ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

02-04-2024 – தில்லியில் அமீர் ஆஜர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் தி.மு.க நிர்வாகி, சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் கூட்டாளிகளுடன் 09-03-2024 அன்று கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்[1]. ஜாபர் சாதிக் பின்னணி குறித்து டெல்லியிலிருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்[2]. ஜாபர் சாதிக், தமிழ் சினிமாவிலிருக்கும் சிலருடன் தொடர்பிலிருக்கும் தகவல் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது[3]. அதனடிப்படையில் ஜாபர் சாதிக்குடன் நட்பிலிருந்த இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்[4]. அதனால் 02.04.2024 அன்று டெல்லிக்குச் சென்ற அமீர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) அலுவலகத்தில் ஆஜராகினார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இப்பொழுது சில ஊடகங்கள் உஷாராகி விட்டன போலிருக்கிறது. திடீரென்று என்.சி.பி அதிகாரிகளை சந்தித்தோம் என செய்திகளை வாரி வழங்கியிருக்கின்றன.

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: விசாரணையின்போது என்.சி.பி-யின் மூத்த அதிகாரி ஒருவர்தான் அமீரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கேள்விகளுக்கு அமீரும் பதிலளித்திருக்கிறார். சில கேள்விகளுக்கு சென்டிமென்ட்டாக அவர் பதிலளித்தாக என்.சி.பி வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன். என்னை எப்போது வேண்டும் என்றாலும் நீங்கள் விசாரிக்கலாம். என்னுடைய பாஸ்போர்ட்டைக்கூட உங்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளேன்,” என்று அமீர் கூறியதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து என்.சி.பி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.  “இது குறித்து” என்றால், எந்த சென்டிபென்டைப் பற்றி என்று குறிப்பிடவில்லை. “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன்…..,” என்றால்< ஈடுபட்டவர்கள் எல்லாம், “இறைபக்தி” இல்லாதவர்களா அல்லது, அவ்ர்கள், “இறைவனுக்குப் பிடிக்கின்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? …..”!

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்திய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரித்தபோதுதான் எங்களின் விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர் வந்தார். அதனால் அவரிடம் விசாரித்தோம். எங்கள் பிரிவின் உயரதிகாரி ஒருவர் மட்டும் அமீரிடம் தனியாக சில மணி நேரம் விசாரித்தார். அதில் ஜாபர் சாதிக்குக்கும் அவருக்கும் உள்ள பழக்கம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஜாபர் சாதிக், தன்னுடைய தம்பியை சினிமா மூலம் பிரபலப்படுத்த முடிவு செய்து படம் ஒன்றை தயாரிக்க பணம் கொடுத்ததாக (இறைவன் மகா பெரியவன்) அமீர் பதிலளித்தார். அடுத்து ஜாபர் சாதிக்கும், அமீரும் சினிமா தவிர சில பிசினஸ்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்டோம். அதற்கும் அமீர் பதிலளித்தார். அமீரிடம் ஜாபர் சாதிக்கின் சினிமா தொடர்புகள் குறித்து விசாரித்தோம். அப்போது அமீர், ஜாபர் சாதிக்குக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் சில இயக்குநர்களையும் சினிமா தொடர்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்ததாக பதிலளித்தார். அதன் பிறகுதான் கட்சிரீதியான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பொறுமையாக அமீர் பதிலளித்தார். மறுபடியும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோரி” என்றனர்.

விகடன் கேட்ககேட்க என்.சி.பி அதிகாரிகள் பதில் சொன்னார்களாம்: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு[5], “ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க், தமிழ் சினிமாவிலும் அரசியல் கட்சியிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்ட தி.மு.விலிருந்த முன்னாள் எம்.எல். ஒருவர், சினிமா பிசினஸிலும் ஈடுபட்டு வந்தார். அவருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் சினிமா தொடர்புகள் இருந்திருக்கின்றன. அந்த நிர்வாகியின் மறைவுக்குப் பிறகு அரசியல்வாதி ஒருவருடன், ஜாபர் சாதிக்குக்கு அரசியலைத் தாண்டிய பிசினஸ் தொடர்புகள் இருந்திருக்கின்றன. எனவே, அமீரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அமீருடன் இன்னும் இரண்டு பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவர்கள் ரம்ஜானுக்காக வெளிநாட்டிலிருப்பதால், விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டிருக்கிறார்கள்,” என்றார்[6].

அமீர் ஊடகத்தினரை 2-3 நாளில் சந்திப்பாராம்: அமீரை, தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[7]. இந்த நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[8]. அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்[9]. இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் “என பதிவிட்டுள்ளார்[10]. இந்த இரண்டு வரி செய்தியும், செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[11]. இரண்டு-மூன்று நாட்கள் என்ன செய்யப் போகிறார் என்றும் யாரும் கேட்கவில்லை, ஆராய்ச்சி செய்யவில்லை[12].

“ரம்ஜான்” சென்டிமென்டுகளா, செக்யூலிரஸமா? எது வேலை செய்கிறது?: விகடன் இப்படி நிரம்பவே “சென்டிமென்டுடன்” வேலை செய்து, புலன் விசாரணை செய்து, நக்கீரனையும் மிஞ்சும் வகையில் விவரங்களை சேகரித்து, செய்திகளாக வெளியிட்டிருக்கிறது. “ரம்ஜான்” சென்டிமென்டுகள் முஸ்லீம்களுக்கு இருக்கும் என்றால், இதே போல சென்டிமென்டுகள் மற்றவர்களுக்கு இருக்காதா என்று தெரியவில்லை. ஒருவேளை, இதில் கூட செக்யூலரிஸம் வேலை செய்கிறது போலும். அதிலும், திராவிடத்துவ செக்யூலரிஸம் அதிகமாகவே வேலை செய்கிறது. ஆகவே, என்.சி.பி, அவர்கள் எல்லோரும் கஞ்சி குடித்து, நோன்பு முடித்து வருவார்கள் போலும், பிறகு, விசாரணை தொடரு போலிருக்கிறது. பொருத்துப் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

© வேதபிரகாஷ்

04—04-2024


[1] நக்கீரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீர் ஆஜர்!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2024 | Edited on 02/04/2024.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/director-aamir-ncb-office-delhi

[3] தமிழ்.நியூஸ்.18, போதைப்பொருள் வழக்குடெல்லி என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்.., FIRST PUBLISHED : APRIL 2, 2024, 12:35 PM IST, LAST UPDATED : APRIL 2, 2024, 2:49 PM IST.

[4] https://tamil.news18.com/national/director-amir-appears-before-ncb-enquiry-1399415.html

[5] விகடன், ஜாபர் சாதிக் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான அமீர்கேள்விகளை அடுக்கிய அதிகாரிகள்!,எஸ்.மகேஷ், Published: 03-04-2024 at 5 PM; Updated: 03-04-2024 at 7 PM.

[6] https://www.vikatan.com/crime/narcotics-control-bureau-officers-investigated-director-ameer-in-drug-case

[7] தினமணி, விரைவில் சந்திக்கிறேன்இயக்குநர் அமீர் பதில், Published on:  03 ஏப்ரல் 2024, 12:04 pm; Updated on: 03 ஏப்ரல் 2024, 12:04 pm.

[8] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Apr/03/see-you-soon-director-aamir

[9] தினத்தந்தி, டெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், ஏப்ரல் 3, 10:57 am (Updated: ஏப்ரல் 3, 11:11 am).

[10] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/ncp-officers-conducted-an-11-hour-intensive-interrogation-of-director-ameer-in-delhi-1100062

[11] ஹிந்துஸ்தான்.தமிழ், Ameer: யாரும் என்னை அழைக்க வேண்டாம்.. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடித்து வரும் அமீர் வேண்டுகோள், Aarthi Balaji, HT Tamil, Apr 03, 2024 08:47 AM IST

[12] https://tamil.hindustantimes.com/entertainment/ameer-first-post-after-returning-from-delhi-investigation-131712113335281.html

Explore posts in the same categories: ஒழிப்பு, கஞ்சா, கஞ்சி, கஞ்சி அரிசி, கஞ்சி குல்லா, போட்டி, போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் கஞ்சி அரிசி, ரம்ஜான் தாராவீஹ், விசாரணை, வியாபாரம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக