Posted tagged ‘கலவி-சரச வீடியோ’

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

மார்ச் 30, 2010

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

ஒரு சவுதி மந்திரவாதி!

பெண்களை மந்திரத்தாலே வசியப் படுத்துவதில் வல்லவனாம்!

அவ்வாறே அவன் வசியப் படுத்தி நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்து விட்டானம்!

ஒரு பத்திரிக்கை சொல்வதென்னவென்றால், “காதிஃப் மந்திரவாதி” (the “Qatif sorcerer”) முதலில் பத்தாண்டு சிறைவாசம் மற்றும் 1000 கசையடி என்று தண்டனை அளிக்கப் பட்டதாம். பிறகு அது மரண தண்டனையாக மாற்றப் பட்டதாம்!

அல்-ரியாத் நாளிதழ் சொல்வதவது, அந்த அடையாளம் தெரியாத மனிதன் காதிஃப் என்ற கிழக்கு நகரத்தில் இருந்து பெண்களை பல ஆண்டுகளாக மிரட்டி பயமுறுத்தி வந்தானாம்.

முதலில் எந்த பெண்ணவது “காதல் மந்திரத்தால் கட்டுப் பட்டிருந்தால்”, அக்கட்டை பிரித்துவிடுவேன் என்று ஆசைக்காட்டுவானாம். அப்படி அவர்கள் – காதல் கட்டுண்ட பெண்கள், தங்களது “காதல்-மந்திர-கட்டை” அவிழ்க்க வரும்போது, இவன் அவிழ்த்து லீலைகள் புரிவானாம். அதுமட்டும் அல்லாது நமது லெனின் குருப் / குருப் லெனின் மாதிரி திருட்டுத் தனமாக வீடியோவையும் எடுத்து விடுவானாம்!

பிறகு அதை தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்னிடம் காட்டி மிரட்டி தனக்கு தன்னுடைய “மந்திரத் தொழிலில்” உதவுமாறு வற்புறுத்துவானாம். அதாவது அப்படியே மற்ற பெண்களை அங்கு அழைத்து வருவது, இவன் கற்பழிப்பது என்று உதவி செய்யத் தூண்டி மிரட்டுவானாம், அவர்களும் பயந்து கொண்டு அவ்வாறே செய்து வந்தார்களாம், அதாவது பெண்களை அழைத்து வந்து, இந்த காமுகனிடம் மாட்டி வைத்து கற்பழிக்க தோதுவாக இருந்தார்களாம்.

அரபு நியூஸ் சொல்வதென்னவென்றால், அவன் பல கேமராக்களை அவ்வாறு மறைத்து வைத்துள்ளதாகவும், 200ற்கும் மேலாக அத்தகைய கலவி-சரச வீடியோ டேப்புகள், 180 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் விவரங்கள் முதலியவற்றை தன்னுடையா வீட்டில் வைத்திருந்தானாம். [நல்ல வேளை நம்மூர் ஆட்களாக இருந்தால் அதை ரூ. 500/- என்று போட்டு விற்றிருப்பார்கள், பாவம், நக்கீரன் ஜொல்லுவிடுவதும், சன் –  டிவி மூச்சு விடுவதும் தெரிகிறது / கேட்கிறது].

அல்-ரியாத் சொல்வதாவது, அவன் அவ்வாறு 350 மேலாக பல பெண்களை மயக்கியிருப்பான்

கடைசியாக அவன் ஒருவனிடத்தில் மாட்டிக் கொண்டானாம். அதாவது ஒரு பெண் அவனிடத்தில் அகப்பட்டு தப்பி வந்தபோது, அவள் சொன்ன விஷயம் வைத்துக் கொண்டு அவன் பிடிக்கப்பட்டானாம். இவ்வழக்கு சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷனிடத்தில் அனுப்பப் பட்டுள்ளதாம்.

சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் என்பது சவுதி மத-போலீஸார் ஆவார்கள்! அதாவது மததைக் காக்கு  போலீஸார்!

இந்தியாவிற்கும் இத்தகைய போலீஸார் இன்று தேவைப் படுகின்றனர்!