Archive for the ‘பய்ஹான் அல் கம்தி’ category

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

ஒக்ரோபர் 10, 2013

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

சவுதி அரேபிய மதபோதகர்

ஷரீயத்தின்படிதண்டனைக்கொடுக்கப்பட்டது: சவுதி அரேபியாவில், ரியாதில், பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்து வயது மகளை, கொலை செய்த, பிரபல இஸ்லாமிய மத போதகருக்கு, எட்டு ஆண்டு சிறையும், 800 சவுக்கடியும், தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது[1]. உலகம் முழுவதும் இதைப் பற்றி வலுவான கருத்து உரூவானதால், சவுதி அரச குடும்பத்தினரே தலையிட்டு குற்றவாளி வெளிவராமல் செய்ததாகத் தெரிகிறது[2]. மேலும் வேடிக்கை என்னவென்றால், புகார் கொடுத்த அவரது முந்தைய இரண்டாவது மனைவிக்கு 10 மாதங்கள் சிறை மற்றும் 150 சவுக்கடி என்று தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது[3]. ஏனெனில், பெண்ணாகிய இவர் சாட்சியாக நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியம் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியச் சட்டத்தின் படி, ஒரு பெண் சாட்சி கூறமுடியாது. இப்பொழுது ஒரு மில்லியன் ரியால் [one million riyals ($270,000) in ‘blood money’] முந்தைய இரண்டாவது மனைவிக்குக் கொடுக்கப் படவேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  தலாக் / விவாகரத்து செய்யப் பட்ட இவர் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். தனது அந்த குழந்தைகளைப் பற்றியும் கவலைப் படுவதாகக் கூறுகிறார். அதனால், அரசுதான் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மகளைக்கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்கொன்றஇஸ்லாமியமதபோதகர்: சவுதி அரேபியாவை சேர்ந்தவர், பய்ஹான் அல் கம்தி [Fayhan al-Ghamdi]. முஸ்லிம் மத போதகரான இவர், அந்நாட்டு “டிவி’ நிகழ்ச்சிகளில், மத போதனைகள் செய்து வந்தார். அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் லாமாவை அவர் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

  • மண்டயோடு நொறுங்கியிருந்தது,
  • விலா எலும்புகள் உடைந்திருந்தன,
  • ஒரு நகம் பிய்க்கப்பட்டிருந்தது,
  • உடலில் பல இடங்களில் அடித்ததாலும்-
  • தீயினால் சுட்டதாலும் காயங்கள் இருந்தன.

டிசம்பர் 25, 2011 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு 2012 அக்டோபர் மாதம் பலியானார்[4]. வயர்கள் மற்றும் கொம்பு முதலியவற்றை உபயோகப் படுத்தி அடித்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த பஹ்யான் லாமாவின் தாய்க்கு “ரத்தப் பணம்” என்ற இழப்பீடு கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்[5].

லாமா என்ற அந்த குழந்தை

லாமா என்ற அந்த குழந்தை

ஷரீயத்மற்றும்சட்டகுழப்பங்கள்: இவர், தன், எட்டு வயது மகளை, பல முறை பலாத்காரம் செய்து இறுதியில் கொலை செய்து விட்டதாக, மாஜி மனைவியான, குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், தமாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமாதிக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. “தமாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என, பலரும் குரல் கொடுத்துள்ளனர். “குழந்தையின் தாய், நஷ்ட ஈடு கோரியுள்ளதால், தமாதிக்கு மரண தண்டனை விதிக்க இயலாது’ என, கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஷரீயத்தின் படி, “ரத்தப் பணம்” கொடுக்கப் பட்டால், பெண் வாங்கிக் கொள்ளவேண்டும், தண்டனை அதோடு முடிந்து விடும். இதைத்தான் சவூதி ஊடகங்கள் கூறுகின்றன[6].

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

ஷரியத்தின் நிலைமை: ஷரீயத்தின் படி, ஒரு பெண், ஆணுக்கு எதிராக சாட்சியம் சொல்ல முடியாது. அதிலும் கற்பழிப்பு வழக்கில் சொல்லமுடியாது. கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டாலும், இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தில் படி ஆட்சி நடக்கும் அங்கு மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு மற்றும் குழந்தைகளைக் கொல்லும் தகப்பன்களுக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது[7]. “ரத்தப் பணம்” அல்லது இஸ்லாமிய இழப்பீடு பணம் கொடுக்கப் பட்டால், ஆண்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. இந்த வழக்கில் கூட, முந்தைய மனைவி பணத்தைப் பெற்றுக் கொண்டதால், சிறையிலிருந்து பய்ஹான் அல் கம்தி வெளியே வரக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

பய்ஹான் அல்-கம்தி

பய்ஹான் அல்-கம்தி

சவுதிசமூகத்தொண்டர்களின்அதிருப்தி: இதனால், ரண்டா அல்-கலீப் [Randa al-Kaleeb], அஜீஜா அல்-யூசுப் [Aziza al-Yousef], மனல் அல்-செரீப் [Manal al-Sharif ] போன்ற சமூகதொண்டர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்[8]. “ஒன்று அவனுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்குப் படிப்பினையாக இருந்திருக்கும்”, என்று கூறினர். பய்ஹான் அல் தமாதி தனது மகளின் கற்புப் பற்றி சந்தேகப்பட்டதால் (அதாவது அவள் தனது கன்னித்தன்மையை இழந்து கொண்டே இருக்கிறாள் என்று சந்தேகம் வந்ததாம்[9]), அவளை கொடுமைப் படுத்தி, கற்பழித்திருக்கிறான், என்று பாகிஸ்தானிய ஊடகம் கூறுகின்றது[10].

© வேதபிரகாஷ்

10-10-2013


[2] After the case attracted international attention, members of the Saudi Arabia’s Royal Family are now believed to have blocked al-Ghamdi’s release and ensured that a stronger sentence is upheld.

http://www.dailymail.co.uk/news/article-2277437/Saudi-celebrity-cleric-raped-murdered-daughter-claimed-injured-doubted-virgin.html

[3] Ghamdi’s second wife, accused of taking part in the crime, was sentenced to 10 months in prison and 150 lashes, said Rasheed, who is lawyer for the girl’s mother. Ghamdi was convicted of “raping and killing his five-year-old daughter Lama,” he added.

[6] Albawaba News reported the judge as saying: ‘Blood money and the time the defendant had served in prison since Lama’s death suffices as punishment.’But the Saudi Justice Ministry responded saying that the cleric was still in prison and that the case was continuing. The death penalty is thought to be unlikely in this case.

[9] It was reported that al-Ghamdi had suspected his daughter of losing her virginity and had beaten her and molested her in response.  http://www.bbc.co.uk/news/world-middle-east-24438375