இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது, குரூரமாகத் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது ஏன்?
இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது, குரூரமாகத் தாக்கப் படுவது, கொலை செய்யப்படுவது ஏன்?
இந்து – முஸ்லிம் திருமணங்கள் ஒருவழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது: விஜய் டிவியில் பிரமாதமாக ஒரு நிகழ்ச்சி நடப்பட்டது. அதில் முஸ்லிம் பையன்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றதைப் பற்றி விவாதிக்கப் பட்டது. அப்பொழுது, ஒரு இந்துப்பெண் எப்படி தான் தனது குடும்பத்தை விட்டு, மூலங்களை விட்டு பிரிக்கப் பட்டாள், வேர்களை வெட்டி தனிமைப் படுத்தப்பட்டாள் என்று அழாத குறையாக விவரித்தாள். அதாவது, அப்பெண் தனது பெற்றோர், உற்றோர், மற்றோர், நண்பர்கள், மதம், நம்பிக்கைகள், கலாச்சாரம், பாரம்பரியம், என அனைவற்றையும் விடுத்து புதிய ஒரு குடும்பத்தில், வேறு பட்ட பழக்க-வழக்கங்கள், மதம், நம்பிக்கைகள், கலாச்சாரம் முதலியவற்றை ஏற்றுக் கொண்டு காதலுக்காக தான் செய்த தியாகத்தைச் சொல்லி, அந்த முஸ்லிம் கணவனுக்காக வாழ்வதைச் சொன்னாள். அந்த முஸ்லிம் கணவன் தான் அவளை விரும்புவதாகச் சொன்னானே தவிர, அவளது ஈரங்கொண்டவிழிகளுக்கு, அவளது விவரணத்திற்கு எதுவும் சொல்லவில்லை, கண்டுகொள்ளவில்லை. அதாவது, ஒரு இந்துபெண், முஸ்லிமை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் நிலைமை அப்படியுள்ளது. இப்பொழுது, ஷமீராபானு குரூரமாக வெட்டப்பட்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.
காதல் கலப்பு திருமணம்: நாகர்கோவிலில் காதல் கலப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை, ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்[1] என்று தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது. இளம் பெண் கொலை முயற்சி என்று தினமணியில் செய்தி வந்துள்ளது[2]. ஆனால், 12 வருடங்களுக்கு பின்னர் ஏன், அந்த முஸ்லிம் பெண் தாக்கப்படவேண்டும் அல்லது கொலை செய்ய முயற்சி செய்யப் படவேண்டும் என்று ஊடகங்கள் அலசவில்லை. ஒரு முஸ்லிம் பெண் இந்துவை கல்யாணம் செய்து கொண்டு 11 வருடங்களாக வாழ்ந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவளை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்றும் ஆராயவில்லை.
வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்குபவர்கள் மனிதர்களா?: நாகர் கோவிலில் நேற்று காலை நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு என்று தினத்தந்தி விவரிக்கிறது: நாகர்கோவில் கோட்டார் பட்டாரியார் நெடுந்தெருவில் வசிப்பவர் ராஜாராம் ( வயது 34), ஆட்டோடிரைவர். இவருடைய மனைவி வெள்ளாடிச்சிவிளைச் சேர்ந்த ஷமீராபானு (29). இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உமாபாரதி, சங்கீர்த்தனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையி ல் 11-04-2014 காலை 7 மணி அளவில் ஷமீராபானு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்தனர். அவர்கள் ஷமீராபானுவின் அருகில் சென்றனர். ஹெல்மெட்டால் முகத்தை மறைத்திருந்த இருவரும் சமீராபானுவிடம் வந்து ஒரு பேப்பரை காட்டி இந்த முகவரி எங்கு இருக்கிறது? என கேட்டனர்.
முகவரி கேட்டு அரிவாள் வெட்டு: இதனால் சந்தேகம் அடைந்த ஷமீரா பானு பின்னால் விலகிச் செல்ல முயன்றார். இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று கீழே இறங்கி கம்பால் ஷமீராபானுவை தாக்கினார். உடனே, மற்றொரு ஆசாமி அரிவாளை எடுத்துக் கொண்டு ஓடிவந்து ஷமீரா பானுவை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷமீராபானு, ‘‘என்னைக் காப்பாற்றுங்கள்…’’ என்று கூச்சலிட்டபடியே எதிரே உள்ள வீட்டை நோக்கி ஓடினார். இருப்பினும் அவரை துரத்திச் சென்ற அந்த ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ஷமீராபானுவின் 2 கைகள், பின்கழுத்து, தலை என 5 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது . இதில் வலதுகை துண்டானது. இதனைத் தொடர்ந்து அந்த 2 ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் ஏறிதப்பிச் சென்று விட்டனர். இதற்கிடையே ஷமீராபானுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ராஜாராம் வெளியே ஓடிவந்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் மனைவி கிடப்பதை பார்த்து, கதறி அழுதார். உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அவரை வாகனத்தில் ஏற்றி இடலாக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்[3].
கைத் துண்டிக்க வெட்டிய கசாப்புக்காரர்கள் யார்?: அந்த அளவிற்கு ஒரு பெண்ணை வெட்டிய நபர்கள் யாராக இருக்க முடியும்? இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வரும் சமீரா பானுவை பா. ஜனதா மூத்ததலைவர் எம்.ஆர்.காந்தி, நகரசபை தலைவி மீனாதேவ், மாவட்ட துணைதலைவர் தேவ், நக ரதலைவர் ராகவன், இந்துமுன்னணி மாவட்டபொது செயலாளர் மிசா சோமன், மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், நகர தலைவர் ராஜா, பா.ஜ. பிரசார அணிதலைவர் எஸ்.எஸ் .மணி, தாமரை பாபு, இந்து முன்னணி நிர்வாகிகள் நம்பிராஜன், ராஜேஷ் உள்ளிட்டோர் பார்த்து ஆறுதல் கூறினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சமீராபானு கூறியதாவது:– “காலை 7 மணிக்கு கோலம் போட வந்த போது ஹெல்மெட் அணிந்த 2 பேர் என் அருகே வந்தனர். குறுந்தாடியுடன் காணப்பட்ட அவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே நான் வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அந்த வாலிபர்கள் இருவரும் முகவரி கேட்பது போல அருகே வந்து என்னை சரமாரியாக கம்பால் தாக்கினர். நான் தப்பித்து ஓடிய போது விடாமல் விரட்டி என்னை அரிவாளால் வெட்டினர். இதனால் நான் மயங்கி விழுந்து விட்டேன். கண்விழித்து பார்த்த போது நான் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்”, இவ்வாறு அவர் கூறினார்.
எதிர் வீட்டில் வசிப்பவர்கள் யார்?: சமீராபானுவை வாலிபர்கள் கம்பால் தாக்கிய போது அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் சமீராபானுவின் கையை பிடித்து இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் வீட்டுதிண்ணை முழுவதும் ரத்தவெள்ளமாக காட்சியளித்தது . இதையடுத்து எதிர்வீட்டுக்காரர்கள் அந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றி கழுவினார்கள். சம்பவம் தொடர்பாக விசாரித்த ஏ.டி. எஸ்.பி. இளங்கோ எதிர்வீட்டுக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்[4]. பட்டாரியர்தெரு என்பது பட்டாரியர் புதுத்தெரு மற்றும் பட்டாரியர் நெடுந்தெரு என்று இரண்டு உள்ளது. இவற்றில் இந்துக்கள், முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்[5]. திருத்தப் பட்டவாக்காளர் பட்டியலில் சமீராபானுவின் பெயர் உள்ளது. பட்டாரியர் நெடுந்தெரு புதிய / பழைய வீட்டு எண் 64A / NA என்று கொடுக்கப் பட்டுள்ளது[6].
ராஜாராம்- ஏற்கெனவே தாக்குதலில் உள்ளார்: முன்னர் இவரது ஆட்டோ இரண்டு முறை மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப் பட்டது[7]. இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராம் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். அதன் பிறகு 7 மாதத்திற்கு பின் மீண்டும் ஒரு முறை வீட்டு முன்பு நிறுத்திய ஆட்டோவை மர்ம நபர்கள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக ராஜாராம் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[8].
திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது: இது பற்றி தகவல் அறிந்ததும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ராஜாராம் ஆசாத் நகரை சேர்ந்த ஷமீராபானுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதே எதிர்ப்பு இருந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு முன் நிறுத்தியிருந்த ராஜாராம் ஆட்டோ தீவைத்து எரிக்கப் பட்டதாகவும் தெரிய வந்தது. இதுபற்றி கோட்டார் போலீசில் ராஜாராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
5 தனிப்படை அமைப்பு: இந்த வழக்கில் துப்புதுலக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ மேற்பார்வையில் , துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில், கோட்டார் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரவிச்சந்திரன், சுஜீத் ஆனந்த், மோகன அய்யர் ஆகியோர் அடங்கிய 5 தனிப்படைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அமைத்துள்ளார். இந்ததனிப்படை போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 ஆசாமிகள் குமரிமாவட்டத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களா? என்று விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்கள்.
முஸ்லிம் பெண்களை இந்துக்கள் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களைத் தாக்கும் நபர்கள் யார், நோக்கம் என்ன?: 2012ல் இதே கோட்டாறு பகுதியில் வேறொரு மதப்பெண்ணைத் திருமணம் செய்த ஆட்டோடிரைவர் ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[9]. அச்சம்பவம் பெரும் பதட்டத் தைஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே பாணியில் காதல் திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது[10]. முன்னரே குறிப்பிட்டப்படி, உண்மையில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், அவர்களை விட்டுவிட வேண்டும். ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே பல எதிர்ப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது . 10-12 வருடங்கள் வாழ்ந்தாகி விட்டது எனும் போது, அதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனும்போது, அவர்களைத் தாக்குவது என்பது குரூரமான செயலாகும். இதற்கு மதம் ரீதியிலான திரிபுவாதம், நியாயப்படுத்தும் தன்மை முதலியவை கூடாது. அவ்வாறு ஒருவேளை முஸ்லிம் அமைப்புகள் செய்து வருவதாக இருந்தால், செக்யூலரிஸம் பேசிவரும் நாட்டில், போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்து அத்தகைய காட்டுமிராண்டித்த னத்தை, கசாப்புத் தனத்தை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும்.
© வேதபிரகாஷ்
13-04-2014
[1]தினத்தந்தி, காதல்கலப்புதிருமணம்செய்தஇளம்பெண்ணுக்குசரமாரியாகஅரிவாள்வெட்டு ‘ஹெல்மெட்’ அணிந்துவந்தஆசாமிகள்வெறிச்செயல், 12-04-2014.
[2]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/04/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE/article2163505.ece
[3] http://www.dailythanthi.com/2014-04-11-Mixed-marriages-Kanyakumari-News
[4]மாலைமலர்,நாகர்கோவில்: இளம்பெண்ணைஓடஓடஅரிவாளால்வெட்டியவாலிபர்கள், 11-04-2014
[5] http://www.elections.tn.gov.in/pdf/dt30/ac230/ac230227.pdf
[6] http://www.seithy.com/breifNews.php?newsID=107441&category=IndianNews&language=tamil
[7] http://www.tutyonline.net/view/31_65505/20140412183413.html
[8] http://www.maalaimalar.com/2014/04/11123725/young-women-attack-the-person.html
[9] http://www.tutyonline.net/view/31_65505/20140412183413.html
[10] http://www.maalaimalar.com/2014/04/11123725/young-women-attack-the-person.html
Explore posts in the same categories: இந்து-முஸ்லிம், காதல், சமீரா பானு, சமீராபானு, பானு, வெட்டிக் கொலை, ஷமீரா பானு, ஷமீராபானுகுறிச்சொற்கள்: இந்து, இஸ்லாம், கல்யாணம், காதல், குத்து, கொலை, சமீரா பானு, சமீராபானு, திருமணம், பட்டாரி தெரு, மநாகர் கோவில், ராஜாராம், வெட்டு, ஷமீரா பானு, ஷமீராபானு
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்