Archive for the ‘மங்களூரு குண்டுவெடிப்பு’ category

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைது – இதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டு வெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

ஏப்ரல் 18, 2024

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; குண்டு வைத்தவர் உட்பட இருவர் கொல்கத்தாவில் கைதுஇதனுடன் மங்களூரு குக்கர் குண்டு, கோவை கார் குண்டுவெடிப்புகள் தொடர்பு என்ன? (2)

இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்: இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது[1], “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்[2]. “இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்,  எனும்பொழுது, நிச்சயமாக அங்கெல்லாம் இவர்களுடைய தொடர்புகள் இருப்பது தெளிவாகிறது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வரப்படுவது: கைது செய்யப்பட்ட இருவரையும் பெங்களூரு அழைத்து வர அனுமதி கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் முறையிட்டனர்[3]. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல மூன்று நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது[4]. பிதான்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்[5]. வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் இருவரும் பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்[6]. 15-04-2024க்குப் பிறகு மறுபடியும் காவல் நீட்டிப்பு பெற்றிருக்கக் கூடும். இவையெல்லாம் சட்டப் படி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறைகள், செயல்பாடுகள் ஆகும். முடிவாக ஒன்று-மூன்று என பல ஆண்டுகள் ஆகலாம். போதிய ஆதாரங்கள் இல்லை விடுவிக்கவும் படலாம். ஆனால், குண்டுகள் வெடித்தது உண்மை, குண்டுவெடிப்பில் கொலையுண்டது, பாதிக்கப் பட்டது உண்மை…அதற்கு யார் பதில் சொல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை.

தேதிகளும்- முக்கியமான நிகழ்வுகளும்: இவ்வழக்கில் முக்கியமான தேதிகளும் நிகழ்வுகளும்:

01-03-2024 – குண்டுவெடிப்பு

03-03-2024 – NIA வழக்கை எடுத்துக் கொண்டது; ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு;

09-03-2024 – ராமேஸ்வரம் கபே மறுபடியும் பாதுகாப்புடன் திறக்கப் பட்டது.

புகைப் படங்கள் வெளியீடு.

24-03-2024  – ஒரிஸா வழியாக கொல்கொத்தாவிற்கு செல்வது.

25-03-2024 இருவரும் கொல்கொத்தவில் தலைமறைவாகத் தங்குதல்

27-03-2024 – கூட்டாளி முஸாமில் ஷெரீஃப் கைது

12-04-2024 – இருவர் கொல்கொத்தாவில் கைது, மூன்று நாள் காவல் அனுமதி

13-04-2024 – பெங்களுருக்குக் கொண்டு வருதல்

15-04-2024 – காவல் அனும்பதி நீட்டிப்பு.

இதே காலகட்டத்தில் ஜாபர் சாதிக் வழக்கும் இணையாகச் செல்வதை கவனிக்கலாம். ஆட்கள் மாறினாலும், இடம் மாறினாலும், குற்றங்கள் தன்மை மாறவில்லை. இந்திய சமுதாயத்தை நாசமாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான், இவர்கள் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

வியாபாரப் போட்டிக்காக குண்டு வைக்கப் பட்டது என்ற செய்தி: கோயம்புத்தூர் குக்கர் குண்டுவெடிப்பு பொன்று, இங்கும் அரசியல் செய்ய சிலர் முயன்றனர். முதலில் வியாபார போட்டியால், யாராவது குண்டு வைத்திருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. அப்படியே செய்திகளையும் பரப்ப ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தால், யாரும் இல்லாத நேரத்தில், பீதியுண்டாக்க வைத்திருக்கலாம். இவ்வாறு உணவுண்ணும் அப்பாவி பொது மக்கள் காயமடையும் விதத்தில், பீதியுண்டாக்கும் குறையில் குண்டு வைத்திருக்க மாட்டான். உண்மை தெரியவரும் பொழுது, அந்த வியாபாரப் போட்டியாளன் பெயரும் கெட்டு விடும். வணிகப் போட்டிகளில் இத்தகைய தீவிரவாதம் இருக்கிறது என்றால், இனி ஒவ்வொரு வணிக வளாகத்திலும், குண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.

குண்டு வைப்பது என்ற கொடிய-குரூர எண்ணம்: எப்படியிருந்தாலும், குண்டு வைப்பது என்பதே தீவிரவாத செயல் எனும்பொழுது, அதனை எவ்வாறு வைத்தான், எதற்கு வைத்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அத்தகைய குரூர எண்ணம் இருந்திருப்பது ஏன் என்று தான் அராய்ச்சி செய்திருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதித்து பெற்றோரை பாதுகாக்க வேண்டும், குடும்பத்தைப் பேணவேண்டும் என்றில்லாமல், குண்டு வைப்பேன் என்று கிளம்பியுள்ள இந்த தீவிரவாதிகளை கவனிக்க வேண்டும். மேலும் அவ்வாறு தொழிற்நுட்பத்துடன் வெடிக்கும் குண்டு தயாரிப்பு எப்படி நடந்தது, யார் கற்றுக் கொடுத்தது, அதே முறை கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது எவ்வாறு – போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக போன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி: சித்தராமையா-சிவகுமார் பிரச்சினையும் இதில் எழுந்தது, பிறகு, NIAவிடம் வழக்கை ஒப்படைக்க தீர்மானிக்கப் பட்டது. சாய் பிரசாத் என்ற பிஜேபி ஆள் இந்த இருவருடன் தொடர்பில் இருக்கிறான் என்று தீர்த்தஹல்லி, சிமோகாவில் உள்ள மொபைல் கடை வேலையாட்கள் சொன்னதாக உள்ளது. அதன் படி NIA அவனைப் பிடித்து விசாரித்துள்ளது. கைது செய்யப் பட்டான் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லா காங்கிரஸ்காரர்கள் செய்த சமூக-ஊடக பிரச்சாரம் என்று தெரிய வந்தது. ஆக, இங்கும், திமுக-காங்கிரஸ் பாணி குண்டுவெடிப்பு-பிரச்சாரத்தைக் கவனிக்கலாம் இக்கட்சிகள் தான், கூட்டணியும் வைத்துள்ளன. . NIAவின் விசாரணைக்குப் பிறகு, திமுக அடங்கி விட்டது, அதுபோல, காங்கிரஸும் இங்கு அமைதியாகி விட்டது. தீவிரவாதத்தில், குண்டுவெடிப்புகளில் தமிழக-கர்நாடக தொடர்புகளை அழித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. பொது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய விவகாரங்கள் என்பதால், அத்தகைய தீவிரவாத அமைப்புகள் ஆட்கள் முதலியோரைப் பற்றி, சந்தேகிக்கும் பொது மக்கள் உடனடியாக போலீசாரிடம் அல்லது NIA போன்ற அமைப்பினரிடம் தகவல், புகார் கொடுக்கவேண்டும். ரகசியமாக விசாரணை மேற்கொண்டு, முளையிலேயே அத்தகைய திட்டங்களைக் கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-04-2024


[1] தமிழ்.இந்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது, செய்திப்பிரிவு, Published : 12 Apr 2024 01:38 PM; Last Updated : 12 Apr 2024 01:38 PM.

[2] https://www.hindutamil.in/news/india/1229724-suspects-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-in-kolkata.html

[3] இடிவிபாரத், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? – Rameshwaram Cafe Blast 2 Arrest, By ETV Bharat Tamil Nadu Team, Published : Apr 13, 2024, 12:11 PM IST; Updated : Apr 14, 2024, 12:32 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!bharat/national-investigation-agency-brought-two-on-rameshwaram-cafe-blast-case-and-remand-tns24041301974

[5] தமிழ்.ஏசியாநெட், Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள்இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!,, Ansgar R, First Published Apr 13, 2024, 11:24 AM IST;  Last Updated Apr 13, 2024, 11:24 AM IST.

[6] https://tamil.asianetnews.com/india/rameshwaram-cafe-blast-2-main-accused-brought-to-bengaluru-today-facing-court-ans-sbv9r9