அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)
அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை–புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான–செக்ஸியான திட்டம் (2)
“நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.
பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].
பள்ளி சிறுமிகள் கடத்தல் – செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].
ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்– பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.
கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].
© வேதபிரகாஷ்
09-05-2015
[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor
[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece
[3] பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.
[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf
[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf
[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece
[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece
[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.
[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437
[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022
Explore posts in the same categories: கரு, கரு தரித்தல், கர்ப்பம், கினியா, சட், சொர்க்கம், தியாகி, நைஜர், நைஜீரியா, பொகோ ஹராம், போகோ ஹராம், போராளி, வீரியம், ஷஹீத்குறிச்சொற்கள்: கடத்தல், கர்ப்பம், கற்பழிப்பு, கினியா, சட், சிறுமிகள், தந்தம், தியாகி, நைஜர், நைஜீரியா, புத்தகம், பெண்கள், பொகோ ஹராம், போகோ ஹராம், போராளி, போலி, யானை, வீரியம், ஷஹீத்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்