Archive for the ‘குக்கர் வெடிகுண்டு’ category

தமிழகத்தில் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்துவது ஏன்?

ஜூன் 30, 2024

தமிழகத்தில் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்துவது ஏன்?

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்..., அதிகாரிகள் அதிரடி சோதனை: சட்டவிரோத செயல்பாடு காரணமாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உள்ளிட்ட 8 அமைப்புகள், ஐந்து ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு கடந்த ஆண்டு 2023 தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்[1]. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது[2]. அல்உம்மா என்ற பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. தமிழகத்தில் இவ்வாறு தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து, செயல்பட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. பொதுவாக, அத்தகைய தீவிரவாத நபர்களுக்கு உதவ ஆட்கள் இல்லாமல், அவர்கள் சுற்றி வர / தங்க முடியாது அப்படியென்றால், குறிப்பிட்ட நபர்களுக்கு தெரிந்தே இவை நடந்து வருகின்றன என்றாகிறது.

ஹிஸ்புத் தஹிரகமப்பு அதரவு வீடுகளில் சோதனை: ஹிஸ்புத் தஹிர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதி தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சாவூரில் 5 இடங்களில் ரெய்டு நடக்கிறது. குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று (ஜூன் 30) காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்[3]. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது[4]. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் 0-06-2024 அன்று காலை ஆறு மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[5]. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஸ்புத் தஹிர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது[6].

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்த்து எப்படி?[7]: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்[8]. குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது[9]. இது தொடர்பாக 1000 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ள போலீசார் இருவரும் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? என்பது பற்றிய தகவல்களை ரகசியமாக திரட்டி வைத்துள்ளனர்[10]. ஒருமாதம் தங்கியிருந்து ஊரைச் சுற்றி வந்திருக்கிறார்கள் என்பது சாதாரணமான விசயம் அல்ல. அதாவது, இங்கு பிரச்சினை இல்லை, ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், பாதுகாப்புடன் வேலைகளை செய்யலாம் என்ற நிலையறிந்து தான் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 5 / 10 / 12 இடங்களில் சோதனை[11]: வழக்கம் போல, ஊடக்ச்ங்கள் அரைத்த மாவை அரைத்துள்ளன. எல்லா ஊடக விவரங்களையும் படித்து, தொகுக்கப் பட்டுள்ள விவரங்கள் இவ்வாறு[12]:

  1. தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் காதர் சுல்தான் மகனான தனியார் புகைப்பட நிபுணர் அகமது (35) வீடு[13].
  2. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் மகன் சலீம் வீட்டிலும்[14].
  3. சாலியமங்கலத்தில் அப்துல் காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் 
  4. ஈரோடு பெரியார் நகர் அருகே கருப்பண்ணசாமி கோயில் வீதியில் வசித்து வரும் முகமது இசாக் (40) என்பவர் வீடு..
  5.  ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வீ
  6. ஷேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்[15]. ஷேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆயுதங்கள் வைத்திருத்தல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய் தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது[16].
  7. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
  8. சென்னையில் மண்ணடி விநாயகர் கோவில் தெருவில் ஒரு வீடு.
  9. மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் ஒரு வீடு.
  10. திருவல்லிக்கேணியில் லாட்ஜ் ஒன்று
  11.  தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீடு.

பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: கோயம்புத்தூர் கேஸ் சிலிண்டர் காரில் வெடித்ததிலிருந்து, பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் உள்ளவர் நேரடியாகவோ மறைமுகமாக உதவி வந்துள்ளனர் என்பது சோதனைகள் மூலம் தெரிய வந்தது. இதனால்தான் தொடர்ந்து அவர்கள் சோதனை செய்து வருகிறார்கள். சிலரை கைது செய்யப்பட்ட விசாரணையில் வைத்துள்ளார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால், இத்தனை பேர்கள் தொடர்ந்து தீவிரவாத செயல்வாதிகளுக்கு உதவ வரும்போது, எப்படி மற்றவர்கள் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது தான். ஏனெனில் சாதாரண மனிதர்களாலே சில வேலைகளை யாரிடமும் மறைத்து செய்துவிட முடியாது என்பது மிக கடினமான செயல். இருப்பினும் அவர்கள் அவருடைய செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். என்பதை கவனிக்கும் பொழுது மிகவும் திகைப்பாக தான் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் திட்டமிட்ட காரியங்கள் எல்லாம் நடக்கும் அல்லது நடந்து விடும் என்றால், அதன் விளைவே நினைத்து பார்க்கும் மிக பயங்கரமாக உள்ளது. ஆகவே, வருமுன் காப்போம் என்று மற்ற விசயங்களில் பிரசாரம் செய்யும் நிலையில், முதலிய தீவிரவாத செயல்களை தடுத்து, அப்பாவி மக்களை காப்போம் என்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்களும் சந்தேகத்திற்குரிய நபர்கள் இவ்வாறு நடமாடும் பொழுது உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டு,ம் நமக்கு எதற்கு பிரச்சனை என்று பிறந்து விடக்கூடாது

© வேதபிரகாஷ்

30-06-2024


[1] தினமணி, தஞ்சாவூரில் 5 இடங்களில் என்... சோதனை, Published on:  30 ஜூன் 2024, 10:58 am; Updated on: 30 ஜூன் 2024, 10:58 am.

[2] https://www.dinamani.com/tamilnadu/2024/Jun/30/nia-conducts-raids-in-thanjavur

[3] தினமலர், பல்வேறு மாவட்டங்களில் என்..., சோதனை, ADDED : ஜூன் 30, 2024 08:35 AM.

[4] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/nia-raid-in-various-districts–/3660988

[5] புதியதலைமுறை, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என் அதிகாரிகள் சோதனை, Published on: 30 Jun 2024, 8:28 am

[6] https://www.puthiyathalaimurai.com/india/nia-raids-at-12-places-in-tamil-nadu

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை: இதுதான் காரணமா?, WebDesk, 30 Jun 2024 08:53 IST, புதுப்பிக்கப்பட்டது 30 Jun 2024 08:55 IST.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/nia-raid-12-palces-of-tamilnadu-4787067

[9] தமிழ்.இந்து, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவுஈரோட்டில் இரு இடங்களில் என்.. சோதனை, எஸ்.கோவிந்தராஜ், Published : 30 Jun 2024 12:07 PM; Last Updated : 30 Jun 2024 12:07 PM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/1272266-nia-raids-at-two-locations-in-erode.html

[11] மாலைமலர், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை , Byமாலை மலர்30 ஜூன் 2024 9:13 AM (Updated: 30 ஜூன் 2024 2:02 PM).

[12] https://www.maalaimalar.com/news/state/nia-searches-at-10-locations-across-tn-726385

[13] நக்கீரன், தமிழகத்தில் 12 இடங்களில் என்.. சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 30/06/2024 | Edited on 30/06/2024

[14] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raids-12-places-tamil-nadu

[15] மாலைமலர், தமிழகத்தில் 5 இடங்களில் என்... சோதனை, Byமாலை மலர்27 மார்ச் 2024 8:53 AM (Updated: 27 மார்ச் 2024 11:37 AM).

[16]  https://www.maalaimalar.com/news/state/nia-raid-5-places-in-tn-710027

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார்குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (1)

அல் ஹிந்த் அறக்கட்டளை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தீர்த்தஹள்ளி பாதை முதலியன:  அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2020-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர். இவர்கள், ‘தீர்த்தஹள்ளி பாதை’ [Thirthahalli module] எனக் குறிப்பிடப்படும் ஒரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு முகமைகள் நம்புகின்றன[1]. பெங்களூரில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் அல் ஹிந்த் அறக்கட்டளையை நடத்தி வந்த மெகபூப் பாஷாவும், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீனும் இணைந்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி தென்னிந்தியாவில் மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது[2].

இது உள்ளூர் தீவிரவாதமாஅனைத்துலக ரீதியில் பாதிப்பை உண்டாக்கும் சதி வேலையா?: முந்தைய வெடிகுண்டுகள் தொடர்புகள் போலவே, இதிலும், தமிழக தொடர்பு இருப்பதை கவனிக்கலாம். ஐஎஸ் பாணி கிளர்ச்சியை தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களோடு, அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  1. 2020 அக்டோபரில் மங்களூருவில் நடந்த பயங்கரவாத ஆதரவு கூட்டம்,
  2. செப்டம்பர் 2022-இல் ஷிவ்மொகாவில் துங்கா நதிக்கரையில் நிகழ்ந்த ஐஇடி குண்டுவெடிப்பு மற்றும்
  3. குக்கர் குண்டுவெடிப்பு –

ஆகிய மூன்று பயங்கரவாத வழக்குகளிலும் தாஹா மற்றும் ஹுசைன் குற்றம்சாட்டப்பட்டனர். இதையெல்லாம் கூட, முன்னர் “உள்ளூர் தீவிரவாதம்” என்று குறிப்பிடப் பட்டு திசைத் திருப்பப் பட்டது. ஆனால், பெங்களூரு, மும்பக்கு அடுத்தப் படியாக, வியாபார-வணிக முக்கியத்துவம் அடைந்து வந்துள்ள நிலையில், இத்தகைய தீவிரவாத செயல்கள், இந்திய பொருளாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

12-04-2024 அன்று ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கூட்டாளி கைது: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் 12-04-2024 அன்று வெள்ளிக்கிழமை, கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[3]. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர்[5]. குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (Adbul Matheen Ahmed Taahaa வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (Mussavir Hussain Shazib வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்[6]. இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[7].  இன்னொருவன் நெல்லூர், சென்னை, வந்து ஒரிசா வழியாக, கொல்கொத்தாவிற்குச் சென்றதாகத் தெரிகிறது[8]. விக்னேஸ் மற்றும் சுமித் பெயர்களில் இப்ரவரியில் 2024 சென்னையில் தங்கியதாகத் தெரிகிறது. ஆக, இவ்விடங்களில் இவர்களுக்கு உதவியாக தொடர்புகள் இருந்தனவா என்றும் நோக்கத் தக்கது.

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பு என்ன?: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு இது தொடர்பாக ஏற்கனவே நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்[9]. இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர்[10]. இதனிடையே வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார். ஆனால், தமிழக ஆளும் அரசியல்வாதிகள் கோவை கார் குண்டுவெடிப்பு பற்றி அமுக்கியே வாசித்தனர், அதனை விபத்து என்று குறிப்பிட்டு வந்தனர். இப்பொழுதெல்லாம், இதை பற்றி கண்டுகொள்வதில்லை.

சந்தேகிக்கப் பட்ட நபர் பற்றிய புகைப்படம் வெளியீடு முதலியன: குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது. தகவல் அளிப்பவர்களின் அடையாளங்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியது. பெங்களூரின் புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபலமான உணவகமான தி ராமேஸ்வரம் கஃபேயில் ஒரு பையை வைத்திருக்கும் போது சிசிடிவி கேமரா காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட குற்றவாளியின் படத்தையும் நிறுவனம் வெளியிட்டது. என்ஐஏ வெளியிட்ட புகைப்படத்தில், குண்டுவைத்தவர் தொப்பி, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு காலணிகளை அணிந்திருப்பதைக் காணலாம். அந்த பதிவில், “அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் வெகுமதி வழங்கப்படும்” என்றும் என்ஐஏ வலியுறுத்தியது. உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) இந்த வழக்கின் விசாரணையை பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பிடம் ஒப்படைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு என்ஐஏ வெகுமதியை அறிவித்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவடாங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஃப் என்பவர், கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்டார்[11]. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[12].  என்.ஐ.ஏ அதிக முயற்சியோடு செயல்பட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] A group once associated with graffiti near a police station in Mangaluru has become the most wanted terror module in Karnataka. Known in police circles as the “Thirthahalli module”, this group is believed to be responsible for a series of improved explosive device (IED) explosions in both Mangaluru and Bengaluru, with aspirations of establishing an Islamic State Caliphate within Karnataka’s forests, according to a charge sheet filed by NIA.

Hindustan Times, NIA links ‘Thirthahalli module’ to IED blasts in parts of Karnataka, By Arun Dev, Bengaluru, Mar 30, 2024 07:40 AM IST.

[2] Their emergence on the radar of investigative agencies dates back to January 2020 when state police uncovered the Al Hind terror module, inspired by the Islamic State (IS), operating in Bengaluru’s Suddaguntepalya. Spearheaded by Mehboob Pasha, affiliated with the Al Hind Trust, Shihabudeen and Khaja Moideen from Cuddalore, Tamil Nadu the module aimed at establishing an IS province through insurgent activities spanning Karnataka and Tamil Nadu. “They formed the Al-Hind module and selected Bengaluru as their base and conducted several criminal conspiracy meetings in Karnataka and Tamil Nadu since April 2019,” NIA said in its charge sheet filed in the Al-Hind module case in September 2021.

https://www.hindustantimes.com/india-news/nia-links-thirthahalli-module-to-ied-blasts-in-parts-of-karnataka-101711738475993.html

[3] விகடன், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கைதுகொல்கத்தாவில் மடக்கிய NIA!, சி. அர்ச்சுணன், Published:12 Apr 2024 3 PM; Updated:12 Apr 2024 3 PM.

[4] https://www.vikatan.com/crime/nia-arrests-two-main-accused-of-bengaluru-rameshwaram-cafe-blast

[5] புதியதலைமுறை, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புமூளையாக செயல்பட்ட இருவர் அதிரடியாக கைது!,ஜெனிட்டா ரோஸ்லின், Published on: 12 Apr 2024, 12:48 pm

[6] https://www.puthiyathalaimurai.com/india/nia-arrests-2-main-suspects-in-bengaluru-rameshwaram-cafe-blast-case

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமேஸ்வரம் கபேவசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..சுற்றி வளைத்து கைது செய்த என்ஐஏ.! சென்னையில் தஞ்சமா?, By Rajkumar R, Updated: Friday, April 12, 2024, 12:43 [IST].

[8] https://tamil.oneindia.com/news/india/two-accused-involved-in-bengaluru-rameswaram-cafe-blast-incident-arrested-in-kolkata-by-nia-597799.html

[9] தினகரன், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மேற்குவங்கத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது, Published: April 12, 2024, 11:50 amLast Updated on April 12, 2024, 11:51 am.

[10] https://www.dinakaran.com/bengaluru_blast_two_arrested/

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Bengaluru Cafe blast: பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. 2 பேரை அதிரடியாக கைது செய்தது என்ஐஏ!, Karthikeyan S HT Tamil, Apr 12, 2024 11:27 AM IST,

[12] https://tamil.hindustantimes.com/nation-and-world/two-arrested-from-west-bengal-in-connection-with-bengalurus-rameswaram-cafe-blast-131712900386950.html

தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டுகள் கேரளாவில் பிடிபட்டது எப்படி? கர்நாடகாவில் குவாரி என்றால் கேரள வீட்டில் பதுக்கி வைப்பானேன்?

ஜூன் 1, 2023

தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டுகள் கேரளாவில் பிடிபட்டது எப்படி? கர்நாடகாவில் குவாரி என்றால் கேரள வீட்டில் பதுக்கி வைப்பானேன்?

30-06-2023 செவ்வாய்கிழமை சாராய போதை தடுப்பு போலீசார் சோதனை: சமீப காலங்களில் குற்றங்கள் எல்லைகளைக் கடந்து தான் நடந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் அந்த மாடல், இந்த மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், குற்றவாளிகள் தொடர்ந்து தங்களது மாடலில் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது[1]. என்ன நடந்தாலும், ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இங்கு, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதுார் கிராமத்தில், மூலியூர் கிராம பஞ்சாயத்து, கள்ள சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[2]. காசர்கோடு என்றாலே சமீபகாலத்தில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடம் என்பது போல, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப் பொருட்கள், மருந்து, சாராயம் போன்றவற்றிற்கும் பிரபலமாக இருக்கிறது. ஆகையால், இங்கு போலீசார் சோதன் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, அங்கு கலால் துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை, 30-06-2023 நேற்று அதிகாலை, முகமது முஸ்தபா, 42, என்பவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரின் பின்புறம், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர்[3].

30-06-2023 செவ்வாய்கிழமை வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: வழக்கம் போல, அதில், கள்ள சாராய பாக்கெட்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது[4]. ஆனால், சாராயப் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வெடிப்பொருட்கள் இருந்ததால், போலீஸார் திடுக்கிட்டனர். மே 31, 2023 கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, 2,800 ‘ஜெலட்டின்’ குச்சிகள், 7,000 ‘டெட்டனேட்டர்’கள், ஒரு ‘டைனமைட்’ உட்பட குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்களுடன், ‘ஒயர் பண்டல்’களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்[5]. இதை தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து கலால் துறையினர் சோதனையிட்ட போது, குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்[6]. இதனால், சாராய போதை தடுப்பு போலீசார் உடனடியாக அதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[7].

போலீசார் சோதனையிட்டு, காரில் வீட்டில் வெடிகுண்டுகள், பொருட்கள் கண்டுபிடித்தனர்: இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையில் போலீசார் வந்து சோதனையிட்டதில், முகமது முஸ்தபாவின் வீடு மற்றும் காரில், 13 பெட்டிகளில் 2,800 ஜெலட்டின் குச்சிகள், 7,000 டெட்டனேட்டர்கள், ஒரு டைனமைட் மற்றும் ஐந்து பண்டல் ஒயர்கள் கைப்பற்றப்பட்டன[8]. அவரிடம் இது பற்றி கேட்டபோது, கர்நாடகாவில், ‘கிரானைட்’ குவாரிகள் நடத்தி வருவதாகவும், அங்கு வெடி வைத்து தகர்க்க, வெடி பொருட்கள் சப்ளை செய்து வருவதாகவும் முகமது முஸ்தபா தெரிவித்தார்[9]. இவன் அடிக்கடி கர்நாடக பகுதிக்குச் சென்று வருவது தெரிந்தது. ஆனால், இதற்கான ‘லைசென்ஸ்’ எதுவும் தன்னிடம் இல்லை என, அவர் தெரிவித்தார்[10]. குவாரிகளுக்கு என்று சொல்லி இவ்வாறு வெடிப்பொருட்கள் வாங்குவதும், அவை, பிறகு வெடிகுண்டுகள் தயாரிக்க, வெடிகுண்டுகளாகவே உபயோகிக்கப் படுவது, தீவிரவாதிகளின் செயல்களிலிருந்து தெரிய வருகிறது.

குவாரி பயோகத்திற்கு என்று இத்தகைய வெடிகுண்டுகளை வாங்குவது: இது சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பெரும்பாலான வெடிகுண்டு வழக்குகளில் அவ்வாறு தான் ஆதாரங்களும் வெளிப்பட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளின் மீது காணப்படும் விவரங்களிலிருந்து அவை மின்சாரம் மூலம் உடனடியாக வெடிக்கப் படும் வெடிகுண்டு [SAED (Electric Instantaneous Detonator)] என்று தெரிகிறது. ரெக்ஸ் REX என்பது, செல்லுலோஸ் நைட்ரேட் வகையறா போல் தோன்றுகிறது. இவை தெலிங்கானாவில் உள்ள தொழிற்சாலை [Salvo Explosives and Chemicals Pvt Ltd, Ankireddypalli (Vill), Keesara Mandal, Medchal-Malkajgiri Dist.,- 501301, Telangana] மூலம் தயாரிக்கப் பட்டது என்பதும் தெரிகிறது. ஆக, தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிப்பொருட்கள், கேரளாவுக்கு வந்துள்ளன, ஆனால், குவாரி கர்நாடகத்தில் உள்ளதாம்.

தற்கொலைக்கு முயற்சி: அவரது வீட்டை போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்ட போது, பதற்றத்துடன் இருந்த முஸ்தபா, திடீரென தன் கை மணிக்கட்டை, ‘பிளேடால்’ அறுத்து தற்கொலைக்கு முயன்றார்[11]. இதுவும் அத்தகைய தீவிரவாதிகள் கடைபிடிக்கும் உக்திதான். அவரை போலீசார் உடனடியாக காசர்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்[12]. உடனே, அவனுக்கு மறைமுகமாக உதவி கிடைக்கும். அவன் ஒத்துழைக்க மாட்டான். இல்லை, இச்செய்தி அப்படியே அமுக்கப் படும். இப்பொழுதே, இது பிடி.ஐ செய்தியாக இருப்பதால், எல்லா ஊடகங்களும் அப்படியே போட்டுள்ளன. இல்லையென்றால், இது ஏதோ சாதாரண உள்ளூர் செய்தியாகி அமுக்கப் பட்டிருக்கும். இந்நிலையில், அவருக்கு வெடி பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[13]. இது போன்ற வெடி பொருட்களை சேகரித்து வைக்க பல விதிகள் உள்ளன. அவற்றை வீடுகளிலும், கார்களிலும் சேகரித்து வைப்பது சட்டப்படி குற்றம்[14]. இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான் இருப்பினும், சொகுசு காரில் ஏற்று எடுத்துச் செல்லப் படுகிறது. வீடுகளில் சேகரிக்கப் படுகிறது. எனவே, சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரித்தல், பதுக்கி வைத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, கேரளாவில் ஏதேனும் நாச வேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறாக செய்திகள் முடிகின்றன. இவற்றை யார் வாங்கினர் போன்ற விவரங்கள் எல்லாம் இனிமேல் தான் கண்டுபிடிப்பார்கள் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

01-06-2023


[1] தினமலர், வெடிபொருட்களுடன் கேரள நபர் கைது!, மாற்றம் செய்த நாள்: மே 30,2023 23:50; https://m.dinamalar.com/detail.php?id=3334630

[2] https://m.dinamalar.com/detail.php?id=3334630

[3] Onmanorama, 2,800 gelatin sticks, 7,000 detonators seized in Kasaragod; accused says he supplies explosives to quarries, Onmanorama Staff, Published: May 30, 2023 09:29 AM IST Updated: May 30, 2023 01:55 PM IST.

[4] Excise officers found around 2,800 gelatin sticks in 13 boxes, one dynamite, nearly 7,000 detonators, and five rounds of wires, said the officer. Some of them were recovered from his house, too.

https://www.onmanorama.com/news/kerala/2023/05/30/explosives-seized-in-kasaragod-one-arrested.html

[5] குமுதம், கேரளா: கள்ளச் சாராய வேட்டைக்கு சென்ற போலீஸ்: சோதனையில் சிக்கிய அதிர்ச்சிப் பொருட்கள், ஜூன் 1 2023.

[6] https://www.kumudam.com/news/tamilnadu/the-police-went-on-a-hunt-for-bootleg-liquor

[7] The Hindu, Huge quantity of explosives seized from a house in Kasaragod, May 30, 2023 06:12 pm | Updated 06:12 pm IST – KASARAGOD, THE HINDU BUREAU

[8] https://www.thehindu.com/news/national/kerala/huge-quantity-of-explosives-seized-from-a-house-in-kasaragod/article66911137.ece

[9] Economics Times, Kerala: Huge consignment of 2800 gelatin sticks, 6000 detonators seized in Kasargod, Mirror Now | 30 May 2023, 12:30 PM IST.

[10] https://economictimes.indiatimes.com/news/india/kerala-huge-consignment-of-2800-gelatin-sticks-6000-detonators-seized-in-kasargod/videoshow/100614704.cms?from=mdr

[11] Janam TV, Explosives seized in Kasaragod: 2,800 gelatin sticks and 7000 detonators recovered, accused tries to commit suicide, Janam Web Desk, May 30, 2023, 03:16 pm IST

[12] https://english.janamtv.com/news/kerala/58758/explosives-seized-in-kasaragod-2800-gelatin-sticks-and-7000-detonators-recovered-accused-tries-to-commit-suicide/

[13] AsiaNetNews, Explosive haul: 2800 gelatin sticks, 6000 detonators in Kerala’s Kasaragod, Aishwarya Nair, First Published May 30, 2023, 12:35 PM IST; Last Updated May 30, 2023, 2:08 PM IST.

[14] https://newsable.asianetnews.com/india/explosive-haul-2800-gelatin-sticks-6000-detonators-in-kerala-s-kasaragod-anr-rvgmd1

2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

ஏப்ரல் 22, 2023

19-04-2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

கோவை காஸ் சிலின்டர் வெடிப்பு, திட்டமிட்ட குண்டு வெடிப்புதான்: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது[1]. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார்[2]. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது[3]. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள “அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்” என்ற பழமையான கோவிலில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது[4]. ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (V-IED) கோவிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பில் முபீன் கொல்லப்பட்டார். முதலில், அது வெறும் குக்கர் தான், ஏதேச்சையாக, தற்செயலாக, விபத்து போல வெடித்தது என்று கூட சில ஊடகங்கள் திரித்து செய்திகள் வெளியிட்டன. திமுக மற்றும் திராவிடத்துவ ஆதரவாளர்கள் அதை திவிரவாத தாக்குதல் என்பதனையே மறுத்துப் பேசினர், வாதிடவும் செய்தனர். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியைக் கூட தரக்குறைவாகப் பேசினர்.

11-பேர் கூட்டு சதிகாரர்கள் திட்டமிட்டு செய்தது: போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது[5]. இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், 20-04-2023 அன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்[6]. மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், 21-04-2023 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். 

கார் முதல் கெமிகல்ஸ் வரை எல்லாமே திட்டமிட்டு பெறப்பட்டது, குண்டு தயாரிக்கப் பட்டது: இந்நிலையில் உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட டி.என்.01. எப்.6163 என்ற நம்பருடன் கூடிய மாருதி 800 காரை தல்ஹா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்[7]. பைரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், கேஸ் சிலிண்டரைக் கொண்டு காரை வெடிகுண்டாக மாற்ற உதவியுள்ளனர்[8]. அசாருதீன், அப்சர் மற்றும் அவரது உறவினர் முபீன் ஆகியோர் வெடிப்பொருட்களை ஆன்லைனில் வாங்க, வேதிப் பொருட்களின் கலவையை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்துள்ளனர்[9]. இவ்வாறு கூறப்பட்டுள்ளது[10]. அதாவது, இதற்கான ஆதாரங்களுடன் இந்த குற்றப் பட்த்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இன்னும் 5 பேர் மீது குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது என்று என்.ஐ.ஏ. த ரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிஹாதில் ஈர்க்கப் பட்டு தயாரானது: இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அதன் சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு ‘பயாத்’ அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்தார். NIA 27.10.2023 அன்று RC-01/2022/NIA/CHE என வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும் கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தபொழுது, அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்பு தெரிய வந்தது. கூட்டாளிகள் சேர்ந்து வேலை செய்ய, அத்தகைய ஜிஹாத் சித்தாந்தமும் வேலை செய்தது என்பது தெரிகிறது. மனைவி-மகனுக்கு ஏற்பாடு செய்து விட்டு, இந்த “புனித” வேலைக்கு இறங்கியதும் கவனிக்கத் தக்கது. இதெல்லாம் அந்த ஜிஹாதி மாடலில் தான் வருகிறது. இதில், தமிழகத்தவரும் சிக்கிக் கொண்டுள்ளது விபரீதமாக உள்ளது. தொடர்ந்து, முஸ்லிம்களே அதில் ஈடுபடுவதும் ஆபத்தாக உள்ளது. அதிலும், தற்கொலை வெடிகுண்டு ரீதியில் செயல்பட தயாராவது, மிகவும் ஆபத்தானது, பயங்காமானது, தீவிவாதமானது.

அகில-உலக தொடர்புகளும் உள்ளன: முகமது அசாருதீனிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு பென் டிரைவில் ஜமேஷா முபீனின் வீடியோ பதிவுகள் இருந்தன, அங்கு அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தினார். ‘காஃபிர்களுக்கு’ (நம்பிக்கையற்றவர்கள்) எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். 2019 இல் ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 260 பேரைக் கொன்ற இலங்கையின் தீவிர இஸ்லாமிய மதகுருவான ஸஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் (பிரசங்கங்கள்) முபீன் ஈர்க்கப்பட்டார்[11]. முபீன் இந்தியாவில் உள்ள ‘காஃபிர்களுக்கு’ எதிராக இதேபோன்ற தாக்குதலைத் திட்டமிட விரும்பினார்[12]. முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மீட்கப்பட்டன, அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத, தற்போதுள்ள ஜனநாயக அமைப்பை விமர்சிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், இரயில் நிலையம் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில உள்ளூர் கோயில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ குறித்தும் இந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறிபிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றியது: இஸ்லாமிய மாநிலம் கொராசன் மாகாணத்தின் இணைய இதழான ‘வாய்ஸ் ஆஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது, ‘பசு மற்றும் எலிகள் வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றது. . இந்த தாக்குதல் அவர்களின் மதத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், அல்லாஹ்வின் தீனையும் அவனது சட்டத்தையும் தனது நிலத்தில் நிலைநிறுத்தவும், ‘குஃப்ர்’ மற்றும் அதை பின்பற்றுபவர்களை பயமுறுத்தவும் இது ஒரு ஆரம்பம் என்று அச்சுறுத்தும் பழிவாங்கல் என்று கட்டுரை கூறுகிறது. ஆக, இது இந்துக்களை குறிவைத்து நடந்தப் பட்ட தாக்குதல் தான்,  ஆனால், ஏதோ விதமாக, முன்னரே வெடித்து விட்டதால், ஜமேஷா முபீனே பலியானான்.

பலவித சட்டப் பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல்: முபீனுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் உதவினர்[13]. TN-01-F-6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி 800 நீல நிற காரை தல்ஹா பெற்றுக் கொண்டார், இது வாகனத்தின் IED வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது[14]. ஃபிரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியது[15]. முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சர் இருவரும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட VBIEDஐ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை கொள்முதல் செய்து, எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். முபீன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நிலையில், முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மீது 34, 120பி, 121 ஏ, 122, மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 5 மற்றும் 6 மற்றும் UA (P) சட்டத்தின் பிரிவுகள் 16, 18, 20, 38 மற்றும் 39. கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

22-04-2023


[1] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 04:35

[2] https://m.dinamalar.com/detail.php?id=3299833

[3] அப்-டேட்-நியூஸ், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல்.. அடுத்தகட்டத்திற்கு நகரும் விசாரணை..!!!, Author: Babu Lakshmanan, 21 April 2023, 11:44 am

[4] https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-bomb-blast-case-nia-submit-fir-210423/

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

[7] தினமலர், கோவையில் வெடித்தது அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு: என்..., குற்றப்பத்திரிகையில் தகவல், Added : ஏப் 22, 2023  06:50; https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[9] மாலைமுரசு, கோவை கார் குண்டு வெடிப்புமுதல் குற்ற பத்திரிகை தாக்கல்…!, webteam-webteam, Apr 21, 2023 – 07:32

[10] https://www.malaimurasu.com/posts/crime/Arudra-Gold-Scam-Recovery-of-Bank-Accounts-Worth-100-Crores

[11] தந்தி டிவி, இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா? வெளியான அதிர்ச்சி தகவல் , By தந்தி டிவி 21 ஏப்ரல் 2023 9:50 AM.

[12] https://www.thanthitv.com/latest-news/sri-lanka-easter-bombing-and-coimbatore-car-cylinder-explosion-related-181410

[13] தமிழ்.ஏபிபி.லைவ், Crime: கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் மீது என்... குற்றப்பத்திரிகை தாக்கல்வெளியான அதிர்ச்சி தகவல்கள், By: பிரசாந்த் | Updated at : 21 Apr 2023 12:02 PM (IST); Published at : 21 Apr 2023 12:02 PM (IST)

[14] https://tamil.abplive.com/news/coimbatore/nia-filed-charge-sheet-against-6-people-in-coimbatore-car-blast-case-tnn-112879

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST

https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

பிப்ரவரி 8, 2023

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர்.  இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-02-2023.


[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN  |   Published On : 08th February 2023 12:00 AM  |   Last Updated : 08th February 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html

[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.. முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM

[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575

[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM

Last Updated : 07 Feb 2023 07:03 AM.

[8]  https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html

[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37

[10]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டு நான்கு மாநிலங்களில் வெடித்தது (3)

ஏப்ரல் 14, 2017

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டு நான்கு மாநிலங்களில் வெடித்தது (3)

Nallapuram pressure cooker blast 2016

ஞாயிற்றுக் கிழமை (09-04-2017) அன்று மதுரையில் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (10-04-2017) அன்று மஞ்சேரியில் ஆஜரப்படுத்தப்பட்டனர்: கேரள நீதிமன்ற வளாகத்தில் நடந்த பிரஸர்-குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, மதுரையில் இரண்டு பேரை, –

  1. எமன். அபூபக்கர் (40), சிவகாமி தெரு, மதுரை.
  2. அப்துர் ரஹ்மான் (27), காயதே மில்லத் நகர், மதுரை,

09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர்[1]. கடந்த ஆண்டு நவம்பர்.1ம் தேதி 2016 கேரள மாநிலம் மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்த காரில், சக்தி குறைந்த குண்டு வெடித்தது[2]. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை[3]. “பேஸ் மூவ்மென்ட்” [‘Base Movement’] என்ற வார்த்தைகள் ஒரு அட்டைப்பெட்டி, ஒஸாமா பின் லேடன் போட்டோ, இந்தியா மேப் முதலியன குண்டுவெடித்த இடத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டன[4]. 2015ல் அபூபக்கர், இந்த “பேஸ் மூவ்மென்ட்” என்ற தீவிரவாத இயக்கத்தை, அல்-கொய்தா தாக்கத்தில் உருவாக்கினான். அல்-முத்தாகீன் என்ற தீவிரவாத இயக்கத்தை 2014ல், அல்-உம்மாவின் தலைவன் இமாம் அலியைக் கொன்றவர்களை பழிவாங்க உருவாக்கினான்[5].  இதனால், பெங்களூரு, மதுரை, கோயம்புத்தூர், கேரளா இணைப்புகள் தெரியவந்தன. இதனால், ஜிஹாதி தீவிரவாதத்தையும் மறைக்க முடியாது. ஞாயிற்றுக் கிழமை (09-04-2017) அன்று மதுரையில் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (10-04-2017) அன்று மஞ்சேரியில் ஆஜரப்படுத்தப்பட்டனர். “அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்”, என்று தமாஷாகக் கூட கேட்க முடியாது, ஏனெனில் சம்பந்தம் இப்படியெல்லாம் இருக்கிறது.

Madurai blasts - misinterpreted by so-called Human rightists

மனித உரிமைகள் போர்வையில் தீவிரவாதிகளை ஆதரிப்பது, குண்டுவெடிப்பில் செத்தவர்களை மறந்து விடுவது, கொச்சைப் படுத்துவது: “குண்டுவெடித்தது, ஆனால் காயம் ஏற்படவில்லை” என்ற இத்தகைய செய்திகள் உள்ளநிலையில், குண்டுகள் வெடித்து, நூற்றுக்கணக்கானவர் கொடும் சாவு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், கால்-கை துண்டிப்பு போன்ற கொடூரங்களும் இருக்கின்றன. ஆகவே, குண்டுகளை தமாஷுக்கு வெடித்தார்கள் என்றெல்லாம் திரிபுவாதம் கொடுக்க முடியாது[6]. இன்றைக்கு மனித உரிமைகள் போர்வையில், சாதாரண அப்பாவி குடிமகன்கள் குண்டுவெடிப்புகளில் சாகும் போது, அவர்களது உரிமைகள், அவர்களது குடும்பத்தாரின் உரிமைகள் முதலியவற்றை மறந்து, புள்ளியல் விவரங்களை அங்கும்-இங்குமாக எடுத்துக் கொண்டு, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வேசுவது, விவாதிப்பது என்று சில அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். போதாகுறைக்கு மனிதநேயம் என்றெல்லாம் வேறு சொல்லிக் கொண்டு, குரூரங்களை, பயங்கரவாதத்தை, ரத்தக்காட்டேரிகளை ஆதரித்து வருகிறார்கள். இதனால், லாபமடைவது, தீவிரவாத இயக்கங்களே. இப்பொழுதெல்லாம், என்.ஐ.ஏ கைதான விவரங்கள், குற்றப்பத்திரிக்கை, மற்ற விவரங்களை உடனுக்குடன், தனது இணைதளத்தில் வெளியிட்டு விடுக்கிறது. இருப்பினும், தீவிரவாதிகளை ஆதரிக்கும் சித்தாந்திகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்நிலையில், ஒரு வேளை அவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று விசாரணை செய்ய வேண்டியிருக்கும்.

Nallapuram pressure cooker blast - base movement-2016

பழைய இயக்கங்கள் புதிய பெயர்களோடு உருவாகுவது, மறைவது, மறுபடியும் தோன்றுவது: இவ்வாறு பழைய இயக்கங்களை புதிய பெயர்களோடு, இடங்களை மாற்றி இயக்க ஆரம்பித்தனர். வங்கிகணக்குகள் முடக்கப்பட்டபோது, புதிய பெயர்களில், தனிநபர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டன. அந்நிய-கரன்சி மாற்றம், விசா-பாஸ்போர்ட், வண்டிகள்-தங்க ஓட்டல்கள் ஏற்பாடு செய்தல் என்ற வேலைகளையும் இவர்களே பார்த்துக் கொள்வதால், பலநேரங்களில் பணம் வெவ்வேறு முறையில் மாற்ரப்படுதல், பெறப்படுதல், முதலியவை நடந்து விடுகின்றன. இவர்களது சொகுசு பேரூந்துகளே, இவர்களை வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. அவற்றில், இவர்களது உண்மையான பெயர்கள் உபயோகப்படுத்துவதில்லை. பல நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பேரூந்துகளில் பயணித்தது போல, இரண்டு ஊர்களில் இருந்தது போல அலிபியையும் உண்டாக்குகின்றனர். பண்டமாற்று முறை கூட பின்பற்றப்படுவதால், பணபரிமாற்றம் இல்லாமல், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. சில குறிப்பிட்ட தொழில்கள், தொழிற்சாலைகளில் உள்ளவர், தொழிலதிபர்கள் முதலியோர், அவர்களுக்கு மறைவாக இருக்க இடம் கொடுப்பதுடன், ஆவண மற்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மூலம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் பரவியிருக்கும் இக்கூட்டத்தின் நடவடிக்கைக்ள் தெரிய வந்தன. கள்ளநோட்டு பரப்புதல், ஹவாலா விநியோகம், வரியேய்ப்பு போன்ற விவகாரங்களில், குடும்பங்களோடு ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

Nallapuram blast- - base movement-2016

பிரஸர்குக்கர் வெடிகுண்டு, ரசாயனப் பொருட்கள் முதலியன காட்டிக் கொடுத்தன:  இதேபோல், கேரளாவின் கொல்லம், ஆந்திராவின் சித்தூரில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[7]. இதில் குறிப்பிட்ட மாதிரி, செயல்முறை, அமைப்பு முதகியவை இருப்பதைக் கண்டுபிடித்து சோதனையிட்டபோது விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன[8]. ஒரே மாதிரியான ரசாயனப் பொருட்கைளின் உபயோகம், அவை குறிப்பிட்ட நபர்களுக்கு மூலம் அனுப்பப்பட்டு-பெறப்பட்ட முறை, பிரஸர்-குக்கரில் வெடிகுண்டு தயாரித்தது, முதலியவை மதுரையைச் சுட்டிக் காட்டியது. மதுரையை சுற்றி பட்டாசு தொழிற்சாலைகள் இருப்பது, சீனப்பட்டாசுகள் கிடைப்பது, கல்குவாரிகளுக்காக வெடிமருந்துகள் வாங்குவது முத்லியவற்றையும் கவனிக்க வேண்டும். மீனாக்ஷி பஜாரில் பாத்திரக்கடையிலிருந்து வந்ததும் தெரியவந்தது. அக்கடை அபூபக்கருக்கு சொந்தமானது. மதுரையில், வெடிகுண்டு ரகசியமாக தயாரிக்கப் படுவது, பலமுறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் சில ஆட்களை வேலைக்கு வைத்து, திசைத் திருப்பும் வேலைகளையும் செய்துள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த ஆண்டு நவம்பரிலேயே, மதுரையில் ஐந்து பேரை கைது செய்தனர்[9]. விசாரணையில் மதுரை –

  1. இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
  2. கரீம் ராஜா (23),
  3. சாப்ட்வேர் இன்ஜினியரான தாவூத் சுலைமான்சேக் (23),
  4. சம்சுதீன் (26),
  5. ஆந்திராவைச் சேர்ந்த முகமது அயூப் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்[10].

மதுரை பேஸ் மூவ்மென்ட் அமைப்பின் தலைவர் அபுபக்கர், அவரது உதவியாளர் அப்துல் ரகுமான் ஆகியோரும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அல்கொய்தா ஆதரவு அமைப்பான ‘அடிப்படை இயக்கத்தை’ சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், மதுரையில், அபுபக்கர், அப்துர் ரக்மான் ஆகியோரை 09-04-2017 அன்று இரவு கைது செய்தனர். இவர்களுக்கும் அல் கொய்தா அமைப்பினருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் 10-04-2017 திங்கட்கிழமை, மஞ்சேரியில், மாஜிஸ்ட்ரேட்டுன் முன்பு ஆஜராக்கப் பட்டு, எட்டு நாட்கள் கஸ்டெடியில் எடுத்தனர்[11].

© வேதபிரகாஷ்

14-04-2017

Abu Bakkar and another arrested in Madurai on 09-04-2017

[1] The special investigation team probing the case, which occurred on November 1, 2016, nabbed N Abubacker, (40), of Shivakami street, and seventh accused Abdu Rahman, (27), native of Quidemillath Nagar, Madurai.

[2] தினத்தந்தி, மலப்புரம் குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் மேலும் இருவர் கைது, ஏப்ரல் 10, 09:31 PM

[3] http://www.dailythanthi.com/News/India/2017/04/10213107/malappuram-bomb-blast-two-more-arrested.vpf

[4] A small cardboard box with the words ‘Base Movement’ and a map of India with a photo of Osama Bin laden were recovered from the site.

Times of India, Two accused in Malappuram blast case arrested from TN, TNN | Updated: Apr 11, 2017, 07.11 AM IST.

[5] The sixth accused, Abubacker is the founder of the Base Movement, an Al-Qaeda inspired group formed in 2015. Police said Abubacker constituted a terror organization, Al-Muthaqeen Force (AMF), in 2014 to exact revenge for the encounter killing of Tamil Nadu based terror organisation Al Ummah’s leader Imam Ali.

http://timesofindia.indiatimes.com/city/kozhikode/two-accused-in-malappuram-blast-case-arrested-from-tn/articleshow/58116486.cms

[6] http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA/

[7] தினமலர், கேரள குண்டுவெடிப்பு: மதுரையில் 2 பேர் கைது, பதிவு செய்த நாள். ஏப்ரல்.10, 2017.14.18.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1748842

[9] தினகரன், மலப்புரம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது, 2017-04-11@ 01:07:2

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=293866

[11] Mathru.bhoomi.com, Malappuram Collectorate Blast: 2 more arrested, Published: Apr 10, 2017, 10:39 AM IST.

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)?

ஏப்ரல் 13, 2017

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)?

explosives sent to Madurai from Chennai courier co 07-04-2017

சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் அனுப்பப்பட்டது: சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் பலமுறை அனுப்பப்பட்டுள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், வழக்கம் போல ஊடகங்கள், கொரியர் கம்பெனி இருப்பது வண்ணாரப்பேட்டை அல்லது பல்லாவரம் என்று செய்திகளில் குறிப்பிடுகின்ற்ன. இவ்விசயத்தில் ஆகஸ்ட் 2016ல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்,

  1. என். அப்பாஸ் அலி [N Abbas Ali (27)] ,
  2. மொஹம்மது அயூப் அலி [Mohammed Ayub Ali (25)],
  3. எம். சம்ஸுத்தீம் கரீம் ராஜா [M Samsumdeen Karim Raja (23)],
  4. எஸ். கார்வா சம்ஸுத்தீன் [S Karwa Samsumdeen (25)] மற்றும்
  5. எஸ். தாவூத் சுலைமான் [S Dawood Sulaiman (25).Of these, four were arrested by NIA in August 2016 in Madurai and Dawood Sulaiman was nabbed in Chennai].

ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு வெவ்வேறு நாட்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் குண்டு வெடித்த இடங்களில் இருந்து சில துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்ததில், அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படைவாத அமைப்பான ‘தி பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பே குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது.

தென்னக நான்கு மாநிலங்களுலும் பரவி ஒற்றுமையாக, உதவியுடன் செயல்பட்டு வரும் தீவிரவாதம்: மதுரையில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ஆறு பயங்கரவாதிகளை, ஆந்திர மாநில போலீசார், தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சித்துார் நீதிமன்ற குண்டு வெடிப்பு தொடர்பாக, அவர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இஸ்லாமிய தீவிரவாதம் கேரலா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களிலும் பரவியிருப்பதுடன், தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் குடும்பத்தோடு செயல்பட்டு வருவது, கர்நாடகா மற்றும் ஆந்திரா குண்டுவெடுப்புகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டியுள்ளன. இருப்பினும், குடும்பத்தவர், ஒன்றும் தெரியாதது போல நடித்து, சட்டரீதியில், குறுக்கு வழியில், அவர்களைக் காப்பாற்ற, உண்மைகளை திரிக்க, திசைத் திருப்ப முயன்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலயுண்டது, மேலும் ஆயிரக்கணன்னாணவர் கை-கால் இழந்து கிடப்பது போன்ற குரூர செயல்களை செய்தவர்களைக் கண்டிக்காமல், அவர்களைக் காப்பாற்ற நினைக்கின்றனர் எனும் போது, இவையெல்லாம் திட்டமிட்டே செயல்படுகிறது தெரிகிறது. இவ்வாறு, மனிதர்களிடம் ஈவு-இரக்கம் இல்லாமல், மதவெறியோடு கொன்று வரும் இவர்களுக்கு, இனி இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பாதிக்கப்பட்டவர், ஒருநிலையில் வெளிப்படையாக சொன்னாலும் வியப்படுவதற்கில்லை.

Chennai cuuriers

சென்னைமதுரை தீவிரவாத கும்பல் தொடர்புகள்: குண்டு வைத்தவர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த பிரஷர் குக்கரில் சீரியல் எண்கள் இருந்தன. அதன் அடிப்படையில் விசாரித்ததில், மதுரையில் உள்ள பிரபல பாத்திரக் கடையில் குக்கர் வாங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் மதுரையில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மதுரையில் முகாமிட்ட என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, அப்பாஸ் அலி (27), சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோரை மதுரையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி 2016 கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சென்னையில் பதுங்கியிருந்த தாவூத் சுலைமான் (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட தாவூத் சுலைமான், பாலவாக்கம் எம்ஜிஆர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சிஸ்டம் அனலைசராக வேலை செய்துவந்தார். தீவிரவாத சம்பவங்களுக்குத் தேவையான தகவல்களைப் பரிமாறுவது, தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மற்ற நபர்களுக்கு அனுப்புவது, ஆன்லைன் பணப்பரிமாற்றம், இணையதளம் வாயிலாக வெடி குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பது போன்ற நாசவேலைகளில் தாவூத் சுலைமான் ஈடுபட்டு வந்துள்ளார். ஆக, இவனுக்கும் அந்த பட்கல் குண்டு தயாரிப்பாளனுக்குமெந்த வித்தியாசமும் இல்லை.

mathurai arrest

என்.. இதை கண்டு பிடித்தது எப்படி?: ‘தி பேஸ் மூவ்மென்ட்’ தீவிரவாத அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நவீன ரக வெடிபொருட்களை சென்னையில் இருந்து மதுரைக்கு பிரபல கொரியர் நிறுவனம் மூலம் சுலைமான் அனுப்பியது தெரியவந்துள்ளது[1]. இங்கும் அக்கொரியர் கம்பனியில் பெயர் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. இதனால் என்ஐஏ அதிகாரிகள் அக்கம்பெனிக்கு சம்மன் அனுப்பினர். முதலில் சில ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதுதொடர்பாக சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுலைமான் கொரியர் அனுப்பிய தேதிகள், நேரம் உட்பட அனைத்து தகவல்களையும் என்ஐஏ அதிகாரிகளிடம் கொரியர் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர்[2]. அதை வைத்து சுலைமான் என்னென்ன வகையான வெடி பொருட்களை அனுப்பினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[3]. என்ஐஏ அதிகாரிகள் பிச்சைக்காரர்கள், திரிபவர்கள், பைத்தியக்காரர்கள் போன்று, குறிப்பிட்ட இடங்களில் அலைந்து திரிந்து, விவரங்களை சேகரித்தனர். சம்பந்தப்பட்டவர்களின் நடமாட்டதினையும் கவனித்தனர்[4]. முதலில் செய்தி, “மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டது” என்றுதான் வந்தது. சென்னை – மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது[5]. சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்திற்கு தேசிய புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

Courier co under scanner by NIA

கொரியர் கம்பனி இருப்பது வண்ணாரப்பேட்டையாபல்லாவரமா, அனுப்பப்பட்டது கருப்புப் பணமா, வெடிப்பொருட்களா?: என்.ஐ.ஏ விசாரணையின் போது, அவர்கள் பல்லாவரத்தில் இருக்கும் கொரியர் கம்பனி வழியாக வெடி பொருட்கள் அனுப்பியதாக ஒப்புக் கொண்டனர்[7] என்று “ஈநாடு இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது[8]. நியூஸ்.வெப்.இந்தியா இணைதளமும், “பல்லாவரத்திற்கு அருகில் உள்ள”, என்கிறது[9]. கொரியர் கம்பனி கண்காணிக்கப்படுகிறது என்றும் உள்ளது[10]. ”இந்தியன் எக்ஸ்பிரஸ் வண்ணாரப் பேட்டை கொரியர் கம்பனியிலிருந்து அனுப்பப்பட்டது என்கிறது[11]. தினகரன், “மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டது” என்றது. மற்றவை வெடி பொருட்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளன[12]. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் அவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றனவா அல்லது வேறொரு காரணத்திற்காக அவ்வாறு செய்கின்றனவா என்று தெரியவில்லை. கொரியர் கம்பனி இருப்பது வண்ணாரப்பேட்டையா-பல்லாவரமா, அனுப்பப்பட்டது கருப்புப் பணமா, வெடிப்பொருட்களா அல்லது இரண்டு இடங்களிலிருந்து, இரண்டு வகையான பொருட்கள் அனுப்பப்பட்டனவா? எப்படியிருப்பினும், கொரியர் கம்பனியின் பங்கு திடுக்கிட வைக்கிறது. ராஜஸ்தான் தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டன[13]. அதேபோல ஜாகிர் நாயக்கின் சென்னை தொடர்புகள், ஈஞ்சம்பாக்கம் பள்ளி முதலியவயும் திகைப்படைய செய்கின்றன.

© வேதபிரகாஷ்

13-04-2017

New college students become ISIS warriors

[1] தி.இந்து, சென்னையில் இருந்து மதுரைக்கு கொரியரில் வெடிகுண்டு பொருட்களை அனுப்பியது கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை, Published: April 7, 2017 09:25 ISTUpdated: April 7, 2017 09:25 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9621196.ece

[3] Indian Express, Courier firm under terror probe lens, By M Sathish, Express News Service, Published: 05th April 2017 01:41 AM; Last Updated: 05th April 2017 04:56 AM.

[4]  http://www.newindianexpress.com/cities/chennai/2017/apr/05/courier-firm-under-terror-probe-lens-1590052.html

[5] தினகரன், சென்னைமதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை, 2017-04-06@ 13:19:01

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=292779

[7] The NIA, which arrested five persons recently (four in Madurai and one in Chennai) for their alleged links in various bomb blast cases, interrogated them thoroughly. It is said that during questioning, they told the investigation officials that they had sent explosives from Chennai to Madurai as consignments through a courier company at Pallavaram in the city. Following this, NIA officials summoned top officials of the courier firm, sources said. In the meantime, NIA sleuths also visited the courier office on Thursday 06-04-2017 and inquired the employees there. They also checked registers, sources added.

http://www.eenaduindia.com/tamil-nadu/chennai-city/2017/04/07113752/NIA-grills-employees-of-courier-firm-in-Chennai-over.vpf

[8] Eenadu India, NIA grills employees of courier firm in Chennai over ‘terror consignments’, Published 07-Apr-2017 11:37 IST.

[9] News.web.India, Pvt Courier firm in NIA scanner, Chennai , Friday, Apr 7 2017 IST

[10] http://news.webindia123.com/news/articles/India/20170407/3087976.html

[11] Indian Express, Courier firm under terror probe lens, By M Sathish, Express News Service, Published: 05th April 2017 01:41 AM; Last Updated: 05th April 2017 04:56 AM.

[12] http://www.eenaduindia.com/tamil-nadu/chennai-city/2017/04/07113752/NIA-grills-employees-of-courier-firm-in-Chennai-over.vpf

[13] http://economictimes.indiatimes.com/news/defence/isis-sympathiser-deported-from-saudi-arrested-by-nia/articleshow/58054075.cms