கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?
கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?
பாரிஸ் தொடர்புகளை ஒப்புக் கொண்ட சுபஹனி மொஹிதீன்: இஸ்லாமிய அரசு போராளி, தமிழகத்தைச் சேர்ந்தவன்[1], அவனுக்கு பாரிஸ் குண்டுவெடிப்பாளர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன என்று இப்பொழுது (அக்டோபர் 23 2016) வாக்கில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[2]. 2015 நவம்பரில் அவர்களை சந்தித்தப் பிறகு, இந்தியாவுக்கு வந்ததாகவும், அப்பொழுது ஊடகங்கள் மூலம், பாரிஸ் தாக்குதல் பற்றி அறிந்தபோது, அவர்களுடைய சந்திப்புகளை நினைவு கூர்ந்ததாகவும் சொன்னான்[3]. பாரிஸ் குண்டுவெடிப்பில் மூன்று குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் என்று ஈடுபட்டு குண்டுகளை வெடித்தும், ஏ.கே.47 துப்பாக்கிகளால் சுட்டும் 130 பேரைக் கொன்றுள்ளனர். இவர்களுக்கு – இந்த தீவிரவாதிகளுக்கு புனைப்பெயர்கள் தான் கொடுக்கப் பட்டன. மொஹம்மது அல்-பிரான்ஸிசி, அப்சலாம் அல்-பிரான்ஸிசி, என்று தான் அழைக்கப்பட்டனர்[4]. இதெல்லாம் “ஸ்லீப்பர் செல்” சித்தாந்தத்தின் படி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற முறையில் உருவாக்கப் பட்டதா அல்லது போலீஸாரிடம், தீவிரவாத தடுப்பு-கண்காணிப்பு குழுக்களிடம் மாட்டிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ள யுக்தியாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட பெயர்கள் வெளியிடப்பட்டன:
- Abdelhamid Abaaoud [main plotter] – அபதல்ஹமீது அபௌத்
- Brahim Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – இப்ராஹிம் அப்சலம் [1ன் சகோதரன்]
- Salah Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – சலஹ் அப்துல் ரஸாக் [1ன் சகோதரன்]
- Aleed Abdel-Razzak [killed in bomb blast, but not a terrorist] – அலீத் அப்தல் ரஸாக் [பாரீஸ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவன், ஆனால், தீவிரவாதி கிடையாது]
- Omar Ismail Mostefei – ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.
பாரிஸ் குண்டுவெடிப்பு தலைவன் தான் சுபஹனி மொஹிதீனின் தலைவன் ஆவான்: NIA மற்றும் பிரெஞ்சு தீவிரவாத கண்காணிப்புக் குழு, இவ்வழக்கை ஆராய்ந்து வரும் நிலையில், NIA அவர்களை தொடர்பு கொண்டபோது, பிரான்ஸில் தாக்குதல் நடந்த போது, அப்பகுதிகளில் சுபஹனி மொஹிதீன் இருந்ததாக சொல்கிறார்கள்[5]. மேலும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவன் தான் தன்னுடைய தலைவன் என்றும் கூறிக் கொண்டான்[6]. “தி ஹிந்து” “குண்டுவெடிப்பாளர்கள்” என்று பன்மையில் குறிப்பிடுகின்றது[7]. அதாவது மேற்குறிப்பிடப் பட்ட மூவரில் ஒருவன் தலைவனா அல்லது மூவருமே தலைவனா என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்[8]. மேலும் குண்டுவெடிப்பிலும் இவனுக்கு பங்கு உள்ளாதா இல்லையா போன்றா கேள்விகளும் எழுகின்றன. அப்படியென்றால், அவன் ஆணையின் படி அவன் இந்தியாவுக்குத் திரும்பினானா, அவனுக்கு என்ன திட்டம் கொடுக்கப்பட்டது, போன்ற கேள்விகள் எழுகின்றன. பாரிஸ் குண்டுவெடிப்பு நடந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்தவனுக்கும் அந்த நிகழ்சிக்கும் தொடர்புகள் இருந்தன, தமிழகத்தைச் செர்ர்ந்த ஒருவன் அதில் இறந்து விட்டான், என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.
சுபஹனி மொஹிதீன் பாரிஸில் இருந்தானா, இல்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்பதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 2015ல் பாரிஸில் குண்டு வைத்தவர்களை இவனுக்குத் தெரிந்தது, அல்லது இவனே அப்பகுதிகளில் இருந்தது போன்றவையும் வியப்பாக இருக்கின்றன. ஆகவே, இவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததே ஒரு நாடகம் போன்றுள்ளது. போரில் தான் கண்ட கொடூரத்தைக் கண்டு பயந்து திரும்பி வந்தான் என்றால், அவன் தொடர்ந்தி, ஐசிஸ் உடன் தொடர்புகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. போலி பெயர், போலி பாஸ்போர்ட், தமிழக போலீஸாருக்கே, அவன் சிரியாவுக்குச் சென்றுத் திரும்பியது தெரியாது போன்ற விசயங்கள், ஒருவேளை ஆள்-மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி, எமாற்றி வருகின்றனர். ஆனால், அவன் தொடர்புகள் வைத்துக் கொண்டு ஆள்சேர்த்தல், சதிதிட்டம் போடுதல் முதலியவற்றை செய்துள்ளான் என்பதிலிருந்தே அவனது பயங்காவாத-தீவிரவாத-குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது.
சுபஹனி மொஹிதீனை பாரிஸ் போலீஸார் விசாரிப்பார்கள்: 2015 நவம்பரில் இந்தியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும், மொய்தீன், பாரிஸ் தாக்குதல் தொடர்பான தகவலை செய்தியின் மூலம் தெரிந்ததாக கூறியுள்ள நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு இருந்த பகுதியில் பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிகள் உடனான சந்திப்பைப்பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளாதால், இதுதொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவு பிரான்ஸ் போலீசிடம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடமும் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பெற்றபின்னர் பிரான்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் உள்ளடங்கிய விசாரணை நடைபெற்று வருகிறது, ஐ.எஸ். கைவசம் உள்ள பகுதியில் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட நேரத்தில் மொகதீனும் அங்குதான் இருந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பரில் 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 135-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
© வேதபிரகாஷ்
26-10-2016
[1] Indian Express, ‘Islamic State recruit’ from Tamil Nadu knew Paris attackers tells sleuths, By: Express News Service | New Delhi | Updated: October 24, 2016 6:22 am
[2] http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/
[3] http://www.dnaindia.com/india/report-indian-isis-operative-subahani-haja-moideen-knew-paris-bombing-accused-2266706
[4] “In Mosul, he was put in a group which also had these two individuals. He knew them only by their pseudonyms which carried the suffix al-Francisi. However, when he was shown the photographs of the attackers, he recognised them,” an NIA officer said.
[5] The NIA has informed the French security officials and contacted its Embassy here, the sources said, adding this was done in case it would help in their investigation. They said that French officials could question him as well after getting the requisite court order. According to the multi-country investigation into the French terror strikes, the accused involved in the gruesome killings were in IS-controlled areas at the same time Moideen was there.
The Hindu, ‘Indian ISIS operative knew Paris bombers, NEW DELHI, October 24, 2016 Updated: October 24, 2016 01:36 IST
[6] The Times of India, Paris attacker was my leader: IS recruit from India, Neeraj Chauhan| TNN | Updated: Oct 24, 2016, 01:38 IST
[7] http://www.thehindu.com/news/national/indian-is-operative-knew-paris-bombers/article9258867.ece
[8] http://timesofindia.indiatimes.com/india/Paris-attacker-was-my-leader-IS-recruit-from-India/articleshow/55020602.cms
Explore posts in the same categories: அடிப்படைவாதம், அபதல்ஹமீது அபௌத், அலீத் அப்தல் ரஸாக், அழிவு, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இப்ராஹிம் அப்சலம், இராக், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஒமர் இஸ்மயில் மொஸ்தபி., குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சலஹ் அப்துல் ரஸாக், சூழ்ச்சி, சென்னை, செல், செல்போன், பாரிஸ், முகமது கனி உஸ்மான், Uncategorizedகுறிச்சொற்கள்: அபதல்ஹமீது அபௌத், அலீத் அப்தல் ரஸாக், இப்ராஹிம் அப்சலம், இஸ்தான்புல், இஸ்லாம், ஒமர் இஸ்மயில் மொஸ்தபி., சலஹ் அப்துல் ரஸாக், சிரியா, சுபஹனி மொய்தீன், சுபஹனி மொஹித்தீன், சென்னை, துருக்கி, பாரிஸ், முகமது கனி உஸ்மான், மோசுல், ஹாஜா, ஹாஜா மொய்தீன், ஹைதராபாத்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்