Posted tagged ‘உம்ரா’

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

subahani-haja-moideen-isis-instagram-links

அபு நைஸா மற்றும் அபு அல்ஸ்வீடி பெண்களுடன் தொடர்பு கொண்டு சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஐசிஸ்ஸில் சேர்ந்தது: அல்-மக்ரபி 2015ல் அபு பக்கர் அல்-பாக்தாதி [Abu Bakr al-Baghdadi] என்பவன் இஸ்லாமிய அரசுக்கு [the land of Islamic State of Iraq and Syria (ISIS)] குடியேறி, அந்நாட்டிற்காகப் போராடுமாறு அழைப்பு விடுத்தான். +2 படித்து கடைகள் மற்றும் ஆடையுற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த சுபஹனி ஹாஜா மொஹிதீன் [Subahani Haja Moideen] இதற்கு ஈர்க்கப்பட்டான். திருமணமாகியும், இணைதளத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். ஸ்வீடன் நாட்டு பெண் ஒருத்தி உம்ரா / ஹ்ஜ் யாத்திரை செய்வது எப்படி என்று சந்தேகம் கேட்டபோது, அவளுடன் நண்பன் ஆனான்.  அதாவது “ஹஜ்-யாத்திரை” செல்வது என்பது “மோசுலுகுச் செல்வது” என்பது போன்ற பரிபாஷைகளை வைத்துள்ளனர் போலும். மேலும் பெண்களை வைத்து ஆட்களைப் பிடிப்பதும், செக்ஸ்-தூண்டில் போட்டு பிடிக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இதே போல அபு நைஸா அல்-மக்ரபி [Abu Naisha al Maghrabi] மற்றும் அபு அல்-ஸ்வீடி [Abu al-Swedi] என்ற பெண்களுடன் தொடர்பு துரித தொடர்பு சேவை மூலம் [instant messaging app Telegram] கிடைத்தது. துருக்கிக்கு வந்து விட்டால், அங்கிருந்து ஐசிஸ் நாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும், அங்கு அவனுக்கு சகல வசதிகளுடன் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தனர்.

 gone-for-hajj-returned-as-isis-terrorist

ஹஜ் யாத்திரை செல்கிறேன் என்று மோசுலுக்குச் சென்றது: அதன்படியே, மொஹித்தீன் தனது வீட்டை ரூ.18 லட்சங்களுக்கு விற்ருவிட்டு, இஸ்தான்புல்லிற்கு பறந்தான். வீட்டில் ஹஜ் யாத்திரைக்கு செல்வதாக கூறிக்கொண்டான். தாய்-மனை எல்லோரும் சந்தோஷமாகத்தான் அனுப்பி வைத்தனர் போலும்! இஸ்தாபுல்லில் ஒரு வீட்டில் தங்க வைத்தபோது, தன்னைப் போன்று மொரோக்கோ, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்தவர்களை சந்தித்தான். அங்கிருந்து துருக்கி சிரியா எல்லையில் இருக்கும், ரக்தாத் பகுதியில் உள்ள டெல் அபயது [Tell Abyad on Turkey-Syria border in Raqqa] என்ற நகரத்தை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாம், ஜிஹாத், போர்முறை முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட்டது. பயிற்சியும் அளிக்கப்பட்டது. பிறகு, சிரிய படைகளுடன் போரிட அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போரில் குண்டு போட்டபோது, தன்னுடன் இருந்த இருவர் கருகி உயிரிழந்தனர். இதைக் கண்டதும், மொஹித்தீன் அலறிவிட்டான். சாவின் கொடூரம், போரின் பயங்கரம் முதலியவற்றை புரிந்து கொண்டான். இதனால் தான் அவன் திரும்பி ஓடி வந்து விட்டான் என்று கூறப்படுகிறது.

 mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

மோசுல்லுச் சென்று திரும்பியவன் “ஹாஜா” எப்படி ஆவான்?: சுபஹனி ஹாஜா மொஹிதீன் என்று குறிப்பிடுவதே கேவலமானது, மோசமானது கூட, ஏனெனில், அவன் ஹஜ்ஜிற்கு சென்று திரும்பவில்லை. அதனால் அவனை “ஹாஜா” என்று சொல்வதே தவறு. மோசுலுக்குத்தான் சென்று திரும்பியிருக்கிறான். திரும்பி ஓடி வந்தான் என்பதைவிட, அவன், வேறொரு காரணத்திற்காகத்தான் வந்துள்ளான் என்பது தெரிகிறது. ஏனெனில், அவன் தொடர்ந்து, ஐசிஸுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு தீவிரவாதத்திற்காக வேலைசெய்து வந்தது, அவன் “டபுள்-ஏஜென்ட்” அல்லது ஐசிஸ்-உளவாளி என்ற முறையில் செயல்படுவதாக தெரிய வந்தது. ஒருவன் எப்படி இருந்தாலும், ஐசிஸுக்கு உதவுகிறான் என்றால் அவனை, பட்டியிலில் வைத்துக் கொண்டு கவனிக்கப்படுவார்கள். தீவிரவாதியாகி விட்டப் பிறகு, அத்தொழிலில் ஈடுபடமாட்டான் என்பதெல்லாம் மாயை. ஆகவே, இந்திய தூதரகம், ஐ.பி, முதலியவற்றை ஏமாற்றவே அத்தகைய பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவனைப் போன்று, இன்னும் ஏத்தனை உளவாளிகள், ஐசிஸ் ஏஜென்டுகள் உள்ளனர் என்று தெரியவில்லை.

 %e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

தமிழக போலீஸாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஆச்சரியமாக உள்ளது: மேலும் தமிழக போலிஸார் அவன் சிரியாவில் போரிடவில்லை என்றெல்லாம் வக்காலத்து வாங்கியதும் வியப்பாக இருந்தது[1]. ஒருவேளை, வழக்கம் போல தீவிரவாதத்தில் கூட “செக்யூலரிஸ” முறைகளை கையாளுகிறார்கள் போலும். சென்னையிலேயே ஐசிஸ்காரகள் பிடிப்பட்ட பிறகு, மெத்தனமாக இருப்பதும் வேடிக்கைதான். இஸ்தான்புல் இந்திய தூதரகத்தில் கூட மொஹித்தீன் பொய் சொல்லியிருக்கிறான். தான் ஒரு சுற்றுலா பயணி என்றும், பாஸ்போர்ட் மற்றும் உடமைகள் காணாமல் போய்விட்டன என்று கூறிக் கொண்டு, திரும்பிச் செல்ல அவசர சான்றிதழ் பெறுறுள்ளான்[2]. இதன்படிதான் செப்டம்பர் 22, 2015 அன்று மும்பைக்கு வந்து, கடையநல்லூருக்குச் சென்றுள்ளான். ஐ.பி இவ்வாறான “அவசர சான்றிதழுடன்” திரும்பிவரும் நபர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையும் விட்டது. ஆனால், தமிழக போலீஸ் உயரதிகாரிகள், அவன் சிரியாவுக்குச் சென்று திரும்பியது எல்லாம் தெரியாது என்று சாதிக்கின்றனர்[3]. இஸ்தான்புல் தூதரகம் கூட தமிழக போலீஸாருக்கு விவரங்களை அனுப்பியிருக்கலாம்.

paris-bombers-7-identified

சுபஹனி மொஹிதீனின் பாரிஸ் குண்டுவெடிப்பவர்களின் தொடர்புகள்: தமிழக முஸ்லிம் இளைஞனுக்கும் பாரிஸ் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் திடுக்கிட வைக்கின்றன. ஆனால், அவனை, தமிழகத்தில் பெற்றோர், உற்றோர், மற்றோர் போற்றி வளர்ந்துள்ளனர் என்பது, அவர்களது ஜிஹாதி மனப்பாங்கைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒருவேளை இவர்கள் தமது அரசியல், பணம், செல்வாக்கு வைத்து, இவனது நடவடிக்கைகளை மறைத்திருப்பார்கள் போலும்! அதனால் தான், தமிழக போலீஸார் தமக்கு தெரியாது என்கிறார்கள். ஐசிஸ் இஸ்லாத்திற்கு எதிரி என்று சில நேரங்களில் சில முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அவர்கள் ஆதரவு கொடுப்பது தான் அதிகமாக உள்ளது என்பது, இத்தகைய ஒத்துழைப்புகளில் வெளிப்படுகிறது. திருநெல்வேலி, கடைய நல்லூரில் கைதான, மொஹிதீம் தனக்கு பாரிஸ் குண்டுவெடிப்பில் பங்கு கொண்ட அப்துல் அஹமது அபாவைத் [Abdelhamid Abaaoud], ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி [Omar Ismail Mostefei] மற்றும் சலாஹ் அப்சலாம் [Salah Abdeslam] முதலியோரை சந்தித்துள்ளதாக ஒப்புக் கொண்டான்[4]. அப்துல் அஹமது அபாவைத் நவம்பர் 2015ல் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். சலாஹ் அப்சலாம் மார்ச் 2016ல், மோலன்பெக், பெல்ஜியத்தில் [Molenbeek, Belgium] பிடிபட்டு, பாரிஸ் போலீஸ் காவலில் உள்ளான். ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி பற்றிய விவரங்களை சொல்ல அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை.

© வேதபிரகாஷ்

26-10-2016

moideen-is-operative-ie-cutting-25-10-2016

[1] Police officers from Tamil Nadu said Moideen did not take part in any armed conflict either in Mosul or Raqqa, because he was physically inept and also because he questioned IS strategies.

http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[2] At the Indian embassy, Moideen, too, pretended to be an Indian tourist who had lost his passport and luggage. The Indian embassy, after checking his background, issued him an Emergency Certificate that allowed him to travel back. He returned on September 22 to Mumbai and headed to his village in Kadayanallur in Tamil Nadu’s Tirunelveli district. Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[3] Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[4] DNA-Daily News & Analysis, ‘Indian ISIS operative Subahani Haja Moideen knew Paris bombing accused, Sun, 23 Oct 2016-03:30pm , PTI.