Posted tagged ‘எலி’

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html