Posted tagged ‘ரயிலுக்கு தீ வைத்தல்’

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீவைத்த ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

ஏப்ரல் 18, 2023

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீ வைத்த  ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

02-04-2023 – கேரள ரயிலுக்கு தீ வைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1  பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.   இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.

தீ வைத்தவனின் பேக் கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.

உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி தான் தீ வைத்த நபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

தீ வைக்கும் திட்டத்துடன் தான் கேரளா வந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தது தான் தான் என்று வாக்குமூலம் கொடுக்கும் பொழுது ஷாருக் செய்பி ஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. பயணியரை தீ வைத்து எரிக்க பயன்படுத்திய பெட்ரோலை, சம்பவத்தன்று அதிகாலை ஷொர்ணுார் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்து ஷாரூக் சைபி வாங்கி உள்ளார்[12]. இதற்கு அவருக்கு யாரோ உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம்[13]. இவர் தீவிரவாத எண்ணம் கொண்டவர். ஜாகீர் நாயக், இஸ்ரா அகமது போன்றோரின் வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். ரயிலில் தீ வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இவர் கேரள வந்துள்ளார். இவருக்கு வேறு யாருடைய அல்லது அமைப்புகளின் உதவி கிடைத்துள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. இவர் தற்போது தான் முதன் முறையாக கேரளா வந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.

© வேதபிரகாஷ்

18-04-2023


[1] தினகரன், கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளை கொளுத்திய ஷாருக் செய்பி மீது உபா சட்டம் பாய்ந்தது: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது?, April 18, 2023, 12:36 am.

[2] https://www.dinakaran.com/kerala-running-train-passenger-shahrukh-seybi-fire-upa-act-flown-nia-case-being-transferred/

[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு.. 3 பேர் பலிகேரளாவில் பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.

[4] https://tamil.news18.com/national/man-sets-co-passenger-on-fire-in-kerala-train-3-dead-8-injured-925276.html

[5] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலைமுக்கிய குற்றவாளி மராட்டியத்தில் சிக்கினார், By மாலை மலர், 5 ஏப்ரல் 2023 6:18 PM

[6] https://www.maalaimalar.com/news/national/tamil-news-maharashtra-man-arrested-for-passengers-murder-case-in-kerala-592844

[7] தமிழ்.இந்து, கேரள ரயிலில் தீவைத்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, செய்திப்பிரிவு, Published : 06 Apr 2023 06:54 AM, Last Updated : 06 Apr 2023 06:54 AM

[8] https://www.hindutamil.in/news/india/971699-main-culprit-arrested-in-kerala-train-arson-case.html

[9] தந்திடிவி, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம்கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பா?, By தந்தி டிவி 14 ஏப்ரல் 2023 3:16 PM.

[10] https://www.thanthitv.com/latest-news/incident-of-setting-fire-to-passengers-in-a-moving-train-is-it-related-to-the-coimbatore-blast-179963

[11] தந்திடிவி/தினத்தந்தி, நாட்டையே உலுக்கிய கேரள ரயில்தீ‘ – பின்னணியில் யார்..? கைதான ஷாருக் பரபரப்பு வாக்குமூலம், By தந்தி டிவி 17 ஏப்ரல் 2023 9:08 PM

https://www.thanthitv.com/latest-news/kerala-train-fire-that-rocked-the-country-who-is-behind-it-shahrukh-khans-sensational-confession-180645

[12] தினமலர், ஓடும் ரயிலில் தீ விசாரணையில் திடுக் தகவல், பதிவு செய்த நாள்: ஏப் 09,2023 01:07…

[13] https://m.dinamalar.com/detail.php?id=3288915