ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?
ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?
அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?
14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.
தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?
முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது”[13].
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளான். மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது”[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].
இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
16-02-2018
[1] நியூஸ்7, கைதான ஐ.எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018
[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency
[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30
[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/
[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published : 14 Feb 2018 07:51 IST; Updated : 14 Feb 2018 11:00 IS
[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece
தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html
[9] தினமணி, ஐ.எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.
[10] தினமலர், ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018 02:18.
[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705
[12] தினத்தந்தி, ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது – தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.
[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf
[14] தினத்தந்தி, ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது – தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.
[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf
[16] வேதபிரகாஷ், மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.
Explore posts in the same categories: அன்சார், அன்சார் மீரான், அம்பத்தூர், அல் - உம்மா, கடலூர், காஜா, காஜா மொஹிதீன், ஹாஜா பக்ருதீன்குறிச்சொற்கள்: அன்சார் மீரான், அம்பத்தூர், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், காஜா, காஜா மொஹிதீன், சாகுல் ஹமீது, பக்ருதீன், ஷாகுல் ஹமீத், ஹாஜா, ஹாஜா பக்ருதீன், ஹாஜா மொய்தீன்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்