ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

23-10-2022 அன்று ஐஎஸ் பாணியில் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4].  இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5].  இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.

ஐசிஸ், ஜிஹாத் முதலிய வாசகங்கள் கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.

தன்னிச்சையாக நடத்தப் பட்ட தீவிரவாத செயலா, கூட்டு முயற்சியா போன்ற வாதவிவாதங்கள்செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஜிஹாதி புத்தகங்கள், இலக்கியம் முதலியவை கண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.

முபீன் ஒரு சுயமான தீவிரவாதி, அவனுக்கு அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை: “அவருடைய உக்கடம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வெடிகுண்டு தயாரித்தல், ஜிஹாத் மற்றும் பிற மதங்களைப் பற்றிய அவரது வெளிப்படையாகத் தெரிகிறது. நாங்கள் விசாரித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கருத்துப்படி, ஜமேஷா முபீன் இந்திய முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தினத்தந்தி, கோவையில் கார் வெடிப்பு: முபின் .எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சி தரும் பின்னணி, நவம்பர் 4, 3:31 pm

[2] https://www.dailythanthi.com/News/State/car-blast-in-coimbatore-mubin-is-terrorist-stunning-background-829318?infinitescroll=1

[3] தமிழ்.ஒன்.இந்தியா, உடல் முழுக்கஷேவ்’! ’விஸ்வரூபம்பாணியில் தயாரான ஜமேஷா முபின்! கோவை கார் வெடிப்பில் வெளியானபகீர்,’ By Rajkumar R Published: Friday, November 4, 2022, 9:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/coimbatore/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast-483633.html

[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.

[6] மாலைமுரசு, ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5

[7] https://malaimurasu.com/Key-documents-found-in-Jamesha-Mubeens-house-link-to-ISIS

[8] கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

Sakthi by SAKTHI November 4, 2022

[9] https://www.news4tamil.com/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast/

[10] The News Minute, Coimbatore blast: Handwritten notes recovered from Jamesha Mubin’s house, THURSDAY, NOVEMBER 03, 2022 – 16:53

[11] https://www.thenewsminute.com/article/coimbatore-blast-handwritten-notes-recovered-jamesha-mubin-s-house-169553

[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST

[13] https://www.timesnownews.com/india/coimbatore-car-blast-documents-talking-about-jihad-kafirs-and-muslims-recovered-from-jamesha-mubins-house-article-95273880

[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST

[15] https://www.republicworld.com/india-news/politics/in-coimbatore-blast-case-docs-on-jihad-and-radicalisation-found-at-deceased-mubins-house-articleshow.html

Explore posts in the same categories: ஜமாத், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜீஹாதிகள், தீவிரவாத திட்டம், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, புகாரி, பேட்டரி, பேட்டரி கட்டைகள், போலீசாரை மிரட்டுவது, போலீஸாரை மிரட்டுவது, மசூதி நிர்வாகி, மத-அடிப்படைவாதம், மனித வெடிகுண்டு, முஜாஹித்தீன், முஸ்லிம் தெரு, முஸ்லிம் நகர், முஸ்லிம் பிரச்சினை, முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல், ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு, ஶ்ரீலங்கா, ஶ்ரீலங்கை தற்கொலை குண்டு, ஷரியத், ஷரீயத், ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: