Archive for the ‘கொள்ளையடி’ category

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

ஜனவரி 3, 2017

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

dulagarh-14-12-2016-rioters-with-cans-of-petrol-etc

மதகலவரம்அல்ல என்றும், சிறியஉள்ளூர் பிரச்சினைஎன்றும். மறுப்பது:  துலாகரில் மத கலவரம் கொதித்து அடங்கியுள்ளது[1]. இது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள்-கடைகள் எரிந்து, சாம்பலாகி அடங்கியது போலுள்ளது[2]. பிஜேபி தலைவர் சித்தார்த் நாத் சிங், திரிணமூல் காங்கிரஸின், சிறுபான்மை குழுவினர் தாம், இந்த கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்[3]. தேசிய மனித உரிமைகள் வாரியத்திடம், இப்பிரச்சியை எடுத்துச் செல்வோம் என்றும் பிஜேபியினர் கூறியுள்ளார்கள்[4]. ஆனால், மம்தா பானர்ஜியோ, இது, “மத-கலவரம்” அல்ல என்றும், சிறிய “உள்ளூர் பிரச்சினை” என்றும். மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். அதே போல, திரிணமூல் கட்சியினர் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தவறான விவரங்களை பரப்புகிறார்கள் என்றும், அவற்றிற்கு மதசாயம் பூசப் பார்க்கிறார்கள் என்றும் குறைகூறினார்கள். அதாவது, ஒன்றுமே நடக்கவில்லை போன்று சாதிக்கும் மம்தாவின் போக்கு திகைப்படைவதாக உள்ளது. துலாகர் கலவர விவரங்கள் முழுவதும் வெளிவருமா-வராதா என்ற சந்தேகம் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

dulagarh-14-12-2016-vehicles-torchedகலவரங்களில் கூட செக்யூலரிஸம் பார்த்து பாரபட்சத்துடன் செயல்படுவது: இந்துக்களின் பாதிப்பு கிள்ளுக்கீறையாக உள்ளது. இந்தியாவில், காஷ்மீரத்து இந்துக்கள் தாம், சொந்த நாட்டிலேயே “அகதிகள்” என்று சொல்லப்பட்டு, வாழ்கின்றனர் என்றால், அந்நிலை, வேற்கு வங்காளத்திலும் வந்து விட்டது. முசபர்நகரில், டிவி-குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, பேட்டி கண்டு, ஏதோ, முஸ்லிம்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது போல சித்தரித்துக் காட்டினர். ஆனால், துலாகரில், ஒட்டுமொத்தமாக இந்துக்கள் அகதிகளாகிய போது, அதே ஊடகக்கள் மௌனம் காக்கின்றன. 2016 டிசம்பர் 28 முதல் 31 வரை இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் கூட செக்யூலரிஸம் பற்றி கருத்தரங்கம் நடத்தி பேசியபோது, இந்துக்கள் சார்புடைய இயக்கங்கள் குற்றஞ்சாட்டப்பட்டன. அதே தேதிகளில் தான் துலாகர் கலவரங்கள் பற்றிய செய்திகள் கொஞ்சம் வெளிவர ஆரம்பித்தன. “தி இந்து” முன்னதை விளாவரியாக, பிரபலப்படுத்தி செய்திகள் வெளியிட்டது, ஆனால், பின்னதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. இதுதான் அவர்களது உணர்ச்சி, சுரணை மற்ற்றும் சகிப்புத்தன்மைகளின் நிலைபோலும்.

dulagarh-14-12-2016-rioters-in-action-3உணர்ச்சி, சகிப்புத்தன்மை மற்றும் சொரணை பற்றி ஆர்பாட்டம் செய்த கூட்டங்கள் அமைதியாக இருப்பது[5]: ஒரு ஆண்டிற்கு முன்னர், செக்யூலரிஸவாதிகள், பிரபலங்கள் என்று பல்வேறு அறிவுஜீவி கூட்டங்கள் பெரிய அளவில் கலாட்டா செய்து, ஆர்பாட்டம் செய்தனர். அதாவடு சிறுபாப்மையினர் மீது தாக்குதல் நடக்கின்றது. யாருக்கும் சுரணை இல்லை, மரத்து விட்டது, ஆனால், அவர்களுக்கு மட்டும் தான் ஐபுலன்களும் உணர்ச்சியோடு இருப்பதனால், தாங்க முடியாமல், துடிதுடித்து, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திரும்ப கொடுத்து கலாட்டா செய்தனர். சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் வியாக்யானம் செய்து அட்டகாசம் செய்தனர். ஆனால், இப்பொழுதே அவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி பேசுவதாக இல்லை. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதனால், சுரணை வரவில்லை போலும். அங்குதான் அப்பாவி இந்துக்கள், உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தனர் என்றால், இந்த வீர-தீர-சூர உணர்ச்சிப்புலிகள் எங்கு ஓடி ஒளிந்தன என்று தெரியவில்லை. காங்கிரஸைப் பற்றி கவலையே இல்லை. கிருஸ்துமஸ்-புது வருடம் என்று ராகுல் காந்தி இந்தியாவை விட்டு ஜாலியாகக் கிளம்பி விட்டார். குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என்று ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்[6].

riots-erupted-after-milad-ul-nabi-yatraதுலாகரின் மதகலவரமும், சென்னையின் வர்தா புயலும்: டிசம்பர் 12-15 தேதிகள் துலாகர் மற்றும் சென்னை இரண்டும், மதகலவரம் மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்டதால், மக்கள் பெருத்த சேதத்தைக் கண்டுள்ளனர். இயற்கை உண்மையிலேயே, செக்யூலரிஸ ரீதியில் சென்னையைத் தாக்கியுள்ள போது, இந்திய செக்யூலரிஸம், இஸ்லாமிய மதவெறியோடு சேர்ந்து கொண்டு, இந்துக்களை மட்டும் தாக்கியுள்ளது. ஆகையால், செக்யூலரிஸ உணர்ச்சியாளர்கள் சொரிந்து விட்டுக் கொண்டு, அடங்கி கிடக்கின்றனர் போலும். ஆனால், டிசம்பர் 28-31 2016 தேதிகளில், திருவனந்தபுரத்தில், இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் செக்யூகரிஸம் பற்றி அதிகமாகவே பேசப்பட்டது, ஆனால், துலாகர் கலவரங்கள் பற்றிப் பேசப்படாதது, அவர்களது மறைக்கும் போக்கையே காட்டுகிறது. மெத்தப் படித்த ரோமில தாபர் போன்றோருக்கு, அதெல்லாம் தெரியாதா என்ன? சரி, கம்யூனிஸ முதலமைச்சர், இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தங்களது எதிரியான, மம்தா பானெர்ஜியை சாடியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை. அங்கிருப்பவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது “சங்கப் பரிவார்” தான்! மால்டாவில் தீர்மானங்கள் நிறைவேற்றியது போல, மிக்க செக்யூலரிஸத்துடன், துலாகர் கலவரங்களைக் கண்டித்து எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அதாவது, இந்துக்கள் எனும்போது, கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றனர். அதுதான் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டது.

dulagarh-14-12-2016-rioters-in-action-lorry-torchedமால்டாவில் இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாடு நடந்த பிறகு கலவரம் ஏற்பட்டது, அதேபோல கேரளாவில் நடக்குமா?: சென்ற மால்டா இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டிற்கும், மால்டா கலவரங்களுக்கும் இருக்கக் கூடிய சம்பந்தங்களை எனது கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[7]. ஆனால், இப்பொழுது, மாநாட்டிற்கு முன்னமே, இக்கலவரங்கள் நடந்துள்ளன. அப்பொழுது வேண்டுமென்றே, “ராமஜன்ம பூமி” பிரச்சினையை வைத்து, உள்ள சரித்திய கட்டிடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[8]. நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட விசயங்களை மறைத்து[9], அவ்வாறு செய்தனர். முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கிய, ஏன், நீதிமன்றத்தில் சாட்சிகளாககைருந்தவர்கள் தாம் செக்யூலரிஸம் பேசுகின்றனர்[10]. இம்முறை மாநாடு கேரளாவில் நடந்து முடிந்துள்ளதால், இனி கேரளாவில் ஏதாவது நடக்கும் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2017

dulagarh-14-12-2016-zee-tv

[1] First Post, Dhulagarh riots: West Bengal town on the boil after communal violence, Dec 28, 2016 16:29 IST

[2] http://www.firstpost.com/india/dhulagarh-riots-west-bengal-town-on-the-boil-after-communal-violence-3177608.html

[3] The Hindu, BJP to move NHRC over Dhulagarh riots, NEW DELHI: DECEMBER 21, 2016 03:15 IST; UPDATED: DECEMBER 21, 2016 03:15 IST

[4] http://www.thehindu.com/news/national/other-states/BJP-to-move-NHRC-over-Dhulagarh-riots/article16915243.ece

[5] http://tamil.oneindia.com/news/india/writers-step-up-protest-5-more-return-akademi-award/slider-pf172066-237502.html

[6]http://www.dinamani.com/india/2016/dec/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2624002.html

[7] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-1/

[8] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-2/

[9] http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

[10] R Vaidyanathan is Professor of Finance and Control, IIM Bangalore, The views are personal and do not reflect that of his organisation.

 http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html