இந்து மதத் தலைவர்களைக் கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா – இது விவாதத்திற்கு உரியது என்பதால், ஆசிப் முஸ்தஹீன் விடுதலை!
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/killing-hindu-leaders-not-terrrist-act-madras-high-court-the-commune-13-12-2023.jpg?w=730)
இந்து மதத் தலைவர்களை கொல்லப் படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா: இந்து மதத் தலைவர்களை கொல்லப்படுவது மட்டுமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது[1]. பிறகு அத்தகைய குரூர எண்ணத்தை என்னவென்று குறிப்பிடுவது என்று நீதிமன்றம் தான் விளக்க வேண்டும். குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் “culpability of mind” இருந்ததா-இல்லையா என்று ஆராய வேண்டும் என்று நீதிமன்றங்களில் பலமுறை வரையருக்கப் பட்ட சட்டமுறையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர்[2]. மேலும், பெயிலுக்கு கொடுத்த மனுவை ஏற்று, ISIS அனுதாபி என்று கூறப்படும் ஒருவரின் ஜாமீன் மனு, மேலும் சமீபத்தில் பல நிபந்தனைகளுடன் அவரை விடுதலை செய்தது[3]. இது பிடிஐ செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வெளிவந்துள்ளது. ஆனால், தமிழகத்து செய்தியானாலும், தமிழ் ஊடகத்தில் இன்னும் வெளி வரவில்லை.
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/killing-hindu-leaders-not-terrrist-act-madras-high-court-news18-13-12-2023.jpg?w=730)
ஐசிஸ் உறுப்பினர் என்று எடுத்துக் காட்டப் படவில்லை: மேல்முறையீடு செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தஹீன், தான் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக விரும்பினார் என்பது அரசுத் தரப்பு வழக்கு[4] என்று தெரிகிறது. மற்றொரு குற்றவாளியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்[5] என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே அரபு மொழியில் வரும் செய்திகள், அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொல்ல விரும்புவதாகவும் காட்டுவதாக அது வாதிட்டது[6]. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act,] 18 மற்றும் 38(2) பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று அரசு தரப்பு சமர்பித்தது. இருப்பினும், குறுஞ்செய்திகளில் மேல்முறையீடு செய்தவர் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் கூறியது[7]. அதாவது, ஐசிஸ் உறுப்பினர் என்றால் தான் குற்றவாளி ஆவான் போலிருக்கிறது.
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/isis-sympathizer-not-terrorist-13-12-2023.jpg?w=730)
நெருக்கமாக இருப்பதால் மட்டும் தீவிரவாதியாகி விட முடியாது: “A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் எந்த ஆதாரமும் இல்லை. A2 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று வைத்துக் கொண்டாலும், குறுஞ்செய்திகள் மேல்முறையீடு செய்பவர்/A1 A2 க்கு அருகில் இருக்க விரும்புவதாக மட்டுமே குறிப்பிடுகிறது[8]. ஒரு தனிநபரின் அருகாமை என்பது, பயங்கரவாத சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புகொள்வது அல்லது அதனுடன் தொடர்புடையதாகக் கூறுவது வேறுபட்டது,” என்று பெஞ்ச் கூறியது[9]. தகவல்தொடர்புகளைத் தவிர, இரண்டு கத்திகள் மற்றும் மேல்முறையீட்டாளர் கத்தியை வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்திருக்கும் படம் ஆகியவற்றைப் பிரதிவாதி பொலிசார் நம்பியுள்ளனர்[10]. ஆனால், அவர் அத்தகைய கொலையாளியா என்றெல்லாம் நிரூபிக்கவில்லை என்றும் வாதல் தொடரும் போலிருக்கிறது.
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/is-killing-hindu-religious-leaders-terrorist-act-the-hindu-15-12-2023.jpg?w=809)
ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி: யுஏபிஏ பிரிவு 18ன் கீழ் உள்ள குற்றத்தைப் பொறுத்தவரை, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களுக்கு எதிராக இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய ஏ1 மற்றும் ஏ2 சதி செய்ததாக இறுதி அறிக்கையில் அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது[11]. “சில மதத் தலைவர்களைத் தாக்க சதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. UAPA வின் 15வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அது எப்படி ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்பதை பிரதிவாதி குறிப்பிடவில்லை[12]. UAPA இன் 15வது பிரிவின் கீழ் ஒரு சட்டத்தை கொண்டு வர, அந்தச் செயல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்[13]. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள மக்களிடமோ அல்லது எந்தப் பிரிவினரிடமோ பயங்கரவாதத்தைத் தாக்குவது, என்ற ரீதியில் தீவிரவாதம் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது[14].
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/killing-hindu-leaders-not-terrrist-act-isis-13-12-2023.jpg?w=730)
“இந்து மதத் தலைவர்கள் கொல்லப்படுவது மட்டுமே ஒரு பயங்கரவாதச் செயலாக அமையுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது[15]. எவ்வாறாயினும், வழக்கின் பரந்த நிகழ்தகவுகளைக் கருத்தில் கொண்டு, வழக்குத் தொடுத்துள்ள பொருட்களிலிருந்து, தீவிரமான குற்றங்கள் உட்பட பிற சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சதி இருந்தபோதிலும், பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதித்திட்டம் இருந்தது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் மேலும் கூறியது[16]. எவ்வாறாயினும், “யுஏபிஏவின் பிரிவுகள் 18 மற்றும் 38(2) இன் கீழ் முதன்மையான வழக்கு தொடர்பான தீவ்ரமான அம்சங்கள் வழக்கின் பரந்த சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும், ஜாமீன் விண்ணப்பத்தை பரிசீலிப்பதன் மூலமும் மட்டுமே செய்யப்படுகின்றன.” அரசு தரப்பில் என்ன வாதாடினார்கள் என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அரசு தரப்பு வக்கீலுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை முறையாக அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்றால், இவ்வாறே ஓட்டைகளை உபயோகித்து விடுதலை பெற்று சென்று விடலாம். பிறகு, கைது செய்யப் பட்டது ஆதாரங்களை சேகரித்தது என்பதெல்லாம் வேஸ்ட் தான்.
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/killing-hindu-leaders-not-terrrist-act-madras-high-court-amar-ujala-13-12-2023.jpg?w=730)
நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை: ஈரோடு உள்ளூர் நீதிமன்றத்தால் இதேபோன்ற மனு நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு விடுதலை அளித்தது, பத்திரத்தை நிறைவேற்றும்படியும், தலா ரூ. 50,000 போன்ற தொகைக்கு இரண்டு ஜாமீன்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது, அதில் ஒன்று இரத்த உறவினரால் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஈரோட்டில் தங்கி இருக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இனி ஈரோடில் அவன் சுதந்திரமாகத்தன் திரிந்து கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களில் எல்லாம் மறந்து விடும். இப்பொழுதே தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.
© வேதபிரகாஷ்
16-12-2023
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/isis-sympathizer-not-terrorist-madras-hc-13-12-2023.jpg?w=730)
[1] The South First, Considering killing of Hindu religious leaders as terrorist act is ‘debatable’: Madras HC while granting bail to alleged ISIS sympathizer, BY PTI, Published:15/12/2023 11:54 am.
[2] https://thesouthfirst.com/tamilnadu/considering-killing-of-hindu-religious-leaders-as-terrorist-act-is-debatable-madras-hc-while-granting-bail-to-alleged-isis-sympathiser/
[3] Times of India, Targeted killing of Hindu neta not terrorist act: Madras HC, Suresh Kumar / TNN / Dec 14, 2023, 02:16 IST.
[4] https://timesofindia.indiatimes.com/india/targeted-killing-of-hindu-neta-not-terrorist-act-madras-hc/articleshow/105971027.cms?from=mdr
[5] Times Now, Is targeted killing of Hindu neta an act of terror? Madras HC says it id debatable, TN National Desk, Updated: Dec 14, 2023, 10:20 AM IST.
[6] https://www.timesnownews.com/india/is-targeted-killing-of-hindu-neta-an-act-of-terror-madras-hc-says-its-debatable-article-105975897
[7] The Week, Madras HC grants bail to alleged ISIS sympathizer, PTI Updated: December 14, 2023 20:03 IST.
[8] https://www.theweek.in/wire-updates/national/2023/12/14/lgm4-tn-hc-isis.html
[9] Bar and Bench, Is conspiring to kill Hindu religious leader a terrorist act under UAPA? Madras High Court asks, Ayesha Arvind, Published on: 13 Dec 2023, 7:28 pm.
[10] https://www.barandbench.com/news/is-conspiring-kill-hindu-religious-leader-terrorist-act-uapa-madras-high-court
[11] Law trend, Madras HC grants bail to alleged ISIS sympathiser, By PTI News December 14, 2023 8:40 PM.
[12] https://lawtrend.in/madras-hc-grants-bail-to-alleged-isis-sympathiser/
[13] Indian Express, Plot to kill religious leaders: Accused gets bail, HC asks if act is terror under UAPA, Written by Arun Janardhanan, Chennai | Updated: December 15, 2023 03:33 IST
[14] https://indianexpress.com/article/cities/chennai/plot-to-kill-religious-leaders-accused-gets-bail-hc-asks-if-act-is-terror-under-uapa-9068828/
[15] Rediff.com, Is killing Hindu leaders a terrorist act asks HC, grants bail to pro-ISIS man, Source: PTI – Edited By: Senjo M RDecember 14, 2023 21:40 IST
[16] https://www.rediff.com/news/report/is-killing-hindu-leaders-a-terrorist-act-asks-hc-grants-bail-to-pro-isis-man/20231214.htm
![](https://islamindia.wordpress.com/wp-content/uploads/2023/12/isis-sympathizer-not-terrorist-hc-13-12-2023.jpg?w=730)
அண்மைய பின்னூட்டங்கள்