Posted tagged ‘கோவை குண்டு’

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

பிப்ரவரி 8, 2023

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர்.  இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-02-2023.


[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN  |   Published On : 08th February 2023 12:00 AM  |   Last Updated : 08th February 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html

[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.. முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM

[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575

[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM

Last Updated : 07 Feb 2023 07:03 AM.

[8]  https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html

[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37

[10]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

16-11-2022 அன்று ஊடகங்களின் செய்திலேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது: சோதனைகளில் கிடைத்த பொருட்கள்:

  1. இதில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது[1].
  2. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
  3. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[2]

 மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், இரு வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆதாரங்கள் பகுப்பாய்வுக்கு உட்பட்டவை ஆகின்றன: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தடயவியல் துறையிடம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.  நிச்சயமாக போலீசாரோ, என்.ஐ.ஏவோ எல்லா விவரங்களையும் சொல்லி விடமுடியாது. அதிலும் இத்தகைய ஜிஹாதி-தீவிரவாதம், ஐஎஸ்-தொடர்பு பயங்கரவாதம் போன்றவை பின்னியிருக்கும் பொழுது, அதிலும் தமிழகம் போன்ற “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, பிரிவினைவாதம், மாநில சுயயாட்சி, தினமும் மத்திய அரசுடன் எதிர்ப்பு கொள்கை கொண்ட போக்கு-செயல்பாடுகள் எல்லாம் மேற்கொண்டு வரும்பொழுது, திராவிடத்துவத்தில் ஊறிய தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழர்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொல்வார்கள். மறுஅடியும் பெரியாரிஸம், நீதிகட்சி, அண்ணாயிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும் போது, அத்தகைய எண்ணம் தான் தோன்றும். மேலும், இப்பொழுதைய நிலையிலும் அவ்வாறே பேசி வருவது தான் பிரச்சினை, சந்தேகம் மற்றும் தீவிரத் தனமாகிறது.

ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?: நியூஸ்18தமிழ், இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினாலும், தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும், அதில் பதிலை சொல்லவில்லை. [3] இருப்பினும், ஒரு நிருபர் அவ்வாறு யோசித்திருப்பது தெரிகிறது[4]. முன்னரே எதற்கு நான்கு நாட்கள் தாமதம் என்ற கேள்வி கவர்னரால் எழுப்பப் பட்டு, ஆளும் கட்சியினரால் விவாதப் பொருள் ஆக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல், ஊடகங்களில் வேறு விவாதிக்கப் பட்டுள்ளது. திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” (அநாகரிக பேச்சைத் தடுக்க நெறியாளர் மைக்கை மூடலாம், அது மூட் எனப்படும்) கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மறுபடியும், இந்த ரெயிடுகளில் தாமதம் உள்ளதா, தொய்வு ஏற்படுகிறதா, என்.ஐ.ஏ செல்லும் பொழுது, போலீசார் துணை / பாதுகாப்புத் தேவைப் படுகிறதா போன்ற கேள்விகளும் சாதாரண செய்தி படிப்போர்களுக்கு எழத்தான் செய்யும், இருப்பினும், என்.ஐ.ஏ போன்றோருக்கு எதற்கு துணை / பாதுகாப்புத் தேவை, அவர்களுக்கு அதெல்லாம் தெரியாதா அல்லது கருவிகள் இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்கக் கூடும்.

என்.. சோதனைகளுக்கு முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன், எப்படி?: முன்பு, என்.ஐ.ஏ சோதனைகள் நடத்தியபோது, முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆர்பாட்டம் செய்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது, போலீசார் எப்படி அனுமதித்தார்கள், பார்த்துக் கொண்டிருந்தார்கள் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன. இருப்பினும், போலீசார் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் ஊடகங்களில் வெளியிடப் பட்ட புகைப் படங்கள் காட்டின. அதனால், “முஸ்லிம்” என்றாலே, மிருதுவாக செயல்படுகிறார்கள், ஓட்டுவங்கி போய்விடும் போன்ற காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை,” என்று செக்யூலரிஸத் தனமாகவும் மிக நம்பிக்கையுடன் பேசப் பட்டு வருகிறது. என்.ஐ.ஏ சோதனை தேவையில்லை, தமிழகத்திற்கே என்.ஐ.ஏ தேவையில்லை போன்ற வாதங்களும் வைக்கப் பட்டன. இவையெல்லாம் மத்திய-மாநில அரசு மோதல்களா, ஒன்றிய-திராவிட மாடல் சித்தாந்த ஊடல்களா, ஆரிய-திராவிட போராட்டங்களா என்ரு தெரியவில்லை. இருபினும், இதிலுள்ள முக்கியத் தன்மை, பாதுகாப்பு-தேவை, தீவிரத் தன்மை முதலியவற்றை தேசிய-பாதுகாப்பு, ஜாக்கிரதை, கவனிப்பு கோணங்களில் மிக-அத்தியாவசமாகிறது.

28-09-2022லிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்குச்சீல் வைப்பது முதலியன: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர். அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை 26-10-2022 அன்று நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது[5]. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்[6]. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவையா அல்லது திட்டமிட்டு நடந்த நிகழ்வுகளா என்று அவர்கள் தான் புலனாய்வு செய்யவேண்டும். ஆனால், இங்கு 27-09-2022 முதல் 26-10-2022 வரை ஏன் தாமதம் என்ற கேள்வி தான் எழுகிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தினகரன், கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு எதிரொலி சென்னையில் என்ஐஏ சோதனை: 4 இடங்களில் நடைபெற்றது; முக்கிய ஆவணங்கள் பறிமுதல், 2022-11-16@ 00:31:32.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=814529

[3] நியூஸ்18தமிழ், ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?,  NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 10, 2022, 12:29 IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/kovai-car-blast-nia-and-chennai-police-raid-in-several-places-834109.html

[5] இ.டிவி.பாரத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு, Published on: October 27, 2022, 5;36 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/ministry-of-home-affairs-orders-sealing-of-popular-front-of-india-office/tamil-nadu20221027173604186186836

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

10-11-2022 வியாக்கிழமைஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட .எஸ்..எஸ் இயக்க ஆதரவாளர்கள் லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.

15-11-2022 – நான்கு நபர்களிடம் விசாரணைசோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.

  1. முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  3. ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.

15-11-2022 அன்று ஊடகங்களின் செய்திவிசாரணைக்குப் பிறகு விவரங்கள் வெளியிடப் படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,…………………. சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].

15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், .எஸ்..எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை, Written by WebDesk, November 15, 2022 9:18:27 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/suspect-links-to-isis-police-search-on-several-places-in-chennai-541926/

[3] குமுதம், கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை, kumudam| TAMILNADU| Updated: Nov 15, 2022.

[4] https://www.kumudam.com/news/tamilnadu/48942

[5]  நக்கீரன், .எஸ். அமைப்புக்கு ஆதரவா? – சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 15/11/2022 (07:50) | Edited on 15/11/2022 (08:10).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/support-police-raided-many-places-chennai

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை.., By Nantha Kumar R Updated: Tuesday, November 15, 2022, 9:11 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-raided-of-the-houses-of-suspect-of-isis-supportets/articlecontent-pf805599-485296.html

[9] மாலைமலர், .எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புசென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை , By Maalaimalar, 15  நவம்பர் 2022 11:31 AM.

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-coimbatore-car-blast-police-search-5-places-in-chennai-536697

[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

28-09-2022 அன்று [Popular Front of India (PFI)] தடை செய்யப்பட்டது[1]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் அமைப்பாகும், இது முஸ்லீம் சிறுபான்மை அரசியலின் தீவிர மற்றும் தனித்துவ பாணியில் ஈடுபடுகிறது. இந்துத்துவா குழுக்களை எதிர்க்க உருவாக்கப்பட்டது, என்று விகிபீடியா வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் 28 செப்டம்பர் 2022 [28-09-2022] புதன்கிழமை அன்று ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது[2]. UAPA வின் பிரிவு 2(1)(p) ஆனது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A அல்லது 153B பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை அல்லது குற்றத்தையும் அதன் பொருளுக்குக் கொண்ட ஒரு அங்கமாக “சட்டவிரோத சங்கம்” என்று வரையறுக்கிறது – அதாவது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்களை உருவாக்குதல். ஒரு சட்டவிரோத சங்கம் என்பது “எந்தவொரு சட்டவிரோத செயலை மேற்கொள்ள நபர்களை ஊக்குவிக்கும் அல்லது உதவுவது, அல்லது உறுப்பினர்கள் அத்தகைய செயலை மேற்கொள்வது முதலியவை அடங்கும்”.

கைதுகளும், அலுவலகங்களுக்கு சீல் வைத்தலும்: 27-09-2022 தடை அறிவித்தாலும், 13-10-2022 வரை அலுவலகங்களுக்கு சீல் வைப்பது தாமகம் ஆகியது. அப்பொழுதே கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு-ஆர்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது[3]. 01-10-2022 அன்று இதற்கு சீல் வைக்கப் பட்டது[4].தமிழகத்தில் PFIன் அலுவலகங்கள் சீல் வைப்பது கூட தாமதமாகச் செய்யப் பட்டன. ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது[5]. 13-10-2022 அன்று இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்[6]. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  27-09-2022 முதல் 13-10-2022 வரையில், தாராளமாக பல ஆவணங்கள், ஆதாரங்களை மறைக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. அப்படி காலதாமதம் செய்தும், சீல் வைத்தபோது, போலீஸ் பாதுகாப்பு ஏன், பதட்டம் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தியா முழுவதும் நடைபெறுவது, தமிழகத்திலும் நடைபெறுகிறது, இதில் ஒன்றும் வித்தியாசமோ, மாறுபாடோ இருக்க முடியாது.

27-10-2022 முதல் என்.. விசாரணை, சோதனைகள் ஆரம்பம்: 23-10-2022 அன்று கோவை ஜமேஷா முபின்[7] நடத்திய குண்டு வெடிப்பு எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சென்னையில் மீண்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்[8]. 27-10-2022 அன்று என்.ஐ.ஏவுக்கு இவ்வழக்கு ஒப்படைத்தப் பிறகு, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. 28-10-2022 அன்று NIA முதல் தகவல் அறிக்கை FIR போட்டது[10]. இருப்பினும், சிறப்பு காவல்துரையும் சோதனை எய்தனர் என்ற செய்திகளும் வந்து கொன்டிருந்தன. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி [10-11-2022, வியாழக்கிழமை] சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[11]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியது[12]. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேர் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

10-11-2022 அன்று மேற்கொன்ட சோதனை: இதனை தொடர்ந்து 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் சென்னை போலீஸார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆக, இவ்வாறு தேதிகளில்-நாட்களில் இடைவெளி இருக்கும்பொழுது, 

  • 23-10-2022 முதல் 27-10-2022 வரை,
  • 27-10-2022 முதல் 10-11-2022 வரை
  • 10-11-2022 முதல் 15-11-2022 வரை

சம்பந்தப் பட்டவர்கள், தங்களைப் பற்றிய, மாட்டிக் கொள்ளும் வகையில் உள்ள ஆவணங்களை, சான்றுகளை அப்படியே வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருப்பினும், சோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.. தமிழக ஆளுனர் முன்பு இத்தகைய கேள்வியை எழுப்பினார் என்றும் கவனிக்கத் தக்கது. துப்பறியும் நிபுணத்துவ ஊடக வல்லுனர்கள் இதைப் பற்றியெல்லாம் மூச்சுக் கூட விடாமல் இருப்பதை கவனிக்கலாம். வெள்ளம் வரும் பொழுது, தடுக்காமல், தடுக்க நடவடிக்கை எடுக்காமல், பிறகு வந்து பார்த்துக் கொள்கிறேன் என்றால், என்னாகும்? அந்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. 1998ல் நடந்து விட்டது, 2022லும் அரங்கேறிவிட்டது, ஆனால், தப்பித்தாகி விட்டது.

15-11-2022 அன்று 43 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ தமிழகத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருவள்ளூா், திருப்பூா், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது[13]. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓரிடத்தில் சோதனை நடைபெற்றது. அதேநேரத்தில், கோவையில் மட்டும் 33 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது[14]. சென்னையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் பழைய காா்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் மு.நிஜாமுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா். சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பின்னா், நிஜாமுதீனை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். கோவையில் வெடித்த பழைய கார் சுமார் 10 வியாபாரிகளிடம் கைமாறியிருப்பதும், அதில் நிஜாமுதீனும் அந்த காரை வாங்கி விற்றிருப்பதும் தெரியவந்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல என்ஐஏ அதிகாரிகள் வழங்கிய பெயா்ப் பட்டியலின் அடிப்படையில் 4 இடங்களில் சென்னை போலீஸார் சோதனை நடத்தினா்.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] Popular Front of India (PFI) is an Islamic political organisation in India,[5][6] that engages in a radical and exclusivist style of Muslim minority politics. Formed to counter Hindutva groups, it was banned by the Indian Ministry of Home Affairs under Unlawful Activities (Prevention) Act (UAPA) on 28 September 2022 for a period of five years.

[2] Section 2(1)(p) of the UAPA defines an “unlawful association” as an association which has for its object any unlawful activity or offence defined under Sections 153A or 153B of the Indian Penal Code — that is, promoting enmity between different groups and making imputations, assertions that are prejudicial to national integration. An unlawful association is also one that “encourages or aids persons to undertake any unlawful activity, or of which the members undertake such activity”.

[3] மாலைமலர், பாப்புலர் பிரண்ட் சென்னை அலுவலகத்துக்கு சீல்தமிழக அரசு அதிரடி நடவடிக்கை, By Maalaimalar, 1 அக்டோபர் 2022 11:45 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/tamil-news-pfi-head-office-sealed-in-chennai-519150

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பி.எப். அமைப்புக்கு தடை: கோவையில் அலுவலகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்,   Updated: October 14, 2022 3:44:56 pm

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/pfi-ban-officials-seal-offices-in-coimbatore-tamil-news-525222/

[7] Jameesha Mubin, who was questioned by the NIA in 2019 for alleged terror links, was charred to death in suspicious circumstances after an LPG cylinder inside a vehicle he was driving exploded near Kottai Eswaran temple in Ukkadam around 4am on October 23, a day before Diwali. The incident took place around 200 metres from a police patrol.

[8] தினத்தந்தி, #Breaking|| சென்னையில் ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை, By தந்தி டிவி 15 நவம்பர் 2022 8:06 AM.

[9] https://www.thanthitv.com/latest-news/houses-of-suspected-isis-affiliates-raided-in-chennai-148618

[10] In the FIR filed on October 28, the NIA said 109 articles, including Potassium Nitrate, Black Powder, match box, cracker fuse length of about 2 meters, nitroglycerine, PET powder, aluminium powder, and 9-volt battery, were recovered from Mubin’s residence.

[11] காமதேனு, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை, Updated on: 15 Nov, 2022, 10:16 am.

[12] https://kamadenu.hindutamil.in/national/keeping-up-with-terrorist-movements-nia-raids-at-4-places-in-chennai

[13] தினமணி, தமிழகத்தில் 42 இடங்களில் என்ஏஐ சோதனை: கோவை காா் வெடிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல், By DIN  |   Published On : 11th November 2022 01:04 AM  |   Last Updated : 11th November 2022 05:34 AM

[14] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/11/nai-raids-42-locations-in-tamil-nadu-important-documents-seized-in-coimbatore-car-blast-case-3947394.html

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.