Posted tagged ‘நடனம்’

இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!

ஜூலை 28, 2013

இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!

Kashmir state Mufti enjoying music

இசையை ரசித்துக் கொண்டிருந்த முப்தி  (ஜூலை  2013): காஷ்மீர் மாநிலத்தில் ஒரு இளம்பெண் பெண்களே கொண்ட “பேண்ட்-குரூப்” வைத்துக் கொண்டு இசைக்குழு நடத்தி வந்தாளாம். இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்டாராம் முப்தி. ஆனால், அதே முப்தி, இசையை ரசித்துக் கொண்டிருந்தாராம்! ரம்யாமான தல் ஏரியில், ஒரு பெரிய படகில், அக்பர் ஜயபூரி [Urdu poet Akbar Jaipuri] என்ற உருது கவிஞர் நினைவாக, ஆல் இன்டியா ரேடியோ, ஒரு நிகழ்சி ஏற்பாடு செய்திருந்தது. காஷ்மீர் மாநிலத்தின் பிரபல கஜல் பாடகர் கைஸர் நிஜாமி [Qaiser Nizami ] தன்னுடைய உருது கஜல்களுடன் னைவரையும் மகிழ்வித்தார். அன்றைய மயக்கும் மாலைப் பொழுதில் “ரஞ்சிஸ் ஹி சஹி, தில் ஹி துகானே கேலியே” [Ranjish hi sahi, dil hi dukhaane ke liye aa], என்று மெஹ்தி ஹஸன் பிரபலமான கஜல் பாட்டுப் பாட, “சாப் திலக்” என்ற பஞ்சாபி கஜலோடு[Chaap Tilak (Punjabi ghazal)] நிகழ்சித் தொடங்கியது. மாநிலத்தின் பெரிய முப்தி, ஆஜம் பஷீர்-உத்-தீமன் அஹமது [the grand mufti of J&K, Mufti Azam Bashir-ud-din Ahmad], மற்றவர்களுடன் அழகான நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்[1].

Kashmir state Mufti enjoying music with instruments

முப்தி பத்வாக்கள் போட்டுக் கொண்டே இருந்தார்  (2012): ஜனவரி 2012ல் தன் தலைமையில் இயங்கி வரும் ஷரீயா நீதிமன்றத்தில் மூன்று கிருத்துவ மிஷனரிகள் – எம். சி. கன்னா, ஜிம் போர்ஸ்ட் மற்றும் கயூர் மெஸ்ஸா என்பவர்கள் வெளியேற வேண்டும் என்று பதவா போட்டு விரட்டினார்[2].

Kashmir state Mufti Azam Bashir-ud-din Ahmad

கிருத்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு உதவக்கூடாது என்றும்ம் பத்வா போட்டார். இதற்கு பிரிவினைவாத தலைவர் சையது அலி ஜிலானி ஆதரவு தெரிவித்தார்[3].

 

செப்ப்ட்டம்பர் 2012ல், இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. உடனே, அமெரிக்கர்கள் அனைவரும் காச்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். இதனால், தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என்று பணித்தது[4].

 

Kashmir girls band group.performing on the stage

பாண்ட் இசைக் குழு ஆரம்பித்த காஷ்மீர இளம் பெண்கள்: காஷ்மீரில் முதல் முறையாக 3 கல்லூரி மாணவிகள் – மாணவி பாராக தீபா [Farah Deeba] டிரம்மராகவும், மாணவி அனீகா காலித் [Aneeka Khalid] கிடாரிஸ்ட்டாகவும், மாணவி நோமா நசிர் [Noma Nazir] பாடகியாகவும் சேர்ந்து இசைக்குழு தொடங்கினார்கள்[5]. இவர்களின் முதலாவது இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 2012ல் ஸ்ரீநகரில் நடந்தது. இதற்கு இளைஞர்களிடையே வரவேற்பு ஏற்பட்டது. இசைக்குழுவுக்கு ”பிரகாஷ்” (முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டு, அந்த போட்டியிலேயே முதல் பரிசும் பெற்றார்கள்[6]. இதனால், தேவையில்லாமல், அவர்களுக்கு விளம்பரத்தை / பிரபலத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் உஷாரானாயினர். இது அவர்களது “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற கொள்கைக்கு விரோதமானது என்றறிந்தனர். அதனால், தங்களது வேலைகளை முடிக்கி விட்டனர்.

Kashmir girls band group.2

இசை இஸ்லாமிற்கு எதிரானது  –   எதிர்ப்பில் இணைதள தீவிவாதமும் இணைந்தது: முஸ்லிம் பெண்கள் இப்படி மேடையேறி பாடுவது இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த குழுவை விமர்சித்து கருத்துக்கள் பரவின. இ.மெயில்கள் மூலமும் 3 மாணவிகளுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. அந்நிலையில், முஸ்லிம் மத குரு முப்தி பஷீருதீன் அகமது பிறப்பித்த பத்வா[7] உத்தரவில் இஸ்லாம் விரோத செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகள் தங்கள் இசைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[8]. இதற்கிடையே காஷ்மீர் பெண்கள் இசை நிகழ்ச்சி நடத்த முப்தி சாகிப் என்ற அமைப்பு தடை விதித்து `பட்வா’ உத்தரவு பிறப்பித்தது. துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால், பெண்களின் பெற்றோர் மற்ரும் குடும்பத்த்னர் பெருத்த தொல்லைகளுக்கு ஆளாயினர். தமது மகள்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று[9]. இதை தொடர்ந்து இசைக்குழுவை மாணவிகள் கலைத்துவிட்டனர்[10]. இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும் நேற்று முடிவு செய்ததாக பெற்றோர்கள் அறிவித்தனர்.

Pragaash-internet support - but failed

பெண்கள் அமைப்பு என்ற பெயரில் பெண்களை வைத்து மிரட்டியது: துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பு 1982ல் சாரா அன்ட்ரபி என்ற பெண்ணால் ஆரம்பிக்கப்பட்டது. “அமைதியான முறையில்” இஸ்லாம் கொள்கைகளை பரப்புவோம் என்று ஆரம்பித்த இந்த குழு, சினிமா தியேட்டர்கள், வீடியோ லைப்ரரிகள், மதுக்கடைகள் முதலியவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர். ஜனவரி 1990ல் இதனால் கலவரங்கள் ஏற்பட்டன. ஆயுதங்களும் உபயோகப்படுத்தப் பட்டன. ஜீன்ஸ் அணிந்த பெண்கள் மீது அமிலத்தை ஊற்றி பீதியைக் கிளம்பி வந்தது. தடை செய்யப் பட்ட மற்ற பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கோஷ்டிகளுடன், இதுவும் சேர்ந்துள்ளது[11]. இவரது கணவர் அன்ட்ரபி, ஜைமத்துல் முஜாஹித்தீன் [Jamiatul Mujahideen] என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர். இவ்வமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தவுடன், பண்களின் பெற்றோர் பயந்து விட்டனர்.

CM just assured that is all

ஒப்புக்கு பேட்டி கொடுத்து பிரிவினைவாத,  அடிப்படைவாத,  தீவிரவாத கும்பல்களுடன் ஒத்துப்போன இளைமையான முதலமைச்சர்: இது பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,”மாணவிகளின் இசைக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்” என்றார்[12]. இதற்கு முதல்-மந்திரி உமர் அப்துல் கண்டனம் தெரிவித்தார். அதாவது, ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்கிறார். இதுதானே, காஷ்மீரத்தில் நடந்து வருகின்றது. மேலும் இ.மெயிலில் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவும். போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இ.மெயிலில் மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்[13]. கைதான ஒருவர் பெயர் தாரிக்கான். இவர் தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ் பெகரா என்ற நகரைச் சேரந்தவர். மற்றொருவரான ரமீஷ் ஷா மத்திய காஷ்மீரில் கந்தர்பால் நகரில் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவர் ஸ்ரீநகர் பத்மலோ என்ற இடத்தில் இருந்து இ.மெயில் அனுப்பியது தெரியவந்தது. நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் இர்ஷாத் அகமத் சாரா பாதமலோ எஸ்.டி. காலனியில் பிடிபட்டார். இதே போல் இன்டர்நெட் மூலம் 900 மிரட்டல்கள் 26 இடங்களில் இருந்து வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் மீது மிரட்டல், கிரிமினல் குற்றம் மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[14].

Fatwa against the girls by the Mufti

முஸ்லிம்கள் இத்தகைய முரண்பாடான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காஷ்மீரம் இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மேலே, இஸ்லாம் என்ற போர்வைப் போற்றப்பட்டிருந்தாலும், உள்ளே-அஸ்திவாரத்தில் இவைதான் இருக்கின்றன. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிகிஸ்தான் போன்ற எல்லா “ஸ்தானங்களுக்கும்” பொறுந்தும். இங்கு இசை, நடனம், நாடகம், கவிதை முதலியவையும் பாரம்பரியமானவைதாம். மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளுக்குட் பட்டிருக்கும் இப்பிரதேசங்களில் மக்கள் இவையில்லாமல் வாழ்ந்ததில்லை. அந்நிலையில், இப்பொழுது பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் இவ்வாறு “இஸ்லாம்” பெயரில் முரண்பாடுகளை திணித்து வருகின்றது. நிச்சயமாக மேனாட்டு சீரழிவுகளை இந்தியா ஏற்கலாகாது. அதே நேரத்தில், நவீனமாக இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தையும் (உதாரணத்திற்கு – விமானம், மின்னணு சாதனங்கள், கட்டுமான வசதிகள், வாகனங்கள், ஊடகங்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

வேதபிரகாஷ்


[2] In January last year, the Sharia court headed by him ordered expulsion of three Christian missionaries from the Valley on charges of proselytism. He issued a fatwa directing the three priests – M. C. Khanna, Jim Borst and Gayoor Messah – to leave the Valley immediately.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[3] Mufti’s Sharia court also decreed that the state government must involve it in the management of missionary schools. The matter died down after separatist leader Syed Ali Shah Geelani supported the missionaries and their schools.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[4] In September 2012, a controversial anti- Islam film surfaced in America and Europe and Mufti got a chance to hit out at the US. He asked Americans to leave Kashmir and urged people to register their protest against the blasphemous film and ” attack US citizens if they are seen anywhere in the Valley”. This led an alarmed US Embassy in New Delhi to ask its citizens to stay away from Kashmir. Geelani again stepped in and rejected Mufti’s call.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[9] Left to fend for themselves, the families of Noma Nazir, Farah Deeba and Aneeka Khalid in the vulnerable neighbourhoods of Chhanpora, Bemina and Rajbagh have forced the teenagers to snap their contact with all, especially the media. “We have seized their cellphones and laptops,” two of their relatives revealed to The Hindu. “Their band has been shut.”

http://www.thehindu.com/news/national/other-states/rock-band-girls-go-into-hiding-after-social-boycott-threat/article4378341.ece

[11] The Dukhataarn-e-Millat does not have any history of using firearms. Founded in 1982 by Syeda Asiya Andrabi, the outfit claims to orchestrate ‘peaceful campaigns’ against anything it perceives to be contrary to the tenets, teachings and traditions of Islam. It played a key role in a campaign to close down cinema, video libraries and wine-shops, which culminated in the eruption of an armed insurgency in January 1990. Since then, it has been among the outlawed radical groups in the Valley. In 1992-93, it grabbed the headlines, enforcing the Islamic dress code allegedly by sprinkling acid on young girls wearing jeans and refusing to clad the ‘Abbaya’. Ms. Andrabi has repeatedly denied having used acid. The spray, she insisted, was “a harmless ink.” Nonetheless, the Dukhataarn-e-Millat carries the image of a dreaded outfit for many — particularly those associated with the media, art and culture — in Srinagar. Ms. Andrabi is the wife of the jailed founder of the Jamiatul Mujahideen, Ashiq Hussain Faktoo, who now heads a different political outfit called the Muslim League.

[13] மாலை மலர், காஷ்மீரில்இசைக்குழுதொடங்கியமாணவிகளுக்குமிரட்டல்விடுத்த 3 பேர்கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 07, 12:34 PM IST.

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

பிப்ரவரி 13, 2013

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0652

மக்களைக் கொல்லும் மாலிக்: யாஸின் மாலிக் ஒரு முஸ்லீம், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற இந்திய-விரோத, பிரிவினைவாத இயக்கத்தை நடத்தி வருபவன். கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தப் பின்னணியில் அவ்வியக்கத்தினர் உள்ளனர். இஸ்லாமாபாதில் நடந்த உண்ணாவிரத போராட்டதில், பயங்கரவாதி-தீவிரவாதி ஹாவீஸ் சையீத் கலந்து கொண்டுள்ளான். JKLF பேனர் பின்னால் இருக்கிறது. ஆகவே, அக்கூட்டத்தில் அவனைக் கலந்து கொள்ள அழைத்துள்ளாதத் தெரிகிறது. இருப்பினும், மாலிக் மறுத்துள்ளான்[1]. எதற்காக இதிய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, காந்தி கூட, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார் என்றான்[2].

Photo0653

நண்பர்களுடன் உல்லாசம்!

Photo0648

ஆட்டத்தில் கிக் ஏருகிறது போலும்!

Photo0649

அலேக்காக தூக்குதல்!

Photo0654

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[3]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0650

இருவரையும் பிரித்து விடுகின்றனர்!

Photo0651

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்[4]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[5]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[6]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

 

வேதபிரகாஷ்

13-02-2013


[4] Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/