செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

Explore posts in the same categories: ஃபத்வா, அச்சம், அடையாளம், ஆடியோ, கொக்கோகப் பேச்சு, சரசமான பேச்சு, சரசம், செக்ஸ், செக்ஸ் தொல்லை, செக்ஸ்-ஜிஹாத், ஜெயினுல் ஆபிதீன், ஜைனுல் ஆபிதீன், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத், தவ்ஹீத் ஜமாஅத், தௌவீத் ஜமாத், தௌஹித் ஜமாத், தௌஹீத், தௌஹீத் ஜமாத், பெண்ணியம், பெண்மை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: