Archive for the ‘மதபோதனை’ category

அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம் – திலீப் குமார் முதல் ரஹ்மான் வரை ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியமானவை தான்! (2)

ஜூலை 27, 2023

அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம் திலீப் குமார் முதல் ரஹ்மான் வரை ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியமானவை தான்! (2)

கடந்த சில வருடங்களின் அரசியல் விசித்திரமாக இருக்கிறது: “இந்தியர்கள் மிகவும் திறந்த மனதுடைய மனிதர்கள், குறிப்பாக தெற்கில், அவர்கள் மிகவும் திறந்தவர்கள். அவர்கள் மிகவும் அரவணைப்பு மிக்கவர்கள், அவர்கள் மகிழ்ச்சியான மக்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்[1]. அதுதான் நடந்துள்ளது,” என்று அவர் கூறினார்[2]. ஏ.ஆர். ரஹ்மான், இந்தியாவில் பெரும்பாலும் இதே நிலைதான் உள்ளது என்று குறிப்பிட்டார்[3]. ஆனால், “கடந்த சில வருடங்கள் அரசியல் விஷயங்களால் விசித்திரமாக இருந்தது, இந்தியர்கள் மனதிலிருந்து வெளிப்படும் ஒளியின் மூலம் பார்க்கிறார்கள். என்னாச்சு உன் முகம் பிரகாசமாக இருக்கிறது? என்னாச்சு உன் முகம் சோர்வாக இருக்கிறது? என கேட்பார்கள். அவர்கள் முகத்தை பார்ப்பது இல்லை மனதை பார்க்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமல்ல. நான் எங்கே சென்றாலும் நல்ல மனிதர்கள் மற்றவர்களிடம் இருந்து வெளிப்படும் ஒளியைப் பார்க்கிறார்கள்,” என்பதை ஒப்புக்கொண்டார்[4]. ஏ.ஆர். ரஹ்மான் இயற்பெயர் திலீப். ஏ.ஆர். ரஹ்மான் மதம் மாற முடிவு செய்யும் வரை அவருடைய தாயார், குடும்பம் எல்லாம் இந்து மதத்தை பின்பற்றி வந்தனர்.

19.03.2023 –அன்பை மையப்படுத்திய இசை: சூபி கச்சேரி பற்றி தமிழ்.இந்துவில் பெரிய செய்தி வளிவந்தது[5]. “இந்தக் கூட்டத்தைப் பார்த்து மனசு நிறைஞ்சிடுச்சு. சூஃபி இசை நிகழ்ச்சிக்கு ஐநூறு பேர் வந்தாலே அதிகம் என நினைச்சேன். ஆனா, இன்னைக்கு இவ்வளவு கூட்டம்” என்று ஏஆர் ரஹ்மான் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது[6]. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர். ரஹ்மானின் சூஃபி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரைத்துறையில் பணிச் சூழலில் பாதுகாப்பு இல்லாமல் நெருக்கடியை எதிர்கொள்ளும் கடைநிலை லைட்மேன் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தலைப்பு ‘விங்க்ஸ் ஆஃப் லவ்’. சினிமா பாடல்களுக்கான நிகழ்ச்சி அல்ல. முற்றிலும் சூஃபி பாடல்களுக்கான நிகழ்ச்சி. இது சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தும் முதல் சூஃபி இசை நிகழ்ச்சி. அரங்கில் நுழைகிறேன். ஆயிரக்கணக்கான மக்கள். இருக்கைகள் நிரம்பி பலர் நின்று கொண்டிருந்தனர்.

சூபி கச்சேரி நிகழ்ச்சி: தலைப்பாகை அணிந்து சூஃபி இசைக் கலைஞர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். வெள்ளைச் சட்டையும் வெள்ளைக் கைலியும் அணிந்த இளைஞர்கள், ஊது கட்டையுடன் அரங்கைச் சுற்றிலும் புகை பரப்பினர். ஊதுக் கட்டையின் நறுமணம் ஒட்டுமொத்த அரங்கையே சூஃபி பயணத்துக்கு தயார்படுத்தியது. யாரும் எதிர்பாராத கணம் அல்லா ரக்கா ரஹ்மான் மேடையில் தோன்றினார். குர்தாவும் சூஃபிகளின் அடையாளங்களில் ஒன்றான வெண்ணிற தலைப்பாகையும் அணிந்திருந்தார்.பணிவும் உளத்தூய்மையும் சூஃபித்துவத்தின் மிக அடிப்படையான பண்புகள். ஏ.ஆர். ரஹ்மானிடம் எப்போதும் இந்தப் பண்புகளைப் பார்க்க முடியும். அன்றைய தினம் அது ரஹ்மானிடம் பேரொளியாக வெளிப்பட்டது. திரைத்துறை இசையைத் தாண்டி, சமகாலத்தின் உலகின் முதன்மையான சூஃபி இசைக்கலைஞர்களில் ஒருவராக ஏ.ஆர். ரஹ்மான் அறியப்படுகிறார். ‘பிஸா’ படத்தில் ‘பியா ஹாஜி அலி’ (Piya Haji Al), ‘ஜோதா அக்பர்’ படத்தில் ‘குவாஜா மேரே குவாஜா’ (Khwaja Mere Khwaja), ‘டெல்லி 6′ படத்தின் ‘அர்ஷியான்’ (Arziyan), ‘ராக் ஸ்டார்’ படத்தில் ‘குன் பயா குன்’ (Kun Faya Kun) ஆகியவை சூஃபி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் உச்சம் தொட்ட பாடல்கள். இந்தப் பாடல்களும், அவர் தனி ஆல்பமாக வெளியிட்ட ‘ஸிகிர்’ (Zikr) உட்பட சில சூஃபிப் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் பாடப்பட்டன. புற உலகத்தை மறக்கச் செய்து, தனித்த இசை உலகுக்கு அந்தப் பாடல்கள் பார்வையாளர்களை அழைத்துச் சென்றன.

நினைவுகளை மீட்டிய இசை: ஏஆர் ரஹ்மான் மற்றும் ஜாவித் அலியின் குரலும், அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த சூஃபி இசைக் கலைஞர்களின் சேர்ந்திசையும் சிவமணியின் டிரம்ஸிலிருந்து வெளிப்பட்ட தாளங்களும் மாபெரும் இசை அனுபவத்தை வழங்கின. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தந்த அந்த இசை, எனக்கு என் ஊர் நினைவைக் கொண்டுவந்தது. என்னுடைய சொந்த ஊரான கடையநல்லூர் சூஃபித் தன்மை நிறைந்த ஓர் ஊர். அங்கு பரசுராமபுரம் தெருவில் சிராஜும் முனீர் என்று ஒரு மதரஸா உண்டு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மதரஸாவுக்கு குர்ஆன் பயிலவரும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அத்தனை பேருக்கும் பள்ளிவாசலில் இடம் போதாது என்பதால், அந்தத் தெருவில் உள்ள வீடுகளின் திண்ணைகளில் வைத்து குர்ஆன் சொல்லிக்கொடுக்கப்படும்.

கடையநல்லூர் பரோட்டாவும், குரான் ஓதுதலும்: காலையில் 6 மணிக்கெல்லாம், ஊரில் உள்ள பள்ளி வயது சிறுவர்கள் தலையில் கருப்பு வெள்ளை நிற தொப்பி அணிந்து மதரஸாவுக்கு குர்ஆன் பயில வந்துவிடுவார்கள். வீடுகளின் திண்ணைகள்தான் அவர்களுக்கான வகுப்பறை. குர்ஆன் நன்கு கற்றுக்கொண்ட முன்னாள் மாணவர்கள்தான் ஆசிரியர்கள். காலை நேரத்தில் அந்தத் தெருவில் ஒவ்வொரு வீட்டு திண்ணையிலிருந்தும் வெளிப்படும் சிறுவர்கள் குர்ஆன் ஓதும் ராகம், அந்தத் தெருவையே இசைத்தன்மை கொண்டதாக மாற்றும். பரோட்டா கடைகளில், காலை நேரத்தில் “இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன், ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன், இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன், எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்” என நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும்.

தர்கா பாடல்களும் சூபித்துவமும்: தர்கா செல்லும் வழக்கம் உடையவர்களின் வீடுகளில் வியாழக்கிழமை மாலை நேரங்களில் “யா ரப்பி ஸலாம் அலைக்கும்… யாரசூல் ஸலாம் அலைக்கும்…” என மவுலூத் ஓதும் ராகம் கேட்கும். பள்ளிவாசல்களிலிருந்து எழும் பாங்கு ஓசை; குழந்தைகளை உறங்க வைக்க பாடப்படும் “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என என் நினைவு அடுக்குகளில் புதைந்திருந்த கலாச்சாரக் கூறுகளை ரஹ்மானின் அன்றைய இசை உயிர்பெறச் செய்தது. மதங்களைக் கடந்த இசை: சூஃபிப் பாடல்கள் இஸ்லாத்தை மையப்படுத்தியவை என்றாலும் அதன் ராகமும் இசைமையும் மதம் கடந்த ஆன்மிக அனுபவத்தை வழங்கக்கூடியது. அன்பின் தூய்மையை உணரச்செய்வது. அதனாலேயே, சூஃபிப் பாடல்கள் மதம், மொழி கடந்து கேட்கப்படுகிறது. அன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம் அல்லாதவர்கள்தான்.

சூபித்துவ குருவும், படல்களும்: ரஹ்மானுக்கும் அவரது தாய்க்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கியவர் சூஃபி ஞானி பீர் கரிமுல்லா ஷா காதிரி. அந்த வயது முதிர்ந்த காதிரி வழியாகவே ரஹ்மானுக்கு சூஃபி இசை அறிமுகம் ஆகிறது. காதிரி தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியில் கவ்வாலி வாசிப்பது வழக்கம். அதைக் கேட்கையில் ரஹ்மானின் ஆன்மாவில் இனம் புரியாத மாற்றம் நிகழ்கிறது. அந்த அனுபவத்தை “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அறிவியல்” என்று ரஹ்மான் குறிப்பிடுவதுண்டு. “காதிரி சிறப்பான பாடகர் கிடையாது. ஆனால், அவர் தன் ஆர்மோனிய பெட்டியை எடுத்து கவ்வாலி வாசிக்கையில் அவரை சுற்றிச் பட்டாம்பூச்சிகள் பறப்பதையும் நறுமணம் கமழ்வதையும் ஒருவர் உணர முடியும்” என்பார் ரஹ்மான். இறைவனை உணர்வதற்கான பாதையாக பார்க்கப்படும் சூஃபித்துவத்தை தனக்கான வாழ்வியலாக தேர்ந்தெடுத்த ரஹ்மான், “இறைவன் முன்னால் என்னை ஒரு யாசகனாகவே உணர்கிறேன். சூஃபி வழியை நான் தேர்ந்தெடுத்தப் பிறகு என்னுடைய ஆசைகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் ‘நான்’ என்ற உணர்வை பிரித்து வைக்க கற்றுக்கொண்டேன். அதன் வழியாகவே என் மீது குவியும் பாராட்டுகளிலிருந்தும் நான் விலகி இருக்கிறேன்” என்கிறார். சமத்துவத்தையும் சகோதரத்தையும் முன்னிறுத்தி மதம் கடந்த அன்பை பரப்பியது ஏ.ஆர்.ரஹ்மானின் அன்றைய சூஃபி இசை மேடை!

தர்கா-சூபித்துவம் ஹராமா, ஹலாலா, ஷிர்கா இல்லையா?: பொதுவாக தமிழக மக்களுக்கு சூபி, சூபித்துவம் என்றால் ஒன்றும் தெரியாது எனலாம். முஸ்லிகளிடையே கேட்டால் கூட சரிவர பதில் சொல்ல மாட்டார்கள். ஆசார இஸ்லாம் சூபித்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை. முன்பெல்லாம் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி, கூட்டங்கள் எல்லாம் போட்டு எதிர்த்து வந்தார்கள். ஏற்கெனவே, தர்கா பக்கத்தில் மசூதி கட்டி, தர்காவை பிரித்து விட்டார்கள். அதாவது, இடையே சுவற்றை எழுப்பி விட்டார்கள். இதனால், மறைமுகமாக, தர்கா வழிபாடு மற்றும் அதனை சேர்ந்தவை மறுக்கப் படுகின்றன. இருப்பினும் நாகூர் போன்ற தர்காக்களுக்கு நாடு முழுவதும் பிரபலம் இருப்பதாலும், முஸ்லிம் அதிகாரிகள் வந்து செல்வதாலும், அதனை ஒரு முக்கிய பக்தி ஸ்தலம் போலவே வைத்திர்க்கின்றனர். அங்கு வந்து நேர்த்திக் கடன் செய்வது, மொட்டை அடிப்பது என்பனவெல்லாம் அரங்கேற்றி வருகின்றன. ஆகவே, ரஹ்மான் செய்யும் சூபி கச்சேரிகளை, ஆசார முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை போலும்.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] சினி.உலகம்.காம், மதம் மாறும் போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை, ஆனால்...ஆர்.ரஹ்மான் பேட்டி,  By Dhiviyarajan ஜூலை 27, 2023.

[2]. https://cineulagam.com/article/ar-rahman-speak-about-religion-converting-1690370174

[3]  தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய நேரத்தில்.. தென்னிந்தியர்களின் திறந்த மனம்.. பளீச்சென பேசிய .ஆர்.ரகுமான், News18 Tamil, July 26, 2023, 18:39 IST,

[4] https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-ar-rahman-reveals-why-he-change-his-faith-for-the-first-time-1081718.html

[5] தமிழ்.இந்து, அல்லாஹ் ரக்கா ரஹ்மானுடன் சூஃபி இசை அனுபவம்!, முகம்மது ரியாஸ், Published : 23 Mar 2023 06:10 AM; Last Updated : 23 Mar 2023 06:10 AM

[6] https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/964637-experience-sufi-music-with-rahman.html

சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!

திசெம்பர் 5, 2022

சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!

 சென்னை மதரஸாவில் பிகார் குழந்தைகள் துன்புறுத்தப் பட்டது: சென்னையில் இயங்கிவரும் மதரஸா (இஸ்லாமிய மதப் பள்ளி) ஒன்றில் பிகாரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறார்கள் அடித்து துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[1]. சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் இந்த மதரஸா இயங்கி வருகிறது[2]. இங்கு படிக்கும் சிறார்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் அவா்கள் வேதனையில் அழுதபடி கூச்சல் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்[3]. அதனடிப்படையில் போலீஸார் அங்கு 29-11-2022 அன்று சென்று விசாரணை நடத்தினா்[4]. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது[5]

பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், தமிழக மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவது: இதுவே விசித்திரமாக உள்ளது, ஏனெனில், வடவிந்தியாவில் இல்லாத “அரபி வகுப்புகள் நடத்துவதற்கு இல்லாத வசதி” தமிழகத்தில், அதிலும் சென்னையில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு உருதில் தேர்ச்சி, புலமை பெற்ற உருது-ஆசிரியர்கள்-பண்டிதர்கள் இந்த சிங்காரச் சென்னையில் இருக்கிறார் போலும். அந்நிலையில் தான் இந்தி வேண்டாம், இந்தி திணிப்பு என்றெல்லாம் திராவிடத்துவ வாதிகள் ஆர்பாட்டம்-போராட்டம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழும் படிப்பதில்லை, சொல்லிக் கொடுப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், “மெட்ராஸ் பாஷை” இன்றும் அதிகமாகி, பெறுகி, பிஎச்.டி லெவலுக்குச் சென்று விட்டது. பேச்சு, பாட்டு, கவிதை என்றெல்லாம் வளர்ந்து, சினிமாக்களில் சென்று விட்டு, உயர்ந்துள்ளது.

 வழக்குப் பதிவு செய்யப்படல்: இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்[6].  இதனால், குழந்தைகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதில், பிகார் மாநிலத்திலிருந்து சிறுவா்களை அழைத்து வந்து அவா்களுக்கு மத போதனை நடத்தப்படுவதும், சரியாகப் படிக்காதவா்களை கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது. 10 முதல் 12 வயது வரையுடைய அந்தச் சிறார்களை குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியிருப்பதும், கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் அவா்கள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி உடனே தகுந்த நடவடிக்கை எடுத்தார்[7]. என் லலிதா, சிறார் நலத்துறை உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் புகார் கொடுத்தார். அதன்படி, ஐபிசி 342 (தவறான முறையில் அடைத்து வைத்தல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் ஜேஜே சட்டம் பிரிவு 75 (குழந்தைக்கு கொடுமைப்படுத்துதல்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[8].

சிறார்கள் மீட்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது: அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த 12 சிறார்களை போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்[9]. தொடர்ந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளை மீட்டனர்[10]. பின்னர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்[11]. தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகள், சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை நிர்வாகிகள் துன்புறுத்தி உள்ளனர். இதில் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த பள்ளி நிர்வாகிகள் அக்தா் (26), பிகாரைச் சோ்ந்த ஆசிரியா் அப்துல்லா (24) ஆகிய இருவரை கைது செய்தனா்.  அன்வர், அக்தர் மற்றும் அப்துல்லா என்று மூவர் கைது செய்யப் பட்டதாக மற்ற ஊடகங்கள் கூறுகின்றன[12]. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையிலெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம்[13], இதுதொடா்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் மாநில அரசு தலைமைச் செயலாளா்களுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[14].

பீகார் மாநிலத்திற்கு சென்று விசாரிக்க ஆணை: மேலும், இந்த சிறுவர்கள் பீஹாரிலிருந்து, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆணையம் அதன் சிறப்பு அறிக்கையாளர் டாக்டர் ராஜீந்தர் குமார் மாலிக்கை பீகார் மாநிலத்திற்கு சென்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது[15]. இளம் அனாதை சிறார்களை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அவர் உண்மையைக் கண்டறியும் விசாரணையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது[16]. பீகார் மாநிலத்தில் சட்டப்பூர்வமான கடமையைச் செய்யத் தவறிய பொறுப்புள்ள ஏஜென்சிகளைப் பற்றி ஆணையம் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், சம்பவம் குறித்து மேலும் அறிய, பாதிக்கப்பட்ட சிறார்களை சென்னையில் சந்தித்து பரிசோதனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவரது அறிக்கை ஒரு மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இது தேசிய அளவில் அறியப் பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தினமணி, மதரஸாவில் சிறார்கள் அடித்து துன்புறுத்தல்: தமிழகம், பிகார் அரசுகளுக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ், By DIN  |   Published On : 05th December 2022 12:19 AM  |   Last Updated : 05th December 2022 12:19 AM

[2]https://www.dinamani.com/india/2022/dec/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3961336.html

[3] தமிழ்.இந்து, அடித்து உதைத்த விவகாரம்; மதரஸாவில் மாணவர்கள் சித்ரவதை: பள்ளி நிர்வாகிகள் இருவர் கைது, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2022 07:31 AM; Last Updated : 01 Dec 2022 07:31 AM. https://www.hindutamil.in/news/crime/908355-torture-of-students-in-madrasa-1.html

[4] https://www.hindutamil.in/news/crime/908355-torture-of-students-in-madrasa-1.html

[5] காமதேனு, கேபிள் வயரால் அடித்து சித்ரவதை: சென்னை மதரஸா பள்ளியில் படித்த பிஹாரைச் சேர்ந்த 12 குழந்தைகள் மீட்பு, Updated on : 29 Nov, 2022, 7:23 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/12-children-from-bihar-rescued-from-madrasa-school-chennai

[7] நான்காவது கண், விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 12 பீகார் சிறுவர்கள் மீட்பு: மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நடவடிக்கை, CRIMEPOLICE NEWSசெய்திகள், By Fourth Eye Last updated Nov 30, 2022.

[8]  India Express, Three held for torturing 12 boys from Bihar at Chennai Madrassa, Published: 01st December 2022 02:49 AM  |   Last Updated: 04th December 2022 04:14 PM.

The police registered a case under four sections – IPC 342 (wrongful confinement), 323 (voluntarily causing hurt.), 324 (voluntarily causing hurt by dangerous weapons) and JJ Act section 75 (cruelty to child).

[9] https://fourtheyenews.com/archives/5585

[10] இ.டிவி.பாரத், மதரஸா பள்ளியில் வடமாநில குழந்தைகள் சித்ரவதை! 12 குழந்தைகள் மீட்பு, Published on: November 30, 2022, 7:22 AM IST.

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/12-bihar-children-rescued-from-arabic-madrasa-school-in-madhavaram-at-chennai/tamil-nadu20221130072233794794832

[12] After an investigation police said, three men – Anwar, Akthar and Abdullah – were running a madrassa where minor boys are taught to learn the Quran.

https://www.newindianexpress.com/cities/chennai/2022/dec/01/three-held-for-torturing-12-boys-from-bihar-at-chennai-madrassa-2523894.html

[13] NHRC notice to the Governments of Tamil Nadu and Bihar over reported torture of 12 orphaned juveniles brought from Bihar to a Madrasa in Chennai, New Delhi:3 December, 2022.

[14] https://nhrc.nic.in/media/press-release/nhrc-notice-governments-tamil-nadu-and-bihar-over-reported-torture-12-orphaned

[15] ANInews, NHRC issues notice to governments of Bihar and Tamil Nadu over torture of 12 orphaned juveniles, ANI | Updated: Dec 03, 2022 19:42 IST

[16] https://www.aninews.in/news/national/general-news/nhrc-issues-notice-to-governments-of-bihar-and-tamil-nadu-over-torture-of-12-orphaned-juveniles20221203194248/

குமுதம் ரிப்போர்டட் 13-2-2022, ‘மதரஸ்ஸா” பெயரில் பணம் வசூல் செய்ததாக் கூறுகிறது…