Posted tagged ‘இளவரசன்’

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

Puzhal jail

Puzhal jail

புழல் சிறையில் பயங்கரமான குற்றவாளிகள் இருப்பது, போலீஸார் குறைவாக இருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை  பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய   பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2].  அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

Puzhal attacked -Puthiya thalaimurai - 25-09-2015

Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015

கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள் எப்படி வசதிகளை சிறைகளில் அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

Puzhal police attacked - chennai patrika- 25-09-2015

Puzhal police attacked – chennai patrika- 25-09-2015

முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர்   இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7].  அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].

Puzhal attacked police admitted in Hospital - 25-09-2015

Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015

ஜாகிர் உசேனை சிறையிலேயே அல்உம்மா ஆட்கள் அடித்தது ஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து ஜெயிலர் இளவரசனை தாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர்  இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த  ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார்.  அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர்.  ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை  இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம்  அடைந்தனர்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  Vivek Narayanan, Shortage of personnel hits secuirity at Puzhal prison, The Hindu, September.27, 2015.

[2] https://islamindia.wordpress.com/2013/10/05/tn-police-clash-with-jihadis-in-ap-one-policeman-killed/

[3]https://islamindia.wordpress.com/2010/07/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/

[4] தினத்தந்தி, புழல் சிறையில் வார்டன் மீது தாக்குதல்:கைதிகள் 6 பேர் வேறு சிறைக்கு மாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST

பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.

[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[7]  தினமணி, புழல் சிறையில் கைதிகள்காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர், By  சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/09/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/article3047911.ece

[9] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=169216