Archive for the ‘கடலூர்’ category

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

ஏப்ரல் 8, 2023

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது; தமிழகத்தில் கட்டிடத் தொழில் பெருகப் பெருக “வட மாநிலத்தவர்” என்ற போர்வையில் லட்சக்கணக்கில் வேலையாட்கள் வந்து குவிகின்றனர். சென்னையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவது, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வது என்பது பலநிலைகளில் நடந்து வருகிறது. அதில் அரசியல் அதிகமாகவே செயல் பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து, “வட மாநிலத்தவர்” போர்வையில் பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது, நிச்சயமாக எல்லாவிதங்களிலும் பிரச்சினை, சட்டமீறல் மற்றும் பெருங்குற்றமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அடக்கி வாசிக்கிறார்கள். ஊடகங்களும் அதனை அமுக்கி விடுகின்றனர் எனலாம். பாலியல் பிரச்சினையில் காட்டும் அளவு கடந்த பாரபட்சம் இதில், இன்னும் பலமடங்குக் காட்டப் படுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குற்றங்கள் அதிகரித்து, கைதாவது அதிகமாகி, அரசாங்க ரீதியில் பதிவாகி வருகின்ற நிலையில் உண்மைகளை மறைக்க முடியாத நிலைக்கும் வந்தாகி விட்டது. ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்றால் வேலைகளே ஸ்தபித்து விடும் என்ற நிதர்சனத்தையும் முதலாளிகள் உணர்ந்து, அந்த உண்மையினை வெளிப்படையாகச் சொல்லவும் செய்து விட்டனர்.

தமிழகத்தவர் ஏன் வேலை செய்வதில்லை?: இருப்பினும், தமிழகத்தில் உள்ளோர் அந்த வேலைகளை ஏன் செய்வதில்லை, செய்ய விரும்பவில்லையா, அத்தகைய மனப்பாங்கு ஏன் உள்ளது போன்ற கேள்விகளும் எழுகின்றன. குறைந்து கூலிக்கு நிறைய வேலை செய்கின்றனர் என்பதை விட அவர்கள் அவ்வாறு செய்யும் பொழுது, இங்குள்ளவர் ஏன் செய்ய முடியாது என்பது தான் முக்கியமான கேள்வியாகிறது. பள்ளி-கல்லூரிகளில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, சினிமா-பொழுது போக்கு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவது, பொழுது போக்குவது, பெற்றோர், பெரியவர், ஆசிரியர்கள் முதலியவர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை தான் தினம்-தினம் நிகழ்ச்சிகளாகி, அவை ஊடகங்களிலும் தாராளமாகவே, விவரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிறகு, இளைஞர்கள் அவற்றிற்கு வ்ருத்தப் பட வேண்டாமோ, தங்களை மாற்றிக் கொள்ள உடனடியாக திருந்தும் வழிகளை நாட வேண்டாமோ? ஆனால், அத்தகைய குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. போதை மருந்து, குடி, செக்ஸ், சினிமா, பொழுதுபோக்கு என்றவற்றில் தான் அவர்கள் உழன்று, தங்களை சீரழித்து, மற்றவர்களை கெடுத்து வருகின்றனர்.

டிசம்பர் 2006ல் எண்ணூரில் வங்கதேசத்தவர் கைது: சென்னை அருகே உள்ள எண்ணூர் படகில் வந்தவர் மீது சந்தேகம் எழ, அவர்களை நிறுத்தினர். அந்தப் படகுகளை வளைத்துப் பிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்[1]. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது[2]. இவர்கள் பிடிபட்டது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், மத்தியபுலனாய்வுப் படையினரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 பேரும் மாலத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் திசைமாறி இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாமோ என்றசந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து 16 பேரிடமும் போலீஸாரும், மத்திய புலனாய்வுப் படையினரும் துருவித் துருவி விசாரணைநடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பிப்ரவரி 2020ல் 40 வங்கதேசத்தவர் திருப்பி வைக்கப் பட்டனர்: முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்[3]. இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்[4]. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கோ பங்களாதேசத்தவர் பலமுறைகளைக் கையாள்கின்றனர் என்று தெரிகிறது. பொதுவாக, பங்களாதேசத்திலிருந்து, மேற்கு வங்காளத்தில் நுழைவது, அங்கிருந்து, அஸ்ஸாம் மூலம் பல மாநிலங்களுக்குப் பரவி செல்வது போன்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்.

வங்கதேசத்தவர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்ததுதொடர் விசாரணை: இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் போலி பாஸ்போர்ட்டுடன் இருவர் பிடிபடுதல்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

செயல்படும் விதம், திட்டம் மற்றும் முடிவுகள்: பங்களாதேசத்திலிருந்து “வொர்க் மர்மிட்” வாங்கிக் கொண்டு மேற்கு வங்காளத்திற்குள் வேலைக்கு வருகின்றனர்.

காலை வேலைக்கு வந்து மாலையில் திரும்பி சென்று விடவேண்டும்.

ஆனால், தினம்-தினம் ஆயிரம் பேர் வந்தால் 100-200 பேர் தங்கி விடுகின்றனர், மறைந்து விடுகின்றனர்>…..

மேற்கு வங்காளத்திற்குள் தங்கியவர்கள் முதலில் ஆதார், ரேஷன், பேன் என்று கார்டுகளை வாங்கி, ஓட்டர் ஐடியையும் வாங்கி விடுகின்றனர்

மேற்கு வங்காளத்திலிருந்து பிறகு மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

இவர்களிடம் இரண்டு நாடுகள் அடையாள அட்டைகளும் இருக்கின்றன. இதனால், சகஜமாக செயல்பட்டு வருகிறனர்.

இவர்களில் உண்மையில் பிழைப்பிற்கு வேலை செய்பவர் யார், கடத்தல்கார்ர்கள் யார், தீவிரவாதிகள் யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சென்று / செயல்பட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் ஊடுறுவல்: 16 வங்கதேசத்தவர் கைது, By Staff Published: Saturday, December 16, 2006, 5:30 [IST]

[2] https://tamil.oneindia.com/news/2006/12/10/arrest.html?story=2

[3] தமிழ்.இந்து, சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியதாக 40 வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பிய போலீஸார்: போலி பாஸ்போர்ட்டுடன் சென்னையில் 2 பேர் சிக்கினர், செய்திப்பிரிவு, Last Updated : 12 Feb, 2020 10:10 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/539183-police.html

ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பிப்ரவரி 16, 2018

ஐசிஸ் தொடர்புஅன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?

Indian Muslim youth become ISIS supporters, warriors

14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.

Isis, Tamilnadu links, arrests 2017-18

தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “.எஸ்..எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..எஸ்..எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?

shahul-hameed-chennai-arrested-by-nia-and-khaja-moideen

முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது[13].

nasser-who-designed-isis-flag-is-from-chennai

.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த .எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் .எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே .எஸ். தீவிரவாத  அமைப்புக்கு நிதி  திரட்டி கொடுத்துள்ளான்மேலும் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான்  என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள .எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].

swalih-was-settled-in-chennai-for-some-time-now-with-wife-and-2-year-old-son

இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

16-02-2018

Isis, Tamilnadu links, Haja Fakrudeen

[1] நியூஸ்7, கைதான .எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency

[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30

[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/

[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published :  14 Feb 2018  07:51 IST; Updated :  14 Feb 2018  11:00 IS

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece

தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html

[9] தினமணி, .எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863616.html

[10] தினமலர், .எஸ்..எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018  02:18.

 

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705

[12] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[14] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[16] வேதபிரகாஷ், மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.

https://islamindia.wordpress.com/2017/09/23/isis-funder-from-chennai-arrested-by-nia-more-jihadis-in-south/