தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

Explore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அடையாளம், அதிமுக, அத்தாட்சி, காஜி, சான்றிதழ், தலாக், நிக்காஹ், நீதி, நீதி மன்றம், நீதிமன்றம், பெண், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணியம், போராட்டம், மகளிர் கோர்ட், மசூதி, மத-அடிப்படைவாதம், விவாக ரத்து

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: