Posted tagged ‘உக்கடம்’

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

10-11-2022 வியாக்கிழமைஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட .எஸ்..எஸ் இயக்க ஆதரவாளர்கள் லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.

15-11-2022 – நான்கு நபர்களிடம் விசாரணைசோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.

  1. முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  3. ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.

15-11-2022 அன்று ஊடகங்களின் செய்திவிசாரணைக்குப் பிறகு விவரங்கள் வெளியிடப் படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,…………………. சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].

15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், .எஸ்..எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை, Written by WebDesk, November 15, 2022 9:18:27 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/suspect-links-to-isis-police-search-on-several-places-in-chennai-541926/

[3] குமுதம், கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை, kumudam| TAMILNADU| Updated: Nov 15, 2022.

[4] https://www.kumudam.com/news/tamilnadu/48942

[5]  நக்கீரன், .எஸ். அமைப்புக்கு ஆதரவா? – சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 15/11/2022 (07:50) | Edited on 15/11/2022 (08:10).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/support-police-raided-many-places-chennai

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை.., By Nantha Kumar R Updated: Tuesday, November 15, 2022, 9:11 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-raided-of-the-houses-of-suspect-of-isis-supportets/articlecontent-pf805599-485296.html

[9] மாலைமலர், .எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புசென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை , By Maalaimalar, 15  நவம்பர் 2022 11:31 AM.

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-coimbatore-car-blast-police-search-5-places-in-chennai-536697

[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

ஐஎஸ் ஆதரவு இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் .எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்[1]. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்[2]. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………[3] மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, .எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.

தீவிரவாதம் வளர்ந்து இந்நிலை அடைந்தது எப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:

  1. போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  2. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
  3. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
  4. மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
  5. அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
  6. மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
  7. இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..

அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.

உளவியல் ஆலோசனை எப்படி, யாரால், எவ்வாறு எங்கே நடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:

  1. கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
  2. உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
  3. ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
  4.  நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
  5. அத்திட்டத்தை செயல்படுத்துதல்

பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். .எஸ்..எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது[6]. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்[7]. இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது[8]. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்[9]. கார் வெடிப்பு சம்பவத்தை என்..., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் என்றால் என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தினகரன், கோவை மாநகரில் .எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-05@ 14:48:42.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=811771

[3] தினத்தந்தி, .எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு, நவம்பர் 6, 12:15 am (Updated: நவம்பர் 6, 12:15 am).

[4] https://www.dailythanthi.com/News/State/is-discover-100-people-inspired-by-movement-830407

[5] தினமலர், ஒற்றை நபரை இயக்கியது யார்: கோவையில் ஜவஹிருல்லா கேள்வி, Updated : நவ 07, 2022  07:06 |  Added : நவ 07, 2022  07:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164210

[7] மின்னம்பலம், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் .எஸ்..எஸ்: ஜவாஹிருல்லா, நவம்பர் 6, 2022. 21:41 PM IST.

[8] https://minnambalam.com/political-news/isis-will-disrupt-the-islamic-community-jawahirullah/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி  , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST

[10] https://tamil.asianetnews.com/politics/jawahirullah-urged-to-find-out-who-is-behind-the-coimbatore-car-blast-rkyjbb

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

24-10-2022 (திங்கட் கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –

  1. முகமது தல்கா (25),
  2. முகமது அசாருதீன் (23),
  3. முகமது ரியாஸ் (27),
  4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
  5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26)

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1].  இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில்  ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].

அமைதியை விரும்பினால், இளஞர்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம்.  கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.

முகமது தல்கா (25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார்.  நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.

முகமது அசாருதீன் (23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

முகமது ரியாஸ் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

ஃபிரோஸ் இஸ்மாயில் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

முகமது நவாஸ் இஸ்மாயில் (26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

25-10-2022 (செவ்வாய் கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10]

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தமிழ்.இந்து, ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத், செய்திப்பிரிவு Published : 26 Oct 2022 06:11 AM; Last Updated : 26 Oct 2022 06:11 AM.

[2]  https://www.hindutamil.in/news/tamilnadu/887654-jamesha-mubins-body.html

[3] News.18.Tamil, ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.

[4] https://tamil.news18.com/news/coimbatore/jamaat-authorities-did-not-come-forward-to-bury-jamoza-mubeens-body-in-coimbatore-824997.html

[5] தினத்தந்தி, 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவரின் மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது, By தந்தி டிவி 27 அக்டோபர் 2022 12:27 PM.

[6] https://www.thanthitv.com/latest-news/1998-coimbatore-blast-case-inmates-son-arrested-in-car-blast-incident-144934

[7] காமதேனு, வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!, Updated on : 27 Oct, 2022, 11:24 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/jamesha-mubin-bought-the-explosives-by-ordering-them-from-amazon-and-flipkart-police-department-shocked

[9] மக்கள் குரல், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கிய ஜமேஷா முபின், Posted on October 27, 2022

[10]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

Farooq - Ukkadam scrap market

தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென அழைத்து கொலை செய்யப் பட்டது: கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (31). உக்கடம் “பிலால் மார்கெட்டில்” பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். இரும்பு வியாபரமே பெரிய அளவில் கள்ளத்தனமாக, வரியேப்பில் தான் நடந்து வருகிறது[1]. அதில், முகமதியர்கள் கில்லாடிகள். 16-03-2017 வியாழக்கிழமை அன்று பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Farooq murder, one surrendered - DM - 18_03_2017_012_036

அன்சர்ந்த், என்ற முஸ்லிம் கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தது: அதற்குள் விசயம் அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யப் பட்டு தண்டிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர். இந்நிலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சர்ந்த், கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தார். தாடி வைத்த முகத்துடன் அவனது புகைப்படமும் நாளிதழ்களில் வெளியாகியது. இவரை வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடும் பணியை தீவிரபடுத்தி உள்ளனர். கொலையாளிகளுள் ஒருவன் முஸ்லிம் என்றதும் தமிழக ஊடகக்கள் அடங்கி விட்டன. மற்றவர்கள் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் யூகிக்கிறார்கள். ஆக, முஸ்லிமின் கொலைக்கு காரணம் முஸ்லிம் தான், காரணம் மதசமாசாரம் தான் என்று தெரிந்து விட்டது.

Muslim to atheist - Farooq murdered

பகுத்தறிவுநாத்திககம்யூனிஸ்டுகளின் மௌனநிலை: முஸ்லிம் விவகாரம் என்றால் சொல்ல வேண்டுமா, பகுத்தறிவு-நாத்திக-கம்யூனிஸ்டுகளின் நிலை மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தமிழக இச்செய்தியை ஓரம் தள்ளி விட்டன. ஆர்.கே. நகரை பிடித்துக் கொண்டன. செக்யூலரிஸ சித்தாந்தம் இப்படித்தான், சுதந்திரமாக செயல்படுகிறது போலும். மஹாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் நாத்திகன் கொலை செய்யப் பட்டால் குதிக்கிறார்கள். வீரமணி பக்கம்-பக்கமாக எழுதி தள்ளினார்! ஆனால், தமிழகத்தில், ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார் பிறந்த மண்ணில்” பிறந்தவர்களின் யோக்கியதையும் அந்த அளவுக்கு இருக்கிறது. அதாவது, இந்துமதம், இந்துகடவுளர்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது செக்யூலரிஸ உரிமை என்று போற்றப்படும், ஆதரிக்கப் படும். முஸ்லிம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள், ஏன் இந்து-விரோதிகள் கூட அவ்வாறு செய்யலாம், “கருத்து சுதந்திரம்” என்று ஆராதிக்கப் படும். ஆனால், முஸ்லீமாக இருந்தால் கூட, இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது. செய்தால் கொலைதான்! செக்யூலரிஸ சித்தாந்திகள் இவ்வாறு இருப்பதும் நோக்கத்தக்கது.

Farooq murdered - Coimbatore- DM -17_03_2017_015_011_001

முஸ்லிம் நாத்திககனாக இருக்க முடியாது: கொலை செய்யப்பட்ட பாரூக் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து நீக்கி உள்ளனர். அதாவது, பத்வா போட்டு, மதபகிஷ்காரம் செய்துள்ளார்கள். உண்மையில், ஆசார இஸ்லாமியத்தின் படி, ஒரு முஸ்லிமை முஸ்லிம் அல்லாதவனாக ஆக்க முடியாது. இல்லை, முஸ்லிமாக பிறந்தவனும், இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியாது. ரகசியமாக, விளம்பரம் இல்லாமல் செய்யலாம் அது வேறு விசயம். ஆனால், முறைப்படி செய்வதானால், சாவு தான் அவனுக்கு முடிவு[2]. பாருக்குக்கு அதுதான் நேர்ந்துள்ளது. ஆனால், எந்த செக்யூலார்வாதியும் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலை தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றம் செய்ததால் ஆத்திரமுற்று சிலர் கொலை செய்ததாக தெரியவருகிறது என்கிறது ஒரு இணைதள செய்தி. வாட்ஸ்அப் குரூப் நடத்தி வந்த பாரூக் அதில் கடவுள் மறுப்பு கொள்கையை தெரிவித்து வந்துள்ளார்[3]. தனது பேஸ்புக் பக்கத்திலும் மத மூட நம்பிக்கைகள், கடவுள் மறுப்பு விஷயங்களை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்[4]. அதாவது, ஒரு முஸ்லிம் கடவுள் இல்லை என்று சொல்லக் கூடாது, ஆனால், முஸ்லிம் கடவுள் இருக்கிறது, மற்ற கடவுள்கள் இல்லை என்று சொல்லல்லாம். இதுதான் இஸ்லாத்தின் செக்யூலரிஸவாதம். “லா இலா இல்லல்லஹ” என்பதற்கு, “அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்றுதான் விளக்கம் கொடுக்கிறார்கள். “இல்லை-இருக்கிறது” என்ற குழப்பத்தில் தோன்றிய இறையியலில், கடவுளின் தன்மை அவ்வாறு இருக்கிறது.

Farooq Coimbatore scrap dealer murdered - DM -17_03_2017_015_010

பாரூக்கின் வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகள் எதிர்க்கப்பட்டன, கண்டிக்கப் பட்டன: கடந்த மாதம் பிப்ரவரி, பாரூக்கின், நான்கு வயது குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது[5]. அதில், ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை எழுதி, அவரது குழந்தை பிடித்திருந்த பதாகையுடன், போட்டோ போடப்பட்டது. இதன்பின், சிலர் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. கருத்துரிமை என்று ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. யார்-யாரோ பேஸ்புக், டுவிட்டர் “குழாயடி” விவகாரங்களை னெல்லாம் செய்திகளாக்குகிறார்கள். ஆனால், இது யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், முஸ்லிம் பிரச்சினை, இஸ்லாம் விவகாரம், நமக்கேன் வம்பு என்றுதான் ஒதுங்கியது மட்டுமல்லாமல், விசயத்தையும் அமுக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தை ஒரு முஸ்லிம் கூட விமர்சிக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக இக்கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது[6]. இவைதான் அவரது உயிரை பறிக்க காரணமாக இருந்துவிட்டன என கூறப்படுகிறது. கருத்து சுந்திரத்திற்கு எதிராக கொலையாகவே இது பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சிலரை கோபப்படுத்தியுள்ளன. அந்த குரூப்தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம் என்று கோவை துணை கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். கோவையில் தாலிபானிசம் தனது முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளதா என அஞ்சியுள்ளனர் மக்கள். பாரூக் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, திகவினருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்[7]. இதனால், சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq murder - malaimalar - 18349983

[1] இதைப்பற்றியெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. தொழிலில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய வரியேய்த்த கள்ள வியாபார, கள்ளப் பணம் தாம், தீவிரவாத, சமூகவிரோத காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] “Takfeer” (Arabic: تكفير‎‎ takfīr) refers to the practice of excommunication, one Muslim declaring another Muslim as kafir (non-believer). The act which precipitates takfir is termed the mukaffir. An ill-founded takfir accusation is a major forbidden act.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதத்திற்கு எதிராக, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கருத்து கூறியதற்காக வாலிபர் கொலை! அதிர்ச்சியில் கோவை, By: Veera Kumar, Published: Saturday, March 18, 2017, 15:44 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-man-hacked-death-over-atheistic-fb-posts-277287.html

[5] தினமலர், தி.வி.., பிரமுகர் கொலை கோவையில் ஒருவன் சரண், பதிவு செய்த நாள். மார்ச்.18, 2017, 00.48.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1732501

[7] தினகரன், கோவையில் திராவிடர் விடுதலை கழகம், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல், Date: 2017-03-17 15:52:18

[8] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=287911

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!

DK banner below Periar statue

50 ஆண்டு திராவிட ஆட்சியும், தமிழக சமுகமும்: தமிழக நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த நிலையில் சமீபத்தில் நடந்து வரும் மதரீதியிலான ஆர்பாட்டங்கள், கருத்து போராட்டங்கள், அசாதாரணமான மந்திர-தந்திர வேலைகள் மற்றும் கொலைகள் முதலியன அதிர்ச்சியாகவும், கவனிக்கப்பட வேண்டியவைகளாகவும் இருக்கின்றன[1]. ஒரு பக்கம் 50 ஆண்டுகள் திராவிட ஆட்சி என்று விவாதம் நடந்தாலும், அது மறுபடியும், அரைகுறை சித்தாந்த சிதறல்களாகவே இருக்கின்றன. ஏனெனில், ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இருவர்களிடமும், நேர்மையான உண்மைகளை வைத்து விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை அல்லது உண்மைகள் தெரியவில்லை அல்லது மறைக்கிறார்கள் என்று தான் தெரிகிறது[2]. தமிழக மக்களின் மீது நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த கருத்துகள் தாக்கம் இருந்திருந்தால், அவற்றின் வெளிப்பாடுகள், சமூக செயல்பாடுகள், நடப்புகள் மற்றும் நிகழ்வுகள் என்று அனைவற்றையும் எடுத்துக் கொண்டு அலச வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் கொலை-கொள்ளை குற்றங்கள் அதிகமாகியுள்ளன; பெண்களின் மீதான குற்றங்களும் அதிகமாகியுள்ளன; திராவிட அரசியல் ஆட்சி ஊழலோடு சேர்ந்து பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த பின்னணியில் கோயம்புத்தூர் பாரூக்கின் கொலை அலச வேண்டியுள்ளது.

DVK poster demanding to arrest the murederers of Farook

கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை: முதலில் கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை, தொழில் போட்டி, முன்விரோதம் என்ற ரிதியில் தான் சிறியதாக செய்திகள் வந்தன. பிறகு, கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் தனது சொந்த மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வந்ததற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்[3] என்று மாறியது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும், நான்கு பேர் கொண்ட கும்பல் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சொல்லப்பட்டது[4]. இதனையடுத்து பரூக்கின் கைபேசி மற்றும் பேஸ்புக்கில் பதிவான தகவலின் அடிப்படையில், நான்கு காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்[5].  விசாரணைக்குப் பிறகு தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியும் என்று போலீஸார் கூறினர்[6].

Tikkathir - balancing news - 18-03-2017

கம்யூனிஸ்டுகளின் செக்யூலார் அல்லது கம்யூனல் ரீதியிலான செய்தி வெளியீடு: தீக்கதிர் செய்தி வித்தியாசமாக இருந்தது[7], “மத காரணங்களுக்காக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாரூக் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரணத்தின் போது நடந்த வன்முறையை தடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது,” என்று முடித்தது! அதாவது, அதற்கும்-இதற்கும் சம்பந்தம் உள்ளது போல தொக்கியுள்ளது[8]. கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல கலவரம் மூட்டும் வகையில் செய்தியை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது. சகிப்புத் தன்மை என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதா ராம் யச்சூரி, என். ராஜா போன்றோர் பேசியதை எல்லாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் எல்லோரும், இனி மேலாவது இதைப் பற்றி விவாதிப்பார்களா என்று பார்க்க வேண்டும். அவ்வளவு ஏன், விஜய், தினத்தந்தி மற்ற தொலைக் காட்சிகளாவது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வார்களா என்று பார்க்க வேண்டும்.

Muslim to atheist - Farooq murdered- DK Veeramanis ode

திக வீரமணியின் கண்டிப்பு (விடுதலையில் வெளியானது)[9]: “கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றிய கொள்கை வீரர் தோழர் பாரூக் அவர்களைத் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான படுகொலை! இதற்குக் காரணமான உண்மையான கொலையாளிகள், திட்ட மிடப்பட்ட இக்கொலையில் பங்கேற்றவர்கள், தூண்டிய சக்திகள் அனைவரையும் கோவை போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்கிடும் வகையில் புலன் விசாரணையும் மற்ற நடவடிக்கைகளும் அமைந்திடல் வேண்டும். மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும்தடுத்திடல் வேண்டும். மறைந்த அந்தத் தோழருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவர் சார்ந்த அமைப்புக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று சம்பிரதாய ரீதியில் முடித்துக் கொண்டார் கி. வீரமணி[10]. செய்தியும் நான்காம் பக்கம், வலது புறம், கீழே மூலையில் சிறியதாக வெளியிடப் பட்டிருந்தது. இதுதான், அவர்களது முஸ்லிம் அடிப்படைவாதத்தை எதிர்க்கும், எதிர்கொள்ளும், கண்டிக்கும் லட்சணம் என்று தெரிகிறது. இனி மற்றவர்களும் சம்பிராதயப் படி, அவரவர் இயக்கத்தின் / கட்சியின் சார்பில் இத்தகைய கணடனங்களை வெளியிடுவதை காணலாம்.

Tikkathir - balancing news - 19-03-2017

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டிஎன்றெல்லாம் முஸ்லிம் சொல்லமுடியாது: பெரியாரிஸப் பிஞ்சுகள், பழங்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பக்தர்கள் முதலியோரும் அடங்கிக் கிடக்கின்றனர். இக்கொலையைக் கண்டிக்கக் கூட பயந்து பேஸ்புக்கில் இருந்து பலர் விலகி விட்டனர். “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் சொன்னார் என்று, இனி எந்த முஸ்லிமும் பேச முடியாது. இல்லை, அங்கு கடவுள் என்றால், “அல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு பேச வேண்டும், இல்லை என்றால், பத்வா வரும், இம்மாதிரியான கொலை விழும். உண்மையான முஸ்லிம், திராவிட கட்சியில் கூட இருக்க முடியாது. “ஷிர்க்” பேசும் கொஷ்டிகள் இனி இவற்றையெல்லாம், நன்றாகவே கவனிப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், நாத்திகக் கட்சிகளில் முஸ்லிம்கள் இருப்பதுதான், மிகப்பெரிய “ஷிர்க்” ஆகும். அதற்காகத் தான், மொஹம்மது அலி ஜின்னாவே, “நான் முஸ்லிம் என்பதனால், முஸ்லிம்களின் நலனிற்காகத் தான் பாடுபட முடியும்”, என்று கூறி, அம்பேத்கர், பெரியார் முதலியோரை கழட்டி விட்டார் என்பதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இனி கம்யூனிஸ்டு மற்றும் திராவிட கட்சிகளிலிருந்து, எத்தனை நியாயவான்களான முஸ்லிம்கள் விலகுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-03-2017

Muslim to atheist - Farooq murdered- DKs ode to him

[1] சசிகலாவைக் காப்பாற்ற அகோரி பூஜை செய்தேன் என்று ஒருவன் சொன்னதை கவனிக்கலாம். அவனுக்கு முஸ்லிம் மனைவியாக இருப்பதும் கவனிக்கத் தக்கது. விவரங்களுக்கு என்னுடைய பிளாக்குகளைப் பார்க்கவும்.

[2] சமீபத்தைய திராவிட மற்றும் இந்துத்துவ வாதங்களை விகடன் முதலியவற்றில் காணலாம்.

[3] தினத்தந்தி, திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வாலிபர் கோர்ட்டில் சரண், மார்ச் 18, 04:30 AM.

[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/03/18025737/Dravida-Kazhagam-leaders-murder-freedThe-young-men.vpf

[5] நியூஸ்7.டிவி, மதத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்பியதற்காக இளைஞர் கொலை!, March 18, 2017.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/18/3/2017/youth-murdered-spreading-views-against-religion

[7] தீக்கதிர், கோவை: திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் படுகொலை, மார்ச்.17, 2017

[8] https://theekkathir.in/2017/03/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/

[9] விடுதலை, கோவை தோழர் பாரூக் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம்!, சனி, 18 மார்ச் 2017 16:42

[10] http://viduthalai.in/e-paper/139820.html

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – இஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுஇஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

khilafat-e-rashida-is-the-only-solution

ஐசிஸ் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்ட சென்னைவாசி:  இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முயற்சியை முறியடித்து, தீவிரவாதிகள் ஆறு பேரை கேரளாவில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவனுக்கு தமிழகத்துடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிறகு, சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது[1].

six-arrested-02-10-201601-10-2016 அன்று பிடிபட்ட தீவிரவாதிகள்[2]: கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கனகமலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்[3].  முதலில் மலைமீது ஐவர் கூடியிருந்தபோது பிடிபட்டனர், பிறகு இன்னொருவன் பிடிபட்டான்.

எண் பிடிபட்டவன் பெயர், வயது தந்தை முகவரி
1 மன்சித் / உமர் அல் ஹிந்தி / முத்துக (Manseed alias Omar al Hindi 30) மஹ்மூத் மதீனா மஹால், அனியரம், கன்னூர் மாவட்டம், கேரளா.
2 அபு பஷீர் / ரஸீத் / பச்சா / தளபதி / அமீர்  (Abu Basheer 29) கோட்டைகுடிர், மஸ்ஜித் தெரு, ஜி.எம். நகர், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
3 ஸ்வாலிஹ் மொஹமத் டி / யூசுப் / அபு ஹஸ்னா (26) தாஹா மொஹமது அம்பலத், வெங்கநல்லூர், செலக்கர பஞ்சாயத்து, திரிசூர், கேரளா. இப்பொழுது சென்னையில் வசித்து வருகிறான்.
4 பி. சப்வான் (30) ஹம்ஜா பூக்கட்டில்இல்லம், பொன்முன்டம் பி.ஓ, திரூர், மலப்பப்புரம் மாவட்டம், கேரளா.
5 என். கே. ஜாஸிம் (25) அப்துல்லா நங்கீலம் கன்டி, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.
6 ராம்ஷெத் நகீலன் கண்டியல் / அம்மு (Ramshad Nageelan Kandiyil 24) அஸ்ரப் நங்கீலன் கன்டியல் இல்லம், குட்டியாடி பி.ஓ, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.

 ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்[4].  இவர்கள் 24-30 வயதுடையவர்கள். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக செய்யும் வேலைகளைத் தடுக்கும் சட்டம் முதலியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவிலிருந்து 21 பேர் காணவில்லை என்றும், அவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்ஸில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது[6]. இவர்களால் அல்லது இவர்களின் கூட்டாளிகளின் மூலம் இரண்டு கேரள நீதிபதிகளுக்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது[7]. தென்னிந்தியா முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இவ்விவகாரங்கள் வெளிவந்துள்ளன[8].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஅன்ஸர்உல்காலிபா கேரளா” – “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்: இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்கு சென்று, ஆனால், இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லாமல், அயல்நாடுகளுடன் விசுவாசம் கொண்டு, ஜிஹாதி மனப்பாங்குடன், தீவிரவாதத்தை மேற்கொள்வது எப்படி என்பது புதிராகத்தான் உள்ளது. உமர் அல் ஹிந்தி என்பவன் இக்கூட்டத்தின் தலைவன். இவன் “அன்ஸர்-உல்-காலிபா கேரளா” என்ற இயக்கத்தை உருவாக்கினான். “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்” [”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS)] என்று பொருளாகும். இவ்வாறு மனப்பாங்கை ஏற்படுத்துவது விஞ்ஞானம், தொழிற்நுட்பம் படிப்பதால் அல்ல, மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பதால் தான் உண்டாகிறது. என்.கே. ஜாஸிம் என்பவன் இஞ்சினியர், இவன் சிரிய அரசு ஐஎஸ்ஸுக்கு எதிராக நடத்தும் நடவடிக்கைக்களை எதிர்த்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் போட்டு வந்தான்[9]. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில், முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கவர்ந்து, தீவிரவாதத்தில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான். முஸ்லிம் அல்லாத இளைஞர்களைக் கூட “எல்லாம் கிடைக்கும்” என்ற ரீதியில் தூண்டில் போடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் போன்று நண்பர்களாகி, திசைத்திருப்பும் யுக்தியும் கையாளப்பட்டது. இவையெல்லாமே, பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் செய்யும் காரியங்கள் அல்ல. அவரவர் வீடுகளில் சோதனையிட்டபோது, ஆவணங்கள், மிண்ணனு கருவிகள் முதலியன கைப்பற்றப்பட்டன.

tamilnadu-jihad-hi-tech-jihad-with-isisபி., பி.டெக் என்று படித்த இளைஞர்கள் தாம் இந்த தீவிரவாத அமைப்புகளில் சேருகிறார்கள்: எம். கே. ஜாசிம் (24) ஒரு எஞ்சினியராக இருந்தாலும், ஜாகிர் நாயக்கின் போதனையால் கவரப்பட்டு, பாலஸ்டைன், சிரியா போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கொலையுண்ட காட்சிகளை பேஸ்புக்கில் தொடர்ந்து போட்டு, பழிவாங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தான். தவிர தான் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றில் விருப்பம் உள்ளவன் என்றும் காட்டிக் கொண்டான். கன்னூரில், ஒரு மலையுச்சியில், வெடிகுண்டுகளை தயாரித்து, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டான். இருப்பினும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. செப்டம்பர் கடைசி வாரத்தில் மன்ஸீத் கட்டாரிலிருந்து கன்னூருக்கு வந்தான். அபு பஸீர் அல்லது ரஸீத் (29) ஒரு மெக்கானிக் ஆவான். டி. ஸ்வாலி மொஹம்மது (26) சென்னையில், கிளப் மஹிந்தராவில் வேலை செய்து வந்தான். பி. சப்வான் (30), ஒரு நாளிதழில், வடிவமைப்பாளனாக வேலை செய்தான். என். கே. ஜாஸிம் (25) மற்றும் ரம்ஸீத் (24) மைத்துனர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, யாருடைய உத்தரவின் மீது வேலை செய்து வந்தார்கள். அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்கள், சமூக ஊடக விவரங்கள் மற்ற மின்னணு சாதனங்கள் மூலம், இவ்விவரங்களை என்.ஐ.ஏ பெற்றுள்ளது.

© வேதபிரகாஷ்

13-10-2016

subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

[1] தினமணி, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற .எஸ். பயங்கரவாதி: என்... விசாரணையில் கிடைத்த தகவல், By DIN  |   Last Updated on : 04th October 2016 10:34 AM.

[2] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[3] NDTV, 6 Persons With Suspected ISIS links Arrested In Kerala, Updated: October 03, 2016 07:55 IST.

[4] தினகரன், .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை, Date: 2016-10-05@ 01:19:28

[5] http://indiatoday.intoday.in/story/kerala-nia-is-terrorism/1/778722.html

[6] http://www.ndtv.com/kerala-news/6-persons-with-suspected-isis-links-arrested-in-kerala-1469311

[7]  Intelligence agencies in Kerala have alerted the State government of a threat from an Islamic State-linked module to two High Court judges and some politicians, close on the heels of the National Investigation Agency (NIA) arresting six persons of the terror module from the State.

The Hindu, Kerala warned of IS threat to 2 HC judges, Thiruvananthapuram, October.5, 2016; Updated: October 5, 2016 01:20 IST.

[8] NIA teams along with the Kerala Police, the Delhi police and the Telangana police had launched surveillance on the movement of the accused involved in the conspiracy and, during searches, the six were arrested from Kozhikode and Kannur districts.

http://www.thehindu.com/news/national/kerala/kerala-warned-of-is-threat-to-2-hc-judges/article9185038.ece

[9] The accused, who were radicalised online, had formed a group called ”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS) on Telegram — a web-based application platform, a senior Home Ministry official told The Hindu. One of the accused, Jasim N.K. (24) — an engineer and the only one with an active Facebook account — was following Islamic preacher Zakir Naik and posted several messages against killings in Syria by the Assad regime and also about children and women killed in Palestine. His social media account also said that he was a keen follower of football and cricket and he last posted a message on May 3.

http://www.thehindu.com/news/national/isinspired-group-was-on-radar-for-4-months/article9181053.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறைந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!

மே 12, 2013

சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!

பெங்களூருகுண்டுவெடிப்புசம்பந்தமாகதமிழகத்தவர் கேரளாவில் கைது: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்[1]. சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் என்ற இருவர் கேச்சேரியில் / கெச்சேரியில்[2] உள்ள ஷபீரின் உறவினரின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர்[3]. கீழக்குமுரி, பத்திக்கர என்ற இடத்தில் உள்ள இவ்வீட்டில் மறைந்திருக்கும் விவரம் கிடைத்தது[4].

மொபைல்போன்சிக்னல்களை, தொடர்ந்துகண்காணித்துகைது: இவர்களின் மொபைல் போன் சிக்னல்களை, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார்[5], நேற்று முன்தினம் கைது செய்தனர்[6]. சாதாரணமான ஆட்களே சிம்கார்டுகளை அழித்துவிடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர் எனும்போது, இத்தகைய கைதேர்ந்தவர் எப்படி அதே நம்பர்களை வைத்திருப்பர் என்று தெரியவில்லை.

மொத்தம்கைது 13, ஆனால், யாரால்குண்டுவெடிக்கப்பட்டதுஎன்பதுஇன்னும்சொல்லப்படவில்லை: கோயம்புத்தூர் உக்கடத்தைச் சேர்ந்த இவர்கள் குன்னங்குளத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர்[7]. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸார்அதிகம்அளவில்காயமடைந்ததால்தொடர்விசாரணையாஅல்லதுவேறுவிஷயம்இருக்கிறதா: பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், ஏப்ரல்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழகம் மற்றும் கேரள போலீசாரும் உதவி செய்து வருகின்றனர்.

மாநிலம்மாறிகுற்றம்செய்தால்தப்பித்துக்கொள்ளவாய்ப்புஉள்ளதா: சம்பந்தப் பட்டவர்கள் மூன்று மாநிலங்களிலும் மாறிமாறி இருந்து கொண்டு வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் எல்லோருமே முன்னமே யாதாவது ஒரு வழக்கில் சிக்கியுள்ளவர்கள், சிலர் தண்டனைப் பெற்ற்வர்கள், அல்-உம்மா, சிமி போன்ற தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிகின்றது.

© வேதபிரகாஷ்

13-05-2013


[4] The investigation team team took them into custody from the house of a relative of Shabeer at Kizhakkumuri, Pathikkara.

[5] Thrissur: Two persons hailing from Coimbatore have been arrested for their suspected involvement in the April 17 bomb blast in front of the BJP office in Bangalore, the police said on Sunday. Sulfikar Ali, 22, and Shabeer, 24, were arrested from the house of Shabeer’s relative at Kecheri near Kunnamkulam in the district on Sunday, they said. The arrest was made by a team of police from Karnataka and Tamil Nadu after following the duo’s mobile phone signals, the police said. Following the arrest of Sulfikar and Shabeer, the total number of arrests in connection with the blasts, that left 17 persons injured, including 11 policemen, has gone up to 13.

சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!

ஓகஸ்ட் 22, 2010

சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!

மற்றுமொரு கேரள தீவிரவாதி தமிழகத்தில் கைது[1]: கேரள மாநிலம் மூவாட்டுபுழா என்ற இடத்தில் கல்லூரி விரைவுரையாளரின் கையை தாலிபான் மாதிரியை பின்பற்றி வெட்டிய குழுவினரில் ஒருவரை – சம்சுதீனை காவல் துறையினர் இன்று (ஆக.20) கைது செய்துள்ளனர்[2]. மொத்தம் 49 பேர் குற்றாஞ்சாட்டப்பட்டு, அதில் 39 பேர் காணாமல் இருப்பதால், போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்கள்[3]. ஏற்கெனெவே, சம்சுதீன் பி.எஃப்.ஐ. எற்பாடு குற்றங்களில் ஈடுபட்டுள்ளான். 2001ல் அலுவாவில் பினானிபுரம் என்ற இடத்தில், கலாதாரன் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரைக் கொலை செய்தக் குற்றத்திற்காக, மற்றொருவருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்சுதீன்-உக்கடத்தில்-கைது
சம்சுதீன்-உக்கடம்-கோவையில்-கைது

ஜோஸப் கையை வெட்டிய கோஷ்டியில் ஒருவன்: தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சம்சுதீன் என்கிற அரக்கபாடி சாம்சுவை கோயம்புத்தூர் புறநகர்  பகுதியான உக்கடத்தில் நேற்றிரவு (ஆக.19) கைது செய்து இன்று மூவாட்டுபுழாவுக்கு கொண்டு வந்ததாக காவல் துறை கண்காணிப்பாளர் எஸ் பி முனிராஜன் தெரிவித்தார். கை வெட்டப்பட்ட டி ஜே ஜோசஃப் என்ற இந்த விரிவுரையாளர் கேள்வித் தாள் ஒன்றை தயாரிக்கும்போது, முஹமது நபி பற்றி தரக்குறைவான குறிப்புகளை எழுதினார் கூறி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்று அவரது வலது கையை சென்ற மாதம் 4ஆம் தேதி வெட்டியது.

மற்றவர்களும்கைது செய்யப்படலாம்: செய்யப்பட்டவரை விசாரித்ததில், தாம் இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்ததை ஒப்புக் கொண்ட சாம்சு, இதர ஆறு கூட்டாளிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல் துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக இந்திய மக்கள் முன்னணி தீவிரவாதிகள் 24 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிபதி ஹேமா தள்ளுபடி செய்தார்.

தமிழக-போலீஸ்-தப்பவிட்ட-கேரளக்குற்றவாளி
தமிழக-போலீஸ்-தப்பவிட்ட-கேரளக்குற்றவாளி


சென்ற வாரத்தில், கேரள போலீஸார், தமிழகத்தில், ஜோஸப்பின் கையை வெட்டியக் குற்றாவாளிகள்  பதுங்கி இருப்பதாக, ரகசிய செய்தி அனுப்பினர்.நியாஸ், என்ற குற்றவாளி சபரி எக்ஸ்பிரஸ்ஸில் கோயம்புத்தூர் வழியாக செல்வதாக செய்தி அனுப்பினர்.

ஆனால், தமிழக போலீஸாரோ, அவனுடைய புகைப்படம் இல்லாமல், அவனை கண்டு பிடிக்க முடியவில்லை என்று தப்பவிட்டு விட்டனர்.

இருப்பினும், அந்த ரெயில்  பாலக்காடு ஸ்டேஷனை அடைந்தவுடன், கேரள போலீஸார் பிடித்துவிட்டனர்.

இப்படி, தொடர்ந்து, “பாப்புலர் ஃபிரன் ட் ஆஃப் இன்டியா ஆட்கள்”, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள், தீவிரவாதிகள்…………….என தொடர்ந்து, தமிழகத்தில் வந்து மறைந்து தங்குவது, பிறகு செல்லும்போது அல்லது செய்தி வந்து அவைகள் கைது செய்யப்படுவது, தமிழகத்தில் அவர்கள் சுலபமாக இருக்கமுடியும் என்ற சூழல் இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, உள்ளூர் முஸ்லீம்களுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் தாராளமாகவே உதவுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

முன்பு, ஒருவன் நாகூரில் கைது செய்யப்பட்டான்.

முன்பு கூட, பங்களாதேஷத்திலிருந்து வந்து தங்கிய ஒரு பெண் தீவிரவாதி, வேலூரில், ஒரு கல்லூரி ஆசிரியர் உதவியுடனே, வீடு எடுத்துத் தங்கியிருந்தாள்.  அவலை சந்திக்க அவலுடைய காதலன் முதலியோர் வந்து சென்றுள்ளனர்.

கேரள போலீஸாரே, முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்து வந்தாலும், இப்பொழுது, பிரச்சினை பெரியாதாகி விட்டப் பிறகு, அவர்களைப் பிடிக்க போலீஸார், வேமாக செயல்படுவது தெரிகிறது.

என்.ஐ.ஏ வின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, ஓரளவிற்கு, போலீஸார், நடவடிக்கை எடுப்பது தெரிகின்றது.

[1] சென்ற மாதம், நாகூரில் ஒரு கேரள தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.

[2] http://www.dailypioneer.com/277395/First-crucial-arrest-in-prof-attack-case.html

[3] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/49-accused-in-attack-case-30-absconding-/articleshow/6325935.cms