Posted tagged ‘வங்ஆளம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது’

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக் கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)

ஏப்ரல் 8, 2023

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)

ஜூன் 2021ல் திருப்பூரில் மூவர் கைது: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி, முறைகேடாக தங்கிய வங்க தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்[1]. திருப்பூர், அம்மாபாளையம் ராக்கியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்; நகல் எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, ஏப்., மாதம் ஷிமுல் காஜி, 30, என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆதார் கார்டில் ஈரோடு மாவட்ட முகவரி இருந்தது.அவர், வங்க தேசத்தவர் என பின் தெரிந்தது.இது குறித்து, ஷிமுல் காஜியிடம் கேட்டபோது, அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் சைபுல் இஸ்லாம், 40, மன்னன் மோலல், 31, ஆகியோரும் சேர்ந்து, மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அவர் அளித்த புகார்படி, திருமுருகன்பூண்டி போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். வங்க தேசத்தைச் சேர்ந்த மூவரும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது தெரிந்தது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தங்கியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்[2]. இவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனரா, குடும்பத்தினருடன் தங்கியிருந்தனரா என விசாரணை நடக்கிறது.

ஊன் 2019 பிரச்சினைதிருப்பூர் இச்செயல்களுக்கு மையமாகிறதா?: திருப்பூர், ஜூன் 1 –திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வங்கதேசத்தவர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பிரச்சனை குறித்து காவல் துறை சார்பில் சம்பிரதாயத்துக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டி அத்திமரத்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் இங்கு தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டனர்[3]. இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நைஜீரியா நாட்டில் இருந்து வந்தவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இங்கு வந்து ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்ததும் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளது[4]. இது தவிர திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரத்தில், நைஜீரியர்கள், வங்கதேசத்தவர் போன்ற வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு வருகை தருவதை குறுகிய அடையாள அரசியலைப் பின்பற்றும் அரசியல் சக்திகள் பயன்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதும் அதிகரிக்கிறது.

வங்க தேசத்தில் இருந்து பலர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் வந்து, பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் இதுபோன்று குடியேறுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது, தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மத்திய உளவுத் துறை மற்றும் சென்னை கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார் வங்கதேசத்தவரை தேடிவந்துள்ளனர். விசாரணையில் தெரியவந்தது[5]. மேலும் விசாரணையில், நாஜ்மூர் ஷித்தர் (வயது 35), அவரது மனைவி பரீதாபீவி (25), 3 வயது சிறுவன் மற்றும் ஷக்தர் முல்லா (50), பாபுஷேக் (22) பாத்திமா பீவி (25) என்பதும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு குடியேறியதும் தெரியவந்தது[6]

பல கேள்விகள் எழுப்பினாலும் வஙகதேசத்திலிருந்து வருவது நிதர்சனமாக உள்ளது:

  • வங்கதேசத்தில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது எப்படி,
  • ரெட்டிச்சாவடி பகுதிக்கு இவர்களை அழைத்து வந்தவர்கள் யார்?,
  • அங்கு குடியேறியதற்கான காரணம் என்ன?,
  • இவர்களை போன்று வேறு யாரேனும் கடலூர் மாவட்டத்தில் குடியேறி இருக்கிறார்களா?

என்று பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே வேளையில், இங்கு வசித்து வந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்றும் கியூ பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் வங்கதேசத்தினர் போன்றவர்கள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள் இருக்கிறார்கள்: சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள். உரிய அனுமதி இன்றி ஊடுருவியர்கள். என தெரிய வந்துள்ளது[7]. கட்டிடத் தொழிலில் பெரும்பாலோர் இவர்களாகத் தான் இருக்கிறார்கள். வேலையைப் பொறுத்த வரையில் இவர்கள் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு கடின வேலைகளை செய்து வருகின்றனர். இது கொரானாவால் வெளி வரும் உண்மைகள்.சென்னையில் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் தமிழகம் முழுக்க,நாடு முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள். ஏன் CAA வை எதிர்க்கிறார்கள் என்பது இப்போது நன்கு புரியும்[8]. வன்முறையில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள். அவர்களின் ஆவணங்களை கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார்கள். பின் தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மேற்கு வங்கம் வந்து பின் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தினமலர், வங்கதேசத்தவர் மூவர் கைது, Added : ஜூன் 25, 2021  01:46.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2790752

[3] தீக்கதிர், சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வெளிநாட்டினர் பிரச்சனை திருப்பூரில் சம்பிரதாயத்துக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம், நமது நிருபர் ஜூன் 2, 2019.

[4]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/illegal-refuge-is-the-issue-of-aliens-conference-meeting-held-in-tirupur

[5] தமிழ்.ஏபிபி.லைவ், கடலூரில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடும்பம் கைதுBy: சிவரஞ்சித் | Published at : 03 Jul 2021 12:08 PM (IST); Updated at : 03 Jul 2021 12:08 PM (IST).ச்

[6] https://tamil.abplive.com/crime/illegal-immigrants-from-bangladesh-were-trapped-with-their-families-8203

[7] ஒரே தேசம், வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!, Oredesam BY OREDESAM  May 18, 2020

[8] https://oredesam.in/bangladeshis-under-the-guise-of-being-outspoken/

வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

ஜனவரி 29, 2010

வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!

வங்க பந்து என்று அன்பாக அழைக்கப் பட்டவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான்.

ஒரு பெரிய பிரதேசமாக இருந்த வங்காளத்தை ஆங்கிலேயர்கள் 1909ல் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப்பிரித்தனர்.

Click here
பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Click here
மார்ச் மாதம் 9, 1969 ராவல்பிண்டியில் முதல் வட்டமேஜை மாநாடு கலந்துகொள்ளும் முன்பு
Click here
ஜனவரி 1960ல் அகர்தலா வழக்கு பற்றி விசாரிக்க செல்லும் போது
Click here
மார்ச் 7, 1971 வங்கதேசம் பிரகடனம் பற்றி பேசியபோது
Click here
1970ல் தேர்தல் பிரச்சாரத்தின்போது
Click here
1971ல் பொது தேர்தல் தள்ளிவைத்த்தினால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்
Click here
பதவியேற்றா வங்க பந்து
Click here
Bangabandhu
Click here
சந்தோஷ புன்சிரிப்புடன்
Click here
புன்முறுவலுடன்!
Click here
பக்கிங்காம் அரண்மனையில், ராணி எலிஸபெத்துடன்
Click here
இந்திரா காந்தியை வழியனுப்பி
வைத்தல் (முதல் விஜயம்)
Click here
ஜனவரி 12, 1972 அன்று பிரதம மந்திரியாக பிரமாணம் எடுத்தபோது
Click here
ஜனவரி 10, 1972 அன்று டாகா விமானநிலையித்தல் அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டபோது.
Click here
பங்க பந்து அரசியல் நிர்ணய சட்டத்தில் கையெழுத்திட்டபோது
Click here
பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலைக்குப் பிறகு, ஜனவரி 1972ல், ஹீத்ரோ விமானநிலைத்தில் எட்வர்ட் ஹீத் – இங்கிலாந்து பிரதமரால் வரவெற்றபோது
Click here
குவைத் அமீருடன்
Click here
முதன்முதலாக ஐக்கிய நாட்டு சபையில் பேசுவது
Click here
அவாமி லீக் மாநாட்டில் பேசுவது
Click here
ஏழைகளுக்கு ஆதரவு!
Click here
தந்தை ஷேக் லுஃப்தர் ரஹ்மான் மற்றும் தாயார் சஹாரா கதுன் உடன்
Click here
தனது குடும்பத்துடன்
Click here
குடும்பத்துடன் உணவு அருந்துவது
Click here
ஆகஸ்ட் 15, 1975 அன்று தனது குடும்ப அங்கத்தினருடன் தேசவிரோத ராணுவத்தினர் சிலரால் கொலையுண்டபோது.

மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என ஒன்றாக இருந்த அவர்களை மக்களை – மதம் என்றரீதியில் வைத்துதான் அவர்கள் அவ்வாறு இரண்டாகப் பிரித்து பிரிவினைக்கு வித்திட்டனர்.

ஆனால், அந்த மதமே அவர்களை ஒன்றாக வைத்திரிக்கமுடியவில்லை!

பற்பல போராட்டங்களுக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிடமிருந்து விடுதலைப் பெற்று ‘வங்காள தேசம்” ஆகியது!

ஆனால், ராணுவத்தினர் சிலர், தாமே ஆளவேண்டும் என்ற எண்ணமோங்க, பங்க பந்து ஆகஸ்ட் 15, 1975 அன்று திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டார்.

அந்த கொலையாளிகள் தாம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தூக்கிலப் பட்டனர்.

இருப்பினும், கொலையாளிகளின் மனைவி ஒருத்தி சொல்கிறாள், “எனது கணவன் ஷஹீத்“, என்று!