2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

AIADMK Iftar

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு:  ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].

Jeyalalita at Quade millat tombமூன்றாவது  அணிக்கு  வேலையில்லை:  இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர்  காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

M . H. Jawahirullah, Hyder Ali of TMMKதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., மற்றும் தி.மு..வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML members with Jeyalalita

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

IUML splinter groups

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

Muslims aiming to capture Parliament - banner

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

makkal-nala-kuutani

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினமலர், .தி.மு.., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302

[3] மாலைமலர், 3 –வது  அணிக்கு  வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

Explore posts in the same categories: ஃபத்வா, அதிமுக, அன்பழகன், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அரசியல்வாதிகள், அல் - உம்மா, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இரட்டை இலை, இரட்டை வேடம், உருது மொழி, எஸ்டிபிஐ, ஓட்டுவங்கி, கனிமொழி, காதர் மொகிதீன், காதர் மொய்தின், காதர் மொஹ்தீன், காதர்மொய்தின், முஸ்லீம் மாவோயிஸ்ட், முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், ஷேக் மைதீன், ஹைதர் அலி, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: