தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)

kather01 (2)அனைத்து  இந்திய  முஸ்லிம்  முன்னேற்ற  கழகம்  பிஜேபிக்கு  ஆதரவு  கொடுப்பது[1]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[2]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜனதா தலைமையிலான தேசிய  ஜனநாயக  கூட்டணியில் சதக்கத்துல்லா  தலைமயிலான  அனைத்து  இந்திய  முஸ்லிம் முன்னேற்ற கழகம்  இணைந்துள்ளதுவரும் பாராளுமன்ற தேர்தலில்  நரேந்திர  மோடிக்கு  ஆதரவாக  முஸ்லிம்  மக்களிடம் அவர்கள்  ஆதரவு  திரட்டுவார்கள் டிசம்பர்  1-ஆம் தேதி தொடங்கிய  வீடுதோறும்  மோடிஉள்ளம் தோறும்  தாமரைஎன்ற  பாத யாத்திரைக்கு  தமிழகத்தில்  பெரும்  வரவேற்பு கிடைத்துள்ளதுஇதுவரை  700-க்கும் அதிகமான  கிராம பஞ்சாயத்துக்களில்  இந்த  யாத்திரை  நிறைவு  பெற்றுள்ளது. வீடுகள் தோறும்  சென்று  மக்களை  நேரடியாகச்  சந்திக்கும் போது மக்களின்  பிரச்னைகள்கிராமங்களின்  பிரச்னைகளை அறிந்து கொள்ள  முடிகிறதுஇந்த  பாத யாத்திரை வரும்  22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[3]. “அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[4] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும்”, என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்[5]. பொதுவாகவே, முஸ்லிம்கள் தங்களது வட்டட்த்தில் இருந்து வெளியே வரமாட்டார்கள், வந்தால் இருபக்கத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].
kather01இந்திய  யூனியன்  முஸ்லிம்  லீகிலிருந்து  யாரும்  பிரிந்து   செல்லவில்லைசதக்கத்துல்லா என்ற  நபர்  லீகை  சார்ந்தவரும்  அல்ல: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. 1972ல் முகமது இஸ்மாயில் இறந்தபோது, திமுக இரண்டாக உடைந்தது, அதிமுக உருவானது. அதேபோல, “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்” இரண்டாகி, “இந்திய தேசிய லீக்” [Indian National League (INL)] உருவானது. இவற்றிற்கு முறையே அப்துல் சமத் மற்றும் அப்துல் லத்தீப் தலைவர்களாக இருந்தனர். அப்துல் லத்தீப் கருணநிதிக்கு வேண்டியவராக இருந்தார். எப்படியாகிலும், இரண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு காலம் தள்ளின. எனவே, லீக் ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சி அல்லது குழுமம் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

இந்த தகவல் அவரை பா.. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை[8]மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது[9].kather02

பாஜகவுக்கு  ஆதரவு  கடிதம்  கொடுத்த   “சதாம்  என்.கே.எம்.  சதக்கத்துல்லாஎங்கள்  ஆள்  இல்லை: சதாம் என்.கே.எம்.சதக்கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா...,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யலாமா, கூடாதா என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே தமிழக முஸ்லிம்கள் திராவிடக் கட்சிகளுக்குப் பிரிந்து தான் ஓட்டளிக்கின்றனர், ஆனால் பலன்களை மட்டும் அனுபவித்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.kather01 (1)

 இது  போன்ற  காரியங்களுக்கு  இந்திய  யூனியன்  முஸ்லிம்  லீக்  பெயரை  மோசடியாக  பயன்  படுத்துவோர் மீது  சட்டநடவடிக்கை  எடுக்கப்படும்: மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கிணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில்

ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 – ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர். ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் இவ்வாறு ஜமாத் போன்ற முறையில் தீர்மானம் செய்யலாம், ஆனால், எப்படி இந்தியக் கட்சிகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனரோ, அதே போல, தமிழக முஸ்லிம்களும் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல் கட்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். திராவிடக்கட்சிகளை ஆதரிக்கும் போது, அவ்வாறுதான் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பா...,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும். இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.” இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

IUML General secretary Iqbalசையது  இக்பால், இந்திய  தவ்ஹித்  ஜமாத்  பொது  செயலாளரின்  கடுமையான  தாக்கு[10]: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு:

சத்தியம்டிவி: இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!! சையதுஇக்பால்அவர்கள்: நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ? பார்த்தது இல்லை. மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை. அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார்.

நரபலி  மோடியால்  அல்லாஹ்வை  உண்மையாக  வணங்ககூடிய  உண்மையான  முஸ்லிம்களை  ஆதரவு  என்ற  வலையில்  வீழ்த்த   முடியாது: அவரால் இல்லை நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது. அப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான். உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 %

இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன. அதனால், நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம். ஆக, பேரம் பேசி பாஜகவுடன் கூட்டு சேர முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள் என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது. ஆகவே, யாரை பிரதம மந்திரியாக்க வேண்டும் என்ற சக்தியே எங்களிடம் தான் உள்ளது என்று ஆணவத்துடன் இப்படி பேசுவது, மற்ற இந்தியர்களும் கவனிக்கத்தான் செய்வார்கள். கடவுளின் பெயரால், ஆளுக்கு ஆள் ௐஇளம்பி விட்டால், செக்யூலரிஸ நாட்டில், மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாதே!

அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல், இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம்”, என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்[11].

வேதபிரகாஷ்

© 17-12-2013


[3] தினமணி,பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST

[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன். ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.

[9] முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ், முஸ்லிம்லீக்பெயரைக்களங்கப்படுத்துவோர்மீதுசட்டநடவடிக்கை: எச்சரிக்கை!, 16-12-2013, 2:16 PM

 

Explore posts in the same categories: ஃபத்வா, அடையாளம், அப்துல்லா, அல் - உம்மா, இந்தியத் தன்மை, இஸ்லாமிய இறையியல், காஃபிர், காங்கிரஸ், காயிதே மில்லத், சவுதி, சவுதி அரேபியா, சையது இக்பால், ஜிஹாதி, திராவிட நாத்திகர்கள், பள்ளிவாசல், பிரசாரம், பிரச்சாரம், முஸ்லீம் தன்மை

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)”

  1. vedaprakash Says:

    முஸ்லிம் பெயர் தாங்கிகளும் மறைமுக விளம்பரமும்!
    வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013 20:31
    http://www.inneram.com/opinions/readers/4067-muslim-bearing-the-name-and-indirect-advertising.html
    முஸ்லிம் பெயர் தாங்கிகளும் மறைமுக விளம்பரமும்!

    பாரதிய ஜனதாவிற்கு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ஆதரவு என்ற செய்தி வெளிவந்தவுடன் தமிழகத்தில் ஒரே பரபரப்பு.

    பாரதிய ஜனதா என்பது ஒரு அரசியல் கட்சி. அதே போல காங்கிரஸ், அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை, மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி என அனைத்துமே அரசியல் கட்சிகள்தான். அவரவர் விருப்பப்படி ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாக நினைக்கிறார்கள்.

    அரசு சார்பில் பணியாற்றுபவர்கள் எப்படி மற்றவர்களை அச்சுறுத்த வாகனங்களில் ரெவின்யூ, காவல்துறை, பொதுப்பணித்துறை என தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்களோ அதே போல அரசு அல்லாமல் தனியாக உள்ளவர்கள் மற்றவர்களை அச்சுறுத்துவற்குக் கேடயமாக அரசியல், பிரஸ், மனித உரிமை அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள் என ஒவ்வொருவரும் ஒரு கேடயத்திற்குள் நுழைவது வாடிக்கையாக வைத்துள்ளனர். அதே போல ஆதிக்கம் மிகுந்த பகுதியில் சிறுபான்மையாக வசிப்பவர்கள் எந்த மதமானாலும், எந்த சாதியானாலும் ஆதிக்க சாதியினரோடு ஒத்துப்போக வேண்டிய காலத்தின் கட்டாயம்.

    இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முஸ்லிம் கடை வைத்திருந்தால் இந்துக்களின் தெய்வங்களை தன்னுடைய கடையில் மாட்டி இருப்பார். அதே போல முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் கடை வைத்திருந்தால் முஸ்லிம் படத்தை அவர் கடையில் மாட்டி வைத்து வியாபாரம் செய்வார். இது ஒரு வகை காக்காய் பிடிப்பது போன்ற வேலைதான்.

    இவர்களைத்தவிர முஸ்லிம்களின் பெயர்களை தாங்கிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவது, முஸ்லிம்களை தரக்குறைவாக விமர்சிப்பது என்பது கிங்ஸ்லி தத்துவப்படி ஆசிய மக்களை ஆசியமக்களோடு மோதவிடவேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் உதித்தது தான். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஷ்ரீன் போன்ற எழுத்தாளர்களும், பாரதிய ஜனதா கட்சியில் சிக்கந்தர் பக்த் போன்றவர்களும், பாரதியஜனதா மகளிர் அணியில் சுலைகாவும், ஜமாஅத் பிரச்சினையில் பெண்களுக்கு பங்குண்டு என்று கூறி குழப்பம் விளைவிக்கும் ஸ்டெப்ஸ் அமைப்பின் நிறுவனத்தலைவி புதுக்கோட்டை ஷரிபா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

    இதே போல சாதி அமைப்பாக உள்ள கட்சிகளிடமும் சில முஸ்லிம் கட்சிகள் தலைமைகள் சிலைக்கு மாலை அணிவிப்பது, குருபூஜை நடத்துவது போன்றவற்றை வாடிக்கையாக வைத்துள்ளனர். மொத்ததில் தங்கள் சுயநலத்திற்காகவும், தொழில் நடத்தவும் முஸ்லிம்களின் பெயர்களையும், முஸ்லிம் அமைப்புகளின் பெயரையும் அடையாளப்படுத்துவது காலகாலமாக நடக்கும் நடைமுறை.

    இதே போல விற்பனை ஆகாத பொருட்களை விற்பனை செய்ய சில நிறுவனங்கள் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக செருப்பு, ஷூ, பீர்பாட்டில் போன்றவற்றில் ஒரு மதத்தின் பெயரையோ அல்லது சாமியின் உருவத்தையோ பொறித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. அதன் பின்னர் அது மக்களிடையே எதிர்ப்பினூடாக சர்ச்சையாகும்போது அந்தக் கம்பெனி பிரபலம் ஆகும்.

    இதே போல சில நடிகைகள் தங்கள் மார்க்கெட் சரிந்த பின்பு ஏதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் தமக்கு எதிராக கிசுகிசு எழுதச்சொல்லி பிரபலம் ஆவார். இவை தவிர பெண்கள் அழகுப்போட்டி என்ற போட்டியை வைத்து அமெரிக்கா உள்பட சில நாடுகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த மிஸ் இந்தியா, மிஸ் இலங்கை என்ற பட்டத்தை வழங்கி தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஒரு கலையாகவே வைத்துள்ளனர்.

    இவையெல்லாம் மறைமுக விளம்பர யுக்திகள்தான். எந்த ஒரு காலத்திலும் மத அடையாளத்தை இனஅடையாளமாக பார்க்க முடியாது. அதே போல மதஅடையாளத்தை அரசியலில் கலந்து வெற்றி பெறமுடியாது என்பது காலம் காலமாக உள்ள நடைமுறை. அந்த வரிசையில் முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற முஸ்லிம் பெயரைக் காட்டி முஸ்லிம்களும் தங்களை அங்கீகரித்து விட்டார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்க பாஜக தப்பு கணக்குப்போடுகிறது. ஆனால் அதன்மூலமாக நடக்க இருப்பதோ, பாஜகவின் இந்த அற்ப மார்க்கட்டிங் தந்திரத்தை விளங்கிக்கொண்டு பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபடுவதுதான்! இந்தக் கேவலமான ஆலோசனையைப் பாஜகவுக்கு வழங்கிய நபர் யாரோ! “அய்யோ பாவம் பாஜக” என்றே நினைக்கத் தோன்றுகிறது!

    – வைகை அனிஷ், செல்:9715-795795​


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: