தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?
தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?
முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை. |
மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை: இந் நிலையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.
அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
Explore posts in the same categories: அடையாளம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உருவ வழிபாடு, உலமா வாரியம், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், கொடியேற்றம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி, சின்னம், செட்டிப் பல்லக்கு, ஜமாத், ஜஹல்லியா, நாகூர் தர்கா, நாத்திக காஃபிர், நாத்திகத் தமிழன், நிகாப், பர்கா, பர்தா, பிறந்த நாள், மசூதி, மசூதி வளாகத்தில் நினைவிடம், மத-அடிப்படைவாதம், மலர் போர்வை வைத்து மரியாதை, மிலாடி நபி, மீலாதுநபி, வாலாஜா மசூதி, ஹிஜாப்குறிச்சொற்கள்: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், சின்னம், செக்யூலரிஸம், தர்கா கூத்துகள், பிரச்சினை, பிறந்த நாள் கொண்டாடம், பொருள், மசூதி வளாகத்தில் நினைவிடம், மலர் போர்வை வைத்து மரியாதை, முஜாஹித்தீன், வாலாஜா மசூதி, விஷயம், ஹிஜாப்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜூன் 6, 2010 இல் 4:26 முப
காயிதே மில்லத் அவர்களின் 114ஆம் பிறந்த நாளான ஜூன் 5ஆம் நாள் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி – தொல் திருமாவளாவன் அறிக்கை
http://www.thiruma.in/2009/06/blog-post_03.html
சிறுபான்மை மக்களின் உரிமை மீட்பர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் 114ஆம் பிறந்த நாளான ஜூன் 05 அன்று இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இசுலாமியர்களுக்கும் அனைத்து சிறுபான்மைச் சமூகத்திற்கும் பாதுகாவலராக விளங்கிய அவர், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சனநாயக பரவலாக்கத்திற்காகவும் ஓங்கி குரல் கொடுத்தவராவார். மேலும் நாடறிந்த நாடாளுமன்றவாதியாகவும் செயல்பட்டு, அடித்தட்டு மக்களின் உரிமைகளை நிலை நாட்டியவராவார்.
இசுலாமியர்கள் என்றால் உருது அல்லது அரபு மொழிகளின் மீது தான் பற்றுதலும் மதிப்பும் கொண்டிருப்பார்கள் என்கிற பொதுவான எண்ணத்தைத் தகர்த்து, தமிழ்த்தாயைப் பெரிதும் நேசித்தார். அத்துடன் இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழியையும் ஏற்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
மொழி மற்றும் இன நலன்களிலும் மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கினார் என்பதை இதிலிருந்து அறியலாம். அத்தகைய பெருமைமிக்க தலைவர் காயிதே மில்லத் அவர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஆண்டு தோறும் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்களுக்கு தமிழக அரசு அவரது பெயரால் விருது வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் சென்னை, பல்லவன் இல்லம் அமைந்துள்ள இடத்திலிருந்து தீவுத்திடல் வரை அமைந்துள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என பெயர் சூட்ட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
காயிதே மில்லத் அவர்களின் 114ஆம் பிறந்த நாளான ஜூன் 5ஆம் நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இரவிகுமார் தலைமையில் பொதுச்செயலாளர் கா. கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலையில் காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல் திருமாவளாவன்
04.06.09
ஜூன் 6, 2010 இல் 11:01 பிப
இரண்டு கூட்டங்களும் போலித்தனமானவைதாம். ஏதோ ஒரு “இஸத்தை”ச் சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வந்து, இன்று பெரிய ஆட்களாகவும் மாறி விட்டனர்.
பெரியார் அடையமுடியாததை கருணாநிதி அடைந்தாகி விட்டது.
ஜின்னா சாதிக்க முடியாததை, சாதித்தாகி விட்டது.
ஜூன் 14, 2010 இல் 9:55 முப
நிச்சயமாக, உண்மையான முஸ்லீம்கள், இத்தகைய கூத்தாடிகளை அனுமதிக்க மாட்டார்கள். அரசியல் ஆதாயங்களுக்காகத் தான், முஸ்லீம்கள் செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
ஜூன் 15, 2010 இல் 1:38 முப
உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
மார்ச் 10, 2013 இல் 9:37 முப
[…] [1] https://islamindia.wordpress.com/2010/06/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E… […]
மார்ச் 10, 2013 இல் 9:37 முப
[…] [1] https://islamindia.wordpress.com/2010/06/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E… […]