Posted tagged ‘ஆதாரம்’

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

நவம்பர் 7, 2009

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்தது என்ற வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தது இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress) என்ற மார்க்ஸிஸ்ட்-முஸ்லீம் கூட்டத்தின் திட்டமிட்ட செயல்[1] ஆகும். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh Muslim University) ஒரு முஸ்லீமை வைத்து அத்தகைய “ஆய்வு கட்டுரை” படிக்கப் பட்டது. ஆனால், எல்லோராலும் அக்கட்டுரை நிராகரிக்கப் பட்டதில்லாமல், கேலிக்குண்டானது.

முன்பு கல்கத்தாவில் நடந்த 51வது மாநாட்டில் 1990 சமரேந்திர நாராயண் ஆர்யா என்பவர் “அயோத்யாவின் சரித்திரத் தன்மை” என்ற கட்டுரை அயோத்யாவை உத்திரபிரதேசத்தில்தான் வைத்து ஆதாரங்களை எடுத்துக் கட்டினார்[2]. அப்பொது அமைதியாக அக்கட்டுரை ஏற்றுக் கொள்லப் பட்டது அல்லாமல், பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், எந்த ஊடகமும் அதைப் பற்றி சொல்லவில்லை!

“சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு: இதனால், 1997ல் ஸ்யாம் நாராயண் பாண்டே என்பவரை வைத்து 58வது கூட்டத்தில் “சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு (“Historical Rama distinguished from God Rama”) என்று எடுத்துக் காட்டி கட்டுரை வாசிக்க வைக்கப்பட்டது. சரித்திர ராமர் என்று பார்த்தால், இப்பொழுதுள்ள அயோத்தி 800 B.C. காலத்திற்கு முன்பு செல்லாது. ஆனால் சரித்திர ராமரின் அயோத்யா, ஆப்கானிஸ்தானிலுள்ள ஹீரத் என்ற நகரத்திற்கு அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில் இருந்தது. “ஹரி ருத்” என்பதுதான் ஹரயு > சரயு என்றாகியது. ராமர் இறந்தபிறகு அந்நகரம் அழிக்கப்பட்டது. பிறகு காஸி அல்லது குஸிலவஸ் இன மக்களால் குஸக் என்ற பெயரில் ஒரு நகரம் கட்டப்பட்டது. அதுதான் பிறகு குஸ என்று ராமரின் மகனின் பெயரில் விளங்கியது. அந்த காலங்களில் காஸி மற்றும் அயோத்யா என்பது ஒரே இடத்தைக் குறிக்கும்.

ஆகவே பாணினி மற்றும் ரிக்வேதம், மற்ற ஆசிரியர்களின் கருத்தின் [பி. சி. லா, ஏ. எஸ். அட்லேகர், ஏ. எல். பாஷம், கே. எஸ். குலிஸ் முதலியவர்கள்] படி சரித்திர ரீதியில் ராமர் என்பவர் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தார். ஆகவே சரித்திர ராமரைத் தேடவேண்டுமானால் இந்தியாவின் வடகிழக்கே அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய கருத்தை ஆமோதித்த ஆர். எஸ். சர்மா என்ற பிரபல சரித்திர ஆசிரியர், “ராமர் அயோத்யாவில் பிறக்கவில்லை என்று சொல்லமுடியாது”., என்றும் நக்கலாகச் சொன்னார்!

பாண்டே பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நிருபரிடத்தில் பேசுகையில்[3], “மனத்தளவில் நினைக்கின்ற ராமர் காலத்தால் மிகவும் முந்தையவர். எப்படி புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்களோ, நாமும் அந்த உன்மைகளை கவனிக்கும்போது, ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்யாவில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது”, என்றார்!

1999ல் ராஜேஸ் கொச்சார்[4] என்ற நட்சத்திர-பௌதிகவியல் விஞ்ஞானி (Astro-physicist), ஆனால் மார்க்ஸீய சித்தாந்தவாதியும், பாப்ரி முஸ்லீம்களை ஆதரிக்கும் கூட்டத்தில் இருப்பதால், மறைமுகமாக ரிக்வேதம் ஆப்கானிஸ்தானில்தான் இயற்றப்பட்டது. வேதகாலத்திற்கு முற்பட்ட மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, அது ஏன் அவ்வளவு தொலைவில் இருந்தது என்றும் கேட்கவில்லை? அதாவது அயோத்யா ஆப்கானிஸ்தானத்திலேயே இருந்திருந்தால், அவன் ஏன் அங்கிருந்தே அங்கு செல்லவேண்டும்?  ஆனால் கொச்சார் கேட்பது, வேறுவழியில் அதாவது வடமேற்கில் இருந்ததால், கங்கைக்கரையின்மீது தேடவேண்டியதில்லை[5]. மேலும் லாஹூர் என்ற லவ்-பூர், ராமனுடைய மகனைக் குறிக்கிறது[6]. அதுவும் வடமேற்கில்தான் உள்ளது!

இதிலிருந்து அறியப்படும் / பெறப்படும் விஷயங்கள்:

1. அயோத்யா ஆப்கானிஸ்தானத்தில் தான் இருந்தது என்றால் பிரச்சினையே இல்லையே. பிறகு எதற்கு “சர்ச்சையில் இருந்த கட்டிடம்” / “பாப்ரி மஸ்ஜித்” இடிக்கப்பட்டது என்றெல்லாம் கலாட்டா செய்யவேண்டும்.

2. இது கூடவா பாபருக்குத் தெரியவில்லை. தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ளதை விட்டு விட்டு பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வந்து உத்திரபிரதேசத்தில் உள்ள “அயோத்யாவிலுள்ள” ராமர் கோவிலை இடிக்கவேண்டும்? அதாவது மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, எப்படி அவன் அதிக தூரம் செல்லவேண்டியடில்லையோ, அதுபோல! ஆனால், பாபர் வந்தது இந்தியாவிற்குதான். கோவிலை இடித்தது உபியில் – அயோத்யாவில் இருந்த கோவிலைத்தான்!

3. மொஹ்ஹம்மது கஜ்னிவிற்கு அல்-லத் சோமநாதபுரத்தில்தான் உள்ளது என்றறிந்து, அங்கு வந்து அதை இடித்து, தானும் முந்தைய முஹ்ஹம்மதுவை (PBCH) போன்றவனே[7] என்று நிரூபித்தான்! அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்பவை (Al-Lat Al-Manat, and Al-Uzzaa) “அல்லாவின் மகள்கள்” என்று குரான் குறிப்பிடுகின்றது[8].

4. ஆகவே பாபரைவிட சிறந்த சாட்சி உலகத்தில் இருக்கமுடியாது! பாபர்நாமாவே அதனை ஒப்புக் கொள்கின்றது. அதனால்தான் முஸ்லீம்கள் குறிப்பாக அந்த பக்கங்கள் காணவில்லை என்கின்றனர் போலும்! ஆகவே கருணாநிதியோ, கமலஹாஸனோ பாபரை மிஞ்சமுடியாது!

5. பாப்ரி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதி மன்றத்திற்கு முன்பு கொடுத்த அத்தாட்சிகளிலோ, ஆவணங்களிலேயோ இந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதாவது, அவர்களுக்கு அப்படி அந்த உண்மை தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

6. ஆர். எஸ். சர்மா இங்கு 1997ல் அமோதிக்கிறார். ஆனால், மற்றொரு இடத்தில்[9] 2001ல் எழுதும்போது, “அகழ்வாய்வு ரீதியில் 500 BCE வரை அயோத்யாவில் எந்த அத்தாட்சியும் கிடைக்காததால், அதனை ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான் மற்றும் பலியா, முங்கர் முதலிய மாவட்டங்களில் இருக்கும் என்று தேடுகின்றனர்” ஆகவே, இவர்கள் எப்படியெல்லாம் மாற்றி-மாற்றி பேசுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும்.

7. அதாவது சித்தாந்தரீதியில் இந்துக்களுக்கு எதிராக பேசினால் தங்களுக்கு “செக்யூலரிஸ”ப் பட்டம் கிடைக்கும் என்று இங்கு இப்படி பேசுவது, மேலைநாட்டு புத்தகத்தில் தமது கட்டுரை வரவேண்டும் என்றால், அகழ்வாய்வைப் பிடித்துக் கொள்வது. இதில் என்னவேடிக்கை என்றால், அதே புத்தகத்தில் பி.பி.லால் தனது கட்டுரையில் அயோத்யாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்[10]. ஆனால் அவரது கட்டுரை, இவர்களுக்கு சாதகமாக இல்லாததனால், அதைப் பற்றி சொல்வதில்லை. ASIயின் 2003 அறிக்கையின்படி அகழ்வாய்வு அத்தாட்சிகள் 1000 BCE வரை செல்கின்றன.

8. ஆகவே, முன்பு ஸ்யாம் நாராயண் பாண்டே, கொச்சார், முதலியோர் அயோத்யா அத்தாட்சிகள் 800 B.C. முன்பாகச் செல்லாது என்ற கருத்த மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களும் தமது தவறை உணர்ந்து மௌனிகளாக இருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் கிளப்பிய பொய் பிரச்சாரம், அரசியல்வாதிகள் உளறியது அப்படியே உள்ளன. ஆகையால்தான், கமலஹாஸன் இன்றும் உளறுகிறார், பிதற்றுகிறார் முகமதியர் முன்பு!

9. பிரபலமான கமலஹாஸன் அவ்வாறு உளருவதாலும், முதல்வர் கருணாநிதி பிதற்றுவதாலும் ஊதகங்கள் தாராளமாக அசற்றை பரப்புகின்றன. ஆனால், அவை தவறு என்று எடுத்துக் காட்டும்போது, அவ்வாறான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மறுபடியும் கமலஹாஸன் சொன்னார், கருணாநிதி சொன்னார் என்று கிளம்பிவிடுவர்!

10.  “புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்கள்”, என்கிறாரே, இதை சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

11.  கௌசல்யாவைப் போல அவர்களது அம்மாக்களையும் அவ்வாறே அனுப்பிவைத்தார்களா, என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா?

சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்: முன்பு எம்ஜியாரை கூத்தாடி, கூத்தாடிக்காரன் என்றே கருணாநிது செல்லமாக சொல்லுவார். அதாவது சினிமாகாரர்களை அப்போது அவ்வாறு சொல்வது வழக்கம். ஆகையால், இப்போதும் அவ்வாறு சொல்வது பொருந்தும் போல இருக்கிறது. சினிமா / அரசியல் என்றால் அதோடு இருக்கவேண்டும், ஆனால், அதிகபிரசங்கித் தனமாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, குறிப்பாக இந்துக்களை தாக்குவது, தூஷிப்பது என்றால் முன்னே வந்து செய்வது, அதுவும், முகமதியர் முன்பு செய்வது என்றெல்லாம் ஏதோ தமக்கே உரிய லட்சணங்கள் என்பது போல இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, இந்த கூத்தாடிகள், இனிமேல், முழுவதுமாக படித்து விட்டு உளரவேண்டும் அல்லது யாராவது முழுவதும் தெரிந்தவர்களிடம் உரு வார்த்தைக் கேட்டுக் கொண்டு உளரவேண்டும். இல்லையென்றால், நிச்சயம், ஒரு நாள் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பொய்-மேல்-பொய் சொல்லி ஆடுகின்ற ஆட்டமில்லை கோசலையைப் பற்றி அவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால், எந்த ராஜலட்சுமியும், அஞ்சுகமும் பொறுக்கமாட்டார்கள்.


[1] 1987லிருந்து தொடர்ச்சியாக மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசிக்கும் ஆயுட்கால அங்கத்தினர்களிடமிருந்து சேகரித்த தகவல்கள் மற்றும் Proceedings of the Indian History Congress புத்தகங்களை பார்த்து தொகுத்த விவரங்கள்.2 Samarendra Narain Arya, Historicity of Ayodhya, Proceedings of the Indian History Congress, 51st session, Calcutta, 1990, pp. 44-49.

[3] http://www.indianexpress.com/ie/daily/19971120/32450403.html

[4] Rajesh Kochhar, The Vedic People, Their History and Geography, Orient Longman, Delhi 1999.

[5] Ibid, p.209.

[6] Ibid, p.210.

[7] அதாவது முஹ்ஹம்மத் காபாவைத் தவிர, சுற்றியிருந்த 360 விக்கிரங்களை இடித்து போட்டார். பிறகு அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காபா விக்கிரத்தை விட்டுவைத்தார்!

[8] Koran, Surah:53.19

[9] Robert Layton, Julian Thomas, Peter G. Stone (Eds.), Destruction and conservation of cultural property, Routleg Taylor & Francis group, 2001, USA, p.127.

இதில் மற்ற கட்டுரைகளும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கின்றன. எல்லோருமே அயோத்யாவை உபியில்தான் வைக்கின்றனர்.

[10] B. B. Lal, A note on the excavations at Ayodhya with reference to the Mandir-masjid issue, in Destruction and conservation of cultural property, as mentioned above, pp.117-120.