Posted tagged ‘போதை மருந்து தயாரிப்பு’

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

மே 23, 2024

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவுக்குப் பிறகு அமலாக்கத் துறை விசாரணை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு (NCB) விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத் துறை (ED) சோதனை-விசாரணை தொடர்ந்து வருகிறது. அயல்நாட்டு எச்சரிக்கை மூலம், இக்கும்பல் பிடிபட்டிருப்பதால், அயல்நாட்டு தொடர்புகளும் கண்காணிப்பில் எடுத்து வந்து, அம்பந்த[ப் பட்ட அதிகாரிகள் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர். வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் (ED) விசாரணை நடத்தினர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்[2]. முதலில் ஒத்துழைப்பில்லாமல் இருந்தது என்று சொல்லப் பட்டது. வீட்டிற்கு சீல் வைக்கப் பட்டது, ஒட்டிய அறிக்கை தாயாரால் கிழிக்கப் பட்டது என்றும் செய்திகள் வந்தன. ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்[3]. ஆனால், விவரங்கள் தெரியவில்லை.

ஜாபர் சாதிக் சகோதரர் சலீமிடம் விசாரணை: ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் வக்குமூலம் பெற்றப் பிறகு, அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக், சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 23, என்பவரிடம், நேற்று முன்தினம் [21-05-2024], ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்[4] என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டாலும், அவையெல்லாம் ரத்தின சுருக்கமாகவே இருக்கின்றன. பணபறிமாற்றம் பற்றிய விவரங்கள் கேட்கப் பட்டது. நேற்றும் [22-05-2024] இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்[5]. அப்போது, வங்கி கணக்கு விபரங்களை சலீம் தாக்கல் செய்தார்[6]. அதில், சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனைகள் குறித்து, அதிகாரிகள் கேட்டனர்[7]. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என, நிதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்[8]. அந்த வெளிநாட்டு நபர்கள் யார், சலீமுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு[9], இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் சலீமுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏன்[10], ஜாபர் சாதிக்குடன் கைதாகி சிறையில் உள்ள சதானந்தம் வங்கி கணக்கிற்கு[11], பணம் அனுப்பி இருப்பது ஏன்[12], அது போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணமா என[13], அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, சலீமிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது[14].

சலீம் கூட்டாளிகளுக்கு நிச்சயமாக சம்பந்தம் இருக்கத்தா செய்யும். இருப்பினும் விவரங்கள் தெரியவில்லை. இவையெல்லாம் எப்படி தமிழகத்தின் மூலம் நடந்தேறியுள்ளது என்று நினைக்கும் பொழுதும் அதிர்ச்சியாக உள்ளது. 15,000 கோடி இந்த போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் புழங்குவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில், இதைப் பற்றி, சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் அரசியல் தான் பேசப் பட்டு வருகிறது. ஆனால், போதை விசயமாக இளைஞர்கள் அடித்துக் கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது, போன்ற செய்திகள் அதிகமாகிக் கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளது: அப்போது, ‘உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்[15]. அது பற்றி தனக்கு தெரியாது என அமீனா பானு தெரிவித்துள்ளார்[16]. ‘உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா’ என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியுள்ளார். ‘இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், ‘வாட்ஸாப்’பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. ‘இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு, சைபர்-கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு அனுப்பப் பட்டு, சோதிக்கப் படுமா, அவர்களது, மின்னணு சாதங்கள் எல்லாம் முறைப்படி சோதிக்கப் படுமா என்றெல்லாம் தெரியவில்லை. இடையிடையே நேரம் கொடுக்கப் படும் நிலையில், அத்தகைய ஆதாரங்களை எல்லாம் அவர்கள் எளிதாக அழித்து விடுவர் என்பது, பெரிய விசயமே இல்லை.

அப்துல் பாஷித் புஹாரிக்குசம்மன்: ஜாபர் சாதிக்கிடம், மார்க்க நெறியாளர் என, இயக்குனர் அமீரால் அறிமுகம் செய்யப்பட்ட அப்துல் பாஷித் புஹாரி என்பவருக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்[17]. இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரர் மைதீன், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நடித்தார்[18]. அவர் வாயிலாக, இயக்குனர் அமீருக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[19]. அந்த பணமும் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்தது என, கூறப்படுகிறது[20]. மைதீன் தலைமறைவாக உள்ளார். அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவ்வாறு, பல வேலைகள் தாமதமாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என்று காலம் / மாதங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிப்பது: பொதுவாக விசாரணைக்கு அழைக்கப்படுபவர் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை உட்கார வைத்து, சட்டப்படி உள்ள பிரிவுகளை எல்லாம் எடுத்து கூறி விளக்கி வாக்குமூலம் பெறப்படும். அப்பொழுது விசாரிக்கும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள், மற்ற ஆதாரங்களை காண்பித்து கேள்விகளை கேட்பர், அதற்கு விசாரிக்கப் படுபவர் விளக்கத்தை கொடுப்பார். விசாரணை பொதுவாக சமூகமான முறையில் தான் சென்று கொண்டிருக்கும். சில நேரங்களில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அடம் பிடிக்கின்ற வழக்கம் இருக்கிறது. விசாரணை நடந்த பிறகு, எழுத்து மூலம் வாக்குமூலத்தை பெற்ற பிறகு, அவர் ககையெழுத்து வாங்கப்படும். இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கப் படும். அதன் நகலு கொடுக்கப் படும். கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் எல்லாம், நினைத்தால் நிச்சயமாக அந்த நகலை பெற்று அல்லது அவர்களுக்கு சாராம்ம்சங்களை வெளியிடலாம். குறிப்பாக நக்கீரன் போன்ற பெரிய புலி போல வேலை விசாரணை வல்லுனர்கள் மைனமாக இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-05-2024


[1] தினகரன், போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை, May 22, 2024, 1:20 am.

[2] https://www.dinakaran.com/narcotics_illegalmoney_transfer_jabersadiq_brother_investigation/

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ‛‛அமலாக்கத்துறையிடம் ஆஜரான ஜாபர் சாதிக்கின் சகோதரர்’’.. ரூ.2000 கோடி தொடர்பாக தீவிர விசாரணை, By Nantha Kumar R Updated: Tuesday, May 21, 2024, 12:59 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/ed-sends-summon-to-summon-to-jaffer-sadiqs-brother-for-appearing-on-enquiry-today-607457.html

[5] தமிழ்.நியூஸ்.18, போதைப் பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக் சகோதரரிடம் 3 மணி நேரம் விசாரணை!, FIRST PUBLISHED : MAY 21, 2024, 6:55 PM IST; LAST UPDATED : MAY 21, 2024, 6:55 PM IST.

[6] https://tamil.news18.com/tamil-nadu/jaffer-sadiqs-wife-appears-before-ed-quizzed-for-3-hours-1461549.html

[7] இ.டிவி.பாரத், ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை! – Jaffer Sadiq Case, By ETV Bharat Tamil Nadu Team, Published : May 22, 2024, 4:16 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/chennai-ed-department-is-interrogating-jaffer-sadiq-brother-with-important-documents-in-the-drug-smuggling-case-tns24052204352

[9] தினத்தந்தி, போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை, தினத்தந்தி மே 21, 11:33 pm (Updated: மே 21, 11:3.

[10] https://www.dailythanthi.com/News/State/drug-trafficking-case-enforcement-officials-interrogate-zafar-sadiqs-sister-1106645

[11] மாலைமலர், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் ஆஜர், By Maalaimalar, 21 மே 2024 3:24 PM.

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-brother-appear-in-ed-office-719526

[13] தினமலர், போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் விசாரணை, UPDATED : மே 23, 2024 06:17 AMADDED : மே 23, 2024 01:53 AM,

[14] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-jaffer-sadiq-brother-are-being-investigated-in-the-case-of-drug-smuggling–/3630096

[15] தினமலர், அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை, UPDATED : மே 21, 2024 04:36 AMADDED : மே 21, 2024 04:36 AM

[16] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-did-you-pay-rs-4-crore-to-aamir-interrogation-with-zafar-sadiqs-wife–/3628599

[17] தமிழ்.இந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் சகோதரரிடமும் அமலாக்க துறை தீவிர விசாரணை, Published : 22 May 2024 06:28 AM; Last Updated : 22 May 2024 06:28 AM.

[18] https://www.hindutamil.in/news/crime/1252028-ed-enquires-jaffer-sadiq-brother.html

[19] புதியதலைமுறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை, Webteam, Published on: , 21 May 2024, 5:36 pm,

[20] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/ed-investigates-jaffer-sadiq-s-brother-over-illegal-money-transfer-case

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

ஏப்ரல் 14, 2024

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (2)

அமீர்விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது: அமீர் தொடர்ந்து சொன்னது, “விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னொரு புறம், இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[1]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[2].

அமீரின் சொத்து விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன: இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது[3]. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது[4].

அப்துல் பாஷித் புஹாரியின் பங்கு: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்[5]. மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்[6]. அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, ‘ஜூகோ ஓவர்சீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது’ என்றனர்.

உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி தொடர்பு: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்[7]. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்[8]. சி.எம்.புகாரி மகன் இர்பான் புகாரி ஜாபர் சாதிக் தொடங்கிய சோயா டெலிவரிஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் இர்பான் புகாரி இடையே தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, புகாரி குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் புகாரி என்பவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வியாபார தொடர்பும், குற்றங்கள் நடந்துள்ள நிலையும்: வியாபார தொடர்பு தான், இதனால், தனக்கும் அந்த சாதிக்கின் போதை மருந்து வியாபாரம், கடத்தல் முதலியவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிப்பது போன்றுள்ளது. இருப்பினும், அத்தகைய விவரங்கள் தெரியாமலா / தெரிந்தோ கூட்டு வைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். ஏனெனில், இவையெல்லாம் சாதாரணமாக ஒரு நபர் செய்யக் கூடிய வேலை அல்ல. தொழிற்சாலை போல வைத்து, பலரை வேலைக்கு அமர்த்தி, மிகவும் அதி-எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் செய்து வந்த தொழிலாகும். எல்லாவற்றையும் கடவுள் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. குற்றம் என்று தெரிந்து, அத்தகையக் குற்றங்களை செய்து வரும் நபர்களுடன் தொடர்ந்து, பல ஆண்டுகளாக வியாபார தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ளதும் சாதாரணமான விசயமாகி விடாது. மேலும், போதை மருந்து கடத்தல் பற்றிய எச்சரிக்கையே அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து வந்து, கையும்-களவுமாக கைதும் செய்யப் பட்டிருக்கிறார்கள். 

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[2] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[3] மாலைமலர், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது, By Maalaimalar, 10 ஏப்ரல் 2024 12:17 PM

[4] https://www.maalaimalar.com/news/state/jafarsadiq-director-aamirs-houses-raided-vital-documents-seized-712506

[5] தினமலர், ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு, UPDATED : ஏப் 12, 2024 05:45 AMADDED : ஏப் 12, 2024 05:45 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-ncp-probes-jaffer-sadiq-associates-assets-bank-accounts–/3598702

[7] இடிவிபாரத், சென்னையில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! – Ed Raid At Buhari Hotel Owner House, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 9, 2024, 3:47 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/ed-raid-at-buhari-hotel-owner-house-in-chennai-tns24040903438

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

ஏப்ரல் 14, 2024

போதை மருந்து தடுப்புத் துறைக்குப் பிறகு, அமுலாக்கத் துறையினரும் ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தப் பட்டவர்களின் இடங்களில் சோதனை! (1)

04-02-2024 முதல் 09-04-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-03-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

02-04-2024 – அமீர் தில்லியில் ஆஜர்.

09-04-2024 – காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை.

போதை மருந்து பிடிபட்ட பிறகு ஜாபர் சாதிக் உட்பட கைது: உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் 15-02-2024 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் 09-03-2024 அன்று கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி NCB அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து ஜாபர் சாதிக்கின் வியாபார பங்குதாரர்கள் முதலியோரும் சோதனைக்கு உட்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, அது முறைப்படி நடந்தேறி வருகிறது.

02-03-2024 அன்று அமீரிடம் தில்லியில் விசாரணை: முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் 02-04-2024 அன்று சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அமீர் இடையிடையே அறிக்கை விடுவது ஏன்?: அமீர் இடையிடையே அறிக்கை விடுவது போன்ற செயலையும் கவனிக்கலாம். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, தொடர்ந்து அத்தகைய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. ஊடகக்காரர்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளாகப் போட்டு வந்துள்ளார்கள். அதாவது, தொடர்ந்து தான் குற்றமற்றவன், அப்பாவி, தன்னை ஏதோ இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன என்று எடுத்துக் காட்டுவது போல இருக்கிறது. சினிமவில் இருப்பதனால், அத்தகைய சினிமா பாணியில் பிரச்சாரம் போல செய்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், போதை மருந்து என்பது மிகவும் சீரியசான விசயம். அனைத்துலக ரீதியில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சமாசாரம் இல்லை. எனவே, அப்பாவி வேடம் போடுவதினாலோ அத்தகைய வாத-விவாதங்களை வைப்பதினாலோ தப்பித்துக் கொள்ள முடியாது.        

09-04-2024 அன்று சென்னையில் பல இடங்களில் சோதனை: இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்[1]. இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[2]. அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் ராஜன் தெரு உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்[3]. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது[4]. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அமீர் வீடுஅலுவலகங்களில் நடந்த சோதனை: அமீர், “காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது[5]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது[6]. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார்[7]. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார்[8]. அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ”11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான்[9]. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான்[10]. சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது,” என்றார்.

© வேதபிரகாஷ்

13-04-2024


[1] தமிழ்.இந்து, சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை, செய்திப்பிரிவு, Published : 09 Apr 2024 09:13 AM; Last Updated : 09 Apr 2024 09:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1228284-chennai-jaffar-sathik-director-ameer-houses-raided-by-ed-1.html

[3] இடிவி.பாரத், ஜாபர் சாதிக் வழக்கு விவகாரம்; இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலக்காத்துறை சோதனை – ED Raid In Chennai Ameer House, Published : Apr 9, 2024, 9:15 AM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/enforcement-directorate-raids-in-chennai-including-house-of-director-ameer-regards-jaffer-sadiq-drug-smuggling-case-tns24040900907

[5] நக்கீரன், நள்ளிரவு வரை நடந்த ரெய்டுசிக்கலில் அமீர், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/04/2024 | Edited on 11/04/2024.

[6] https://www.nakkheeran.in/cinema/cinema-news/ameer-about-ed-raid-and-ncb-investigation-regards-jaffer-sadiq

[7] விகடன், NCB- தொடர்ந்து ED: ஜாபர் சாதிக், அமீர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!, எஸ்.மகேஷ்- வெ.நரேஷ் குமார்,,Published:09 Apr 2024 3 PM; Updated:09 Apr 2024 3 PM.

[8] https://www.vikatan.com/crime/ed-raid-on-jaffer-sadiq-and-director-ameer-house-and-office-in-chennai

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி வரும் அதே நாளில்! அமலாக்கத்துறை ரெய்டு.. ஜாபர் சாதிக் டூ அமீர் டூ புகாரி! நூல் பிடித்து போன ஈடி, By Shyamsundar I Published: Tuesday, April 9, 2024, 8:03.

[10] https://tamil.oneindia.com/news/chennai/ed-raids-in-buhari-hotel-ameer-house-in-chennai-linked-to-jaffarsadiq-ncb-case-597017.html

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

ஏப்ரல் 4, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (2)

02-04-2024 – தில்லியில் அமீர் ஆஜர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் தி.மு.க நிர்வாகி, சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் கூட்டாளிகளுடன் 09-03-2024 அன்று கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்[1]. ஜாபர் சாதிக் பின்னணி குறித்து டெல்லியிலிருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்[2]. ஜாபர் சாதிக், தமிழ் சினிமாவிலிருக்கும் சிலருடன் தொடர்பிலிருக்கும் தகவல் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது[3]. அதனடிப்படையில் ஜாபர் சாதிக்குடன் நட்பிலிருந்த இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்[4]. அதனால் 02.04.2024 அன்று டெல்லிக்குச் சென்ற அமீர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) அலுவலகத்தில் ஆஜராகினார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இப்பொழுது சில ஊடகங்கள் உஷாராகி விட்டன போலிருக்கிறது. திடீரென்று என்.சி.பி அதிகாரிகளை சந்தித்தோம் என செய்திகளை வாரி வழங்கியிருக்கின்றன.

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: விசாரணையின்போது என்.சி.பி-யின் மூத்த அதிகாரி ஒருவர்தான் அமீரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கேள்விகளுக்கு அமீரும் பதிலளித்திருக்கிறார். சில கேள்விகளுக்கு சென்டிமென்ட்டாக அவர் பதிலளித்தாக என்.சி.பி வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன். என்னை எப்போது வேண்டும் என்றாலும் நீங்கள் விசாரிக்கலாம். என்னுடைய பாஸ்போர்ட்டைக்கூட உங்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளேன்,” என்று அமீர் கூறியதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து என்.சி.பி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.  “இது குறித்து” என்றால், எந்த சென்டிபென்டைப் பற்றி என்று குறிப்பிடவில்லை. “நான் இறைபக்தி நிறைந்தவன். அதனால் இறைவனுக்குப் பிடிக்காத செயலில் ஈடுபட மாட்டேன்…..,” என்றால்< ஈடுபட்டவர்கள் எல்லாம், “இறைபக்தி” இல்லாதவர்களா அல்லது, அவ்ர்கள், “இறைவனுக்குப் பிடிக்கின்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? …..”!

என்.சி.பி அதிகாரிகள் விகடனுடன் பேசினார்களாம்: “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்திய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரித்தபோதுதான் எங்களின் விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர் வந்தார். அதனால் அவரிடம் விசாரித்தோம். எங்கள் பிரிவின் உயரதிகாரி ஒருவர் மட்டும் அமீரிடம் தனியாக சில மணி நேரம் விசாரித்தார். அதில் ஜாபர் சாதிக்குக்கும் அவருக்கும் உள்ள பழக்கம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஜாபர் சாதிக், தன்னுடைய தம்பியை சினிமா மூலம் பிரபலப்படுத்த முடிவு செய்து படம் ஒன்றை தயாரிக்க பணம் கொடுத்ததாக (இறைவன் மகா பெரியவன்) அமீர் பதிலளித்தார். அடுத்து ஜாபர் சாதிக்கும், அமீரும் சினிமா தவிர சில பிசினஸ்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்டோம். அதற்கும் அமீர் பதிலளித்தார். அமீரிடம் ஜாபர் சாதிக்கின் சினிமா தொடர்புகள் குறித்து விசாரித்தோம். அப்போது அமீர், ஜாபர் சாதிக்குக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் சில இயக்குநர்களையும் சினிமா தொடர்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்ததாக பதிலளித்தார். அதன் பிறகுதான் கட்சிரீதியான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பொறுமையாக அமீர் பதிலளித்தார். மறுபடியும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோரி” என்றனர்.

விகடன் கேட்ககேட்க என்.சி.பி அதிகாரிகள் பதில் சொன்னார்களாம்: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு[5], “ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க், தமிழ் சினிமாவிலும் அரசியல் கட்சியிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்ட தி.மு.விலிருந்த முன்னாள் எம்.எல். ஒருவர், சினிமா பிசினஸிலும் ஈடுபட்டு வந்தார். அவருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் சினிமா தொடர்புகள் இருந்திருக்கின்றன. அந்த நிர்வாகியின் மறைவுக்குப் பிறகு அரசியல்வாதி ஒருவருடன், ஜாபர் சாதிக்குக்கு அரசியலைத் தாண்டிய பிசினஸ் தொடர்புகள் இருந்திருக்கின்றன. எனவே, அமீரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அமீருடன் இன்னும் இரண்டு பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவர்கள் ரம்ஜானுக்காக வெளிநாட்டிலிருப்பதால், விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டிருக்கிறார்கள்,” என்றார்[6].

அமீர் ஊடகத்தினரை 2-3 நாளில் சந்திப்பாராம்: அமீரை, தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[7]. இந்த நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது[8]. அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்[9]. இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் “என பதிவிட்டுள்ளார்[10]. இந்த இரண்டு வரி செய்தியும், செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[11]. இரண்டு-மூன்று நாட்கள் என்ன செய்யப் போகிறார் என்றும் யாரும் கேட்கவில்லை, ஆராய்ச்சி செய்யவில்லை[12].

“ரம்ஜான்” சென்டிமென்டுகளா, செக்யூலிரஸமா? எது வேலை செய்கிறது?: விகடன் இப்படி நிரம்பவே “சென்டிமென்டுடன்” வேலை செய்து, புலன் விசாரணை செய்து, நக்கீரனையும் மிஞ்சும் வகையில் விவரங்களை சேகரித்து, செய்திகளாக வெளியிட்டிருக்கிறது. “ரம்ஜான்” சென்டிமென்டுகள் முஸ்லீம்களுக்கு இருக்கும் என்றால், இதே போல சென்டிமென்டுகள் மற்றவர்களுக்கு இருக்காதா என்று தெரியவில்லை. ஒருவேளை, இதில் கூட செக்யூலரிஸம் வேலை செய்கிறது போலும். அதிலும், திராவிடத்துவ செக்யூலரிஸம் அதிகமாகவே வேலை செய்கிறது. ஆகவே, என்.சி.பி, அவர்கள் எல்லோரும் கஞ்சி குடித்து, நோன்பு முடித்து வருவார்கள் போலும், பிறகு, விசாரணை தொடரு போலிருக்கிறது. பொருத்துப் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

© வேதபிரகாஷ்

04—04-2024


[1] நக்கீரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீர் ஆஜர்!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2024 | Edited on 02/04/2024.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/director-aamir-ncb-office-delhi

[3] தமிழ்.நியூஸ்.18, போதைப்பொருள் வழக்குடெல்லி என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்.., FIRST PUBLISHED : APRIL 2, 2024, 12:35 PM IST, LAST UPDATED : APRIL 2, 2024, 2:49 PM IST.

[4] https://tamil.news18.com/national/director-amir-appears-before-ncb-enquiry-1399415.html

[5] விகடன், ஜாபர் சாதிக் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான அமீர்கேள்விகளை அடுக்கிய அதிகாரிகள்!,எஸ்.மகேஷ், Published: 03-04-2024 at 5 PM; Updated: 03-04-2024 at 7 PM.

[6] https://www.vikatan.com/crime/narcotics-control-bureau-officers-investigated-director-ameer-in-drug-case

[7] தினமணி, விரைவில் சந்திக்கிறேன்இயக்குநர் அமீர் பதில், Published on:  03 ஏப்ரல் 2024, 12:04 pm; Updated on: 03 ஏப்ரல் 2024, 12:04 pm.

[8] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Apr/03/see-you-soon-director-aamir

[9] தினத்தந்தி, டெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், ஏப்ரல் 3, 10:57 am (Updated: ஏப்ரல் 3, 11:11 am).

[10] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/ncp-officers-conducted-an-11-hour-intensive-interrogation-of-director-ameer-in-delhi-1100062

[11] ஹிந்துஸ்தான்.தமிழ், Ameer: யாரும் என்னை அழைக்க வேண்டாம்.. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடித்து வரும் அமீர் வேண்டுகோள், Aarthi Balaji, HT Tamil, Apr 03, 2024 08:47 AM IST

[12] https://tamil.hindustantimes.com/entertainment/ameer-first-post-after-returning-from-delhi-investigation-131712113335281.html

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

ஏப்ரல் 4, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் அமீர் சுல்தானுக்கு சம்மன்! ஆஜராகி திரும்பிய அமீர்! (1)

பி.டி. பாணி செய்தியா, செக்யூலரிஸமா?: ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[1], இப்படித்தான் ஒரு வரியில் செய்திகள் வந்துள்ளன[2].. மற்ற விசயங்களுக்கு ஏதோ பெரிய சி.ஐ.டி மாதிரி விவரங்களை அள்ளி வீசும் ஊடகங்கள் இதற்கு, இத்தகைய முறையைப் பின்பற்றுவது பல கேள்விகளை எழுப்புகிறது. சில ஊடகங்கள் முன்னும்-பின்னும் பழைய விவரங்களை சேர்த்துள்ளன[3]. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்[4].  இனி, விவரங்களை அலசுவோம்.

யார் இந்த அமீர்அமீர் சுல்தான்?: தமிழ் ஆர்வலராக இருந்த அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் அட்டூழியங்களைக் கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா, தமிழ் ஆர்வலர் மற்றும் பிற முக்கிய தமிழ் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திரைப்படப் பேரணியில் பங்கேற்றார். 24 அக்டோபர் 2008 அன்று, அமீர் கைது செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு இலங்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது, அமீர் மற்றும் சக இயக்குனர் சீமான் ஆகியோர் இந்திய அரசை விமர்சித்தும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், தீவில் உள்ள தமிழ் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை தெரிவித்தும் உரைகளை நிகழ்த்தினர்.பின்னர் அவர்களது உதவி இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் நடிகர் ஆர்.சரத்குமார் ஆகியோரின் உதவியுடன் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இப்பொழுது, ஜாபர் சாதிக்குடன் வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

2021லிருந்து மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் கடத்தல் வியாபாரம்: மூன்று ஆண்டுகளாக, அதாவது 2021லிருந்து நடந்து வருகிறது  எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. அம்மருந்துகளை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியுமா, வாங்கியவர் மூலங்களை அறிவது கடினமா போன்ற விவரங்களும் தெரியவில்லை. மூன்று வருடங்களில் ஒருசிலரால் செய்யும் காரியமும் இது இல்லை. தொழிற்சாலை, ஆட்கள், வாகனங்கள் என்று பல விவகாரங்கள் உள்ளன. ஏற்ற்மதி என்றால், சுங்க ஆவணங்களே சம்பந்தப் பட்டவர்களின் விவரங்களைக் காட்டிக் கொடுக்கும். இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம், ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது[5]. ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன[6]. பிறகு தான் ஊடகங்களுக்கு தைரியம் வந்தது போலிருக்கிறது. இதில், வேடிக்கையென்னவென்றால், இதே ஊடகத்தினர், ஏன், அதே நிருபர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளைப் பற்றியும் புகைப்படங்களுடன் செய்திகலாக வெளியிட்டுள்ளன. இப்பொழுது, ஒரு வேளை மறைக்க ஆரம்பிக்கின்றன, முயல்கின்றன போலும்.

ஜாதிக்கின் சகோதரர்கள் பிடிபடாமல் இருப்பது எப்படி?: போதை மருந்து பிரிவு நடவடிக்கைகளும் மெதுவாக செல்வது போலிருக்கிறது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[7]. ஆனால், விளைவு என்ன என்று தெரியவில்லை. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள்[8]. இன்னும் அவர்கள் சிக்காமல் இருப்பதும் வினோதமான விசயம் தான். அதன் பின்புலம் என்ன என்று புரியவில்லை. இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது[9]. சென்னையிலும் தொடர்ந்து விசாரணை முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை நேற்றைய தினம் தமிழக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது[10]. அங்கும் சென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள். சதா என்ற சதானந்தத்தின் கோடவுனில் அத்தகைய உற்பத்தி நடந்தது என்றும் தெரிகிறது.

அமீருக்கு சம்மன்: மேலும் மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை மார்ச் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்[11]. இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[12]. இத்தனை நாட்கள் ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக, நேரம் கொடுத்தால், குற்றவாளிகள் ஆதாரங்களை எல்லாம் அழித்து விடுவார்கள் என்பார்கள். அதிலும் இவ்வாறு வாரங்கள் என்று நேரம் கொடுக்கும் பொழுது என்ன செய்வார்கள் என்பது அதிகாரிகளுக்குத் தான் தெரியும். ஏப்ரல் 2ஆம் தேதி தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது[13]. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது[14].

அமீர் மற்றும் மேலும் இருவருக்கும் சம்மன்: இந்த வழக்கில் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி Abdul Fazid Buhari ], சையது இப்ராஹிம் [Syed Ibrahim] ஆகிய 3 பேர் டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[15]. ஆஜராவாரா இல்லையா என்று தெரியவில்லை[16]. இந்து மூன்று பேர் யார், என்ன விவரங்கள் என்றும் தெரியவில்லை. முன்னர், இவர் தனக்கும் இவ்விவகாரத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருப்பதும் நோக்கத் தக்கது. தமிழகத்தில் இவ்வாறு போதை மருந்து விவகாரத்தில் இத்தனை பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது[17]. மேலும் கோலிவுட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[18]. தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் நடக்கும் போது, கவனிக்கப் படாமல் இருக்கலாம்[19]. இருப்பினும், இது தமிழக தேர்தலின் மீது பாதிப்பை ஏற்படுத்துவா என்று பார்க்க வேண்டும்[20]. வழக்கம் போல, இச்செய்தியை பிடிஐ பாணியில் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[21]. அதிலும், ஒரு வரி செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளன[22]. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் சினிமா தொடர்புகள், மற்றும் முஸ்லிம்கள் சந்திருப்பது, தீவிரவாதிகள் தொடர்பு, தொடரும் சோதனை எல்லாம் தமிழக செக்யூலரிஸ ஊடகங்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளன போலும்.

© வேதபிரகாஷ்

03—04-2024


[1] மாலைமலர், ஜாபர் சாதிக் வழக்குநேரில் ஆஜராக இயக்குனர் அமீருக்கு சம்மன், 31 மார்ச் 2024 12:18 PM.

[2]https://www.maalaimalar.com/tags/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

[3] தமிழ்.வெப்துனியா, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், ஞாயிறு 31 மார்ச் 2024 12:17 IST.

[4] https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jaffer-sadik-drug-case-a-summon-to-ameer-124033100021_1.html

[5] நியூஸ்.7.தமிழ், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!, by Web Editor March 31, 2024.

[6] https://news7tamil.live/director-ameer-summons-in-jaber-sadiq-case.html

[7] சமயம், ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய இயக்குநர் அமீர்.. விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சம்மன்.. பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 31 Mar 2024, 12:26 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/ncp-summons-director-ameer-in-jaffer-sadiq-drugs-smuggling-case/articleshow/108913905.cms

[9] ஏபிபி, Breaking News LIVE : இயக்குநர் அமீருக்கு டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன்..!, By : ABP NADU  | Updated at : 31 Mar 2024 01:53 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/india/breaking-news-live-updates-latest-news-tamilnadu-india-worldwide-31st-march-lok-shaba-election-2024-election-commission-175729

[11] தினத்தந்தி, ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீருக்கு சம்மன், தினத்தந்தி மார்ச் 31, 12:20 pm

[12] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/rs2-thousand-crore-drug-smuggling-case-summons-director-ameer-1099631

[13] தினமணி, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன், Published on: 31 மார்ச் 2024, 12:31 pm; Updated on: 31 மார்ச் 2024, 12:31 pm.

[14] https://www.dinamani.com/tamilnadu/2024/Mar/31/director-ameer-summons-in-jaffer-sadiq-case

[15] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 3 பேருக்கு சம்மன்.. போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, By Vishnupriya R Updated: Sunday, March 31, 2024, 13:03 [IST].

[16] https://tamil.oneindia.com/news/chennai/delhi-ncb-officials-issue-summon-to-director-ameer-595001.html

[17] காமதேனு, ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்குஇயக்குநர் அமீருக்கு சம்மன்; பரபரப்பில் கோலிவுட், Updated on: 31 Mar 2024, 1:00 pm.

[18] https://kamadenu.hindutamil.in/crime-corner/zafar-sadiq-drug-case-director-ameer-summoned-to-appear-before-ncb-office-on-april-2

[19] குமுதம், ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த குழு.. தேர்தல் நேரத்தில் செக்..,Mar 31, 2024 – 13:36

[20] https://kumudam.com/Special-Committee-to-Investigation-in-Jafer-Sadiq-Case

[21] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் ஆஜராக சம்மன், Vasuki Jayasree, 31 Mar 2024 12:46 IST

[22] https://tamil.indianexpress.com/tamilnadu/director-ameer-gets-notice-for-jaffer-sadiq-drug-case-4437388