Posted tagged ‘கடத்தல்’

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

ஏப்ரல் 4, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

02-04-2024 – தில்லியில் அமீர் ஆஜர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் தி.மு.க நிர்வாகி, சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் கூட்டாளிகளுடன் 09-03-2024 அன்று கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்[1]. ஜாபர் சாதிக் பின்னணி குறித்து டெல்லியிலிருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்[2]. ஜாபர் சாதிக், தமிழ் சினிமாவிலிருக்கும் சிலருடன் தொடர்பிலிருக்கும் தகவல் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது[3]. அதனடிப்படையில் ஜாபர் சாதிக்குடன் நட்பிலிருந்த இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்[4]. அதனால் 02.04.2024 அன்று டெல்லிக்குச் சென்ற அமீர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) அலுவலகத்தில் ஆஜராகினார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இப்பொழுது சில ஊடகங்கள் உஷாராகி விட்டன போலிருக்கிறது. திடீரென்று என்.சி.பி அதிகாரிகளை சந்தித்தோம் என செய்திகளை வாரி வழங்கியிருக்கின்றன.

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: விசாரணையின்போது என்.சி.பி-யின் மூத்த அதிகாரி ஒருவர்தான் அமீரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கேள்விகளுக்கு அமீரும் பதிலளித்திருக்கிறார். சில கேள்விகளுக்கு சென்டிமென்ட்டாக அவர் பதிலளித்தாக என்.சி.பி வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன். என்னை எப்போது வேண்டும் என்றாலும் நீங்கள் விசாரிக்கலாம். என்னுடைய பாஸ்போர்ட்டைக்கூட உங்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளேன்,” என்று அமீர் கூறியதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து என்.சி.பி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.  “இது குறித்து” என்றால், எந்த சென்டிபென்டைப் பற்றி என்று குறிப்பிடவில்லை. “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன்…..,” என்றால்< ஈடுபட்டவர்கள் எல்லாம், “இறைபக்தி” இல்லாதவர்களா அல்லது, அவ்ர்கள், “இறைவனுக்குப் பிடிக்கின்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? …..”!

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்திய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரித்தபோதுதான் எங்களின் விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர் வந்தார். அதனால் அவரிடம் விசாரித்தோம். எங்கள் பிரிவின் உயரதிகாரி ஒருவர் மட்டும் அமீரிடம் தனியாக சில மணி நேரம் விசாரித்தார். அதில் ஜாபர் சாதிக்குக்கும் அவருக்கும் உள்ள பழக்கம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஜாபர் சாதிக், தன்னுடைய தம்பியை சினிமா மூலம் பிரபலப்படுத்த முடிவு செய்து படம் ஒன்றை தயாரிக்க பணம் கொடுத்ததாக (இறைவன் மகா பெரியவன்) அமீர் பதிலளித்தார். அடுத்து ஜாபர் சாதிக்கும், அமீரும் சினிமா தவிர சில பிசினஸ்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்டோம். அதற்கும் அமீர் பதிலளித்தார். அமீரிடம் ஜாபர் சாதிக்கின் சினிமா தொடர்புகள் குறித்து விசாரித்தோம். அப்போது அமீர், ஜாபர் சாதிக்குக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் சில இயக்குநர்களையும் சினிமா தொடர்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்ததாக பதிலளித்தார். அதன் பிறகுதான் கட்சிரீதியான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பொறுமையாக அமீர் பதிலளித்தார். மறுபடியும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோரி” என்றனர்.

விகடன் கேட்ககேட்க என்.சி.பி அதிகாரிகள் பதில் சொன்னார்களாம்: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு[5], “ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க், தமிழ் சினிமாவிலும் அரசியல் கட்சியிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்ட தி.மு.விலிருந்த முன்னாள் எம்.எல். ஒருவர், சினிமா பிசினஸிலும் ஈடுபட்டு வந்தார். அவருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் சினிமா தொடர்புகள் இருந்திருக்கின்றன. அந்த நிர்வாகியின் மறைவுக்குப் பிறகு அரசியல்வாதி ஒருவருடன், ஜாபர் சாதிக்குக்கு அரசியலைத் தாண்டிய பிசினஸ் தொடர்புகள் இருந்திருக்கின்றன. எனவே, அமீரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அமீருடன் இன்னும் இரண்டு பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவர்கள் ரம்ஜானுக்காக வெளிநாட்டிலிருப்பதால், விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டிருக்கிறார்கள்,” என்றார்[6].

அமீர் ஊடகத்தினரை 2-3 நாளில் சந்திப்பாராம்: அமீரை, தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[7]. இந்த நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[8]. அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்[9]. இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் “என பதிவிட்டுள்ளார்[10]. இந்த இரண்டு வரி செய்தியும், செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[11]. இரண்டு-மூன்று நாட்கள் என்ன செய்யப் போகிறார் என்றும் யாரும் கேட்கவில்லை, ஆராய்ச்சி செய்யவில்லை[12].

“ரம்ஜான்” சென்டிமென்டுகளா, செக்யூலிரஸமா? எது வேலை செய்கிறது?: விகடன் இப்படி நிரம்பவே “சென்டிமென்டுடன்” வேலை செய்து, புலன் விசாரணை செய்து, நக்கீரனையும் மிஞ்சும் வகையில் விவரங்களை சேகரித்து, செய்திகளாக வெளியிட்டிருக்கிறது. “ரம்ஜான்” சென்டிமென்டுகள் முஸ்லீம்களுக்கு இருக்கும் என்றால், இதே போல சென்டிமென்டுகள் மற்றவர்களுக்கு இருக்காதா என்று தெரியவில்லை. ஒருவேளை, இதில் கூட செக்யூலரிஸம் வேலை செய்கிறது போலும். அதிலும், திராவிடத்துவ செக்யூலரிஸம் அதிகமாகவே வேலை செய்கிறது. ஆகவே, என்.சி.பி, அவர்கள் எல்லோரும் கஞ்சி குடித்து, நோன்பு முடித்து வருவார்கள் போலும், பிறகு, விசாரணை தொடரு போலிருக்கிறது. பொருத்துப் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

© வேதபிரகாஷ்

04—04-2024


[1] நக்கீரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீர் ஆஜர்!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2024 | Edited on 02/04/2024.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/director-aamir-ncb-office-delhi

[3] தமிழ்.நியூஸ்.18, போதைப்பொருள் வழக்குடெல்லி என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்.., FIRST PUBLISHED : APRIL 2, 2024, 12:35 PM IST, LAST UPDATED : APRIL 2, 2024, 2:49 PM IST.

[4] https://tamil.news18.com/national/director-amir-appears-before-ncb-enquiry-1399415.html

[5] விகடன், ஜாபர் சாதிக் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான அமீர்கேள்விகளை அடுக்கிய அதிகாரிகள்!,எஸ்.மகேஷ், Published: 03-04-2024 at 5 PM; Updated: 03-04-2024 at 7 PM.

[6] https://www.vikatan.com/crime/narcotics-control-bureau-officers-investigated-director-ameer-in-drug-case

[7] தினமணி, விரைவில் சந்திக்கிறேன்இயக்குநர் அமீர் பதில், Published on:  03 ஏப்ரல் 2024, 12:04 pm; Updated on: 03 ஏப்ரல் 2024, 12:04 pm.

[8] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Apr/03/see-you-soon-director-aamir

[9] தினத்தந்தி, டெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், ஏப்ரல் 3, 10:57 am (Updated: ஏப்ரல் 3, 11:11 am).

[10] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/ncp-officers-conducted-an-11-hour-intensive-interrogation-of-director-ameer-in-delhi-1100062

[11] ஹிந்துஸ்தான்.தமிழ், Ameer: யாரும் என்னை அழைக்க வேண்டாம்.. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடித்து வரும் அமீர் வேண்டுகோள், Aarthi Balaji, HT Tamil, Apr 03, 2024 08:47 AM IST

[12] https://tamil.hindustantimes.com/entertainment/ameer-first-post-after-returning-from-delhi-investigation-131712113335281.html

சைராபேகம்-அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்-பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்!

செப்ரெம்பர் 1, 2016

சைராபேகம்அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்!

G.B-Road-Delhiதில்லியில் நடக்கும் பலான தொழில்: தலைநகர் தில்லி பல்லாண்டுகளாகவே குழந்தை மற்றும் பெண்கள் கடத்தும் வேலைகளுக்கு மையாமாக இருந்து வருகிறது[1]. உலகத்தில் நடக்கும் இந்த கொடூரத் தொழிலில் சுமார் மூன்று கோடி / 30 மில்லியன் குழந்தை மற்றும் பெண்கள் இங்கிருந்துதான் கிடைக்கின்றன[2]. உலகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் வந்து செல்வதால், விபச்சாரம் பல வடிவங்களில், மாறுபட்ட நிலைகளில், வெவ்வேறுவிதமான இடங்களில் நடைப்பெற்று வருகின்றது. இப்படி பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதால், இதில் அர்சியல்வாதிகள், போலீஸார் என அனைவரின் தொடர்புகளும் தெரிகின்றன. இப்பொழுது, ஏதோ இத்தம்பதியர் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டனர் போலும்.

Deccan Herald photo - Delhi arrestசின்டிகேட் விவகாரம் தெரிய வந்தது: டில்லியை அதிர வைத்த குழந்தை கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. பிப்ரவரி 2016ல் கூட, ஸ்வரூப் நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, பைக்கில் வந்த இருவர் தூக்கிச் சென்றபோது, போலீஸார், அவளை மீட்டனர்[3]. இதுதவிர 10 பேர் (இரு பெண்கள் உட்பட) இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரு வருடமாக இத்தகைய கடத்த்லில் ஈடுபட்டு வந்த இவர்களிடம் திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்தன. பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது, தில்லியில் வேலை செய்து வரும் ஒரு சின்டிகேட்டைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன[4].

GB Road brothelசைரா பேகம்அபக் ஹுஸைன் கைது: இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்; ஆனால், போதிய ஆதாரங்களை தேடி வந்ததால் கைது-நடவடிக்கை தாமதித்துக் கொண்டே இருந்தது. சிறிது-சிறிதாக ஆதாரங்கள் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கையில் போலீஸ் இறங்கியது. இதை விசாரித்து வந்த போலீசார், அந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர். தம்பதியான சாயிரா பேகம் [Saira Begum 45], அஃபக் ஹுசைன்   [Afaq Hussain, 50], ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்[5]. இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அஃபக் ஹுஸைன்,- சைரா பேகம் 5000நேபாளம் முதல் தமிழகம் வரை பெண்கள் கடத்தல்அதிர்ச்சி தகவல்: இவர்களில், தம்பதியின் தலைமையில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கும்பல், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர்.  இவர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலிருந்து, மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, கைகள் மாறுவதால், அடையாளங்களும் மாற்றப்படுகின்றன. போலி ஆவணங்கள் மூலம் இவையெல்லாம் தாராளமாக நடக்கின்றன.

Kotha no 64பெண்கள் ஏமாற்றப்படல், விற்கப்படல், விபச்சாரத்தில் தள்ளப்படல்: வேலை வாங்கித்தருதல், ஊரைச் சுற்றி காண்பித்தல், நல்ல இடத்தில் திருமணம் செய்து தருதல் போன்ற பொய்யான வாக்குருதிகளைக் கொடுத்து அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளி வாழ்க்கையினை சீரழித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்களை அடித்து, உதைத்து, பலவிதங்களில் கொடுமை படுத்தி விபச்சாரத்தொழிலை வலுகட்டாயமாக செய்ய வைத்துள்ளனர். ரூ.1-2 லட்சங்களுக்கு அவர்களை விற்கவும் செய்தனர். பலவிதமான கஸ்டமர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு பலவிதமாக அனுபவிக்க பிடித்து வந்த சிறுமிகள், பெண்களை பலவிடங்களில் ஒளித்து வைத்தனர். அலமாரிகள், பூமிக்கடியில் உள்ள அறைகள், பெரிய பெட்டிகள், பீப்பாய்கள் போன்றவற்றில் அடைத்து வைத்தனர்[6]. அங்கேயே, சில சமயங்களை வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வற்புருத்தப் பட்டுள்ளனர்[7]. அந்த அளவுக்கு ஈவு-இரக்கம் இல்லாமல் நடத்தப் பட்டுள்ளனர்.

அஃபக் ஹுஸைன்,- சைரா பேகம்சைரா பேகத்தின் கதைஹைதராபாத் முதல் தில்லி வரை[8]: சைரா பேகம் தனது பெற்றோர் இறந்தவுடன் ஹைதராபாதிலிருந்து தில்லிக்கு வந்தவள். வேறெந்த வேலையும் கிடைக்காத நிலையில் கோதா எண்.58, ஜி.பி. சாலை [Kotha No. 58, GB Road] என்ற இடத்தில் விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பகுதி விபச்சாரத் தொழிலுக்கு பிரத்தி பெற்றது[9]. 1990ல் வெளிப்படையாக கூப்பிட்டு அழைத்ததால் மாட்டிக் கொண்டு, தண்டனையும் பெற்றாள். பிறகு, விபச்சாரத்தையே தொழிலாக்கிக் கொண்டாள். 2001லும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாள். ஆனால், வெளியே வந்ததும் மறுபடியும் தொழிலைத் தொடர்ந்தாள். இப்பகுதியில் மூன்று முதல் ஐந்து “பிராத்தல்களை” வைத்து நடத்துவாகத் தெரிகிறது. 35% தொழிலை தன் கீழ் வைத்துள்ளதாகத் தெரிகிறது[10].

அஃபக் ஹுஸைன், வயது 50. மொரதாபாத், உத்திரபிரதேசம்.அபக் ஹுஸைன் எப்படி சைராவுடன் சேர்ந்தான்?[11]: அஃபக் ஹுஸைனும் மொரதாபாத், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழையானதால், தில்லிக்கு வேலைத்தேடி வந்தான். ஒரு கான்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தாலும், குறைந்த சம்பளாமே பெற்று வந்தான். இந்நிலையில் தான் 1999ல் சைராவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளை 1999லேயே திருமணம் செய்து கொண்டு, இருவரும் அந்த விபச்சாரத் தொழிலை செய்ய ஆரம்பித்தனர். ஏஜென்டுகள், ஆட்டோ-கார் டிரைவர்கள், ஹோட்டல் மானேஜர்கள் என்று பலரை வைத்துக் கொண்டு தொழிலை அமோகமாக நடத்த ஆரம்பித்தனர். சைரா சிறையில் இருந்த போதும், ஹுஸைன் தொடர்ந்து அவ்வேலையை செய்து வந்தான்.

மஹாராஷ்ட்ராவின் குற்றச்சட்டத்தின் கீழ் கைது: தாங்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிந்து விட்ட நிலையில் தங்களுடைய சொத்துகளையும் வேறு பெயர்களில் மாற்றி விட்டனர். அதற்காகவே அவர்கள் பினாமி வியாபாரங்கள், ஏஜென்டுகள் என்று பலவற்றை வைத்திருக்கின்றனர். அந்நிலையில் தான், இப்பொழுது மஹாராஷ்ட்ராவின் [the Maharashtra Control of Organised Crime Act (MCOCA] குற்றச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் ஆகஸ்ட்.25, 2016 அன்று நடத்தப் பட்ட சோதனையில் விலையுயந்த நான்கு கார்கள் [Fortuners, Toyota Innovas, Hondas], ரூ.9 லட்சம் மற்றும் வங்கிக் கணக்குகள் முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமியர்பெண்கள் வாங்கி விற்பதில் ரூ.100 கோடி வருமானம்: பல பகுதிகளில், குழந்தையை கடத்தி விற்பவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 100 கோடி ரூபாய் வரையில் இந்த கும்பல் சம்பாதித்துள்ளது[12]. இதுவரை, 5,000 குழந்தைகளை கடத்திஉள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே கைதானவர்கள் : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டனர். அதன் பின்னும், தொடர்ந்து குழந்தை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். தில்லியில் இவ்வளவு நடந்து வந்த விவகாரங்கள் அமுக்கியே வாசிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

01-09-2016

[1] Firstpost, Delhi is ‘hub’ of human trafficking in India , FP Staff  Oct 18, 2013 19:19 IST

[2] http://www.firstpost.com/india/delhi-is-hub-of-human-trafficking-in-india-1180501.html

[3] Police said they have also rescued a one-year-old child who was kidnapped from North-West Delhi’s Swaroop Nagar on Tuesday (02-02-2016). Two motorcycle-borne men had just swooped in on the child playing near his labourer parents and had sped away. Initially two persons were arrested in the operation that began at 8 pm on Thursday (04-02-2016). By Friday morning (05-02-2016), police had arrested 10 persons, including two women, in this connection. More arrests are likely, said Vijay Singh, DCP (North-West). The gang is learnt to be operating at least one year from now. They have already admitted to kidnapping and selling three children, the earliest being a year back from RK Puram in South Delhi. Further investigation into the racket is on.

The Hindu, Major child trafficking racket busted in Delhi, Updated: February 5, 2016 10:28 IST

[4] http://www.thehindu.com/news/cities/Delhi/major-child-trafficking-racket-busted/article8197174.ece

[5] தினமலர், 5,000 குழந்தைகளை கடத்திய கும்பல் கைது, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.30, 2016.22:11.

[6] Indiatoday, Delhi child trafficking racket busted: Girls confined in almirahs, tunnels; forced to entertain clients in cubicles, Chirag Gothi  | Posted by Yashaswani Sehrawat, New Delhi, August 30, 2016 | UPDATED 11:54 IST.

[7] http://indiatoday.intoday.in/story/delhi-trafficking-racket-kothas-gb-road-girls/1/752020.html

[8] Indiatoday, Delhi: How a former sex worker ran a child trafficking racket worth crores, Anuj Mishra |  J.V. Shivendra Srivastava  | Edited by Samrudhi Ghosh

New Delhi, August 30, 2016 | UPDATED 18:18 IST

[9] NDTV news, Sex Racket Couple Trafficked 5000, Charged Under Organised Crime Law, Delhi | Written by Tanima Biswas | Updated: August 30, 2016 21:54 IST

[10] Afaq Hussain, 50, and his wife Saira Begum, 45, kingpins at Delhi’s notorious red light area GB Road,….. They allegedly ran three brothels and owned a third of the business in the area. Five of their assistants have also been arrested.

http://www.ndtv.com/delhi-news/sex-racket-couple-trafficked-5000-charged-under-organised-crime-law-1452341

[11] http://indiatoday.intoday.in/story/delhi-prostitution-child-trafficking-racket/1/752338.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1596555

 

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

AIADMK Iftar

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு:  ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].

Jeyalalita at Quade millat tombமூன்றாவது  அணிக்கு  வேலையில்லை:  இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர்  காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

M . H. Jawahirullah, Hyder Ali of TMMKதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., மற்றும் தி.மு..வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML members with Jeyalalita

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

IUML splinter groups

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

Muslims aiming to capture Parliament - banner

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

makkal-nala-kuutani

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினமலர், .தி.மு.., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302

[3] மாலைமலர், 3 –வது  அணிக்கு  வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

சவுதி இளவரசர் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது!

ஒக்ரோபர் 27, 2015

சவுதி இளவரசர் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது!

Saudi prince arrested for drug smuggling

Saudi prince arrested for drug smuggling

பெய்ரூட்டில் போதை மருந்து பிடிபட்டது: லெபனான் தலைநகர் பெய்ரூட் எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும். பலமுறை சண்டை, போர் என்றெல்லாம் இருந்து, மக்கள் அவதிகளுக்குள்ளாகி, இப்பொழுது சாதாரணமாக இருக்கின்ற நிலையில் மற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விமான நிலையத்தில் 26-10-2015 அன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் 40 சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டன[1]. இவற்றில் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அடைத்து கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தனர். அவற்றில் கோகைகன் போதை பொருளும், ‘கேப்டகான்’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கோகைனும் இருந்தன[2]. அவற்றை லெபனானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது[3]. அதை தொடர்ந்து அந்த விமானத்தை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

another Saudi prince involved in crime

another Saudi prince involved in crime

காப்டகான் ன்பது என்ன, அதன் உபயோகம் போதை மருந்தானது எப்படி?: ரசாயன முறையில் தயாரிக்கப்படும் அம்பிடெமைன் பெனிதல்லின் [amphetamine phenethylline] என்ற ஊக்குவிக்கும் போதை மருந்தின் வியாபாரப் பெயர் காப்டகான் [Captagon] ஆகும்[4]. இது சிரியாவில் சண்டையில் / போரில் ஈடுபட்டுள்ளவர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது. 1960களில் முதலில் மேற்கத்தைய நாடுகளில் மனநோயாளிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் விபரீத விளைவுகளினாலும், மருந்தாக உபயோகிக்கக் கூடியதல்ல, சட்டத்தின் படியும் ஒவ்வாதது என்றெல்லாம் தெரிந்தபோது, 1980களில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஆனால், வளைகுடா நாடுகளில் அதன் உப்யோகம் போதைப் பொருளாக தொடர்ந்தது[5]. தீவிரவாத குழுக்கள் ஜிஹாதில் / புனிதபோரில் ஈடுபட, தொடர்ந்து கடுமையாக சண்டையிட ஊக்குவிக்கும் மருந்தாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால், இத்தகைய போதை மருந்துகளை தயாரிப்பது, விநியோகிப்பது, கடத்துவது, எங்கெல்லாம் போர் நடக்கின்றதோ, அவ்விடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது, என்று பலர் ஈடுப்பட்டுள்ளார்கள். மில்லியன் – கோடிக்கணக்கில் இவ்வியாபாரம் நடந்து வருகிறது.

போதைப் பொருள் தயாரிப்பு, விநியோகம்

போதைப் பொருள் தயாரிப்பு, விநியோகம்

அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் என்ற சவுதி அரேபியா இளவரசர் சம்பந்தப்பட்டுள்ளது: விசாரணையில் போதை மருந்து, மாத்திரைகளை 5 பேர் கடந்த முயன்றது தெரிய வந்தது. அவர்களில் மிக முக்கியமான நபர் சவுதி அரேபியா இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் [Abdel Mohsen Bin Walid Bin Abdulaziz] ஆவார். எந்த இளவரசர் அல்லது அரசர் என்று அடையாளம் காணப்படவில்லை என்று இன்னொரு செய்தி கூறுகிறது[6]. எனவே அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்[7]. விமானநிலையத்தில் உள்ள இன்னும் ஐந்து சவுதி குடிமகன்களை விசாரிக்க வேண்டியுள்ளது என்று போலீஸார் கூறுகின்றனர்.  சவுதி அரேபியா மன்னராட்சி கொண்ட நாடு, ஆனால், ஷரியத் சட்டதிட்டங்கள் நடைமுறையில் கொண்ட நாடாகும். 75–90% மக்கள் சுன்னி மற்றும் 10–25% ஷியா முஸ்லிம்கள் கொண்ட நாடாகும். குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி, கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும்.

Narcotics seized at Beirut airport

Narcotics seized at Beirut airport

சவுதி இளவரசர் / அரசர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவது: கடந்த மாதம் சவுதி இளவரசர் ஒருவர் அமெரிக்காவில், பெவர்லி ஹில்ஸ் மான்சனில் ‘செக்ஸ்’வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது[8].  ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதை தொடர்ந்து விசாரிக்காமல் விட்டுவிட்டனர்[9]. தனது  $37 மில்லியன் மதிப்புள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் மாளிகையில், நீச்சல்குளத்தில் நிர்வாண பெண்கள் கொண்ட பார்ட்டி நடத்த வேண்டும் என்று கேட்டதாக செய்திகள் வந்தன[10]. தனது பெண் வேலைக்காரிகளுல் ஒருத்தியை நிர்வாணமாக நீச்சல்குளாத்தில் இருக்குமாறு பணித்ததாக புகாரில் / நீதிமன்ற வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், கைதும் செய்யப்பட்டார்[11]. அதே போல 2013ல் ஒரு கென்யாவைச் சேர்ந்த பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது, ஆனால், அதுவும் விடப்பட்டது. கடந்த ஏப்ரல் 2014ல் கூட, 15 மில்லியன் காப்டகான் காப்சூல்கள், சோளங்கள் அடைக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் கடத்தப்படும் போது, பெய்ரூட் துறைமுகத்தில் பிடிபட்டது[12]. இவ்வாறு சமீபகாலத்தில் இரு சவுதி இளவரசர்கள் போதை மருந்து கடத்தல், செக்ஸ் குற்றங்கள் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளது திகைப்படைய வைப்பதாக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் சாதாரண மனிதன் அத்தகைய குற்றங்களை செய்தால், தூக்கில் போடப்படுகிறார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[13].

A picture released by the Saudi Press Agency -SPA- shows Saudi King Salman bin Abdulaziz Al-Saud -AFP Photo

A picture released by the Saudi Press Agency -SPA- shows Saudi King Salman bin Abdulaziz Al-Saud -AFP Photo

அரச குடும்பச் சண்டையும், உருவாகும்பிரச்சினையும்[14]: சவுதி அரேபியா மன்னர் சல்மான் பதவி விலக வேண்டும் என்று அவரது தம்பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்து வந்த அப்துல்லா, கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் (79) பதவியேற்றார். இந்நிலையில், சல்மான் பதவி விலகும் படி அவரது 8 தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். சல்மானுக்குப் பதிலாக இளவரசர் அகமது பின் அல்துல் அஜிஸ் (73) என்பவரை மன்னர் ஆக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் உள்துறை அமைச்சரான அஜிஸுக்கு இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் உலமாக்களின் ஆதரவு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராக மன்னர் சல்மான் நியமித்தார். மேலும், மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மான் விரைவில் பதவியை துறந்து விட்டு தனது மகன் முகமது பின் சல்மானை மன்னர் ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Saudi-prince- PHOTO- AFP-FILE-Tribune, Pakistan

Saudi-prince- PHOTO- AFP-FILE-Tribune, Pakistan

ஆட்சிமாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் சவுதி அரேபியா: அரசின் முக்கிய முடிவுகள் மன்னர் சல்மானின் ரகசிய உத்தரவுகள் அனைத்தும் இவர் மூலமே பிறப்பிக்கப்படுகின்றன. எனவே, முகமது பின் சல்மானை சவுதி மன்னராக்க தற்போதைய மன்னர் சல்மானின் தம்பிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. மேலும், அதிகாரம் முழுவதும் மன்னர் சல்மானின் குடும்பத்துக்கும், அவரது வாரிசுகளுக்கும் செல்வதாக கருதி தற்போது அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக அதிருப்தி இளவரசர் ஒருவர் இது தொடர்பாக எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பிகளின் எதிர்ப்பால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற சூழல் நிலவுகிறது. துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ராணுவ அமைச்சராகவும் இருக்கிறார். அவரது முடிவின்படிதான் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய படைகள் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளன. இதனால் சவுதி அரேபியாவில் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[15]. ஆனால், பிள்ளைகள் இப்படி குற்றங்களில் இடுபட்டுள்ளனரே என்று குடும்பத்தினர் கவலைப்படவில்லை போலும்.

வேதபிரகாஷ்

27-10-2015

[1]  மாலைமலர், லெபனானில் போதை பொருள் கடத்திய சவுதி இளவரசர் கைது, மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 2:15 PM IST; பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 11:59 AM IST.

[2] http://www.maalaimalar.com/2015/10/27115925/Saudi-Prince-Arrested-in-Leban.html

[3] தினகரன், போதைப் பொருள் கடத்திய சவுதி இளவரசர் லெபனானில் கைது, வியாழக்கிழமை, அக்டோபர் 27, 2015, 13.21.13.

[4] Captagon is the brand name for the amphetamine phenethylline, a synthetic stimulant. The banned drug is consumed mainly in the Middle East and has reportedly been widely used by fighters in Syria.

[5] The drug was first produced in the West in the 1960s to treat hyperactivity, narcolepsy and depression, but by the 1980s was banned in most countries because of its addictive properties and no longer has a legitimate medical use. Its active ingredient, fenethylline, is metabolized by the body into the stimulants amphetamine and theophylline.

http://www.cbsnews.com/news/war-turns-syria-into-major-amphetamine-producer-and-consumer/

[6] http://en.abna24.com/service/middle-east-west-asia/archive/2015/10/26/716992/story.html

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=175258

[8] Late last month, a Saudi prince was arrested in Los Angeles for allegedly trying to force a woman to perform oral sex on him at a Beverly Hills mansion. But authorities decided not to pursue the charge, citing a lack of evidence.

[9] In 2013, a Saudi princess was accused in Los Angeles of enslaving a Kenyan woman as a housemaid, but the charges were also eventually dropped.

[10] New York Post, Saudi prince demanded naked pool parties at LA mansion: suit, By Sophia Rosenbaum, October 26, 2015 | 11:46am.

[11] Prince Majed bin Abdullah bin Abdulaziz Al Saud, a son of the late King Abdullah, allegedly asked one of his female employees to force anyone in his $37 million mansion to come out to the pool and strip, according to the Daily Mail, which cited court papers detailing the civil case against the prince, who was arrested last month in LA after neighbors spotted a woman trying to climb a wall at his compound.

http://nypost.com/2015/10/26/saudi-prince-demanded-naked-pool-parties-at-la-mansion-suit/

[12] http://www.rawstory.com/2015/10/saudi-prince-arrested-in-largest-drug-bust-in-the-history-of-beiruts-airport/

[13] http://www.rawstory.com/2015/10/drug-smuggling-rape-and-torture-these-five-saudi-royals-did-things-that-would-get-them-executed-back-home/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, சவுதி மன்னருக்கு எதிராக தம்பிகள்போர்க்கொடி’… ஆட்சி மாற்றம் ஏற்படுமா?, Posted by: Jayachitra Published: Sunday, October 25, 2015, 15:20 [IST].

[15] Read more at: http://tamil.oneindia.com/news/international/saudi-arabia-eight-king-salman-s-11-surviving-brothers-want-to-oust-him-238396.html

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa

30 More Women, Children Escape Boko Haram Sambisa

நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment

Boko-Haram-rescued women from sex harassment

பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories

Escaped women tell their horrowful stories

பள்ளி சிறுமிகள் கடத்தல்செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram

Escape more than 60 women and girls abducted by Boko Haram

ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts

Ridiculing Boko Haram Where It Hurts

கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor

[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece

[3]  பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.

[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf

[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf

[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece

[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.

[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437

[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!

செப்ரெம்பர் 15, 2013

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!

ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது: ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளது. காரி ஹம்ஸா [Qari Hamza] என்ற அத்தீவிரவாதக் கூட்டத்தின் தொடர்பாளன் “தி டெய்லி பீஸ்ட்” [Daily Beast] என்ற நாளிதழுக்கு, “அவள் இந்திய உளவாளி என்பதால் நாங்கள் கொன்றோம். அவளைக் கடத்திச் சென்று மூன்று மணி நேரம் விசாரித்தோம். பிறகு கொன்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளான்[1]. ஜலாலாபாதில் உள்ள இந்திய தூதரகத்தை சமீபத்தில் தாக்கியதும் இக்கூட்டம் தான். காரி ஹம்ஸா, “எங்களது விசாரணையில் அவள் மேலும் சில ஏஜென்டுகளின் பெயர்களை தெரியப்படுத்தியுள்ளாள். அவர்களையும் நாங்கள் விடமாட்டோம்”, என்று அறிவித்தான்[2]. இதே செய்தியை மற்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. ஆனால், “தி டெய்லி பீஸ்ட்” வெளியிட்டுள்ளது கீழ்கண்டவாறு உள்ளது[3]:

 ‘We Killed Sushmita Banerjee’ Says Renegade Taliban Militia

by Sami Yousafzai, Ron Moreau Sep 14, 2013 4:45 AM EDT

A brutal renegade Taliban militia says they interrogated, then killed, the Indian author, bizarrely claiming she was a spy. Sami Yousafzai and Ron Moreau report.

“We killed Sushmita Banerjee because she is an Indian spy,” the group’s spokesman, Qari Hamza, tells The Daily Beast exclusively. He admits that his men kidnapped, harshly interrogated, and then killed her. “We took her from her house, investigated her for three hours and then left her dead,” he says. “During our investigation Sushmita Banerjee also disclosed the names of other agents and we will go after them as well,” he adds. “We are against everyone who is engaged against the Afghans, the jihad and works with the American attackers.”

இந்திய ஊடகங்கள் மறைத்த விவரங்கள்: வழக்கம் போல, “அவளை சித்திரவதை செய்து” விசாரித்தோம், மற்றும் “நாங்கள் ஆப்கானியர்களுக்கு எதிராக யார் வேலை செய்தாலும் ஒழித்துவிடுவோம், ஜிஹாத் மற்றும் அமெரிக்கர்களுடன் வேலை செய்பவர்கள் அனைவரையும் எதிர்ப்போம்”, என்றதையும் மறைத்து செய்தியை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, சுஷ்மிதா பானர்ஜி எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டார் என்பதையும் அந்நாளிதழ் விவரித்துள்ளது. நடு இரவில், 12 அடி உயரமான சுவரைத் தான்டி குதித்து, சுமார் 10-12 துப்பாக்கி ஏந்தியவர்கள் ஜான்பாஸ் கானின் வீட்டில் நுழைந்தனர். தூங்கிக்கொண்டிருந்த கானை துப்பாக்கி முனையில் எழுப்பிக் கண்களைக் கட்டிக் கட்டி போட்டு விட்டு, “கத்தினால் தொலைத்துவிடுவோம்”, என்று மிரட்டி, சுஷ்மிதாவைக் கடத்திச் சென்றனர். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த கானின் சகோதரர், காலையில் எழுந்த பார்த்த போதுதான் விவரத்தை அறிந்து கொண்டனர்.

துப்பாக்கிகளால் சுட்டுத்தான் எதையும் தெரிவித்துக் கொள்வார்கள்: விடியற்காலை 3 மணியளவில், அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி, “காலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. குழந்தை பிறந்ததால், அவ்வாறு கொண்டாடுகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்”, என்றாளாம். ஆனால், உண்மையில் அது தலிபானின் தண்டனை நிறைவேற்றிய சத்தம் தான். நயப் கான் என்பவர், தான் இரவு உடையுடன் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டதை கூறினார்.  அப்பெண்ணின் முகம் குரூரமாகச் சிதைக்கப் பட்டிருந்தது[4]. சுமார் 15-20 முறை துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கலாம். அவள் சாதாரணமாக, ஆப்கன் பென்களைப் போல உடையணிமல் இருந்ததால், சுஷ்மிதா தான் என்று எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை[5]: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[6]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[7]. கான் சொன்னது, “நான் கதவை திறந்து போது, தலைப்பாகைகளுடன், முகங்களை மறைத்துக் கொண்டிருந்தார்கள். உடனே உள்ளே நுழைந்தார்கள்”, என்று கான் சொன்னதாக முன்னர் செய்தியை வெளியிட்டது[8].

சுஷ்மிதாபானர்ஜி, என்றசையதுபானர்ஜி கொலை செய்யப்பட்டவிதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[9]:

  • கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
  • தலைமுடியை பிடுங்கியது[10] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
  • 20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
  • இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.

யார் இந்த ஹக்கானி?[11]: ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.

© வேதபிரகாஷ்

15-09-2013


[1] Alleging she was an Indian spy, the Taliban group — Suicide Group of the Islamic Movement of Afghanistan — told a Western publication they were taking responsibility for the killing. This group was reportedly involved in the recent attack against the Indian Consulate in Jalalabad.”We killed Sushmita Banerjee because she was an Indian spy,” the group’s spokesman Qari Hamza told the Daily Beast, the online home of Newsweek magazine.

http://timesofindia.indiatimes.com/india/Taliban-group-We-killed-Sushmita-Banerjee-because-she-was-an-Indian-spy/articleshow/22583263.cms

[4] Although Banerjee’s face had been obliterated by several of the 15-20 bullets that police say her executioners had fired into her, Nayab immediately realized who the dead woman was.  “She was not wearing a normal Afghan village woman’s dress and chador,” he told The Daily Beast. “So I knew it was the Indian wife of Janbaz.”

http://www.thedailybeast.com/articles/2013/09/14/we-killed-sushmita-banerjee-says-renegade-taliban-militia.html

[9] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.

http://www.abc.net.au/news/2013-09-06/taliban-sushmita-banerjee-afghanistan-indian-authors/4939634

[11] Gretchen Peters, Haqqani Network Financing: The Evo;lution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.