ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

Explore posts in the same categories: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிமை, அடிமைத்தனம், அடையாளம், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இறைத்தூதர், இலக்கியம், இலங்கை, இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஈழம், உக்கடம், உருது ஜிஹாதி, உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐஸில், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், கிலாபத், கிலாபத் இயக்கம், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குப்ரு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சமரசம், சிரச்சேதம், சிரியா, ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தப்லீக், தப்லீக் ஜமாஅத், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தற்கொலை, தற்கொலை குண்டு வெடிப்பு, தலைவெட்டி, தீவிரவாத திட்டம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், துருக்கன், துருக்கர், மனித நேயம், மனித வெடிகுண்டு, முஸ்லீம்களின் வெறித்தனம், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: