Archive for the ‘மொஜாமெல் ஹக்’ category

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7)

ஒக்ரோபர் 31, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7)

பெண் ஜிஹாதிகலுக்கு madrasas பயிற்சி

பெண் ஜிஹாதிகலுக்கு madrasas பயிற்சி

சிமுலியா (பர்த்வான்) மற்றும் லால் கோலா (மூர்ஷிதாபாத்) என்ற இடங்களில் இருக்கும் மதரஸாக்கள், குண்டு தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஜிஹாத் வேலைகளில் பயிற்சி கொடுத்து வந்தன என்று ஊர்ஜிதம் ஆகியது. அங்கு, ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் அத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன[1]. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 120-150-200 என்று பலவிதமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் இதில் இவ்வாறு எல்லாவித வேலைகளிம் ஈடுபட்டுள்ளது, போலீஸார், பாதுகாப்பு, மற்ற அதிகாரிகளுக்குப் பெருத்தப் பிரச்சினையாக இருக்கிறது. ஏனெனில், முஸ்லிம் சமூகத்தில் பெண்களை தனிமைப் படுத்தியுள்ளார்கள், பர்தா அணிந்துள்ளதால் அடையாளம் காண முடியாது, மேலும் வீடுகளில் சோதனை செய்ய வேண்டும் என்றால், பெரிய கலாட்டா-ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்[2]. பெண்கள் ஜிஹாதிகளாக மாற்றப் படுவது, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப் படுவது போன்ற உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன. ஏனெனில், இதுவரை காஷ்மீர் வரையில் தான் அத்தகைய போக்கு காணப்பட்டது. ஆனால், அது மேற்குவங்காளத்தில் ஊரூன்றி விட்டது வியப்பாக உள்ளது,

Bangla link with Burdwan blast JMB

Bangla link with Burdwan blast JMB

அசாம், மேகாலயா மாநிலங்களிலும் ஊடுருவியுள்ள பங்களாதேச தீவிரவாதம்: பங்களாதேச மக்களின் ஊடுருவல்கள் 1947களிலிருந்து நடந்து வந்தாலும், 1970களில் அதிகமாகியது. ஆனால், 1980களில் மதரீதியில் முஸ்லிம் மக்கள் இடபெயர்ச்சி, குடியேற்றம் ஏற்பட்டது. 1990களில் அது தீவிரவாதத்திற்கு துணைபோகும் ரீதியில் மாறியது. 2000களில் அது நன்றாகவே வெளிப்பட்டது. ஜே.எம்,பி [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] 2007ல் தடை செய்யப் பட்ட பிறகு, அது இந்தியாவில், குறிப்பாக பங்களாதேசத்தில் எல்லைகளில் உள்ள இந்திய மாநிலங்களில் ஊடுருவி, இந்திய பிரஜைகள் போல வாழ ஆரம்பித்தனர். இவர்கள் எல்லோருமே அந்நியர்கள் என்றாலும், போலீஸார் சோதனை, குடியேற்ற அலுவலக சரிபார்ப்பு என்ற எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை முதலியவற்றைப் பெற்று, “இந்திய குடிமகன்கள்” ஆகி, உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு, குடும்பம்-குட்டிகளுடன் தங்களை ஸ்திரப் படுத்திக் கொண்டனர். இதற்கு காங்கிரஸ், மார்க்சீய கம்யூனிஸ்டு மற்ற இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் என்று எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு உதவினர். ஏனெனில், அவர்கள் அப்படியே ஒட்டு மொத்தமாக தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்பதால், எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மற்றவர்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டினாலும், அதிலுள்ள பயங்கரவாத, தீவிரவாதங்கள் இருப்பதைக் காட்டினாலும், செக்யுலரிஸம் என்றெல்லாம் பேசி அவர்களை ஊக்குவித்து வந்தனர். பலமுறை சில குழுக்கள் அசாமில் AIUDF, மேற்கு வங்காளத்தில் HUJI-B, போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளது என்றும், அவை Al-Qaeda வுடன் சம்பந்தப் பட்டுள்ளது என்றும், உரிய அரசாங்களுக்கு அறிவிக்கப் பட்டிருந்தாலும், அவை மெத்தனமாகவே செயல்பட்டுள்ளன.

Manisha Banerjee, Siddiqullah Chowdhury, Ashim Chatterje, Samir Puttunda, and others personalities in a protest convention of Jamiat-e-Ulama WB at Burdwan on 20 oct 2014

Manisha Banerjee, Siddiqullah Chowdhury, Ashim Chatterje, Samir Puttunda, and others personalities in a protest convention of Jamiat-e-Ulama WB at Burdwan on 20 oct 2014

பீர்பும் குண்டு தொழிற்சாலை தகவல், போலீஸார் சோதனை, போலீஸார் மீதே குண்டு தாக்குதல்: பீர்பும் கிராமத்தில் சௌபண்டல்பூர் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் படுவதாக தகவல் கிடைத்ததால், அசிரத்தையாக இருந்துவிடக் கூடாது என்று வெள்ளிக்கிழமை (25-10-2014) போலீஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது, திடீரென்று ஒரு கும்பல் போலீஸாரைத் தாக்க ஆரம்பித்தது[3]. அதாவது, போலீஸாருக்குக் கூட பயப்படாத கூட்டத்தினர் அங்குள்ளனர் என்று தெரிகிறது. பதிலுக்கு போலீஸார் தாக்க, எதிர்பார்க்க முடியாத நிலையில் குண்டுகள் எரியப்பட்டன[4]. இதுவும் போலீஸார் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அங்கு குண்டுகள் உள்ளன என்பது ஊர்ஜிதமாகி விட்டது. ஒரு போலீஸ் அதிகாரியின் (புரோசேன்ஜித் என்பது அவர் பெயர்) மீது குண்டு எரியப் பட்டதில், அவரும் நான்கு போலீஸார் காயமடைந்தனர்[5]. இதனால், கோபமடைந்த பொலீஸார், பதிலுக்கு அவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். தாக்கியர்வர்கள், குறிப்பிட்ட வீடுகளில் பதுங்கிக் கொண்டதால், போலீஸார் அவ்வீடுகளை நோக்கிச் சென்றனர், சோதனையிட முயன்றனர். ஆனால், அவர்கள் அதற்கு ஆட்சேபித்தனர். இதற்குள், ஆளுங்கட்சியினர்-(திரிணமூல் காங்கிரஸ்) வந்து, அவர்களும் எதிர்த்தனர். இருப்பினும், சோதனையில் சில வீடுகளில் குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. இங்கு 1000ற்கும் மேலான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. ஆக, இப்பகுதியில் வெடுகுண்டுகள் தயாரிக்கப்படுவது தெரிந்து விட்டது. இங்கும் ஒரு குண்டு தொழிற்சாலை இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கபடுகிறது[6].

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

பிஜேபிகாரர்கள் கைது: 25-10-2014 (வெள்ளிக்கிழமை) என்று போலீஸார் தங்களைத் தாக்கியதாக, கிராமத்தினர் புகார் அளித்தனர்[7]. பொலீஸார் சாதாரண உடையில் வந்து வீடுகளில் புகுந்து அடித்து நாசம் செய்ததாக புகார் கூறினர். இது ஆளும் கட்சியினர் தூண்டுதல் பெயரில் என்று சொல்லப்படுகிறது. ஆனால், போலீஸார் மறுத்து, தாங்கள் தாம் தாக்கப் பட்டனர் என்று மற்றவர்கள் மீது பழியைப் போட்டனர். புரோசேன்ஜித் காயத்துடன் இருந்த காட்சிகள் டிவிசெனல்களில் காட்டப்பட்டது. ஆனால், திடீரென்று ஐந்து பிஜேபிக்காரர்கள் கைது செய்யப் பட்டனர்[8] என்று சில செய்திகள் குறிப்பிடுகின்றன.  இதற்குள் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்கள் பெயர்கள் –

  1. ஹாவிஸ் மொல்லாஹ் [Hafiz Mollah],
  2. நூரி ஆலம் [Nure Alam],
  3. நூர் ஹுஸைன் [Nur Hossain],
  4. செயிக் ஷமீம் [Seikh Shamim]
  5. மொஜாமெல் ஹக் [Mojammel Haque]

ஆனால், போலீஸார் இவர்களை பெயிலில் அடைக்காமல், நீதிமன்ற காவலில் வைக்க ஏற்பாடு செய்துள்ளது[9].  அவர்கள், பிஜேபிக்காரர்களா என்று கேட்டதற்கு, போலீஸார், “இருக்கலாம்” என்கின்றனர்! இந்த ஐந்து பேர்களும், அந்த ஐந்து பேர்களா என்ற சதேகமும் எழுகிறது. ஏனெனில், பிஜேபிகாரர்கள் எனப்படுகின்ற அவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். முஸ்லிம்கள் பிஜேபியில் இருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால், மேற்கு வங்காளத்தில் உடனடியாக அவர்களை ஆதரிக்கும் அளவிற்கு உறுப்பினர்களாகி விட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே, இது அரசியல் ஆக்க, அவ்வாறு செய்தி கொடுக்கப் பட்டது என்றாகிறது. பரூய் குண்டு தாக்குதலில் 43 நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளது[10].

Locked Madrasa at Simulia village

Locked Madrasa at Simulia village

பிஜேபிதிரிணமூல் வாய்சன்றை மற்றும் அடிதடி, சாவு: பிஜேபிக்காரர்கள் கைது என்றதும், அதன் தலைவர்கள் மறுத்து, திரிணமூல் கட்சியினர் தான் தீவிரவாதிகளுக்கு உதவி வருகின்றனர், வாக்காளர் அட்டைகள், ரேஷன் கார்டு முதலியவை கொடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர். பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சிக்காரர்கள் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளைச் சொல்லி, போட்ட வாய்ச்சண்டை அதிதடியில் முடிந்தது. போலீஸார் ஆளும் கட்சிக்கும் சாதகமாக இருப்பதால், கலவரம் உண்டாகும் நிலை ஏற்பட்டது.டாப்படித்தான், திங்கட் கிழமை (27-10-2014) வாக்குவாதம் சண்டையில் முடிந்தது. இதனால் பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சிக்காரர்கள் அதில் பீர்பும் [Birbhum] கிராமத்தில் நடந்த சண்டையில் இரண்டு பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சி தோண்டர்கள் என்று மொத்தம் மூன்று பேர் கொல்லப்பட்டனர், என்று பிறகு செய்தி வந்தது.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

யூசுப் செயிக், முக்கியக் குற்றவாளி நேபாளத்தில் கைது: யூசுப் செயிக் என்ற பெல்டெங்காவைச் (மூர்சிதாபாத், மேற்கு வங்காளம்) [Yusuf Saikh, a resident of Beldanga in West Bengal’s Murshidabad district] சேர்ந்தவன், நேபாளத்தில் கக்ரபிட்ரா என்ற இடத்தில் 27-10-2014 (திங்கட்கிழமை) அன்று கைது செய்யப்பட்டான்[11]. இவன் தான் “பர்தவான் குண்டு தொழிற்சாலை” வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமான குற்றவாளி[12]. ஏற்கெனவே, யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்கள் என்.ஐ.ஏ விசாரணையின் போது கைது செய்யப் பட்டனர். யூசுப் செயிக்கிடம் விசாரணை நடத்தியபோது, இவனும், இவன் கூட்டாளியும் 2013-14 வருட காலத்தில் நூற்றுக்கணக்கான குண்டுகளை பர்தவான் மதரஸா தொழிற்சாலையில் உற்பத்தி செய்து, பங்களாதேசத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் என்று தெரியவந்துள்ளது[13]. அப்படியென்றால், மேற்கு வங்காள பொலீஸார், உளவுத்துறையினர், தீவிரவாத எதிர்ப்பு-பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இந்திய முஜாஹித்தீன் வழிமுறைகளை இவர்கள் அப்படியே பின்பற்றும் போக்கு தெரிகிறது.

மேற்கு வங்காளத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது யார்?: யாசின் மாலிக்கை 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டாலும், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[14] என்பதால், ஒன்று தீவிரவாதிகளைப் பற்றிய விவரங்கள் கொல்கொத்தா போலீஸாருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது தெரிந்தும் தெரியாதது போல விட்டிருக்க வேண்டும். முதல் வாதம் வாய்ப்பிலை என்பதால், இரண்டாவது விசயத்தை ஆராயும் போது, இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட, முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கின்ற, மதரீதியிலான சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்றாகிறது. இதனால் தான் இவ்விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே திரிணமூல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பு: மேலும் அந்த பர்கா / குண்டு தொழிற்சாலை கட்டிடத்தில் திரிணமூல் கட்சி அலுவலகம் இருந்தது மற்றும் அவர்களது “கட்சிச் சின்னம், பெயர், முகவரி” கொண்ட போர்ட் கடிடத்தின் முகப்பில், பர்கா தொழிற்சாலைக்கு மேலே இருந்தது, ஆனால், குண்டுவெடிப்பு நடந்தவுடன், அந்த போர்ட் எடுக்கப் பட்டு விட்டது. ஆயிரக்கணக்கான குண்டுகள் தயாரிப்பது, அவற்றை ஒரு நாட்டிலிருந்து, இன்னொரு நாட்டிற்குள் எடுத்துச் செல்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அப்படியென்றால், இந்தோ-பங்களாதேச எல்லைகள் அந்த அளவிற்கு, திறந்துள்ளன அல்லது சோதனைகள் ஒழுங்காக நடத்தப் படுவதில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல் மற்றும் வியோக்கிக்கும் கூட்டத்தினர், செக்ஸ்-குற்றங்கள் செய்பவர்கள் என்று பலவித சட்டமீறல் மற்ற அகில் உலகக் கூற்றவாளிகள் போன்றவர்களுக்கு நேபாளம் புகலிடமாக இருப்பது, இந்தியாவிற்கு பெருத்தத் தலைவலையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-10-2014

[1] http://news.oneindia.in/india/burdwan-blasts-women-taking-bomb-making-lesssons-wb-madrasas-1548388.html

[2] The role of women that comes as a surprise to investigators has created problems in plenty for the security agencies, as by virtue of being a closed society it is not easy to check and apprehend women.

http://www.dnaindia.com/india/report-both-the-madrasas-were-teaching-bomb-making-to-women-2030054

[3] Prosenjit Dutta, the OC of Parui Police Station, was injured on Friday when bombs were thrown at his team who had gone to Chakmondola village to inquire about bombs being illegally manufactured there.

http://zeenews.india.com/news/west-bengal/police-party-attacked-in-west-bengals-birbhum-4-injured_1490178.html

[4] http://www.dnaindia.com/india/report-violence-in-birbhum-district-of-west-bengal-police-vehicle-allegedly-bombed-2029557

[5] http://zeenews.india.com/news/west-bengal/police-party-attacked-in-west-bengals-birbhum-4-injured_1490178.html

[6] http://indianexpress.com/article/india/india-others/the-bomb-trail-in-bengal/

[7] Residents of Choumandalpur, the Birbhum village where bombs and bricks were hurled at police yesterday, have alleged that over 100 cops armed with scythes and axes tortured them and vandalised their homes in a late-night retribution. “Most of the policemen were not in uniform. They hurled expletives, beat us up and threatened to kill us. Even women were not spared,” said Hafizur Rahman, a marginal farmer.

http://www.telegraphindia.com/1141026/jsp/bengal/story_18966039.jsp#.VE41svmSynU

[8] The Telegraph, Calcutta, Sunday , October 26 , 2014

[9] The investigation officer charged the five with attempt-to-murder, but did not seek police custody when they were produced in Suri court. “The judge remanded them in jail custody for 15 days because the investigating officer did not ask for police remand. However, police can ask for their custody during the course of investigation while the accused are in jail,” government lawyer Bikash Paitandi said. The suspects — Hafiz Mollah, Nure Alam, Nur Hossain, Seikh Shamim and Mojammel Haque — have also been charged with criminal intimidation and attempt to deter a public servant from discharge of duty, apart from the Arms Act. All the charges are non-bailable. “Police have filed a suo motu complaint against 43 people in the Parui bomb attack case,” Paitandi said.

[10] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Parui-OC-attack-Police-dont-seek-suspects-custody/articleshow/44936189.cms

[11] http://www.firstpost.com/india/burdwan-blast-29-year-old-youth-arrested-nepal-1775635.html

[12] http://www.business-standard.com/article/news-ians/burdwan-blast-youth-arrested-from-nepal-114102800021_1.html

[13] http://timesofindia.indiatimes.com/videos/news/Burdwan-blast-probe-Shaikh-Yusufs-arrest-from-Nepal-deepens-plot/videoshow/44958590.cms

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html