இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!
இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!
மொஹம்மது கமருஸ்ஸாமன் (Muhammad Kamaruzzaman[1]) என்ற ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர், ஒன்பது குற்றங்களுக்காக, மரண தண்டனைக்குட் பட்டிருக்கிறார்[2]. நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியபோது, பாதுகாப்புப் படை மற்றும் கலவரம் ஒடுக்கும் படையினர் தயாராக இருந்தார்கள்[3]. பங்களாதேச விடுதலைப் போர் 1971ல் நடந்தது. அப்பொழுது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்து கொண்டு, ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு அப்பாவி மக்கள் ஐந்து லட்சம் பேர்களைக் கொன்றுக் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அக்கூட்டத்தினர் பல பெண்களை கற்பழித்துக் கொன்றுள்ளனர். இந்த போர் குற்றங்களுக்காக இவருக்கு மண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது[4]. உலக நாடுகள் இதை ஆதரிக்கின்றன[5]. இவ்வாறு தண்டனை அளிக்கப்படும் போதெல்லாம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெருக்களில் வந்து கலவரங்களை ஏற்படுத்தி[6], இந்துக்களை தாக்கும் போக்கில் இருந்து வருகிறார்கள். இதனால், மக்கள், குறிப்பாக இந்துக்கள் இதன் பின்விளைவுகள் பற்றி அஞ்சுகிறார்கள்[7].
சென்ற மார்ச் மாதம், டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[8] விதிக்கப்பட்டது[9]. அதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:
- 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[10] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
- முஸ்லீம்களின் வெறியாட்டம் பங்களாதேசத்தில்இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[11].
- “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[12].
© வேதபிரகாஷ்
11-05-2013
[1] Kamaruzzaman, 61, was convicted in a packed courtroom on five counts of mass killings, rape, torture and kidnapping, Attorney General Mahbubey Alam said.
[6] https://islamindia.wordpress.com/2013/04/07/what-the-procession-of-fundamentalists-prove-in-bangladesh/
[7] http://www.independent.co.uk/news/world/asia/backlash-feared-as-bangladesh-sentences-islamic-politician-muhammad-kamaruzzaman-to-death-8608826.html
[9] https://islamindia.wordpress.com/2013/03/01/bangladesh-islamic-party-leader-sentenced-to-death-for-war-crimes/
[10] https://islamindia.wordpress.com/2013/03/03/1971-repeates-in-2013-in-targeting-hindus-in-bangladesh-riots-by-the-jihadis/
குறிச்சொற்கள்: பங்க பந்து, பங்களாதேசம், பங்காபந்து, புனிதப்போர், போர் குற்றவாளி, முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் பெண்கள், முஸ்லீம்கள், மொஹம்மது கமருஸ்ஸாமன்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜூன் 4, 2013 இல் 5:07 முப
தீவிரவாதத்தை இப்படி வளர்த்துக் கொண்டே போனால் யாருக்கும் நன்மை இல்லை, அமைதி இல்லை, வாழ்வு இல்லை.
முதலில், முஸ்லிம்கள் தமது தந்தைகள், மகன்கள், அண்ணன்கள், சகோதரர்கள், மாமாக்கள், சித்தாப்பா-பெரியப்பாக்கள், மச்சான்-சகலைகள் மற்றவர்கள் தீவிரவாதம், பயங்கரவாதம் செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மற்ற முஸ்லிம்களும் அவ்வாறான செயல்களை செய்து வந்தால் உதவக் கூடாது, இடம் கொடுக்கக் கூடாது.
முஸ்லிம், முஸ்லிமுக்கு உதவ வேண்டும், ஜிஹாதிற்குத் துணை போக வேண்டும், ஷஹீது ஆக ஆவண செய்ய வேண்டும் என்று அடிப்படைவாதம், திரிபுவாதம் போன்ற சித்தாந்தங்களினால் வெறிபிடித்தது போல அல்லது மூளைசலவை செய்த நிலையில் வற்புறுத்தினாலும் கண்டிக்க வேண்டும், உதவக்கூடாது.
மீறி ஒருவேளை அவர்கள் அவ்வாறான காரியங்களை செய்து வருவது தெரியப்பட்டால், அறியப்பட்டால், உடனே போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் முஸ்லிம் சமுதாயம் உருப்படும்.
இல்லையென்றால், ஆப்கானிஸ்தான் இல்லை, பாகிஸ்தான் இல்லை………….. உலகம் முழுவதையும் அவர்கள் சீரழித்து விடுவார்கள்.