja Moideen (A-2)] மற்றும் இவன் ஹாஜா பக்ருதீனுடன் தமிழகம் வந்தபோது, கடலூரில் சந்தித்துள்ளான். பிறகு தமிழக,ம் மற்றும் கந்நாட மாநிலங்களில் பல இடங்களுக்கு சென்று ஐசிஸுக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்[3]. அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[4]. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 15-09-2017 அன்று காஜா மொஹித்தீன் இவ்வழக்கில் ரீமான்டில் வைக்கப்பட்டான். தவிர பல குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான்[5].

Swalih was settled in Chennai for some time now with wife and 2-year-old son.

சென்னையில் கடந்த மாதங்களில் கைதானவர்கள்: ஹரூன் ரஷீத் [முகமதி அலி ஜின்னாவின் மகன்] என்பவன் 04-07-2017 அன்று கைது செய்யப்பட்டான். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது[6].  18-09-2017 அன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது[7]. சென்னையில் தொடர்ந்து ஐ.எஸ் விவகாரத்தில் பலர் கைது செய்து பட்டு வருவது, திட்டமிட்டி ஆட்கள் வேலை செய்து வருவது தெரிகிறது. தேவையில்ல்லாத விசயங்களை வைத்துக் கொண்டு, தினமும் அலசும் ஊடகங்கள். இத்தகைய அபாயகரமான விசயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது” என்றதற்கு மேலாக ஊடகத்தினருக்கு, வேறெந்த விவரமும் கிடைக்காதது போலமூன்ரு-நான்கு வரிகளில் செய்தி வெளியிட்டுள்ளன[8]. என்.ஐ.ஏ. ஊடகத்தினருக்கான அறிக்கை என்பதிலிருந்தே மேலும் விவரங்களை வெளியிடலாம்[9]. ஆனால் அவர்களுக்கு பயமா அல்லது வெளியிடக் கூடாது என்று யாராவது ஆணையிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

Nasser who designed ISIS flag is from Chennai

தினகரன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்[10]: டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை 19-09-2017 அன்று வந்தது.

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Dinakaran-2

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்கள்[11]: இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

© வேதபிரகாஷ்

23-09-2017

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Deccan Herald-modified

[1] விகடன், .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!, Posted Date : 19:19 (18/09/2017); Last updated : 21:09 (18/09/2017), இரா.குருபிரசாத்.

[2] http://www.vikatan.com/news/tamilnadu/102625-nia-arrested-an-accused-shakul-hameed-from-chennai-in-a-case-related-to-isis.html

[3] தினமணி, சென்னையில் .எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!, Published on : 18th September 2017 05:37 PM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2775335.html

[5] On 15th September, 2017, accused Khaja Moideen @ Abdullah Muthalif (A-2), son ofChinna Thambi Ambalam, resident of Salapathputhu Nagar, Kollumedu, Taluk Kattumanarkovil, Cuddalore district, Tamil Nadu who has already been in judicial custody in Crime No. 746/2014 of Ambattur Police Station, Chennai has been remanded in this case by the Hon’ble NIA Special Court (Sessions Court for Bomb Blast cases), Poonamalle, Chennai. The custody of Khaja Moideen @ Abdullah Muthalif (A-2) has been sought by the Chief Investigation Officer in RC-03/2017/NIA/DLI.

 

[6] மாலைமலர், .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது, பதிவு: செப்டம்பர் 18, 2017 19:10.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18191008/1108657/NIA-arrests-ISIS-supporter-in-Chennai.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது. லக்ஷ்மி பிரியா, திங்கர்கிழமை.செப்டம்பர் 18, 2017  16:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-makes-one-arrest-chennai-isis-case-296179.html

[10] தினகரன், சென்னையில் .எஸ். இயக்க ஆதரவாளர் கைது, 2017-09-19@ 00:43:12

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336681

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியதுஇங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

CRPF jawan insulted

காஷ்மீர் கல்லடிகலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!

Stone pelting Jihad - Gautam Ganbhir

கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.

Stone pelting Jihad - Sehwag -unacceptable
ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.

Omar Abdulla against CRPF

உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.

Omar Abdulla against CRPF-not worried about stonepelting

தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.

US official report of bombing Afganistan on 13-04-2017

இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.

© வேதபிரகாஷ்

15-04-2017

CRPF-attacked -stonepelting- budgam

[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.

[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf

[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf

 

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-sanjeevin-today-photo

பர்மா பஜார் ஆட்கள் ஹவாலா பணத்தை நன்கொடையாகக் கொடுத்தது: மேலும், சென்னையில் உள்ள நான்கு முக்கிய பிரமுகர்களிடம் அவர் ஐ.எஸ் இயக்கத்திற்காக பணம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார்? என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது[1]. மண்ணடியில்ணைரும்பு வியாபாரம் செய்யும் எவரும் பலவித வரிகளை ஏய்த்து தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பர்மா பஜார் வியாபாரத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கருப்புப் பணம் அதிகமாக உற்பத்தியாவதே அத்தொழில்களில் தான். போதாகுறைக்கு, ஹவாலா என்றால், கேட்கவா வேண்டும். இத்தகைய பணம் தான் தீவிரவாதத்திற்கு செல்கிறது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் 22-02-2017 புதன்கிழமை விசாரணை செய்தனர்[2]. அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது 20-02-2017லிருந்து, அந்த நான்கு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம், சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது[3]. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

burma-bazar-chennai

பிப்ரவரி 16, 2017 அன்று பாபநாசம் மொஹம்மது நாசர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: மொஹம்மது நாசர் / காலித் [4 வயது], தந்தை பெயர் – பக்கீர் மொஹம்மது, விலாசம் – 17/3, சின்னக்கடை, திருப்பாலத்துரை தெரு, பாபநாசம் போஸ்ட், தஞ்சாவூர் தாலுகா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் துபாயில் அக்டோபர் 2014 வரை வேலை செய்து வந்தான். ஐஎஸ்.சுடன் சேர்ந்து “ஜிஹாத்” போரிட வேண்டும் என்ற வெறியுடன், தனது இந்திய சகாக்கள் சிலருடன் செப்டம்பர் 2015ல் சூடானுக்கு சென்றிருக்கிறான். அங்கேயேயிருந்து, பல ஆட்களுடன் தொடரு கொண்டு, இருந்தான். ஆனால், டிசம்பர் 11, 2015 அன்று தில்லிக்கு வந்தபோது, கைது செய்யப்பட்டான். ஜூன்.3, 2016 அன்று அவன் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 21, 2017 அன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பிப்ரவரி 16, 2017 அன்று மறுபடியும் பல பிரிவுகளில், தில்லி-பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதாவது, இதெல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அந்த தஞ்சாவூர் / பநாசம் மொஹம்மது நாசருக்கு, இந்த சென்னை மொஹம்மது இக்பாலை தெரியுமா-தெரியாதா என்று ஆராய்ச்சி செய்யலாமே?

mohamed-naser-391_1_pressrelease_17_02_2017-papanasam

மைல்லாப்பூர் மொஹம்மது இக்பாலை யாரும் கண்டு கொள்ளவில்லை: சென்னை பஜார் தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மொஹம்மது இக்பால் என்றவன் வாழ்ந்து வருகிறான் என்றால், யாரும் ஒன்றும் நினைத்திருக்க மாட்டார்கள் எனலாம். ஆனால், அவன் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு, பணம் சேகரித்து வருகிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. சரி, சென்னையிலேயே அப்படி பணத்தை தாராளமாக தரும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. பிறகு, அவர்களின் தேசப் பற்று எத்தகையது என்பது யோசிக்கத் தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு மேலும்-கீழும் குதித்து ஆர்பாட்டம் செய்து, கலாட்டா செய்யும் முஸ்லிம்கள் இத்தகைய விசயங்கள் வெளிவரும் போது, ஒன்றுமே தெரியாதது போலவும், நடக்காதது போலவும் இருப்பார்கள் என்றும் தெரிந்ததே. இந்துத்துவவாதிகள் போன்றோருக்கு கவலையே இல்லை. அதிமுக, சசிகலா, தீபா என்று பேசியே பொழுது போக்கி விடுவார்கள். மைல்லாப்பூர் தான், “இந்தித்துவவாதிகள்” அதிகம் இருக்கும் இடமாயிற்றே, துப்பறியும் புலிகள் கண்டு கொள்ளவில்லையா?

is-linked-terrorists-interrogated-by-ap-police-26_02_2017_112_010

மொஹம்மது இக்பாலின் சைனா பயணங்கள் முதலியன: சீனா பொருட்களை வாங்காதீர்கள், தடை செய்யுங்கள், எதிர்ப்போம் என்றெல்லாம், டுவிட்டர், பேஸ்புக் முதலியவற்றில் இந்துத்துவ வீரர்களும் காரசாரமாக பதிவு செய்வர். 100-500 என்றெல்லாம் “லைக்ஸ்” போடுவர். இக்பால் “டிராவல் ஹக்” என்ற சமூக குழுவை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றில் நடத்தி வந்தான். ஆனால், பிப்ரவரி 4, 2017 அன்று கைதான போது, அவற்றையெல்லாம், சுத்தமாக நீக்கிவிட்டானாம்[5]. இருப்பினும், கணினி வல்லுனர்கள் அவற்றை அறிய முடியாமலா போய்விடும்? அவற்றை மீட்டெடுக்க வழிகள் இல்லாமலா இருக்கும்? இதுவும் பிஜேபி-கணினி வல்லுனர், இந்துத்துவவாதிகளுக்கு தெரியாது போலும். தெரிந்தால் உதவலாமே? ஆனால், மைலாப்பூரில், ஒருவன் சீனப்பொருட்களை வாங்கி விற்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது போலும். அவர்களும் கடைகள் வைத்திருப்பதால், ஊக்குவிக்கிறார்களோ என்னமோ? ஆகவே, இக்பால் சீனாவிலிருந்து வரும் பொருட்களை, குறிப்பாக மொபைல் விற்பனையில் பணம் சம்பாதித்து வந்தான்[6]. இதனால், கடத்தல்காரர்களிடமும் தொடர்பு இருந்தது. இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான்.

jameel-ahmad-arrested-in-oct-2016

ஐசிஸ் தொடர்புகளால் கண்காணிக்கப் பட்டு மாட்டிக் கொண்டான்: ஐசிஸ் தொடர்புகளால், அவன் சந்தோசமாக இருந்தாலும், பிரச்சினை வந்தது. அக்டோபர் 2016ல் கைதான் ஜமீல் கான் [Jameel Khan] மற்றும் 2014ல் கர்நாடகாவில் கைதான மெஹ்தி மஸ்ரூர் பீஸ்வாஸ் [Mehdi Masroor Biswas] முதலியோருடன் இவனுக்கு தொடர்பு இருந்தது என்பதனை என்.ஐ.ஏ தெரிந்து கொண்டது[7]. வியாபார நிமித்தம் மலேசியா, சிங்கப்பூர், மெக்கா, மெதினா, சைனா என்று பலதடவை சென்றிருக்கிறான். சைனாவுக்கு மட்டும் எட்டு முறை சென்று வந்திருக்கிறான்[8]. இதனால், சைனாவுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ல தொடர்புகளையும் ஆராய வேண்டும். ஏனெனில், சைனப் பொருட்களை எப்படி இறக்குமதி செய்கிறார்கள் அல்லது இந்தியாவிற்குள் வருகின்றன என்பதில் வரியேப்பு போன்ற விசயங்களையும் கவனிக்க வேண்டும். இந்த விவரங்களும் சரி பார்க்கப்பட்டன. பலதடவை ஐசிஸுடன் சேர சிரியாவுக்கு செல்ல முயற்சித்திருக்கிறான். ஆனால், பல காரணங்களுக்காக முடியவில்லை[9]. இதனால், சென்னையில் இருந்து கொண்டே, நிதி திரட்டுமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டது. அதைத்தான், அவன், விசுவாசத்துடன் செய்து வந்தான். தனது, மொமைல் மூலம் தெரிந்து கொண்ட நுணுக்கங்களை, தீவிரவாதம் வளர்க்க உபயோகித்தான்[10].

mohammed-iqbal-isis-fund-kik-messengaer“கிக் மெஸஞ்சர்”, “டெலிகிராம்” போன்றவற்றை உபயோகித்து, அபு-சாத் அல்-சுடானி மற்றும் அபு ஒஸாமா அல் சொமானி என்ற இருவருடன் தொடர்பு கொண்டிருந்தான்[11]. இப்பொழுது, அந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக் கொண்டான். சென்னை கல்லூரி மாணவர்களுக்கும் இவனுக்கும் தொடர்புகள் இருக்கின்றன[12].  அப்படியென்றால், பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரியாமலா போகும்? மற்றும் சுமார் 20 பேர்களுடன், நிதி தொடர்பான சம்பந்தங்களும் இருக்கின்றன. ஆனால், அவன் சொல்லாமல் சாதித்து வருகிறான்.

© வேதபிரகாஷ்

26-02-2017

mohammed-iqbal-isis-fund-telegram

[1] தினமணி, .எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்... விசாரணை, Published on 24 February, 2017, 03.24 AM

[2]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.htmlUPDATED: FEBRUARY 22, 2017 01:18 IST

[3] தினமணி, .எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்ல திட்டமிட்டது அம்பலம், Published on : 21st February 2017 01:47 AM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2653020.html

[5] With two foreign handlers and one local link ‘Jameel Khan’, Iqbal is now being probed for his alleged links to Shami Witness, now known as Mehdi Masroor Biswas, who was arrested by Karnataka Police in 2014. He was alleged to have operated the single most influential pro-ISIS Twitter account from India, which was followed by two-thirds of all the foreign jihadis, but its was identity exposed following a Channel 4 News investigation in the UK.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[6] On the face of it, everything about Iqbal – a businessman of Chinese mobiles and goods – looked innocuous. He belongs to a well-to-do Chennai-based family and is married with two children, staying in the upmarket locality of Myalapore. However Iqbal’s undoing began after he was radicalised online.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[8] Iqbal who ran an account ‘Travel Haq’ on social media sites had deleted his account just before his arrest on February 4, making it difficult for the ATS to establish the link. Iqbal frequented Malaysia, Hong Kong, Singapore, Mecca and Medina but his business interests took him to China seven to eight times.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[9] DECCAN CHRONICLE.Chennai: 4 college students under intelligence scanner for ISIS links,| R PRINCE JEBAKUMAR, Published: Feb 22, 2017, 1:50 am IST; Updated: Feb 22, 2017, 8:46 am IST

[10] A year before his arrest, he is believed to have gone through websites of ISIS, drawn by Abu Bakr al-Baghdadi’s declaration of a caliphate.  Through social media applications like Kik messenger and telegram, Iqbal allegedly established contact with two ISIS handlers Abu Saad al-Sudani, a Sudanese, and Abu Osama Al Somali, a Somalian notorious commander.  Arrested earlier this month in Rajamundri on Andhra Pradesh-Tamil Nadu border, Iqbal spilled the beans of his failed dream to fight along with other ISIS militants in Syria and Iraq to establish a caliphate.  On invitation from Saad, Iqbal made two attempts to reach the warzone in Syria – first, applying for a visa to Turkey to slip into Syria to get trained as an ISIS fighter in one of several ISIS’ camps, and secondly, by trying to reach Turkey through the France route,’ Rajasthan ATS ADG Umesh Mishra told Mail Today.  ‘After his failed attempts, Sudani advised Iqbal to raise funds for the establishment of caliphate. Five fund transfers made by Iqbal to [Jameel] Ahmed are now under scanner.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[11] dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[12] The custodial interrogation of an ISIS sympathiser from the city had revealed the role of at least 14 others being involved in the Chennai module; of them four could be college students.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/220217/chennai-four-city-college-students-under-radar-for-isis-links.html

 

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.

நவம்பர் 20, 2016

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.

Zakir supporting Osama bin laden

இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேசனின் நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1].  இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.

preacher-zakir-naik-inspired-isis-terrorists-but-he-is-not-bothered

மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6].  மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police]  மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல்  பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.

nia-raided-zakir-naik-book-stall-seized-incriminating-documents19-11-2016 அன்று நடந்த சோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

nia-raided-zakir-naik-global-educationமுறைப்படி மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.

nia-raided-zakir-naik-irf-seized-incriminating-documentsமுறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

© வேதபிரகாஷ்

20-11-2016

nia-raided-zakir-naik-seized-incriminating-documents

[1] தினகரன், ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.. நடவடிக்கை, Date: 2016-11-20@ 00:02:37.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=260007

[3] பிபிசி.தமிழ், இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பையின் 10 இடங்களில் சோதனை, நவம்பர் 20,2016,11.25 pm.

[4] http://www.bbc.com/tamil/india-38040016

[5]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html

[6] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.

http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[7] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST

[8] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html

[9] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html

[10] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[11] தினத்தந்தி, தொண்டு நிறுவனங்களில் சோதனை: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST

[12] http://www.dailythanthi.com/News/India/2016/11/20022625/Religious-preacher-Zakir-Naik-cases–National-intelligence.vpf

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

paris-bombers-subahani-link-dec-2015

பாரிஸ் தொடர்புகளை ஒப்புக் கொண்ட சுபஹனி மொஹிதீன்: இஸ்லாமிய அரசு போராளி, தமிழகத்தைச் சேர்ந்தவன்[1], அவனுக்கு பாரிஸ் குண்டுவெடிப்பாளர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன என்று இப்பொழுது (அக்டோபர் 23 2016) வாக்கில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[2]. 2015 நவம்பரில் அவர்களை சந்தித்தப் பிறகு, இந்தியாவுக்கு வந்ததாகவும், அப்பொழுது ஊடகங்கள் மூலம், பாரிஸ் தாக்குதல் பற்றி அறிந்தபோது, அவர்களுடைய சந்திப்புகளை நினைவு கூர்ந்ததாகவும் சொன்னான்[3]. பாரிஸ் குண்டுவெடிப்பில் மூன்று குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் என்று ஈடுபட்டு குண்டுகளை வெடித்தும், ஏ.கே.47 துப்பாக்கிகளால் சுட்டும் 130 பேரைக் கொன்றுள்ளனர். இவர்களுக்கு – இந்த தீவிரவாதிகளுக்கு புனைப்பெயர்கள் தான் கொடுக்கப் பட்டன. மொஹம்மது அல்-பிரான்ஸிசி, அப்சலாம் அல்-பிரான்ஸிசி, என்று தான் அழைக்கப்பட்டனர்[4]. இதெல்லாம் “ஸ்லீப்பர் செல்” சித்தாந்தத்தின் படி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற முறையில் உருவாக்கப் பட்டதா அல்லது போலீஸாரிடம், தீவிரவாத தடுப்பு-கண்காணிப்பு குழுக்களிடம் மாட்டிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ள யுக்தியாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட பெயர்கள் வெளியிடப்பட்டன:

  1. Abdelhamid Abaaoud [main plotter] – அபதல்ஹமீது அபௌத்
  2. Brahim Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – இப்ராஹிம் அப்சலம் [1ன் சகோதரன்]
  3. Salah Abdeslam [brother of Abdelhamid Abaaoud]  – சலஹ் அப்துல் ரஸாக் [1ன் சகோதரன்]
  4. Aleed Abdel-Razzak [killed in bomb blast, but not a terrorist] – அலீத் அப்தல் ரஸாக் [பாரீஸ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவன், ஆனால், தீவிரவாதி கிடையாது]
  5. Omar Ismail Mostefei – ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.

abdelhamad-abaaooud-and-ahmad-al-mohammadபாரிஸ் குண்டுவெடிப்பு தலைவன் தான் சுபஹனி மொஹிதீனின் தலைவன் ஆவான்: NIA மற்றும் பிரெஞ்சு தீவிரவாத கண்காணிப்புக் குழு, இவ்வழக்கை ஆராய்ந்து வரும் நிலையில், NIA அவர்களை தொடர்பு கொண்டபோது, பிரான்ஸில் தாக்குதல் நடந்த போது, அப்பகுதிகளில் சுபஹனி மொஹிதீன் இருந்ததாக சொல்கிறார்கள்[5]. மேலும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவன் தான் தன்னுடைய தலைவன் என்றும் கூறிக் கொண்டான்[6].  “தி ஹிந்து” “குண்டுவெடிப்பாளர்கள்” என்று பன்மையில் குறிப்பிடுகின்றது[7]. அதாவது மேற்குறிப்பிடப் பட்ட மூவரில் ஒருவன் தலைவனா அல்லது மூவருமே தலைவனா என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்[8]. மேலும் குண்டுவெடிப்பிலும் இவனுக்கு பங்கு உள்ளாதா இல்லையா போன்றா கேள்விகளும் எழுகின்றன. அப்படியென்றால், அவன் ஆணையின் படி அவன் இந்தியாவுக்குத் திரும்பினானா, அவனுக்கு என்ன திட்டம் கொடுக்கப்பட்டது, போன்ற கேள்விகள் எழுகின்றன. பாரிஸ் குண்டுவெடிப்பு நடந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்தவனுக்கும் அந்த நிகழ்சிக்கும் தொடர்புகள் இருந்தன, தமிழகத்தைச் செர்ர்ந்த ஒருவன் அதில் இறந்து விட்டான், என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.

bilar-hadfi-and-samy-amimour-paris-bombers-deadசுபஹனி மொஹிதீன் பாரிஸில் இருந்தானா, இல்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்பதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 2015ல் பாரிஸில் குண்டு வைத்தவர்களை இவனுக்குத் தெரிந்தது, அல்லது இவனே அப்பகுதிகளில் இருந்தது போன்றவையும் வியப்பாக இருக்கின்றன. ஆகவே, இவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததே ஒரு நாடகம் போன்றுள்ளது. போரில் தான் கண்ட கொடூரத்தைக் கண்டு பயந்து திரும்பி வந்தான் என்றால், அவன் தொடர்ந்தி, ஐசிஸ் உடன் தொடர்புகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. போலி பெயர், போலி பாஸ்போர்ட், தமிழக போலீஸாருக்கே, அவன் சிரியாவுக்குச் சென்றுத் திரும்பியது தெரியாது போன்ற விசயங்கள், ஒருவேளை ஆள்-மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி, எமாற்றி வருகின்றனர். ஆனால், அவன் தொடர்புகள் வைத்துக் கொண்டு ஆள்சேர்த்தல், சதிதிட்டம் போடுதல் முதலியவற்றை செய்துள்ளான் என்பதிலிருந்தே அவனது பயங்காவாத-தீவிரவாத-குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது.

imael-omar-mostefai-salah-abdeslam-and-abrahim-abdeslamசுபஹனி மொஹிதீனை பாரிஸ் போலீஸார் விசாரிப்பார்கள்: 2015 நவம்பரில் இந்தியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும், மொய்தீன், பாரிஸ் தாக்குதல் தொடர்பான தகவலை செய்தியின் மூலம் தெரிந்ததாக கூறியுள்ள நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு இருந்த பகுதியில் பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிகள் உடனான சந்திப்பைப்பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளாதால், இதுதொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவு பிரான்ஸ் போலீசிடம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடமும் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பெற்றபின்னர் பிரான்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் உள்ளடங்கிய விசாரணை நடைபெற்று வருகிறது, ஐ.எஸ். கைவசம் உள்ள பகுதியில் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட நேரத்தில் மொகதீனும் அங்குதான் இருந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பரில் 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 135-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

© வேதபிரகாஷ்

26-10-2016

muhammad-ghani-usman-and-adel-haddadi

[1] Indian Express, ‘Islamic State recruit’ from Tamil Nadu knew Paris attackers tells sleuths, By: Express News Service | New Delhi | Updated: October 24, 2016 6:22 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[3] http://www.dnaindia.com/india/report-indian-isis-operative-subahani-haja-moideen-knew-paris-bombing-accused-2266706

[4] “In Mosul, he was put in a group which also had these two individuals. He knew them only by their pseudonyms which carried the suffix al-Francisi. However, when he was shown the photographs of the attackers, he recognised them,” an NIA officer said.

http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[5] The NIA has informed the French security officials and contacted its Embassy here, the sources said, adding this was done in case it would help in their investigation. They said that French officials could question him as well after getting the requisite court order. According to the multi-country investigation into the French terror strikes, the accused involved in the gruesome killings were in IS-controlled areas at the same time Moideen was there.

The Hindu, ‘Indian ISIS operative knew Paris bombers, NEW DELHI, October 24, 2016 Updated: October 24, 2016 01:36 IST

[6] The Times of India, Paris attacker was my leader: IS recruit from India, Neeraj Chauhan| TNN | Updated: Oct 24, 2016, 01:38 IST

[7] http://www.thehindu.com/news/national/indian-is-operative-knew-paris-bombers/article9258867.ece

[8] http://timesofindia.indiatimes.com/india/Paris-attacker-was-my-leader-IS-recruit-from-India/articleshow/55020602.cms

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது  – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

கோயம்புத்தூர் தமிழ்நாடுகேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

gone-for-hajj-returned-as-isis-terrorist

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

is-jihadi-from-tirunelveli-indian-express

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].

© வேதபிரகாஷ்

13-10-2016

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதி

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home

[3]  விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).

[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.

[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art

[7] மாலைமலர், .எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09

[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf

[9] தினமணி, .எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM

[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478

[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து .எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST

[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – இஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுஇஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

khilafat-e-rashida-is-the-only-solution

ஐசிஸ் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்ட சென்னைவாசி:  இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முயற்சியை முறியடித்து, தீவிரவாதிகள் ஆறு பேரை கேரளாவில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவனுக்கு தமிழகத்துடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிறகு, சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது[1].

six-arrested-02-10-201601-10-2016 அன்று பிடிபட்ட தீவிரவாதிகள்[2]: கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கனகமலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்[3].  முதலில் மலைமீது ஐவர் கூடியிருந்தபோது பிடிபட்டனர், பிறகு இன்னொருவன் பிடிபட்டான்.

எண் பிடிபட்டவன் பெயர், வயது தந்தை முகவரி
1 மன்சித் / உமர் அல் ஹிந்தி / முத்துக (Manseed alias Omar al Hindi 30) மஹ்மூத் மதீனா மஹால், அனியரம், கன்னூர் மாவட்டம், கேரளா.
2 அபு பஷீர் / ரஸீத் / பச்சா / தளபதி / அமீர்  (Abu Basheer 29) கோட்டைகுடிர், மஸ்ஜித் தெரு, ஜி.எம். நகர், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
3 ஸ்வாலிஹ் மொஹமத் டி / யூசுப் / அபு ஹஸ்னா (26) தாஹா மொஹமது அம்பலத், வெங்கநல்லூர், செலக்கர பஞ்சாயத்து, திரிசூர், கேரளா. இப்பொழுது சென்னையில் வசித்து வருகிறான்.
4 பி. சப்வான் (30) ஹம்ஜா பூக்கட்டில்இல்லம், பொன்முன்டம் பி.ஓ, திரூர், மலப்பப்புரம் மாவட்டம், கேரளா.
5 என். கே. ஜாஸிம் (25) அப்துல்லா நங்கீலம் கன்டி, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.
6 ராம்ஷெத் நகீலன் கண்டியல் / அம்மு (Ramshad Nageelan Kandiyil 24) அஸ்ரப் நங்கீலன் கன்டியல் இல்லம், குட்டியாடி பி.ஓ, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.

 ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்[4].  இவர்கள் 24-30 வயதுடையவர்கள். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக செய்யும் வேலைகளைத் தடுக்கும் சட்டம் முதலியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவிலிருந்து 21 பேர் காணவில்லை என்றும், அவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்ஸில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது[6]. இவர்களால் அல்லது இவர்களின் கூட்டாளிகளின் மூலம் இரண்டு கேரள நீதிபதிகளுக்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது[7]. தென்னிந்தியா முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இவ்விவகாரங்கள் வெளிவந்துள்ளன[8].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஅன்ஸர்உல்காலிபா கேரளா” – “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்: இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்கு சென்று, ஆனால், இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லாமல், அயல்நாடுகளுடன் விசுவாசம் கொண்டு, ஜிஹாதி மனப்பாங்குடன், தீவிரவாதத்தை மேற்கொள்வது எப்படி என்பது புதிராகத்தான் உள்ளது. உமர் அல் ஹிந்தி என்பவன் இக்கூட்டத்தின் தலைவன். இவன் “அன்ஸர்-உல்-காலிபா கேரளா” என்ற இயக்கத்தை உருவாக்கினான். “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்” [”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS)] என்று பொருளாகும். இவ்வாறு மனப்பாங்கை ஏற்படுத்துவது விஞ்ஞானம், தொழிற்நுட்பம் படிப்பதால் அல்ல, மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பதால் தான் உண்டாகிறது. என்.கே. ஜாஸிம் என்பவன் இஞ்சினியர், இவன் சிரிய அரசு ஐஎஸ்ஸுக்கு எதிராக நடத்தும் நடவடிக்கைக்களை எதிர்த்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் போட்டு வந்தான்[9]. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில், முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கவர்ந்து, தீவிரவாதத்தில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான். முஸ்லிம் அல்லாத இளைஞர்களைக் கூட “எல்லாம் கிடைக்கும்” என்ற ரீதியில் தூண்டில் போடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் போன்று நண்பர்களாகி, திசைத்திருப்பும் யுக்தியும் கையாளப்பட்டது. இவையெல்லாமே, பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் செய்யும் காரியங்கள் அல்ல. அவரவர் வீடுகளில் சோதனையிட்டபோது, ஆவணங்கள், மிண்ணனு கருவிகள் முதலியன கைப்பற்றப்பட்டன.

tamilnadu-jihad-hi-tech-jihad-with-isisபி., பி.டெக் என்று படித்த இளைஞர்கள் தாம் இந்த தீவிரவாத அமைப்புகளில் சேருகிறார்கள்: எம். கே. ஜாசிம் (24) ஒரு எஞ்சினியராக இருந்தாலும், ஜாகிர் நாயக்கின் போதனையால் கவரப்பட்டு, பாலஸ்டைன், சிரியா போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கொலையுண்ட காட்சிகளை பேஸ்புக்கில் தொடர்ந்து போட்டு, பழிவாங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தான். தவிர தான் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றில் விருப்பம் உள்ளவன் என்றும் காட்டிக் கொண்டான். கன்னூரில், ஒரு மலையுச்சியில், வெடிகுண்டுகளை தயாரித்து, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டான். இருப்பினும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. செப்டம்பர் கடைசி வாரத்தில் மன்ஸீத் கட்டாரிலிருந்து கன்னூருக்கு வந்தான். அபு பஸீர் அல்லது ரஸீத் (29) ஒரு மெக்கானிக் ஆவான். டி. ஸ்வாலி மொஹம்மது (26) சென்னையில், கிளப் மஹிந்தராவில் வேலை செய்து வந்தான். பி. சப்வான் (30), ஒரு நாளிதழில், வடிவமைப்பாளனாக வேலை செய்தான். என். கே. ஜாஸிம் (25) மற்றும் ரம்ஸீத் (24) மைத்துனர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, யாருடைய உத்தரவின் மீது வேலை செய்து வந்தார்கள். அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்கள், சமூக ஊடக விவரங்கள் மற்ற மின்னணு சாதனங்கள் மூலம், இவ்விவரங்களை என்.ஐ.ஏ பெற்றுள்ளது.

© வேதபிரகாஷ்

13-10-2016

subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

[1] தினமணி, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற .எஸ். பயங்கரவாதி: என்... விசாரணையில் கிடைத்த தகவல், By DIN  |   Last Updated on : 04th October 2016 10:34 AM.

[2] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[3] NDTV, 6 Persons With Suspected ISIS links Arrested In Kerala, Updated: October 03, 2016 07:55 IST.

[4] தினகரன், .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை, Date: 2016-10-05@ 01:19:28

[5] http://indiatoday.intoday.in/story/kerala-nia-is-terrorism/1/778722.html

[6] http://www.ndtv.com/kerala-news/6-persons-with-suspected-isis-links-arrested-in-kerala-1469311

[7]  Intelligence agencies in Kerala have alerted the State government of a threat from an Islamic State-linked module to two High Court judges and some politicians, close on the heels of the National Investigation Agency (NIA) arresting six persons of the terror module from the State.

The Hindu, Kerala warned of IS threat to 2 HC judges, Thiruvananthapuram, October.5, 2016; Updated: October 5, 2016 01:20 IST.

[8] NIA teams along with the Kerala Police, the Delhi police and the Telangana police had launched surveillance on the movement of the accused involved in the conspiracy and, during searches, the six were arrested from Kozhikode and Kannur districts.

http://www.thehindu.com/news/national/kerala/kerala-warned-of-is-threat-to-2-hc-judges/article9185038.ece

[9] The accused, who were radicalised online, had formed a group called ”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS) on Telegram — a web-based application platform, a senior Home Ministry official told The Hindu. One of the accused, Jasim N.K. (24) — an engineer and the only one with an active Facebook account — was following Islamic preacher Zakir Naik and posted several messages against killings in Syria by the Assad regime and also about children and women killed in Palestine. His social media account also said that he was a keen follower of football and cricket and he last posted a message on May 3.

http://www.thehindu.com/news/national/isinspired-group-was-on-radar-for-4-months/article9181053.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews