Archive for the ‘ல ஜிஹாதி’ category

தி கேரளா ஸ்டோரி – லவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (1)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (1)

கேரளாவில் லவ் ஜிஹாத் தெரிந்த விசயம் தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.

டிரைலருக்குப் பிறகு அமைதியானவர்கள், மறுபதியும் எதிர்ப்பில் ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].

மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் எச்சரிக்கை, திரையரங்களுக்கு பாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி,  தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது.   திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும்  சமூக வலைதளங்களில் சட்டம்  ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].

திரைப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படி இருக்குதி கேரளா ஸ்டோரிதிரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!,  HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/the-kerala-story-movie-twitter-review-starring-adah-sharma-yogita-bihani-sonia-balani-siddhi-idnani-131683265840879.html

[3] ஈடிவிபாரத்.காம், கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியானதி கேரளா ஸ்டோரி”!,  Published: 5 May, 2023, 7:21 pm.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/the-kerala-story-released-with-special-shows-amid-various-protests-in-kerala/tamil-nadu20230505192312275275056

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகைபோலீஸார்எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/sdpi-members-arrested-who-tried-to-blockade-the-theater-where-the-kerala-story-was-screened-ru6xp5

[7] விகடன், தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? – முழுப் பின்னணி என்ன?!,  ஆ.பழனியப்பன், Published:02 May 2023 1 PMUpdated:02 May 2023 1 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-the-kerala-story-movie-opposed

[9] குமுதம், தமிழ்நாடு: ‘தி கேரளா ஸ்டோரிபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புடி.ஜி.பி உத்தரவு, Thiraviaraj Murugan, Kumudam Team, |   Published On : 05th May 2023.

[10] https://www.kumudam.com/news/cinema/security-for-theaters-where-the-kerala-story-is-released-dgp-orders

[11] நியூஸ்.7.தமிழ், தி கேரளா ஸ்டோரி படம்திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவு,by Web EditorMay 4, 2023.

[12] https://news7tamil.live/the-kerala-story-movie-tamil-nadu-dgp-orders-security-for-theatres.html

[13] தமிழ்.ஏபிபி.லைவ்,   The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ! ,  By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST)  , Published at : 05 May 2023 01:08 PM (IST)

[14] https://tamil.abplive.com/entertainment/movie-review/the-kerala-story-twitter-review-adah-sharma-siddhi-idnani-yogitha-bihani-sudipto-sen-115403