Archive for the ‘மாஸ் பாரா-மெடிகல்’ category

முகமது அன்சாரி, மாஸ் பாரா-மெடிகல் கல்லூரி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது!

ஜூன் 10, 2023

முகமது அன்சாரி, மாஸ் பாராமெடிகல் கல்லூரி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது!

செக்யூலரிஸத்தில் வேலை செய்யும் ஊடகங்களும், போக்சோ செய்திகளும்: தென்காசியில் பாரா மெடிக்கல் படிக்கும் மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி முதல்வரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்[1]. இச்செய்தி இவ்வாறு சிலவரிகளில் அமுக்கமாக ஊடகங்கள் வெளியிட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது[2]. PTI பாணியை விட மோசமாக சுருக்கமான செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது[3]. ஆக, ஊடகக் காரர்களிடமிருந்து தான் என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பத்மா சேஷாத்ரி, சிவ சங்கர் பாபா, கலாக்ஷேத்ரா என்று காமத்தில் ஊறி குதித்து, அதிரடி செய்திகள், வீடியோக்கள் வெளியிட்ட நக்கீரன் போன்ற ஊடகக் காரர்கள் இப்பொழுது அடங்கிக் கிடக்கிறார்கள் போலும். கோபாலின் வீரத்தையும் காணோம். இங்கு “அவன் – இவன்” என்று ஏக வசனத்தில் வீடியோ வெளியிட தைரியம் உள்ளதா? அந்த பாவமும், பாவனையும், நடத்தையும் ஏன் என்று ஆராய வேண்டியுள்ளது. பொக்சோ சட்டம் கூட செக்யூலரிஸம், கம்யூனலிஸம், சமத்துவம், சமதர்மம், முதலியவை பார்க்கும் போலிருக்கிறது. அதாவது மதத்திற்கு மதம் மாறுபடும் போலிருக்கிறது.

மாஸ் பாராமெடிகல் கல்லூரியும், முகமது அன்சாரியும்:  தென்காசியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி, 46; ஆசாத் நகர் பகுதி அருகே மாஸ் பாரா மெடிக்கல் கல்லுாரி நடத்தி வருகிறார்[4]. இக்கல்லூரியில்  தென்காசி, குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்[5]. இந்த கல்லூரி பற்றிய வீடியோவும் இங்குள்ளது[6]. குறைந்த மார்க் வாங்கியவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்து பாரா-மெடிகல் டிப்ளோமா படிக்கலாம், வேலை கிடைக்கும், ஏழைகளுக்கு பண உதவி கிடைக்கும் என்றெல்லாம் விவரிக்கிறது. அரசு பேருந்துகள் எல்லாமே இக்கல்லூரி வாசலில் நிற்கின்றன, தவிர கல்லூரியும் வாகன வசதி ஏற்பாடு செய்திருக்கின்றது போன்ற வர்ணணைகளும் அடங்கியுள்ளன. இந்நிலையில் தான், இவர் அந்த கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயிலும் 17 வயதான 2-ம் ஆண்டு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது[7], என்று சிறிய செய்தி வருகிறது.

முகமது அன்சாரிய்ன் லீலைகளை கோபால் எப்படி விவரிப்பார்?: முகமது அன்சாரி அப்பெண்ணை தனி அறைக்குக் கூப்பிட்டு இரண்டு அர்த்தம் தொணிக்கும் முறையில் பேசினார்… பிறகு, தொடவும் செய்தார்….இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டவாறு அந்த அறையில் இருந்து வெளியேறி, தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார்[8]. நக்கீரனில் லெனின் போன்ற செக்ஸ்-புலன் விசாரனை, வீடியோ எடுக்கும் விற்பன்னர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்று போலும். மாணவி இதுகுறித்து எச்சரித்த போதும், முகமது அன்சாரி தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை[9]. அதாவது முன்னரும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கிறார், அன்சாரி அந்த அளவுக்கு குறியாக இருந்தது தெரிகிறது.. கல்லுாரியில் படிக்கும், ௧௭ வயது மாணவி ஒருவர், தனக்கு கல்லுாரி முதல்வர் முகமது அன்சாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக, குற்றாலம் போலீசில் புகார் செய்தார்[10], என்று “காமதேனு” கூறுகிறது.

ஊடகங்களின் பாலியல் சமத்துவம் என்னவோ?: இவ்வாறான “சங்கடமான’ செய்தி வெளியிட வேண்டுமானால், தமிழ்,இந்து, காமதேனுவை உபயோகப் படுத்திக் கொள்கிறது. “செங்கோல்” விசயத்தில் எப்படி இரு இந்து-ஆசிரியர்கள் மாறுபட்டனரோ, அதே போல சித்தாந்தம் இங்கும் வேலை செய்திருக்கிறது போலும். இதுகுறித்த புகாரின்பேரில், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, முகமது அன்சாரியை போலீசார் கைது செய்தனர்[11]. ஆக, இங்கு பிரச்சினையே முகமது அன்சாரி தான், அதாவது, பொக்சோவில் சிக்கிய நபர் முஸ்லீமாக இருப்பதனால், அமுக்கி வாசிக்கின்றனர் என்றாகிறது. குற்றம், குற்றம் செய்தவன், குற்றவாளி, சட்டம் என்றெல்லாம் வரும் பொழுது கூட ஏன் செக்யூலரிஸம், கம்யூனலிஸம், சமத்துவம், சமதர்மம், முதலியவை திரிக்கப் படுகின்றன, திரிகின்றன, ஊமையாகின்றன……. அம்பேத்கருக்கே புதிராகி விடும் போலிருக்கிறது.

செக்யூலரிஸ பாலியல் பிரச்சினை, மதசார்பற்ற விவகாரங்கள், அணுகும் முறை: கல்லூரி-பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தேறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவாக சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. சென்ற வருடம், இத்தகைய இரச்சினை பற்றி தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. ஆனால், சிறுபான்மையினர் பள்ளிகளின் பாலியல் விவகாரங்கள் மறைக்கப் பட்டன. பிறகு, செக்யூலரிஸத் தனமாக, ஒன்று கிருத்துவப் பள்ளி, இன்னொன்று முஸ்லிம் பள்ளி என்று செய்தி வெளியிடப் பட்டு, பாலியல் குற்ற வழக்குகள் அமைதியாகி விட்டன. “சிவசங்கர் பாபா” போன்று துப்பறிய நக்கீரனும் குதிக்கவில்லை, துடிக்கவில்லை. இப்பொழுது, இன்னொரு வழக்கு செய்தியாக வருகிறது.

கல்லூரி-பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?: கிறிஸ்தவ அல்லூரி-பள்ளியில் ஆரம்பித்து, இந்து பள்ளிகளில் அதிகமாக ஆரார்ச்சி செய்து, செய்திகளை தினம்-தினம் போட்டு, அதிரடிகள் செய்து, இப்பொழுது, செக்யூலரிஸமாக, முஸ்லிம் கல்லூரி-பள்ளியில் வந்து, இந்த பாலியல் விவகாரம் முடிந்துள்ளாதா, அல்லது தொடருமா என்று பார்க்க வேண்டும். இல்லை, முகமது அன்சாரி என்பதால், மதுரை பள்ளி விவகாரம் போல, அமுக்கி வாசித்து, மறக்கப் படுமா என்றும் பார்க்க வேண்டும். பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?, இவை தொடருமா, இல்லை ஒரு நிலையில் கிடப்பில் போடப் படுமா? என்றும் கவனிக்க வேண்டும். சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்றால், செய்திகள்-ஆர்பாட்டங்களும், டிவி-விவாதங்கள்-அலசல்களும் அவ்வாறே இருக்க வேண்டும். இருக்குமா என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

10-06-2023


[1] தினமலர், கல்லுாரி முதல்வர்போக்சோவில் கைது, Added : ஜூன் 10, 2023  03:19; https://www.dinamalar.com/news_detail.asp?id=3343814

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3343814

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இரட்டை அர்த்த பேச்சு.. தனி அறையில் மெதுமெதுவாக நெருங்கிய தாளாளர்! அலறிய மாணவி.. தென்காசியில் ஷாக், By Nantha Kumar R, Published: Saturday, June 10, 2023, 1:20 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/tour/tirunelveli/para-medical-college-rector-arrested-after-trying-to-sexual-harassment-to-girl-student-in-tenkasi-515816.html

[5] தினத்தந்தி, கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தாளாளர் கைது, Jun 10, 12:15 am (Updated: Jun 10, 12:16 am).

[6] https://www.youtube.com/watch?v=crGNr_mFgbk

[7] https://www.dailythanthi.com/News/State/college-student-sexually-harassed-clerk-arrested-in-pocso-act-982805

[8] தூத்துக்குடி.ஆன்.லைன், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதல்வர் கைது!, வெள்ளி 9, ஜூன் 2023 8:17:46 PM (IST).

[9] https://www.tutyonline.net/view/31_231814/20230609201746.html

[10] காமதேனு, ஆபாச பேச்சு, பாலியல் தூண்டல்; எச்சரித்த மாணவி: சிக்கிய தனியார் இன்ஸ்டிடியூட் முதல்வர், Updated on : 9 Jun, 2023, 4:30 pm

[11] https://kamadenu.hindutamil.in/national/pocso-pounces-on-private-institute-principal-for-lewd-speech-to-student