தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!
தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!
காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
- முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
- 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
- இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.
ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:
- ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
- அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
- மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
- தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
- அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.
- சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
- அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
- 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
- 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.
© வேதபிரகாஷ்
18-01-2017
[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429
[2] கே.எம்.கே, , காஜிகளும் – தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.
Explore posts in the same categories: ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அதிமுக, காஜி, காஜி சட்டம், தலாக், தலாக்-தலாக்-தலாக், நிக்கா, நிக்காஹ், நிக்காஹ் நாமா, நீதிமன்றம், விசாரணை, விவாக ரத்து, விவாகம், ஷாபானுகுறிச்சொற்கள்: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இஸ்லாமிய சட்டம், இஸ்லாம், காஜி, காஜி சட்டம், சான்றிதழ், சென்னை, தமிழ்நாடு, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலைமை காஜி, நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், மசூதி, முல்லா, விவாக ரத்து, ஷா பானு, ஷாபானு
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்