Posted tagged ‘திராவிட ஜிஹாதி’

2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

ஏப்ரல் 22, 2023

19-04-2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

கோவை காஸ் சிலின்டர் வெடிப்பு, திட்டமிட்ட குண்டு வெடிப்புதான்: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது[1]. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார்[2]. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது[3]. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள “அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்” என்ற பழமையான கோவிலில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது[4]. ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (V-IED) கோவிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பில் முபீன் கொல்லப்பட்டார். முதலில், அது வெறும் குக்கர் தான், ஏதேச்சையாக, தற்செயலாக, விபத்து போல வெடித்தது என்று கூட சில ஊடகங்கள் திரித்து செய்திகள் வெளியிட்டன. திமுக மற்றும் திராவிடத்துவ ஆதரவாளர்கள் அதை திவிரவாத தாக்குதல் என்பதனையே மறுத்துப் பேசினர், வாதிடவும் செய்தனர். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியைக் கூட தரக்குறைவாகப் பேசினர்.

11-பேர் கூட்டு சதிகாரர்கள் திட்டமிட்டு செய்தது: போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது[5]. இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், 20-04-2023 அன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்[6]. மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், 21-04-2023 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். 

கார் முதல் கெமிகல்ஸ் வரை எல்லாமே திட்டமிட்டு பெறப்பட்டது, குண்டு தயாரிக்கப் பட்டது: இந்நிலையில் உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட டி.என்.01. எப்.6163 என்ற நம்பருடன் கூடிய மாருதி 800 காரை தல்ஹா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்[7]. பைரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், கேஸ் சிலிண்டரைக் கொண்டு காரை வெடிகுண்டாக மாற்ற உதவியுள்ளனர்[8]. அசாருதீன், அப்சர் மற்றும் அவரது உறவினர் முபீன் ஆகியோர் வெடிப்பொருட்களை ஆன்லைனில் வாங்க, வேதிப் பொருட்களின் கலவையை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்துள்ளனர்[9]. இவ்வாறு கூறப்பட்டுள்ளது[10]. அதாவது, இதற்கான ஆதாரங்களுடன் இந்த குற்றப் பட்த்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இன்னும் 5 பேர் மீது குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது என்று என்.ஐ.ஏ. த ரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிஹாதில் ஈர்க்கப் பட்டு தயாரானது: இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அதன் சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு ‘பயாத்’ அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்தார். NIA 27.10.2023 அன்று RC-01/2022/NIA/CHE என வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும் கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தபொழுது, அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்பு தெரிய வந்தது. கூட்டாளிகள் சேர்ந்து வேலை செய்ய, அத்தகைய ஜிஹாத் சித்தாந்தமும் வேலை செய்தது என்பது தெரிகிறது. மனைவி-மகனுக்கு ஏற்பாடு செய்து விட்டு, இந்த “புனித” வேலைக்கு இறங்கியதும் கவனிக்கத் தக்கது. இதெல்லாம் அந்த ஜிஹாதி மாடலில் தான் வருகிறது. இதில், தமிழகத்தவரும் சிக்கிக் கொண்டுள்ளது விபரீதமாக உள்ளது. தொடர்ந்து, முஸ்லிம்களே அதில் ஈடுபடுவதும் ஆபத்தாக உள்ளது. அதிலும், தற்கொலை வெடிகுண்டு ரீதியில் செயல்பட தயாராவது, மிகவும் ஆபத்தானது, பயங்காமானது, தீவிவாதமானது.

அகில-உலக தொடர்புகளும் உள்ளன: முகமது அசாருதீனிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு பென் டிரைவில் ஜமேஷா முபீனின் வீடியோ பதிவுகள் இருந்தன, அங்கு அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தினார். ‘காஃபிர்களுக்கு’ (நம்பிக்கையற்றவர்கள்) எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். 2019 இல் ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 260 பேரைக் கொன்ற இலங்கையின் தீவிர இஸ்லாமிய மதகுருவான ஸஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் (பிரசங்கங்கள்) முபீன் ஈர்க்கப்பட்டார்[11]. முபீன் இந்தியாவில் உள்ள ‘காஃபிர்களுக்கு’ எதிராக இதேபோன்ற தாக்குதலைத் திட்டமிட விரும்பினார்[12]. முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மீட்கப்பட்டன, அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத, தற்போதுள்ள ஜனநாயக அமைப்பை விமர்சிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், இரயில் நிலையம் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில உள்ளூர் கோயில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ குறித்தும் இந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறிபிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றியது: இஸ்லாமிய மாநிலம் கொராசன் மாகாணத்தின் இணைய இதழான ‘வாய்ஸ் ஆஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது, ‘பசு மற்றும் எலிகள் வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றது. . இந்த தாக்குதல் அவர்களின் மதத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், அல்லாஹ்வின் தீனையும் அவனது சட்டத்தையும் தனது நிலத்தில் நிலைநிறுத்தவும், ‘குஃப்ர்’ மற்றும் அதை பின்பற்றுபவர்களை பயமுறுத்தவும் இது ஒரு ஆரம்பம் என்று அச்சுறுத்தும் பழிவாங்கல் என்று கட்டுரை கூறுகிறது. ஆக, இது இந்துக்களை குறிவைத்து நடந்தப் பட்ட தாக்குதல் தான்,  ஆனால், ஏதோ விதமாக, முன்னரே வெடித்து விட்டதால், ஜமேஷா முபீனே பலியானான்.

பலவித சட்டப் பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல்: முபீனுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் உதவினர்[13]. TN-01-F-6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி 800 நீல நிற காரை தல்ஹா பெற்றுக் கொண்டார், இது வாகனத்தின் IED வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது[14]. ஃபிரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியது[15]. முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சர் இருவரும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட VBIEDஐ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை கொள்முதல் செய்து, எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். முபீன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நிலையில், முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மீது 34, 120பி, 121 ஏ, 122, மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 5 மற்றும் 6 மற்றும் UA (P) சட்டத்தின் பிரிவுகள் 16, 18, 20, 38 மற்றும் 39. கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

22-04-2023


[1] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 04:35

[2] https://m.dinamalar.com/detail.php?id=3299833

[3] அப்-டேட்-நியூஸ், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல்.. அடுத்தகட்டத்திற்கு நகரும் விசாரணை..!!!, Author: Babu Lakshmanan, 21 April 2023, 11:44 am

[4] https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-bomb-blast-case-nia-submit-fir-210423/

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

[7] தினமலர், கோவையில் வெடித்தது அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு: என்..., குற்றப்பத்திரிகையில் தகவல், Added : ஏப் 22, 2023  06:50; https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[9] மாலைமுரசு, கோவை கார் குண்டு வெடிப்புமுதல் குற்ற பத்திரிகை தாக்கல்…!, webteam-webteam, Apr 21, 2023 – 07:32

[10] https://www.malaimurasu.com/posts/crime/Arudra-Gold-Scam-Recovery-of-Bank-Accounts-Worth-100-Crores

[11] தந்தி டிவி, இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா? வெளியான அதிர்ச்சி தகவல் , By தந்தி டிவி 21 ஏப்ரல் 2023 9:50 AM.

[12] https://www.thanthitv.com/latest-news/sri-lanka-easter-bombing-and-coimbatore-car-cylinder-explosion-related-181410

[13] தமிழ்.ஏபிபி.லைவ், Crime: கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் மீது என்... குற்றப்பத்திரிகை தாக்கல்வெளியான அதிர்ச்சி தகவல்கள், By: பிரசாந்த் | Updated at : 21 Apr 2023 12:02 PM (IST); Published at : 21 Apr 2023 12:02 PM (IST)

[14] https://tamil.abplive.com/news/coimbatore/nia-filed-charge-sheet-against-6-people-in-coimbatore-car-blast-case-tnn-112879

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST

https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள் – கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]

ஜூன் 15, 2019

கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள்கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]

NIA raid- Dinamalar coverage

ஒரு பக்கம் முகமதியர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், இன்னொரு பக்கம்இது குறித்து  பேச விருப்பம் இல்லைஎன்றும் செய்திகள்[1] : அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து [இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை போலவே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்த்த வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஆள் திரட்டும் வேளைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது] பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர்[2]. பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது , உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது. அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது, உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது.

NIA raid- Karumbuk kadai

பாரூஹ் கொலைவழக்கில் சம்பந்தம் கொண்டவர்கள் முதலியன[3]: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நபர்களில் ஒருவரான 26 வயதுடைய அக்ரம் சிந்தா குனியமுத்தூரில் வசித்து வருகின்றார். கோவையில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறப்படும் இந்த நபரின் மீது முன்னதாக கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் இறை மறுப்பு கொள்கை கொண்ட பாரூஹ் என்பவர், கடவுள் மறுப்பு கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றார் என அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அக்ரம் சிந்தா, சம்பந்தப்பட்டு இருப்பதாக வழக்கு உள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இப்ராகிம், ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்துள்ளதாக தேசிய புலானய்வு துறை குறிப்பிடுகின்றது. ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்தபோதுதான் சஹ்ரான் ஹாஷிமின் உரைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டு வருவதாக கூறியதோடு, கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு தான் தயாராக இருந்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த நபரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்துள்ளதாலும், அசாருதீன் குழுவில் இருந்ததாலும் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்[4].

NIA raid- Anbu Nagar Uggadam

இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர்[5]: இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர். ஆக, நாளைக்கு மோடி சொல்லித்தான், நடத்தப் பட்டது என்று சொல்லமாட்டார்கள் என்று நம்பலாம்! மேலும், இவர்கள் இலங்கையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய சஹ்ரான் ஹாஷிமின் செயல்களை புகழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்தப்பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று கொண்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இதுகுறித்து பேசத் தயங்குகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், இந்த நபர்கள் யாரும் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் இல்லை. இதற்கு முன்பு, இவர்கள் யாரும் பெரிய அளவில் வெளியில் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்படுவது அவர்களின் குடும்பங்களுக்குக்கூட தெரியாது, விசாரணைகளால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமுற்று இருக்கின்றனர் என்றார்[6].

NIA raid- Al Ameen colony

மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப் பட்டன: கைது செய்யப்படும்போது 14 மொபைல் போன்கள் 29 சிம் கார்டுகள் 10 பேன் டிரைவ்கள் 3 லேப்டாப், ஆறு மெமரி கார்டுகள், 4 கார்ட் டிஸ்குகள் ஒரு இண்டர்நெட் டாங்கில், 13 சிடிகள் / டிவிடி, 300 ஏர் கன் பில்லெட்ஸ்  பல டாக்குமெண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[7]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் சில துண்டு பிரசுரங்கள் ஸ்கேனரின் கீழ் இருந்தன[8]. மீட்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளது.  இந்த வழக்கு மே 30 தேதி கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயது முகம்மது அஷாருதீன் மேலும் 5 பேர் தலைமையிலான குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை  கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

NIA raid- Anbu Nagar, 2nd street, Uggadam

இஸ்லாமிய பிரபாகரன் தேவையில்லை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது[9]: “நாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம்,” இவ்வாறு அவர் பேசினார்[10].

NIA raid- the background of three

இஸ்லாமிய பிரபாகரன் தமிழகத்திற்கும் ஆபத்துதான்: இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள்.இவர்களை மீளக்குடியேற்றுவது மிகமிக அவசியம். இந்தியா தமிழர்கள் மீதான அக்கறையில் மீள்குடியேற்றத்தை நடத்தாவிட்டாலும் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க அதனைச் செய்யவேண்டும். இல்லாவிடின் இலங்கையின் கிழக்கில் இருந்து வெடிமருந்துகள் ஏற்றிய மத அடிப்படைவாதத் தற்கொலைக் கொலையாளிகளின் படகுகள் இந்திய கிழக்குக் கரையோரத் தளங்களை, இந்திய கடற்படையை, கப்பல்களைத் தாக்கின என்ற செய்திகள் வர அதிக காலம் எடுக்காது. இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமல்ல பொருளாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.

NIA raid- Karumbuk kadai

குண்டுவெடிப்பு ஜிஹாதிகள் கண்டறியப் பட்டு ஒழிக்கப் படவேண்டும்: கோயம்புத்தூரில் உள்ள முகமதியர்கள் இவ்வாறு தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாத செயல்களில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது மிகவும் திகைப்பாக உள்ளது. கொல்வது என்ற சித்டாந்தத்துடன் தமிழகத்தில் இத்தகைய கூட்டம் தொடர்ந்து வேலை செய்வது நிச்சயமாக மனிதத்தன்மையற்ற தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. மதத்தின் பெயரால் அவர்களே குண்டு வெடிப்பு மூலம் அல்லது மற்ற தீவிரவாத பயங்கரவாத செயல்களால் கொல்ல வேண்டும் என்ற கொள்கையை இன்றும் செயல்படும் இந்த நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக ஒரு குரூர மனப்பாங்கு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களை மனிதர்கள் கொல்வதனால் சொர்க்கத்திற்கு போக முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது ஒரு பெரிய குரூரமான் பைத்தியக்காரத்தனம் போன்றது தான். ஒருவேளை வெறி பிடித்த குரூரக் கொலைக்காரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கலாம். ஆனால் தற்கொலை மூலம் மற்றவர்களையும் கொல்லும் எண்ணம் எப்படி மனங்களில் உருவாகும் என்பது ஆச்சரியமாக உள்ளது.

NIA raid- Vincent Road

தற்கொலை ஜிஹாதிகளை வளர்ப்பது, வைத்துக் கொள்வது அபாயகரமானது: ஆகவே தமிழகத்தில் இத்தகைய கூட்டத்தினரை வளர்த்தது, வளர்ப்பது அபாயகரமானது, மனிதர்களுக்கு ஒவ்வாதது. ஆகவே எல்லா நிலைகளிலும் இவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சட்டட்தின் முன்னர் கொண்டவரப்பட்டு, முறையாகத் தண்டிக்கப்படவேண்டும். இல்லை அவர்கள் இங்கே வாழ தகுதியற்றவர்கள் என்று கூட தீர்மானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் நேரத்தில், ஜிஹாத் என்ற சித்தாந்தத்தில் இத்தகைய கொடுமைகளை உண்டாக்குபவர்களை எதிர்கொள்வது. என்பது சாதாரண மக்களால் முடியாத ஒன்று. ஆகவே, முளையிலேயே அவை கிள்ளியெறியப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

14-05-2019

IS inked arrested fromTN by NIA 22-05-2019

[1] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது .எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019

[2] https://www.bbc.com/tamil/india-48636958

[3] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது .எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019

[4] https://www.bbc.com/tamil/india-48636958

[5] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது .எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019

[6] https://www.bbc.com/tamil/india-48636958

[7] என்.டி.டிவி.தமிழ், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் முகம்மது அசாரூதின் கைது, தமிழ்நாடு | Edited by Saroja | Updated: June 13, 2019 12:16 IST

[8] https://www.ndtv.com/tamil/isis-mastermind-with-link-to-sri-lanka-attacker-mohammed-azarudeen-arrested-in-tamil-nadu-2052511

[9] தி.தமிழ்.இந்து, ‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ – இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை, Published : 09 Jun 2019 17:10 IST; Updated : 09 Jun 2019 17:10 IST

[10] https://tamil.thehindu.com/world/article27703942.ece