Posted tagged ‘இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்’

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பிப்ரவரி 7, 2021

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[1], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[2]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும். பெரியார் என்கின்ற ஈவேராவின் கதை அப்படியென்றால், காயிதே மில்லத் என்கின்ற முகமது இஸ்மாயில் கதை (5.6.1896 – 5.4.1972) இப்படியுள்ளது.

மணிச்சுரரில் வெளியான பெரியாரின் கையறுகதறிய நிலை: 06-0-2021 தேதியிட்ட “மணிச்சுடர்” என்கின்ற முஸ்லிம் நாளிதழ், ஈவேரா மற்றும் முகமது இஸ்மாவிலைப் பற்றி, இவ்வாறு, வெளியிட்டுள்ளது[3]: “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் மரியாதையும் மாறாத பேரன்பும் கொண்டிருந்தனர். குறிப்பாக காயிதே மில்லத் அவர்களை தந்தை பெரியார் அவர்களும் , மூதறிஞர் ராஜாஜி அவர்களும் தம்பி என்றும், பெருந்தலைவர் காமராஜர் அண்ணன் என்றும், அன்பொழுக உறவு முறை கூறி அழைக்கும் அளவுக்கு நெருக்கமான நல்லுறவு அவர்களிடையே நிலவியது.


“1972
ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது.தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.


திராவிட இயக்கங்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே நிலவி வந்த பிரிக்க முடியாத நல்லுறவை தந்தை பெரியார் நன்கு உணர்ந்தவர். காயிதே மில்லத்தையும், இஸ்லாமிய சமுதாயத்தையும் தன் நெஞ்சத்தில் ஏந்தி நேசித்தவர் தந்தை பெரியார். திராவிட இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையேயான இந்த பேரன்பும் நல்லுறவும் இன்றளவும் இம்மியளவு கூட குன்றாமல் குறையாமல் வாழையடி வாழையாகத் தொடர்கிறது”. காயிதே மில்லத் புராணம், அவ்வப்போது, ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன[4]. இதில் எந்த விதிவிலக்கோ, ஆராய்ச்சியோ இல்லை, அப்படியே, இருப்பவற்றை, திரும்ப-திரும்ப வெளியிடுவது வழக்கமாக உள்ளது[5].

 அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முயன்றதை முகமது இஸ்மாயில் எதிர்த்தது[6]: இதே போல, முகமது இஸ்மாயில் பற்றி, முகமதியர் எழுதுவது தான் உள்ளது. அவை எவ்வாறு 100% ஆராய்ச்சிக்கு ஏற்றது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு – புதுமடம் ஜாபர் அலி என்பவர் காயிதே மில்லத் பற்றி, போற்றி எழுதியதிலிருந்து தெரியும் விசயங்கள் கொடுக்கப்படுகின்றன[7]. “……..காயிதே மில்லத்என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்என்று இதற்குப் பொருள். 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார். அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், ‘ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமேஎன்று யோசனை தெரிவித்தார்.

முகமதிய கல்லூரிகள் தமிழகத்தில் உருவானது[8]: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மாமலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி,” என்று எழுதியது.

1972ல் எம்ஜிஆர் மூன்று கிமீ நடந்து, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார். தேர்தலின்போது அவரது இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார் அண்ணா. எந்த முகமதியன் கல்லூரியை அரசு மகளிர் கல்லூரியாக மாற்ற காயிதே மில்லத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார். காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்,” என்று எழுதியது.

© வேதபிரகாஷ்

07-02-2021


[1]  பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[2]  ம.வென்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள்.

[3]  மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[4] தினமலர், முகம்மது இஸ்மாயில் () காயிதே மில்லத் 5.6.1896 – 5.4.1972, திருநெல்வேலி, பதிவு செய்த நாள்: 04ஜூன் 2018 00:00.

[5] https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43039&cat=1360

[6] தமிழ்.இந்து, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, Published : 05 Jun 2017 09:08 AM; Last Updated : 06 Jun 2017 10:18 AM

https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

[7] புதுமடம் ஜாபர் அலி, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

[8] https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் லீக்கின் இரட்டை வேடங்கள், யுக்திகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (2)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம் லீக்கின் இரட்டை வேடங்கள், யுக்திகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (2)

ஸ்டாலிம் முஸ்லிம் லீக் மாநாட்டில் 2016

பிளவு பட்டுள்ள முஸ்லிம் லீக் போடும் இரட்டை வேடங்கள்: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் மார்ச்.20 அன்று தெரிவித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது”, என்றும்[3], அவர்கள், பின்வருமாறு, என்றும் சொல்லப்பட்டுள்ளது[4]:

  1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (மாநிலத் தலைவர்)
  2. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் (படத்தில் இருப்பவர்)
  3. எம்.எஸ்.ஏ. ஷாஜகான்,
  4. எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,)
  5. எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.,)
  6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்.

இது தேவையில்லாத விசயம் என்றே தெரிகிறது. பிப்ரவரி 8ம் தேதியன்றே திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காதர் மைதீன் கோரிக்கை விடுத்தது நோக்கத்தது[5]. ஆக முன்னமே தீர்மானித்து திமுகவிடம் பேரம் பேச்சியது தெரிய வருகிறது.

 

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014.. ஊடக விளம்பரம்.

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014.. ஊடக விளம்பரம்.

முஸ்லிம் மாநாடுகளில் ஸ்டாலின் கலந்து கொண்டது (மார்ச்.10, 2016): தேர்தலின் போது, முஸ்லிம்கள் தங்களது மாநாடுகளை அரசியல் பேரம் செய்ய உபயோகப்படுத்திக் கொள்வது, ஈவேரா காலத்திலிருந்து இருந்து வருகிறது. அப்பொழுது, தமிழகத்தில் தலைமை ஹாஜி அறிவிக்கும் நாளை பின்பற்றாமல் முஸ்லிம் பண்டிகையை விருப்பம்போல் கொண்டாடுகின்றனர். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அவர்களது பண்டிகையை ஒரே தினத்தில் தான் கொண்டாடுகின்றனர். ஆனால், போட்டி ஜமாத்துக்களை வைத்துக் கொண்டு மதத்துக்கு எதிராகவும், முஸ்லிம் அமைப்புகளை பிளவுபடுத்துகிற வகையிலும் செயல்படுகின்றனர். என்றெல்லாம் விவாதிக்கப்பாடன[6]. இதை ஒருங்கிணைக்கவே ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. ஆனால், முஸ்லிம் அமைப்புகளில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. சமீபத்தில் ஷிர்க் மாநாடு நடத்தப் பட்டதும் நோக்கத்தக்கது. தேர்தல் சமயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 10-ம் தேதி நடைபெற்றபோது அதில் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக / பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

Karu at IUML conference receiving momento

Karu at IUML conference receiving momento

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு: விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் 10-03-2016 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு எந்த தகுதியுள்ளது என்று தெரியவில்லை. இது என். ராம் போன்றோர், கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வது போலத்தான். மார்க்சிஸம், கம்யூனிஸ உதிரிகள், நாத்திகம், கிருத்துவ-முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள், முதலியவை கலந்து கொள்வது போலத்தான். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார்[7]. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இம் மாநாட்டின் சிறப்பு அம்சமாக பள்ளிவாசல், கபரஸ்தான், திருமணப் பதிவேடு ஆகியவற்றின் சிறந்த பராமரிப்பு, மதரஸா, கல்வி நிலையம், மருத்துவ மையம், பைத்துல் மால், ஷரீஅத் பஞ் சாயத்து உள்ளிட்டவை நடத்துதல், ஏழைக்குமர் திருமண உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவி போன்ற நல காரியங்களில் முன்மாதிரியாகத் திகழும் மஹல்லா ஜமாஅத்களுக்கு விருது வழங்கப்பட்டது[8]. ஆக இவர்களுக்கு இதெல்லாம் “ஷிர்க்” இல்லாமல் போய் விட்டதாக்கும். குறிப்பாக “ஷிர்க்” மாநாட்டுக்காரர்கள் இதையெல்லாம் ஏன் எதிர்க்கவில்லை என்று எந்த ஊடகக்காரனோ, செக்யூலரிஸப் பழமோ கேட்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாடு 11-03-2016 அன்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தேசிய பொதுச்செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் காதர்மொகிதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஷாஜகான், முதன்மை துணை தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜீத், காயல் மகபூப், அப்துல் பாசித், ஜீவகிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்[9]. மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் வரவேற்றார். முன்னர் கருணாநிதியே கலந்து கொள்வது வழக்கம். அப்பொழுது, அவர் திராவிட சித்தாந்திகளுக்கும், முகமதியர்களுக்கு எப்படி “மாமன்-மச்சான்” போன்ற உறவுகள் எல்லாம் இருந்தது என்று கதை விடுவார். ஆனால், எப்படி பெரியாரை ஜின்னா ஒதுக்கித் தள்ளினார், கடிதங்கள் மூலம் சாடினார் என்பதை சொல்ல மாட்டார். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் எப்படி தீவிரவாதிகளால் மிரட்டப்பட்டார் என்பதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். இப்பொழுது முடியவில்லை என்பதனால், தந்தைக்குப் பதிலாக தனயன் வந்துள்ளான் போலும்!

Karu at IUML meeting

Karu at IUML meeting

ஸ்டாலின் கொடுத்த வாக்கு திமுக ஆட்சிக்கு வந்தால்: மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தாய் சபையாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. கழகத்துக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், உங்களுக்கு எவ்வளவு வேதனை வந்தாலும், உங்களோடு ஒருங்கிணைந்து தான் இருப்போம். ஆளும் கட்சியாக இருந்தபோது, உங்கள் கோரிக்கை நிறைவேற்றியவர் கருணாநிதி. 2-வது முறையாக அவர் பொறுபேற்ற போது, தமிழ் பேசும், உருது பேசும், முஸ்லிம் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். 3-வது முறையாக முதல்அமைச்சராக இருந்த போது, சிறுபான்மை நல வாரியம் அமைத்தது மட்டுமின்றி, அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்தார். நான்காவது முறையாக பொறுப்பேற்ற போது உருது அகாடமி அமைக்கப்பட்டது. சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது. சிறுபான்மை மக்களுக்காக தி.மு.. ஆட்சியில் ரூ.331 கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டங்களை பட்டியலிட்டு, ஆதாரத்தோடு கூறமுடியும். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார். அவரை பொருத்தவரை சொன்னதை செய்வார். சொல்லாதையும் செய்வார். நீங்கள் நினைத்ததையும் நிறைவேற்றுவார். நினைக்காததையும் நிறைவேற்றுவார். யாரும் கவலைப்பட தேவையில்லை. மே மாதம் நடக்கும் தேர்தலுக்கு பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும், நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்,” இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்[10].  ஆக கதை சொல்வதில் தானும் சளைத்தவனல்ல என்பதனை தனயனும் மெய்ப்பித்து விட்டான்.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தொகுதி பங்கீடு குறித்து பேச இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் குழு அமைப்பு: காதர் மொகிதீன் அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Monday, March 21, 2016, 21:05 [IST].

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-seat-indian-union-muslim-league-party-group-organization-116032100069_1.html

[3] வெப்துனியா, திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: குழு அமைப்பு, திங்கள், 21 மார்ச் 2016 (23:37 IST)

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/indian-union-muslim-league-has-formed-speak-on-seat-sharing-249485.html

[5] தி.இந்து, திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: காதர் மைதீன் கோரிக்கை, Published: February 9, 2016 15:39 ISTUpdated: February 9, 2016 15:39 IST

[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-12-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8213954.ece

[7] தமிழ்.ஒன்.இந்தியா, திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்: மு.. ஸ்டாலின், By: Karthikeyan, Updated: Friday, March 11, 2016, 1:23 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-speech-on-indian-union-muslim-league-meeting-at-villu-248720.html

[9] மாலைமலர், தி.மு.. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு..ஸ்டாலின் பேச்சு, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 8:18 AM IST

[10] http://www.maalaimalar.com/2016/03/11081808/MK-Stalin-speech-DMK-regime-Is.html

மூன்றாவது அணிக்கு வேலையில்லை, ஜெயலலிதா சரியில்லை, திமுகவுடன் கூட்டணி உறவு தொடரும்!

நவம்பர் 26, 2015

மூன்றாவது அணிக்கு வேலையில்லை, ஜெயலலிதா சரியில்லை, திமுகவுடன் கூட்டணி உறவு தொடரும்!

தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (3)!

indian union muslim league-iuml-kmcc-muslim league

அகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30-31 மற்றும் பிரிவினை[1]: முஸ்லிம் லீக் இணைதளம் கூறுகிறது, “இன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது. முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான் இக்கூட்டத்தில் வலியுறுத்தியது, ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்து, நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்து, அகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றதுசர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டதுஇளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டதுபின் நடந்த லீக் மாநாடுகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது. ’மிண்டோமார்லி சீரிதிருத்தம்என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம் மூலம் 1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்தகாயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”; “நேராக இறங்கி” இந்துக்களைக் கொன்றது முதலியவை சரித்திரமாகியது. இந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின.  1947 மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது.  அதாவது, இவ்விதமாகத்தான் இஸ்லாம் பெயரில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

IUML factions and flagsபாகிஸ்தான் உருவான பிறகும் முஸ்லிம் லீக் இந்தியாவில் தொடர்ந்தது[2]: முஸ்லிம் லீக் இணைதளம் கூறுகிறது, “1896 ஜுன் 5ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் 1937-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார் 1936-ல் மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ல் மதராஸ் மாகான சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரானார். அதே ஆண்டு மதராஸ் மாகான முஸ்லிம் லீக் தலைவரானார்சுதந்திரத்திற்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசிக் கூட்டம் 1947 டிசம்பர் 13,14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள பந்தர் ரோடு காலிக்தினா ஹாலில் நடைபெற்றது. ஜின்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராகீம் எம்.எல்.சி, மலபார் சீதி சாகிப் எம்.எல்., என்.எம். அன்வர் சாகிப், .கே. ஜமாலி சாகிப் எம்.எல். ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்வரும் காலத்தில் முஸ்லிம் லீக் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் உள்ள கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக முடிவு செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, தனித்தனி கன்வீனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தானுக்கான கன்வீனராகவும், காயிதெ மில்லத் இந்தியாவிற்கான கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”.

05-karunanidhi-iuml-head-khadeகேரள மாதிரைப் பின்பற்ற ஆசை: கேரளாவில், நம்பூதிரி பாட் இருக்கும் போது, மலப்புரம் மாவட்டம் முஸ்லிம்களுக்கு என்ற ரீதியில் உருவாக்கப்பட்டது. இதனால், முஸ்லிம் ஜனத்தொகைப் பெருகி, இன்று கனிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதனால், ஆட்சியிலும் உள்ளனர். அதே முறையை இங்கும் பின்பற்ற வேண்டும் என்கிறாரகள். திமுக-அதிமுக என்று மாறி-மாறி கூட்டு சேர்ந்து கொண்டு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் எந்த கட்சியினாலும், ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை உருவாக்க முடியவில்லை. இந்துக்களின் நலன்களை தமிழ்நாட்டில் யாரும் கவலைப்படுவதும் இல்லை. மாறாக, மூஸ்லிம் லீக் கட்சிகள் நடத்தும் இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு, கஞ்சி குடித்துக்கொண்டு இந்துமதத்தை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் முஸ்லிம் லீக்-திராவிட கட்சிகள் கூட்டணி சாதித்துள்ளன. கோவில்சொத்துகளை ஆக்கிரமித்டுக் கொண்டு, வாடகைத் தராமலும் முஸ்லிம்கள் உள்ளனர். அந்த அளவிற்கு செக்யூலரிஸ கொள்ளைகளை முச்லிம்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Kerala Muslims support Saddam Hussein3-வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

Kerala Muslims support Yasser Arafatதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., தி.மு..வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செய லாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML Kerala banner with Paki-PMஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டு அனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்துள்ளதும் வேடிக்கையாகவே இருக்கிறது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

© வேதபிரகாஷ்

26-11-2015

[1] http://www.muslimleaguetn.com/history.asp

[2] http://www.muslimleaguetn.com/history.asp

[3]  மாலைமலர், 3-வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (1)!

நவம்பர் 26, 2015

தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (1)!

IUML conference, Trichy entrance 24-11-2015

அதிரை – உபயம் – நன்றி

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் (நவம்பர். 2015): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது என்று பெயரைக் குறிப்பிடாமல் இருக்கும்போது, “ரோஷன் மஹாலில் நடைபெற்றது” என்கிறது விகடன்[1]. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், பொது செயலாளராக கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜகான் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்[2]. மேலும், முதன்மை துணை தலைவராக எம். அப்துல் ரகுமான் தேர்வு செய்யப்பட்டார்[3].  காதர் மொஹித்தீன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒன்றுதான் குறிப்பிடுகிறது[4]. அதாவது தேர்தல் எல்லாம் இல்லை, “ஒரு மனதாகத்” தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!

IUML conference, Trichy entrance 24-11-2015. stage

IUML conference, Trichy entrance 24-11-2015. stage

முஸ்லிம் லீக்கின் பிரிவுகள், அவற்றின் தலைவர்கள்: முஸ்லிம் லீக், முச்லிம்கள் வைத்துள்ள வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதியாளர்கள் என்று பலரிடம் உறவுகளை வைத்துள்ளது. அவர்களிடமிருந்து நிதியுதவியும் பெறுகிறது. இது தவிர, –

1.   துணை தலைவர்கள்,

2.   மாநில செயலாளர்கள்,

3.   துணை செயலாளர்கள்,

4.   சார்பு அணிகள்,

5.   மாநில இணை செயலாளர்கள்,

6.   முஸ்லிம் மாணவர் பேரவை,

7.   சுதந்திர தொழிலாளர் யூனியன்,

8.   மகளிர் லீக்,

9.   மின்னணு ஊடக பிரிவு,

10.  கவுரவ ஆலோசகர்கள்,

11.  தலைமை நிலைய பேச்சாளர்கள்,

12.  தலைமை நிலைய பாடகர்கள்

முதலியோர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அளவில் அணுகுமுறை, திட்டம், செயல்பாடு முதலியவற்றுடன் வேலைசெய்கிறது முஸ்லிம் லீக். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது, ஊடகக்காரர்கள் அணுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது[6]. இது தொடர்பாக திருச்சியில் நடந்த கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்[7]:

IUML conference, Trichy entrance 24-11-2015. audience

IUML conference, Trichy entrance 24-11-2015. audience

ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!: முஸ்லிம் லீக்கைப் பொறுத்த வரையில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தான் எம்.எல்.ஏ, எம்.பி மற்ற பதவிகளை பெற்று வருகிறது. ஜெயலலிதா, தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் ஆட்சி செய்யும் அரசின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை. அவரது பிடியில் இருந்து அரசு தளர்ந்து விட்டது என்பதைவிட, தொலைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் யாரும் அரசு கட்டுப்பாட்டில் இல்லை, என்றெல்லாம் விமர்சித்தார்[8]. இப்படியெல்லாம் பேசுவது, ஜெயலலிதா-விரோத பேச்சாலரசு-விரோத பேச்சா என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டில் “கட்சி” உள்ளது ஆனால் “அரசு” இல்லை என்றால், வேடிக்கைதான்! மழை பெய்ந்து ஓய்ந்தது போலத்தான்! போயஸ் கார்டனில் மழை நீர் நுழையவில்லை, ஆனால், கோபாலபுரத்தில் நுழைந்த மர்மம் போலும்!

ஆனால், காயிதே மில்லத் சமாதிக்கு வந்து துணியைப் போர்த்தும் போது, கருணாநிதி – ஜெயலலிதா இருவருக்கும் தான், கூட இருந்து பிடித்துக் கொள்கிறார்கள்! அவர்களும் குல்லா போடுவதும், தலையில் முக்காடு போடுவதிலிம் குறைச்சல் இல்லை!

Jeyalalita at Quade millat tomb

Jeyalalita at Quade millat tomb

அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, திமுக தலைமையிலான அணி: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. பிஹார் உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்றால், ஊழல் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொள்வோம் என்றாகிறது. அப்படியென்றால், திமுகவோடு கூட்டு வைத்துக் கொள்வது, சாலப் பொறுத்தமானதே! சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் எப்படியுள்ளன, எவ்வாறு செயல்படுகின்றன என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான்! முஸ்லிம் லீக், “சமய சார்பற்ற” என்று பேசுவதும் வேடிக்கைதான்!

IUML conference, Trichy entrance 24-11-2015 -press briefed

IUML conference, Trichy entrance 24-11-2015 -press briefed

அரசியலாக்கப்படும் வெள்ளச் சேதம்: தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல்: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடமைகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கேற்கிறது. மத்திய மாநில அரசுகள் தங்களின் மெத்தன போக்கை கைவிட்டு அவதியுற்றுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரண பணியை போர்க்காள அடிப்படையில் விரைவுபடுத்திட வேண்டுகோள் விடுக்கிறது. இதுவரை ஏற்பட்ட சேதம் ரூபாய் 8,481 கோடி என்றும் முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் முதற்கட்டமாக ரூபாய் 939 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இழப்பீடு கணக்கீடும் மத்திய அரசிடம் முதல்வர் விடுத்த தொகையும், மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமும் மிகவும் குறைவு ஆகும். பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுடைய நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

© வேதபிரகாஷ்

26-11-2015

[1] http://www.vikatan.com/news/tamilnadu/55536-.art

[2] வெப்துனியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக காதர்மொய்தீன் மீண்டும் தேர்வு, Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (05:20 IST)

[3] தினத்தந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST.

[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/kader-moideen-re-elected-as-president-of-the-indian-union-muslim-league-115112500010_1.html

[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/26021349/Indian-Union-Muslim-League-the-partys-Tamil-Nadu-state.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, அதிமுகவை வீழ்த்த சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடரும், Posted by: Chakra, Published: Wednesday, November 25, 2015, 13:22 [IST].

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/iuml-urges-opposition-come-under-dmk-alliance-defeat-aiadmk-240684.html

[8]  விகடன், ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!, Posted Date : 21:18 (24/11/2015); Last updated : 21:18 (24/11/2015).

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]

மார்ச் 16, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1)[1] மற்றும் (2)[2] பதிவுகளையும் சேர்த்து வாசிக்கவும்

தியாக கீதங்களா, ஓலங்களா – காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: எங்களால் தான் திமுக பிழைத்தது என்றனர் முதலில்! அதாவது, அவர்களின் மாபெரும் தியாகத்தினால் கூட்டணி பிழைத்தது! ஆனால், அடுத்த நாளிலேயே, நாங்கள் அதிமுகவை / ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்றும் பாட்டு பாடினர். கேரளாவில் இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்குக்கு வாரிக் கொடுக்கும் காங்கிரஸ், இங்கு ஏன் பிடுங்கிக் கொள்கிறது என்று தெரியவில்லை. அழுத குழந்தைக்கு பால் கிடைத்ததா, ஓலமிட்டு வாங்கிக் கொண்டார்களா, மிரட்டி பிடுங்கிக் கொண்டார்களா? தியாகம் தான் பதில் சொல்லும்!  முஸ்லீம் சமுதாயமே இதனை எதிர்த்து நிற்கிறது[3] என்றதும் பயந்து விட்டாரா கருணாநிதி?

 

திராவிட கூட்டணியின் தியாகத் திருநாள்! தியாகம் என்றால் சொல்லவேண்டுமா? தியாகத்திற்கு பரிசு என்று புது பாட்டு, மெட்டு, தாளன்ம், கூத்து, கும்மாளம்! முன்பு கருணாநித் பிடுங்கிக் கொடுத்தார் என்றன ஊடகங்கள்! ஆனால் இன்றோ தியாகப்பாட்டைப் பாடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்காக தனது ஒரு இடத்தை விட்டுத் தந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தியாகத்தைப் பாராட்டும் வகையில், அந்தக் கட்சிக்கு மீண்டும் மூன்று இடங்களைக் கொடுத்துள்ளார் கருணாநிதி. காதர் மொஹைதீன் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆரம்பத்தில் திமுகவில் 3 சீட்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி செய்து வந்த பெரும் குழப்பத்தைத் தொடர்ந்து, பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களிலிருந்து தலா ஒரு இடத்தை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. அதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் ஒரு நன்றி கூட கூறவில்லை இந்த இரு கட்சிகளுக்கும். இந்த நிலையில் நேற்று தொகுதிள் விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்களை ஒதுக்கி திமுக அறிவித்தது[4].

 

உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீன் லீக் போட்டி: ஐந்து கேட்டு மூன்று கிடைத்தது. மூன்று இரண்டாகி, மறுபடியும் மூன்றாகி விட்டது. சரி, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால்[5], தன்மானம், பகுத்தறிவு எல்லாம் இருக்குமா, போய் விடுமா? கடவுளை நம்பும் முஸ்லீம்களில் இப்படி நாத்திக திமுகவின் போர்வையில் மறைந்து கொண்டு, பகுத்தறிவு நாடகம் போட்டுக் கொண்டு, தியாக டிஊயட் பாடிவருவது வேடிக்கைத்தான்!

 

அன்பழகனின் மாபெரும் தியாகம்! முன்பு நெடுஞ்செழியனை கருணாநிதி அடியோடு தியாகம் செய்தார். பாவம், அன்பழகன், வேறெங்காவது சென்றால், அவரைவிட மோசமான கதி ஏற்படும் என்று என்றும் னெம்பர்.2 என்ற நிலையில் இருந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆக, மறுபடியும் பலிக்கடாவாக மாறியிருப்பது அன்பழகன் தா! மீண்டும் மூன்று இடங்கள் ஏன்றால், யாருக்கு நஷ்டம்? இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர். முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது. இந்தத் தொகுதி முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் லீக் கட்சிக்கு, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன[6].

 

வேதபிரகாஷ்,

16-06-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/