முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[1], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[2]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும். பெரியார் என்கின்ற ஈவேராவின் கதை அப்படியென்றால், காயிதே மில்லத் என்கின்ற முகமது இஸ்மாயில் கதை (5.6.1896 – 5.4.1972) இப்படியுள்ளது.

மணிச்சுரரில் வெளியான பெரியாரின் கையறுகதறிய நிலை: 06-0-2021 தேதியிட்ட “மணிச்சுடர்” என்கின்ற முஸ்லிம் நாளிதழ், ஈவேரா மற்றும் முகமது இஸ்மாவிலைப் பற்றி, இவ்வாறு, வெளியிட்டுள்ளது[3]: “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் மரியாதையும் மாறாத பேரன்பும் கொண்டிருந்தனர். குறிப்பாக காயிதே மில்லத் அவர்களை தந்தை பெரியார் அவர்களும் , மூதறிஞர் ராஜாஜி அவர்களும் தம்பி என்றும், பெருந்தலைவர் காமராஜர் அண்ணன் என்றும், அன்பொழுக உறவு முறை கூறி அழைக்கும் அளவுக்கு நெருக்கமான நல்லுறவு அவர்களிடையே நிலவியது.


“1972
ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது.தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.


திராவிட இயக்கங்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே நிலவி வந்த பிரிக்க முடியாத நல்லுறவை தந்தை பெரியார் நன்கு உணர்ந்தவர். காயிதே மில்லத்தையும், இஸ்லாமிய சமுதாயத்தையும் தன் நெஞ்சத்தில் ஏந்தி நேசித்தவர் தந்தை பெரியார். திராவிட இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையேயான இந்த பேரன்பும் நல்லுறவும் இன்றளவும் இம்மியளவு கூட குன்றாமல் குறையாமல் வாழையடி வாழையாகத் தொடர்கிறது”. காயிதே மில்லத் புராணம், அவ்வப்போது, ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன[4]. இதில் எந்த விதிவிலக்கோ, ஆராய்ச்சியோ இல்லை, அப்படியே, இருப்பவற்றை, திரும்ப-திரும்ப வெளியிடுவது வழக்கமாக உள்ளது[5].

 அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முயன்றதை முகமது இஸ்மாயில் எதிர்த்தது[6]: இதே போல, முகமது இஸ்மாயில் பற்றி, முகமதியர் எழுதுவது தான் உள்ளது. அவை எவ்வாறு 100% ஆராய்ச்சிக்கு ஏற்றது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு – புதுமடம் ஜாபர் அலி என்பவர் காயிதே மில்லத் பற்றி, போற்றி எழுதியதிலிருந்து தெரியும் விசயங்கள் கொடுக்கப்படுகின்றன[7]. “……..காயிதே மில்லத்என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்என்று இதற்குப் பொருள். 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார். அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், ‘ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமேஎன்று யோசனை தெரிவித்தார்.

முகமதிய கல்லூரிகள் தமிழகத்தில் உருவானது[8]: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மாமலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி,” என்று எழுதியது.

1972ல் எம்ஜிஆர் மூன்று கிமீ நடந்து, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார். தேர்தலின்போது அவரது இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார் அண்ணா. எந்த முகமதியன் கல்லூரியை அரசு மகளிர் கல்லூரியாக மாற்ற காயிதே மில்லத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார். காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்,” என்று எழுதியது.

© வேதபிரகாஷ்

07-02-2021


[1]  பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[2]  ம.வென்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள்.

[3]  மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[4] தினமலர், முகம்மது இஸ்மாயில் () காயிதே மில்லத் 5.6.1896 – 5.4.1972, திருநெல்வேலி, பதிவு செய்த நாள்: 04ஜூன் 2018 00:00.

[5] https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43039&cat=1360

[6] தமிழ்.இந்து, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, Published : 05 Jun 2017 09:08 AM; Last Updated : 06 Jun 2017 10:18 AM

https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

[7] புதுமடம் ஜாபர் அலி, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

[8] https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

Explore posts in the same categories: அடையாளம், அண்ணாதுரை, அனுமதி, அரேபியா, அல்லா, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதம், இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்தியப் பிரச்சினை, இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இஸ்மாயில், உருது மொழி, ஊர்வலம், எம்ஜிஆர், ஐசிஸ், கட்டுக்கதை, கருணாநிதி, காயல்பட்டினம், காயிதே மில்லத், ஜின்னா, ஜெயலலிதா, முகமது இஸ்மாயில்

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: